PDA

View Full Version : ஊனப் பூனைகள்!!!டாக்டர் அண்ணாதுரை
09-06-2008, 07:05 AM
சொல்லிச் சொல்லி புளித்துப்போன
பொக்கிஷ வார்த்தைகள்....
செதுக்கிச் செதுக்கி சரிசெய்த புத்திமதிகள்.....
பொக்கிஷ வார்த்தையென்று தெரிந்தும்
மதியை மீட்டும் வார்த்தையென்று அறிந்தும்
கண்ணைக்கட்டிக்கொண்ட
புத்திசாலி பூனை வம்சாவளிகள்!!

மணிக்கணக்காய் வீதியை மேய்ந்துவிட்டு
சாதித்துவிட்ட களைப்பில்...
அதோ...மதில் மேல் அமர்ந்து
உலகத்தை உத்துப்பார்க்கின்றன....
ஆச்சர்யம், ஆச்சர்யம்....!!
தெரிவது சோலையில் சேலையும் அதன் இடைவெளியும்!
எரிவது எதிர்காலம்.....அதுமட்டிலும்
பூனைக்கண்களுக்குத் தெரியவில்லை!


ஊனமான கால்களைக்கொண்டு
அங்கிருந்து குதிக்கப்பார்க்கும்
புத்திகெட்ட பூனைகளின்
குருட்டு தைரியத்தை
கும்மாளமிட்டு கைத்தட்டும்
அப்பா பூனையும் அம்மா பூனையும்...
ஆஹா என்ன பூரிப்பு!!!
உற்றுப்பார்க்கிறேன்....
அடடா....
அவைகளும் ஊனம்தான்!!

kavitha
09-06-2008, 08:38 AM
குருவின் கண்டிப்பும், ஆதங்கமும் சேர்ந்த கோபமாய் கவிதையின் வெளிப்பாடு.


ஊனமான கால்களைக்கொண்டு
அங்கிருந்து குதிக்கப்பார்க்கும்
புத்திகெட்ட பூனைகளின்
குருட்டு தைரியத்தை
கும்மாளமிட்டு கைத்தட்டும்
அப்பா பூனையும் அம்மா பூனையும்...
ஆஹா என்ன பூரிப்பு!!!
பெற்றோர் எதிர்பார்ப்பது வெற்றிக்கோப்பையைத்தானே! ஓட்டப்பந்தயத்தை ஊக்குவிக்கும் பெற்றோர்கள் மிகக்குறைவு.
முடிந்தால் கோப்பையையும் கடையில் வாங்கிக்கொடுத்துவிடுவர் இக்காலப்பெற்றோர்கள்.


கண்ணைக்கட்டிக்கொண்ட
புத்திசாலி பூனை வம்சாவளிகள்!!
...
தெரிவது சோலையில் சேலையும் அதன் இடைவெளியும்!

அன்று நான்... இன்று நீ... நாளை உன் வம்சம்... தொடர்கதையாய்த் தொடர்பவை தானே! மதில்களை உடைத்தால் இச்சாபக்கேடு தீருமா? இல்லை இல்லை இது போன்ற உங்கள் கவிதைகள் அவர்களின் மனங்களின் மதிமயக்கத்தை உடைக்கட்டும்.

சமுதாயச்சிந்தனையோடு கூடிய உங்கள் கவிதைகள் தொடரட்டும். நன்றி.

சுகந்தப்ரீதன்
09-06-2008, 08:46 AM
குட்டிச்சுவற்றில் உட்கார்ந்து வெட்டிக்கதை பேசுபவர்களுக்கு...
சாட்டையடியாய் இருக்கும் உங்கள் வரிகள்.. இனியேனும் சிந்தித்து செயல்படட்டும்..!!
வாழ்த்துக்கள் அண்ணா..தொடருங்கள்..!!

ஓவியன்
09-06-2008, 08:59 AM
வேறுபட்ட ஒரு விதத்தில்
விதியை வெல்லும் மதியை
கயிறால் கட்டியதால்
ஊனமான பூனைகளுக்கு
கவிதையாய் வைத்த சூடு
அருமை அண்ணா....!! :icon_b:

சிவா.ஜி
09-06-2008, 10:48 AM
ஊனப்பூனைகளின் ஊனமான மனதையும் குணப்படுத்தும் சாட்டை சுழற்றல். சிந்திக்க வைக்கும் வரிகள் வாழ்த்துகள் டாக்டர் சார்.

பென்ஸ்
10-06-2008, 12:42 AM
வணக்கம் டாக்டர்.... நலமா....

உங்கள் கவிதைகளோடு மீண்டும் உங்களை காண்பதி மகிழ்ச்சி...

(அறிஞருக்கு ஒரு தனிமடல் அனுப்பி உங்கள் பழைய பயணாளர் பெயரை இதி இனைக்க சொல்லலாமே...)

கவிதைக்கு வருவோம்....
ஊமை பூனைகள்... தலைப்பையும் படைப்பாளரையும் கண்ட உடனையே புரிந்தது, உள்ளே மனதை குடையும் ஒன்று கண்டிப்பாக இருக்க போவது....

குட்டி சுவரும்...
வெட்டி கதையும் பேசி
திரியும் இவர்களுக்கு
சேலை இடையின்றி வேறு
வேலை கிடையாது...

வேலையில்லாததினால்
சேலை பார்பது வேலையாகிறது....

எங்கள் ஊரின் வழியே செல்லும் ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் உண்டு,
அதன் குட்டி சுவரில் எப்போதூம் ஒரு கூட்டம் இருக்கும்,
இவர்கள் எங்களோடு கிரிகெட் விளையாட வருவார்கள்.... இதனால் எப்போதவது நாங்களும் இருப்போம்... இதில் நிரந்திர உறுப்பினர்கள் அனைவரும் படித்து விட்டு வேலையில்லாமல், வேலை தேடாமல், வீட்டு சாப்பாடில் வாழும் சூரர்கள் தான்.... பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என்று யாரையும், விடாமல்... எதையும் விடாமல் கண்களால் புசிக்கும் இவர்களுக்கு தெரிவதில்லை.
ரத்தத்தின் வேகம் தணிந்து திரும்பி பார்க்கையில், இவர்களோடு சிறின்பத்திற்கு சிக்காமல் சென்றவர்கள் வாழ்க்கையில் எங்கோ போயிருப்பது தெரிந்தது.... இவர்கள் இன்னும் அதே மதிலில் பூனையாய்...

நல்ல கவிதை.....
ஆனால்.....சொல்லிச் சொல்லி புளித்துப்போன
பொக்கிஷ வார்த்தைகள்....
செதுக்கிச் செதுக்கி சரிசெய்த புத்திமதிகள்.....
................
................
கும்மாளமிட்டு கைத்தட்டும்
அப்பா பூனையும் அம்மா பூனையும்...
ஆஹா என்ன பூரிப்பு!!!
முதலில் வரும் வரிகள் கடைசியில் வரும் வரிகளுக்கு முரண்பாடாய் தெரிவது கவிதையில் ஒரு பின்னடைவு.....

பாராட்டுகள்...

இளசு
10-06-2008, 06:49 AM
இணைதேடல் வாழ்வின் ஓர் இன்றியமையாத அங்கம்..
அதை மட்டுமே இடை-விடாமல் செய்துகொண்டிருந்தால்?

(அந்தக் காலகட்டம் தாண்டி வந்து பார்த்தால் தெரியும்..)

வாழ்வாதாரம் தேடிப் பயின்று வேர் விடாமல் தள்ளாடும்
இந்த ஆகாயத்தாமரைகளை -
வாழ்வின் அடுத்த கட்டத்துக்குப்
பூரிப்புடன் அனுப்ப முனையும் பெற்றோர்...

இதுவா அதுவா - எப்படியும் பாயும் பூனை மனம்
ஊனமாயும் போனால்????

கண்டு சகிக்காமல் பொங்கிய கவிதை...

வாழ்த்துகள் அன்பு நண்பருக்கு..

டாக்டர் அண்ணாதுரை
11-06-2008, 03:58 AM
கவிதைக்கு வர்ணம் பூசி மெறுகேற்றிய கவிதா, சுகந்தப்பிரிரியன், ஓவியன், சிவா, பென்ஸ், இளசு.....அனைவருக்கும் நன்றி மலர்கள்.

காலச்சக்கரத்தின் வேகத்தை பார்க்கும்பொழுது...இனம் தெரியாத அச்ச உணர்வு...அதிலும் நமது இளையோர்களை கவனிக்கும் பொழுது.....அச்சம் கூடுகிறது....இவர்களா நமது சமுதாயத்தின் தூண்கள்.? கண்களாக இருக்க வேண்டிய பெற்றோர்களின் கண்களில் புண்கள்....ஆதங்கம் தாங்கவில்லை...அதன் வெளிப்பாடுதான் இது!
மன ஊனம்.....கொடூரமானது...., சுய உணர்வின் வழிதான் மீளமுடியும்....
சொல் புத்தியில் குட்டிப்பூனைகள் திருந்தலாம், சொந்தப்புத்தியில்தான் அம்மா பூனையும், அப்பா பூனையும் திருந்த இயலும்!

டாக்டர் அண்ணாதுரை
11-06-2008, 04:08 AM
கவிதைக்கு வர்ணம் பூசி மெறுகேற்றிய கவிதா, சுகந்தப்பிரிரியன், ஓவியன், சிவா, பென்ஸ், இளசு.....அனைவருக்கும் நன்றி மலர்கள்.

காலச்சக்கரத்தின் வேகத்தை பார்க்கும்பொழுது...இனம் தெரியாத அச்ச உணர்வு...அதிலும் நமது இளையோர்களை கவனிக்கும் பொழுது.....அச்சம் கூடுகிறது....இவர்களா நமது சமுதாயத்தின் தூண்கள்.? கண்களாக இருக்க வேண்டிய பெற்றோர்களின் கண்களில் புண்கள்....ஆதங்கம் தாங்கவில்லை...அதன் வெளிப்பாடுதான் இது!
மன ஊனம்.....கொடூரமானது...., சுய உணர்வின் வழிதான் மீளமுடியும்....
சொல் புத்தியில் குட்டிப்பூனைகள் திருந்தலாம், சொந்தப்புத்தியில்தான் அம்மா பூனையும், அப்பா பூனையும் திருந்த இயலும்!