PDA

View Full Version : கவிதை...



rambal
17-07-2003, 08:10 AM
கவிதை...

நின்று போன பேருந்திற்கு
சதா நிற்கமட்டுமே தெரிந்த
நிழல்குடைக்கு
கடந்து போன காலத்திற்கு
முடிந்து போன வசந்ததிற்கு
விழியோரம் எட்டிப்பார்த்த
கண்ணீருக்கு
அந்தக் கண்ணீர் வரக்
காரணமாயிருந்தவளுக்கு
சதா குடைந்து கொண்டிருக்கும்
மனசாட்சிக்கு
விழி விரித்து
மிரட்டிப்பார்க்கும் தனிமைக்கு
சிலிர்ப்பை ஏற்படுத்தும்
மழைத்துளிக்கு
என் தேச அவலத்திற்கு
குப்பை பொறுக்கும்
சிறுவனுக்கு
குப்பைத் தொட்டிக்கு
ஆறாம் நம்பர் பிளாட்பாரத்திற்கு
மூணாங்கிளாஸ் டீச்சருக்கு
அம்மாவுக்கு அப்பாவுக்கு
எனக்கு என் நண்பனுக்கு
அதீதமாய்
நிலா நட்சத்திரங்கள்
பிரபஞ்சம்..
எல்லாக் கவிதைகளும்
எழுதி முடித்த பிறகு....
என்னை விடுத்து
என்ன எழுதிக் கிழித்து விட்டாய்?
என்று
ஈனஸ்வரத்தில் கவிதை கேட்டது...

anbu
17-07-2003, 08:48 AM
கவிதையின் அறியாத்தன்மை
இன்னமும் தன்னைத் தானே
புரிந்துகொள்ள முடியாத
இயழாமை கவிதைக்கும் உண்டு
என்பதற்க்கு ஒரு எடுத்துக்காட்டு
சிறப்பான தொகுப்பு.

பாராட்டுக்கள் ராம்பால் அவர்களே.

poo
17-07-2003, 11:15 AM
ராம்.. செதுக்கிய உன் படைப்புகள் சொல்லும் பல..

பாராட்டுக்கள் பலப்பல...

karavai paranee
17-07-2003, 03:31 PM
கவிதையே சொல்லவா உன் அழகை நான் இன்று
கவிதை என்று தலைப்பிட்டு ஒரு காவியமல்லவா படைக்க முயன்றிருக்கின்றீர்கள். நன்றி இன்னும் படையுங்கள்

Nanban
17-07-2003, 03:44 PM
கவிதைக்குத் தான் எத்தனை கரு?

பாரதி
17-07-2003, 03:52 PM
கவிதை.

இ.இசாக்
17-07-2003, 08:43 PM
கவிதை கவிதைதான்

இளசு
19-07-2003, 09:54 AM
சிக்கென ஒரு சின்ன நிழற்படம்!
பாராட்டுகள் ராம்!

இக்பால்
19-07-2003, 10:35 AM
''என்னை விடுத்து
என்ன எழுதிக் கிழித்து விட்டாய்?''

ராம்பால் நண்பரே! இந்த வரிகள் என்ன சொல்ல வருகின்றன?
எனக்கு புரியவில்லை.-அன்புடன் அண்ணா.

rambal
19-07-2003, 01:00 PM
அதாவது எல்லாவற்றைப் பற்றியும் கவிதை
எழுதியாகிவிட்டது கவிதையைத் தவிர..
கவிதையைப்பற்றி கவிதை எழுதவில்லை என்பதே அதன் கேள்வி..

mayuran
19-07-2003, 01:20 PM
கவிதை கேட்ட கேள்வி தப்போ....
ஆனால் உன்னை விடுத்தது என் என்றால் உனக்கு
என வரிகள் ஏது...

இக்பால்
20-07-2003, 08:49 AM
ராம்பால் நண்பரே! கவிதை சரியானதுதான் என எனக்கு புரிந்தாலும்
அந்த வரிகள் மீண்டும் மீண்டும் படித்தபோதும் பிடி கிடைக்கவில்லை.
சந்தேகத்தை மனதில் வைப்பதைவிட உங்களைக் கேட்டு விடுவதே
நல்லது என நினைத்தேன். உங்கள் கவிதையில் ஒரு குறையும் இல்லை.
இப்பொழுது புரிந்ததும் கூட. நன்றி நண்பரே.-அன்புடன் அண்ணா.

விகடன்
02-05-2008, 08:50 PM
கவிதையின் ஏக்கத்தைக்கூட கனமாக புரிந்துகொண்ட ராம்பால்.
இந்த சிந்தனை எல்லோருக்கும் வந்திவிடாது, உம்மைப் போன்ற ஒரு சிலரைத் தவிர.
பல கவிதைகள் கதைகள் படித்திருக்கிறேன். எல்லாம் அருமையே,
படைப்பிற்கென்று மட்டும் உதித்த ஞாயிறோ என்று பலமுறை சிந்தித்ததுண்டு.
நாமில்லாக் காலங்களில் அசத்தியவரே, நாமுள்ளபோது எங்கே சென்றீர்?

கவிதைக் கவிதை கவிதைதான்