PDA

View Full Version : தென்றல்



kavitha
09-06-2008, 09:30 AM
ஈரப்பசையும், வெளிச்சமும்
இருந்தாலும்
நீ வந்து வருடியதும்தான்
மொட்டு விடுகிறது

ஓவியன்
09-06-2008, 09:36 AM
அன்னையின் வருடல்
மழலைக்கு இதம்
தென்றலின் வருடல்
மொட்டுக்களுக்கு இதம்..!!

இங்கே தென்றலும் மொட்டுக்களும் உருவகப்படுத்தப்பட்டுள்ளதாக உணருகிறேன், உண்மையா அக்கா..??

சிவா.ஜி
09-06-2008, 10:51 AM
தென்றலின் இதமான வருடலில் மொட்டுகள் அவிழும் அழகை, கவிதை வரிகள் சொல்லும் அழகே அருமை. வாழ்த்துகள் தங்கையே.

அறிஞர்
10-06-2008, 03:02 AM
தென்றலை மெ/மேன்மைக்கு அழகான வரிகள்....

நாலு வரி நச் அருமை கவி..

இளசு
10-06-2008, 07:00 AM
கொஞ்சம் எழுதி நிறைய்ய்ய்ய்ய யோசிக்கவைத்த கவீ-க்கு பாராட்டுகள்..

வளமான மண்.. அதில் ஈரம்
(அதைப் பற்றி உறிஞ்சி நிலைக்கும் வேர்)
அளவான வெளிச்சம், வெப்பம்
(அதில் பச்சயம் சமைக்கும் தளிர்)
எப்போதும் தேவை - காற்றின் ஆக்சிஜன்...

வளரும் வரை இவை போதும் செடிக்கு..
வளர்ந்து - தலைமுறை வளர்க்க
மலர முனையும்போது....

முதல் அடையாளம் மொட்டு..
அது அவிழ -
சிறப்பு வரவாய் தென்றல் தேவை..

முதல் மூன்று தேவைகள்
முழுமையாய் அமைந்தபின்
தேவையான நேரத்தில்
தேவையே தென்றல்..

kavitha
10-06-2008, 07:13 AM
அன்னையின் வருடல்
மழலைக்கு இதம்
தென்றலின் வருடல்
மொட்டுக்களுக்கு இதம்..!!

இங்கே தென்றலும் மொட்டுக்களும் உருவகப்படுத்தப்பட்டுள்ளதாக உணருகிறேன், உண்மையா அக்கா..??
பதிவிற்கு நன்றி ஓவியன். உருவகம் - எதுவும் குறிப்பிட்டு எழுதவில்லை ஓவியன். வீட்டு பால்கனியில் இருந்த ரோஜாச்செடி கவிதையின் மூலம். மற்றபடி உருவகம் தோன்றினால் அது உங்கள் கற்பனை வளம்.
---------------------------------


தென்றலின் இதமான வருடலில் மொட்டுகள் அவிழும் அழகை, கவிதை வரிகள் சொல்லும் அழகே அருமை. வாழ்த்துகள் தங்கையே.

நன்றி சிவா அண்ணா.
---------------------------------




தென்றலை மெ/மேன்மைக்கு அழகான வரிகள்....

நாலு வரி நச் அருமை கவி..

நன்றி :)


---------------------------------------



தலைமுறை வளர்க்க
மலர முனையும்போது....
...
...
முதல் மூன்று தேவைகள்
முழுமையாய் அமைந்தபின்
தேவையான நேரத்தில்
தேவையே தென்றல்..
__________________
- இளசு

நினைத்ததைப்பிடித்துவிட்டீர்கள் அண்ணா. நன்றி.

பெற்றவர்கள் குழந்தைகளுக்கு நினைத்ததை வாங்கிக்கொடுத்தால் போதும் வளர்ந்துவிடுவார்கள் என்பது தவறான எண்ணம். தென்றல் போன்ற ஊக்குவிப்பும் கரிசனமும் மிகமிக முக்கியம். தூரத்தில் இருந்தாலும் தங்கவேல் அவர்களைப்போல எழுதும் கடிதங்கள் குழந்தைகளுக்கு அத்தகைய தென்றல் தான்.

இத்தகைய ஊக்குவிப்பு எங்கே கிடைக்கிறதோ அங்கே பிள்ளைகள் ஒட்டிக்கொள்வார்கள். அது உறவுகளாகத்தான் இருக்கவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஆசிரியராக, தோழராகவோ, காதலராகக்கூட இருக்கலாம். இத்தகைய அக்கறை உறவிலேயே கிடைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்.

பூமகள்
13-06-2008, 05:37 PM
முதல் மூன்று தேவைகள்
முழுமையாய் அமைந்தபின்
தேவையான நேரத்தில்
தேவையே தென்றல்..
__________________
- இளசு

இத்தகைய ஊக்குவிப்பு எங்கே கிடைக்கிறதோ அங்கே பிள்ளைகள் ஒட்டிக்கொள்வார்கள். அது உறவுகளாகத்தான் இருக்கவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஆசிரியராக, தோழராகவோ, காதலராகக்கூட இருக்கலாம். இத்தகைய அக்கறை உறவிலேயே கிடைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்
அசத்தல் அசத்தல்..!

இதையே தான் நானும் புரிந்து கொண்டேன்... தென்றல் அவ்வப்போது வாழ்வில் வந்தால் தானே.. வசந்தத்தின் வாயிலை வாழ்க்கையடையும்??

அழகான குறுங்கவி.. பாராட்டுகள் அக்கா. :)

இளசு அண்ணா.. கவிஞர்களின் உள் சென்று கரு அறிந்து பதிவிட்டுவிடுவதில் தீரர்...

பெரியண்ணாவிடம் ஒரு சந்தேகம்..
நீங்கள் மனவியலும் படித்தவரோ??!

செல்வா
13-06-2008, 05:55 PM
மனதிற்குள் அடைபட்டுக் கிடக்கும் அளவில்லாக் காதலும் ஆசையும் காதலனின் ஸ்பரிசத்தால் கரைகடந்ததாகவும் கொள்ளலாமே...

இளசு அண்ணா கூறியது போன்று நிறைய யோசிக்க வைத்த கவிதை...

வாழ்த்துக்கள் அக்கா..

kavitha
16-06-2008, 05:40 AM
பூமகள், செல்வா இருவருக்கும் நன்றிகள்.

இளசு
16-06-2008, 06:48 AM
..
நீங்கள் மனவியலும் படித்தவரோ?

இல்லை பூமகள்..

''மன்றவியல்'' மாணவன் நான்!