PDA

View Full Version : மேகமும் மறைக்க முடியுமா சூரியனை ?



தங்கவேல்
09-06-2008, 04:27 PM
சகோதரர் சாரு நிவேதிதா மூலம் அறிமுகமானவர் ராஜநாயஹம். அவரைப் பற்றி லியர் மன்னன் என்ற கட்டுரையினை www.charuonline.com ல் எழுதினார் சாரு. எனது MARK ADMAN என்ற அட்வர்டைசிங் கம்பெனியின் வேலைக்காக ராஜ நாயஹத்தை அனுகலாம் என்று கருதி தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரின் பேச்சு என்னை ஏதோ ஒரு வகையினில் ஈர்த்தது.

சந்திக்க வேண்டுமென்ற ஆவல் மனதினுள். நேற்று அதற்கான நேரம் கிடைக்க, எனது நண்பருடைய மாமனாரின் காரை எடுத்துக் கொண்டு திருப்பூருக்குப் பயணம் செய்தேன். கையில் ஹெச்பியின் டச் ஸ்கீரின் லேப்டாப். டாட்டா இண்டிகாமின் பிளக் அண்ட் சர்ப் இணைய கனெக்*ஷன். பென் டிரைவுடன் அவரை சந்தித்தேன். ஆனால் என் செல்போன் நோக்கியா 1100. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

திருப்பூர் சென்று சேரும் வரையில் ஐந்து தடவை போன் செய்து விட்டார். அவரது பையன் கீர்த்தி எதிரில் வந்து வழிகாட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ராஜ நாயஹம் காரில் இருந்து முதன் முதலாய் பார்த்தேன். அசல் ஹீரோ தான். வயசு என்னவென்றே கண்டு பிடிக்க முடியவில்லை. அது எனக்கு தேவையுமில்லை. அவரின் டிரஸ்ஸிங்க் சென்ஸ் – என்னை ஒரு நிமிடம் அவரின் மேல் பொறாமை கொள்ளச் செய்து விட்டது.

சரளமான பேச்சு. புதிய விஷயங்களை கண்டால் ஆச்சரியப்படுவது. குடும்ப விஷயம் மற்றும் இன்ன பிற பேசினோம். நான் எதற்கு அவரைப் பார்க்கச் சென்றேனோ அதை மறந்து விட்டேன். பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. சாப்பாடு தயார் சாப்பிடலாம் என்றார்கள் ராஜ நாயஹத்தின் துணைவியார்.

அதற்கு முன்பு லேப்டாப்பை ஆன் செய்து அவரையும் என்னையும் சேர்த்து படம் எடுத்துக் கொண்டேன். புகைப்படம் ஒன்றினையும் எடுத்துக் கொண்டேன். (நானும் தமிழன் தான் என்பது உங்களுக்கு நினைவுக்கு வருவது எனக்கு தெரிகிறது. என்ன செய்ய ? பழக்க தோஷம் விடுமாட்டேன் என்கிறது). லேப்டாப்பை பார்த்து அவருக்கு ஒரே ஆச்சரியம் தான். சின்னக் குழந்தை போல ஆச்சரியம் அடைந்தார்

எனக்கு பிளாக் இல்லை என்றார். இதென்ன பிரமாதம். சரியாக இருபது நிமிடத்தில் அவருக்கான பிளாக் தயார். www.rprajanayahem.blogspot.com மனிதருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அப்படி ஒரு குதூகலம் முகத்தில். ஏதேதோ கேள்விகள் கேட்டார். சொன்னேன். பிறகு சாப்பாடு.

மட்டன் வறுவல் – எங்க வீட்டு அம்மனி செய்வதைப் போல வெகு டேஸ்ட். சாம்பார் ( அவரைக்காய் ), ரசம் என்ன ஒரு சுவை.. வாழை இலையில் சூடான சாதத்துடன் அப்படி ஒரு வித்தியாசமான கலவையுடன் நிறைவான சாப்பாடு. நான் அதிகம் சாப்பிடமாட்டேன் என்பதால் அளவோடு நிறுத்திக் கொண்டேன்.

நானோ பிசினஸ் பேசுபவன். என் நேரமும் அதே சிந்தனையாக இருப்பவன். அவரோ இலக்கியவாதி. அவரின் மூச்சே இலக்கியமாகத்தான் இருக்கும். மிக நன்றாக பாட்டுப் பாடுவார் என்று சொன்னார். தினமலரில் அவரின் பேட்டி பார்த்தேன். கி.ராஜநாரயணன், அசோகமித்திரன், கோணங்கி, சாரு நிவேதிதா என்று பலராலும் பாராட்டப்பட்டவர். வெளி நாட்டு இலக்கியத்தில் அவரின் அறிவுத்திறன் உச்சம். நானோ அவரின் உலகத்துக்கு சற்றும் பொருத்தமில்லாதவன். இருப்பினும் எனக்கேற்றவாறு பேசினார் அவர்.

இப்படி எல்லாம் நல்ல மனிதர்கள் உலகில் வாழ்கிறார்கள் என்று அவரைச் சந்தித்த பின்புதான் அறிந்து கொண்டேன்.

அவரைக் காணமல் போக வைக்க பிரமப் பிரயத்தனங்கள் நடக்கின்றன என்று அவரின் பேச்சு மூலம் தெரிந்து கொண்டேன். இலக்கிய உலகில் மிக முக்கியமான் இடத்தில் இருக்கும் அவர் சரியான ஆதரவு இன்றி வாடுபவர். இன்றைய உலகில் இணையம் இன்றி வாழ்க்கை இல்லை என்றாகி விட்டது. அதன் பரிச்சயம் கொஞ்சம் கூட இல்லாமல் வாழ்ந்து வரும் இலக்கியவாதி அவர்.

பூப்போல பாதுகாக்கணும் என்று நினைத்திருக்கிறேன். அவரின் எழுத்துக்களை உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்களிடம் சென்று சேர்க்க வேண்டுமென்பது என் ஆவல். முயற்சிகள் ஆரம்பித்து விட்டன. விரைவில் புதுப் பொலிவுடன் RPராஜநாயஹத்தின் எழுத்துக்கள் இணைய உலகில் பைனரி எண்களாய் டிஜிட்டல் வடிவத்தில் மிதந்து கொண்டிருக்கும்.

தமிழ் இலக்கிய உலகில் அவருக்கான தடம் மிக அழுத்தமாகப் பதிக்கப்படும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.

இதனிடையில் ஒரு மன்ற உறவினைச் சந்தித்தேன். சூரியன். அடிக்கடி தொலைபேசியில் பேசுவார். மிகவும் நல்ல நண்பர். நான் இருக்குமிடம் சொன்னவுடன் பறந்து கொண்டு வந்தார். பேச முடியவில்லை. ராஜநாயஹம் அவர்களை அறிமுகப்படுத்தினேன். டீ சாப்பிட்டார். கொஞ்சூண்டு சுவீட் சாப்பிட்டார். ஆளும் அப்படித்தான் இருந்தார். துடிதுடிக்கும் இளமையின் வாயிலில் நிற்கும் வாலிபன். காரின் டிரைவர் காரில் ஏதோ செய்யப்போக கார் ஸ்டார்ட் ஆகாமல் தொல்லை செய்ய எனக்கு வந்த டென்ஷனை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு வழியாக கார் ஸ்டார்ட் ஆக, வழி காட்டியவாறு வந்து விடை பெற்றார். இதற்கிடையில் ஆதவாவிற்குப் போன் செய்தால் மனிதன் எடுக்கவே மாட்டேன் என்று அடம்பிடித்தார். சரி மறுமுறை பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டேன்.

சிவா.ஜி
09-06-2008, 05:11 PM
யாருங்க அது ராஜநாயஹம்? கேள்விப்பட்டதே இல்லையே?

தங்கவேல்
10-06-2008, 01:36 AM
இவர் ஒரு புகழ்பெற்ற பத்தி எழுத்தாளர் சிவா. சாரு சார் தான் அறிமுகம் செய்து வைத்தார். உலக் இலக்கியங்கள் அவரின் விரல் நுனியில் இருக்கிறது. இசையின் நுணுக்கங்கள் அத்தனையும் அறிந்தவர். அவரை மன்றத்தில் எழுத வைக்க முயற்சி செய்து வருகிறேன். பல இலக்கியவாதிகளின் பாராட்டுகளை பெற்றவர். அவரின் பிளாக்கை படித்து பாருங்கள்.

ஹாலிவுட் சினிமாக்கள் அத்தனையும் தெரிந்தவர். இவரின் விமரிசனங்களுக்காக இலக்கிய உலகில் புகழ் பெற்றவர். மிக மிக நல்ல மனிதர் இவர்...

அறிஞர்
10-06-2008, 02:31 AM
அருமையான சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறீர்கள்.

அவருக்கு தெரிந்த விசயங்கள் பலவற்றை நம்முடன் பகிர்ந்துக்கொள்ள சொல்லலாமே..

சிவா.ஜி
10-06-2008, 04:13 AM
அவரைப் பற்றி அறியத் தந்ததற்கு நன்றி தங்கவேல். மன்றத்திலும் எழுதினாரென்றால் நன்றாக இருக்கும்.

விகடன்
10-06-2008, 05:20 AM
இலக்கிய வாதியின் அறிமுகம்....
நன்றாக இருந்தது. அதிலும் அனுபவத்துடன் கூடியே பதித்திருப்பது இன்னும் சிறப்பாக இருக்கிறது.

ஆக்கத்தின் இறுதியில் சில வரிகளை படிக்கையில் எனக்கு சந்தேகம் அரும்பத் தொடங்கியேவிட்டது...!!!!

நீங்கள் சொன்ன சூரியன் யார்?
நான் நினைத்திருந்தேன் ராஜநாயஹம் தான் சூரியன் என்று. ஆனால் இறுதியில் பாருங்கள், மன்றத்து உறுப்பினர் சூரியனையும் சொல்லிவைத்துவிட்டீர்கள். அதனால்த்தான் இந்தக் குழப்பம் - 01

சூரியனை மறைக்கு மேகம் யார்/ எது?

aren
10-06-2008, 06:55 AM
இலக்கியவாதியுடன் நடந்த சந்திப்பை அழகாக வர்ணித்திருக்கிறீர்கள்.

உங்கள் சந்திப்பு இன்னும் தொடர்ந்து வளற வாழ்த்துக்கள்.

அவரையும் இங்கே அழைத்துவந்து எழுதச்சொல்லுங்கள். நாங்கள் படிக்கக் காத்திருக்கிறோம்.

ஓவியன்
10-06-2008, 07:04 AM
பகிர்வுக்கு நன்றி தங்கவேல் அண்ணா,

உலகம் மிகப் பெரிதுதான் இல்லையா - அதானால் தானோ என்னவோ எல்லோருக்கும் எல்லாமும் சாத்தியப்படுவதில்லை....

தங்கவேல்
10-06-2008, 09:10 AM
இலக்கிய வாதியின் அறிமுகம்....
நன்றாக இருந்தது. அதிலும் அனுபவத்துடன் கூடியே பதித்திருப்பது இன்னும் சிறப்பாக இருக்கிறது.

ஆக்கத்தின் இறுதியில் சில வரிகளை படிக்கையில் எனக்கு சந்தேகம் அரும்பத் தொடங்கியேவிட்டது...!!!!

நீங்கள் சொன்ன சூரியன் யார்?
நான் நினைத்திருந்தேன் ராஜநாயஹம் தான் சூரியன் என்று. ஆனால் இறுதியில் பாருங்கள், மன்றத்து உறுப்பினர் சூரியனையும் சொல்லிவைத்துவிட்டீர்கள். அதனால்த்தான் இந்தக் குழப்பம் - 01

சூரியனை மறைக்கு மேகம் யார்/ எது?

விராடன் இந்தச் சூரியன் மன்றத்துச் சூரியன். ராஜநாயஹம் வேறு.