PDA

View Full Version : எனக்கு எத்தனை முகங்கள்



shibly591
09-06-2008, 06:41 PM
எனக்கு எத்தனை முகங்கள்
என்று எனக்கே தெரியவில்லை

இரண்டு முகங்கள் இருப்பதாக
நண்பர்கள் குழப்புகிறார்கள்
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது
பேரூந்துகளில்
பெண்களை நெருங்கும்போது
மூன்றாவது முகமொன்றை
மெல்லமாய் கண்டுகொள்கிறேன்

கடன்பட்ட பிறகு
நான்காவது முகத்தை
நானே அடையாளம் கண்டேன்

தனிமையில் ஐந்தாவது
அழுகையில் ஆறாவது
அலைபேசியில் ஏழாவது
இணையத்தில் எட்டாவது
இப்படி நீண்டுகொண்டே போகின்றன
எனது முகங்கள்....

நானாக விரும்பி
எதையும் அணிவதில்லை
அவ்வப்போது அந்தந்த முகங்கள்
என்னை உள்வாங்குகின்றன.

இவைகள் முகங்களாக அன்றி
முகமூடிகளாகக்கூட
இருக்கலாம்.

என்ன ஒரு வேடிக்கை...
யோக்கியன் என்று உலகம்
நம்பிக்கொண்டிருக்கும் எனக்குள்
அயோக்கியன் ஒருவன்
நிரந்தரமாய் தங்கியிருக்கிறான்....

சிரிக்கிறேன்
கோபப்படுகிறேன்
தாகிக்கிறேன்
சலனம் கொள்கிறேன்
பொய் பேசுகிறேன்
துரோகமிழைக்கிறேன்
காதல் செய்கிறேன்
முத்தமிடுகிறேன்
கவிதை வரைகிறேன்
அடேயப்பா
எனக்குள் இன்னும் எத்தனை முகங்களோ..?

பாருங்கள்
எனக்கு ஒரே ஒரு முகம்
என்பது எத்துணை பெரிய பொய்...!?

எனக்கு எத்தனை முகங்கள்
என்று எனக்கே தெரியவில்லை

இளசு
09-06-2008, 07:09 PM
நிச்சலனமாய் இருக்க குத்துப்பாறைகளா நாம்?
அவை கூட - மெல்ல கூடக்குறைந்தபடிதான்!

பல முகங்கள் அத்தியாவசியமானவை..
குழந்தைக்கும் கொடியவனுக்கும்
ரசமுகம்..ரவுத்திரமுகம் என மாற்றாவிடில்???!!!

அளவுக்கு மீறினாலோ..
அநாவசியமாக மாறினாலோ
முடிகள் மூச்சை முட்டலாம்..


நல்ல கவிதைக்கு பாராட்டுகள் நண்பரே!

அறிஞர்
10-06-2008, 02:50 AM
பல முகங்கள் கொண்டது இந்த உருவம்
இடத்திற்கேற்ப மாறும் பஞ்சோத்தி உருவம்..

அருமை... ஷில்பி...

rocky
12-06-2008, 07:02 AM
உங்களுக்கு மட்டுமல்ல தோழரே, இங்கு யாருக்குமே அது தெரிவதில்லை. உலகில் உள்ள அனைவருமே எல்லோரிடத்திலுமே அரிதாரம் பூசாமல் மேடையில்லாமல் நடித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதற்கு நம் முகத்தையே முகமூடியாக்கிக் கொள்கிறோம். அகத்தின் அழகை முகத்தில் காட்டாமல் மறைப்பதையே முகமூடி என்று சொல்லலாம். மனதில் அழுது கொண்டு வெளியில் சிரிப்பது, மனதில் கோபம் கொண்டு வெளியே அமைதி காப்பது என்று இப்படி பல முகமூடிகளை மாற்றி மாற்றி அனிந்து நம்மில் பலருக்கு நம் உண்மை முகமே மறந்திருக்கும் அல்லது மறைந்திருக்கும். நிஜத்தை வார்த்தைகளில் அழகாக வடித்திருக்கிறீர்கள் ஸிப்லி வாழ்த்துக்கள்.

kavitha
13-06-2008, 06:04 AM
அளவுக்கு மீறினாலோ..
அநாவசியமாக மாறினாலோ
முடிகள் மூச்சை முட்டலாம்..
கணிதம் வாழ்க்கையைப்புனிதம் ஆக்குகிறது.
அளவுகோல் தான் ஒவ்வொருவருக்குமான வேறுபாட்டையும் நிர்ணயிக்கிறது.

இயல்பு என்ற முகத்தின் வர்ணம் நிரந்தரமானது.
முகமூடியின் வர்ணங்கள் மட்டுமல்ல முகமூடியும் நிரந்தரமற்றது.
அரிதாரமில்லாத முகங்கள் நமக்கே பிடிக்காதபோது, நாமும் பூசிக்கொள்கிறோம். நமக்காக சில நேரம், பிறருக்காக பல நேரங்களில்.


நானாக விரும்பி
எதையும் அணிவதில்லை
அவ்வப்போது அந்தந்த முகங்கள்
என்னை உள்வாங்குகின்றன.

தூங்கும்போதாவது முகமூடியை கழட்டிவைப்பது அவசியம். இல்லையென்றால் நம் முகம் நமக்கே மறந்துவிடும்.
அழகிய தன் ஆய்வுக்கவிதை. தொடர்க ஷிப்லி.

கா.ரமேஷ்
12-01-2009, 07:41 AM
பல முகங்கள் இருக்கிறது என்னவோ உண்மைதான்,ஆனால் அதனை கட்டுபடுத்தும் சக்தியாக உங்கள் மனம் மட்டும்தான் இருக்கும்....

நல்ல கவிதை...

ஆதவா
20-01-2009, 07:11 AM
நீங்க எதுக்கும் அடிக்கடி கண்ணாடியைப் பார்த்துடுங்க...

பலமுகங்கள் இல்லாத மனிதன், ஒரு குழந்தையாகத்தான் இருக்கமுடியும்.

வாழ்த்துக்கள்.