PDA

View Full Version : நட்புமில்லை காதலுமில்லைkavitha
10-06-2008, 07:00 AM
நட்புமில்லை காதலுமில்லை

எப்போதும் தென்னை
உரசிச்செல்லும்
வாடைக்காற்று,
எப்போதாவது என்னை
உரசிச்செல்லும்
தென்றல்காற்று
நட்புமில்லை காதலுமில்லை
போ என்று அடித்துச்சாத்தியது
வீட்டுக்கதவை.

இளசு
10-06-2008, 07:09 AM
மன ஓவியங்களை
மன்றத்தில் மீண்டும்
வண்ணங்களாய் தீட்டும்
கவிதாயினிக்கு வரவேற்பு..

பொழுதன்னிக்கும் வாடைதான்னா
மரத்துபோயிடும் மனசும் ஒடம்பும்..
மேலுக்குக் கம்பளிபோல
இன்னொரு தோலை வளத்துக்கொள்ளும்..

எப்பவாச்சியும் தென்றல் -னா
வரும்போது சொகம்..
போயிட்டா சோகம்..

கதவை மூடினா என்ன?
சன்னல் இருக்கே!

காத்துக்கு இன்னும் பல
வேஷங்கள் இருக்கே!

ஓவியன்
10-06-2008, 07:12 AM
கதவுகள் என்று ஒன்று இருப்பதனால் தானோ பிரச்சினைகள்....??

கதவுகளே இல்லாமல் போனால்....

வீட்டினுள்ளே வந்துதானேயாக வேண்டும் வாடைக் காற்றும் தென்றல் காற்றும்.......!!

kavitha
10-06-2008, 08:53 AM
காத்துக்கு இன்னும் பல
வேஷங்கள் இருக்கே!
ஆம் அண்ணா. ஆங்கிலத்தில் இதை ஒன்பது வகையாகப்பிரிப்பர். தமிழில் தென்மேற்கு, வடகிழக்கு, வாடை, கொண்டல், தென்றல் ... இப்படியாக.

கவிதை படிக்கத்தெரியாத பக்கத்துவீட்டு அம்மணி சொல்வாள்.. எத்தனை ஏசி இருந்தென்ன? இந்தக்காற்றுக்கு ஈடாகுமா?
100% உண்மை. உணர்கவிதாயினி அவள்.

வரவேற்கும் அண்ணலுக்கு என் தலைவணங்கல் உரித்தாகுக.

--------------------------


கதவுகளே இல்லாமல் போனால்....

வீட்டினுள்ளே வந்துதானேயாக வேண்டும் வாடைக் காற்றும் தென்றல் காற்றும்.......!!
:) வீடே இல்லாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே ஓவியன். என் செய்வது! சத்தியத்திற்குட்பட்ட சாத்தியம் மட்டுமே திருப்தி தருகிறது.

பென்ஸ்
10-06-2008, 10:09 PM
கவி...

மன எண்ணங்களை விசிறீயாடித்து ஓவியம்வரைந்து சென்று விட்டீர்கள்...
இதை பிரிந்து விவரிக்க தோன்றினாலும்,
என் சிந்தனை இன்னூம் இளசு போல் இதமாக கையாளும் அளவுக்கு பக்குவ படவில்லை....

எங்களுக்கு தொன்றலும், வாடையும் சமமாய், ..
பட பட என்று தட்டி சென்று கவணத்தை திருப்பும் இந்த காற்று....
இந்த சப்தம் அம்மாவுக்கு பிடிப்பதில்லை... "டேய், அதை சாத்திட்டு வா.." என்று சொல்லும் போது அதை நன்கு திறந்து
ஒரு சிறு குச்சியை அந்த பெரும் கதவுக்கு தடுப்பாய் வைத்து வருவேன்...

ஆடியில் மட்டும் மூடி வைப்பதுண்டு....

இந்த கவிதை வாசிப்பவர் எண்ணத்தோடு ஒத்து போவது அழகு...
கரு அவரவர் மனம் போல்....

வாழ்த்துகள்....

ஷீ-நிசி
11-06-2008, 01:54 AM
எப்போதும் தென்னை
உரசிச்செல்லும்
வாடைக்காற்று,
எப்போதாவது என்னை
உரசிச்செல்லும்
தென்றல்காற்று

இங்கே சொல்லாடல்கள் அழகு!
எப்போதும் தென்னையை உரசிச்செல்லும் வாடைகாற்று..
அது உயர்(ந்த)காதல் போல.....
எப்போதாவது என்னை உரசிச்செல்லும் தென்றல்காற்று!

படிக்கிறவரின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப உருப்பெரும் இக்கவிதை...

வாழ்த்துக்கள் கவிதா!

rocky
12-06-2008, 07:00 AM
இப்படி எப்போதாவது உரசிச் சென்றால்தான் தென்றலின் அருமை நமக்குத் தெரியும் கவிதா அவர்களே. ஒருமுறை தீண்டியதும் அது மீண்டும் வரும் வரை காத்திருந்தால்தான் இன்னும் அதிகமாக அனுபவிக்க முடியும். மரங்களுக்கு உணர்ச்சியில்லை அதனால் அது அடித்துச்சாத்தியது, ஆனால் மனிதர்களுக்கு இருக்கிறது நாம் திறந்து வைப்போம் நம் வீட்டுக்கதவு மட்டுமல்ல மனக்கதவும் தான். தென்றலையும், மழையையும் ரசிக்க.

கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது கவிதா அவர்களே.

சிவா.ஜி
12-06-2008, 10:11 AM
வாடைக்காற்று ஏதாவது வேண்டாத வாடையைத் தாங்கி வந்தால் கதவடைக்கலாம்.
தென்றலென்ன குற்றம் செய்தது? உள் நெருப்பையும் குளிர வைக்கும் பெரும் வள்ளலல்லவா....மூடினாலும் முட்டித்திறந்துவிடும் நல்ல காற்று ஒரு வரம். வழிவிடுவோம். வளமான வரிகள். வாழ்த்துகள் தங்கையே.

aren
12-06-2008, 10:18 AM
அடிக்கிற கைதான் அணைக்கும்
அடித்துச் சாத்திய கதவை அது தானாகவே திறக்கும்
அப்பொழுது வாடைக்காற்றும், தென்றலும் கூடி ஒரு சுகமான சந்தனக்காற்றாக மாறும்.

நல்ல கவிதை. பாராட்ட்க்கள் கவிதா. இன்னும் கொடுங்கள்.

kavitha
13-06-2008, 05:30 AM
இதை பிரிந்து விவரிக்க தோன்றினாலும்,
என் சிந்தனை இன்னூம் இளசு போல் இதமாக கையாளும் அளவுக்கு பக்குவ படவில்லை....
பிரித்து விவரிப்பது, விவாதிப்பது, ஆராய்வது எல்லாமே வாசிப்பவரின் கையில். இளசு அண்ணா போல் என்றால் எல்லோரும் இளசு அண்ணா ஆகிவிட முடியுமா? அண்ணா அண்ணாதான். பென்ஸ் -ஆக உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
-------------------------அது உயர்(ந்த)காதல் போல.....
எப்போதாவது என்னை உரசிச்செல்லும் தென்றல்காற்று!
நட்பும் உயர்ந்தது தானே.. ஷீ. நான் வேணும்னா (தென்னையை விட) குள்ளமா இருக்கலாம்.


படிக்கிறவரின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப உருப்பெரும் இக்கவிதை...

வாழ்த்துக்கள் கவிதா!
நன்றி ஷீ-நிசி.

---------------

வெட்டிய
மரங்களுக்கு உணர்ச்சியில்லை அதனால் அது அடித்துச்சாத்தியது, ஆனால் மனிதர்களுக்கு இருக்கிறது நாம் திறந்து வைப்போம் நம் வீட்டுக்கதவு மட்டுமல்ல மனக்கதவும் தான். தென்றலையும், மழையையும் ரசிக்க.
ஆமாம் ராக்கி. நன்றி.

-----------------


தென்றலென்ன குற்றம் செய்தது? உள் நெருப்பையும் குளிர வைக்கும் பெரும் வள்ளலல்லவா....மூடினாலும் முட்டித்திறந்துவிடும் நல்ல காற்று ஒரு வரம். வழிவிடுவோம். வளமான வரிகள். வாழ்த்துகள் தங்கையே.
உங்களைப்போல ஆழமாக வாசிப்பவர்களின் பதிவுகள் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி சிவா அண்ணா.

--------------------


அடிக்கிற கைதான் அணைக்கும்
அடித்துச் சாத்திய கதவை அது தானாகவே திறக்கும்
அப்பொழுது வாடைக்காற்றும், தென்றலும் கூடி ஒரு சுகமான சந்தனக்காற்றாக மாறும்.

நல்ல கவிதை. பாராட்ட்க்கள் கவிதா. இன்னும் கொடுங்கள்.

கண்டிப்பாக தருவேன் அண்ணா. உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி.

ஆதவா
19-06-2008, 12:10 PM
அக்கா.. காற்றுக்குக் கோபம்.. அதான். உங்களை மெல்ல உரசிவிட்டு, கோபத்தை கதவிடம் காட்டுகிறதோ!! :)

நல்ல கவிதை... அனைவரின் பின்னூட்டமும் அருமை..

kavitha
20-06-2008, 04:22 AM
அக்கா.. காற்றுக்குக் கோபம்.. அதான். உங்களை மெல்ல உரசிவிட்டு, கோபத்தை கதவிடம் காட்டுகிறதோ!!

அதென்னவோ உண்மை தான் ஆதவா. என் மேல் யாருக்குக்கோபம் வந்தாலும் மெல்ல சிணுங்கி விட்டு போய்விடுகிறார்கள். அதையே என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்பது அவர்களுக்குத்தெரிந்துவிடுகிறது. :) இன்னும் அடித்தால்.... நான் என்னாவது?!? :) :) :) :) ம்...!

பின்னூட்டத்திற்கு நன்றி