PDA

View Full Version : ஆசைகள் மூன்று



sasi6666
09-06-2008, 02:16 PM
ஆண் எனவும் ஓராசை சொல்லப்படவில்லை. 'கண்டுகேட்டுண்டுயிர்த் துற்றறியுமைம்புலனு மொண்டொடிக் கண்ணே யுள' என்றார் திருவள்ளுவர். அவ்வனுபவம் பெண்டிர்க்கு ஆடவரிடம் உண்டு என அவர் பாடிலர். அதனால் பெண்டிர் கலியாணஞ் செய்து கொள்வதற்கு முன் காதலென்ற பேராலும், கலியாணம் ஆன பிறகு கணவன் ஆண்டுக்கணக்கில் வெளியூர் சென்று பிரிந்திருக்குங் காலத்தில் மறைந்த வெறியாலும், இள விதவையராய் விட்டால் அடங்காமையாலும் வரம்பழிந்து மானங்கெடமாட்டார் என்பது தெரிகிறது. கலியாண மாகாத பெண்கள் காதலை இலட்சியமாக வைத்து மகாநாடுகள் கூட்டிக் காதல்மண உரிமைத் தீர்மானம் போட்டனர், இளவிதவைகள் மகாநாடுகள் கூட்டி இரண்டாவது மூன்றாவது ஆடவரோடு வாழ்க்கை யொப்பந்தஞ் செய்து கொள்ளும் உரிமைத்தீர்மானம் போட்டனர் என்ற செய்திகள் பத்திரிகைகளில் வந்திருக்கின்றனவா? பொதுவாகப் பெண்டிருள்ளம் லஜ்ஜைக் கிடமானது. அ·தவர்பால் காமத்தைத் தலைதூக்க விடாது. 'இவ் விஷயத்தில் பெண்களை விட ஆடவரே பெரிய குற்றவாளிகள். காமத்தினால் கண்மண் தெரியாது போகும் ஆடவன் ---', 'ஆடவன் பெண்ணின் நன்மையைக் கோருவதானால் தன்னை அடக்கிக் கொள்ளட்டும். வலிய வந்து இழுப்பது அவளல்ல, அவனேயாகையால் உண்மையில் குற்றவாளி அவனே', 'ஆடவனைப் போல் பெண்ணுக்கு அவ்வளவு சிற்றின்பப் பைத்தியம் உண்டென்று நான் எண்ணவில்லை. புலன்களை அடக்குதல் அவனைவிட அவளுக்குச் சுலபம்', 'என்னிடமுள்ள ஆதாரங்க ளெல்லாம் பெண்ணைவிட ஆணுக்கே தன் ஆசைகளை அடக்கும் சக்தி குறைவு என்பதைக் காட்டுகின்றன' என்றார் காந்தியார். அத்தகைய பெண்ணுலகிற்குப் பரிந்து பேசச் சில ஆடவர் தலைப்பட்டிருக் கின்றனர். காதல் மணமே சிறந்தது. பல பெண்கள் தம் பெண்ணியலிலிருந்து நழுவுவதற்கு அதுவே காரணம். ஆயினும் கலியாணம் ஆகாத காலத்தும், கணவன் பிரிந்திருக்குங் காலத்தும், இளமையில் வைதவ்வியம் அடைந்த காலத்தும் தம் பிறப்புரிமையாகிய அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்னும் பெண்ணியல்பால் மேம்பட்டு உத்தமிகளாய் வாழ்ந்து வரும் பெண்ணரசிகள் இலட்சோப லட்சமாக இன்றும் உள்ளனர்.

அக்னி
09-06-2008, 02:25 PM
என்ன சொல்ல வருகின்றீர்கள் சசி அவர்களே...
இணையத்தில் இருப்பதை அப்படியே பிரதி செய்வதால் பயன் ஏது?
மன்றத்தில் அதற்கென ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அப்படியே பிரதி செய்வதானாலும், தந்த தளத்திற்கு நன்றி சொல்லுவது மன்றத்தின் பண்பாகும்.
இனியாவது கடைக்கொள்ளுவீர்கள் என்று நம்புகின்றேன்.

மற்றோரின் முழுமையான பயன்பாட்டுக்காக இந்தக் கட்டுரையின் முழு வடிவமும்..,
இங்கே... (http://www.yarl.com/forum3/lofiversion/index.php/t23031.html)