PDA

View Full Version : எறும்புகளின் மணல் வீடாய் என் காதல்shibly591
09-06-2008, 05:12 AM
நீ
சிந்திச் சென்ற
பார்வை மழையில்
விதையே இன்றி
முளைத்தது
என் மெல்லிய காதல்

கனவுகளில் தினமும்
ஓரங்க நாடகமாய்
நானும் நீயும்

ஜென்மங்களை விட
வினாடிகள்தான்
நீளமானவை என்பது
எத்தனை நிதர்சனம்


எனக்குள்
வாழும் நீ
உனக்குள்
வாழும் நான்
நமக்குள்
வாழும் காதல்

என் விடியல்
பத்திரிகையின்
தலைப்புச் செய்தியாய்
தினசரி அரங்கேறுகிறது
உன் பெயர்

உன்னைச் சேர்வது
கொடுமைதான்
உன்னைப் பிரிவதோ
மகா கொடுமை

அந்தி மழை
தேநீர்
வானவில்
உன் ஞாபகம்
நான்கும் சேரும்
ஒற்றைப்புள்ளி
சுவர்க்கத்தின்
நிழற்படம்

நீ
நானாக இருக்கிறாய்
நான்தான்
நானாக இல்லை

பார்வைக்கு
என்ன தெரியும்
மனசின் வலிகளில் அல்லவா
காதல் உறங்குகிறது

ஒன்றையொன்று
தள்ளுகிறோம்
ஒவ்வாத முனைகளா
நாம்?

எனக்கு உன்
மௌனம் பிடிக்கும்
அதைவிட அதிகமாய்
வார்த்தைகளை

கவிதைகள்
கவிதைகள்
என்று சிலர் அலறுவதை
நிறுத்தச் சொல்
உன் பார்வைகளை விட
அவைகள் ஒன்றும் சாதிக்கப் போவதில்லை

வரண்டு கிடந்த
என் இதய வாசல்
வசந்தமாய்
பூத்துக்கிடக்கிறது
உன் வருகையின் பின்

உன் கண்களைப் பற்றி
எவ்வளவோ எழுதலாம்

வேண்டாம்
வெண்ணிலவை விபரிக்க
மின்மினிக்கு என்ன தகுதி

எறும்புகளின்
மணல்வீடாய்
க~;டப்பட்டுக் கட்டியிருக்கிறேன்
இந்தக் காதலை

உடைத்து விடாதே
உள்ளே
துடித்துக் கொண்டிருப்பது
உனக்கான
என் உள்ளம்

kavitha
09-06-2008, 05:46 AM
"காதல் பித்து பிடித்தது இன்று... பார்த்தேனே....
கண்மணி நீதான்.."
ஷிப்லி... இதை நான் பாடவில்லை.. ஏற்கனவே இந்தப்பாடலை பாடியிருக்கிறார்கள்.
இந்தக்கவிதையைப்படித்ததும் எனக்கு சந்தோசத்தில் இந்தப்பாடல் தானே வந்துவிட்டது.

பித்து முற்ற வாழ்த்துகள்.

யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம்!

சுகந்தப்ரீதன்
09-06-2008, 08:31 AM
உன்னைச் சேர்வது
கொடுமைதான்
உன்னைப் பிரிவதோ
மகா கொடுமை

அற்புதம் சிப்லி..அற்புதம்..!!:icon_b:
காதலிப்பவனின் நிலையை கச்சிதமாய் கதைத்துள்ளீர்..!!
வாழ்த்துக்கள் நண்பரே..!!

சரி.. அதென்ன எறும்புகளின் மணல் வீடாய் என் காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=355565#post355565) என்ற தலைப்பு..!!
எனக்கென்னவோ நீங்கள் அடிக்கடி தலைப்புகளில் தடுமாறுவதுபோல் தெரிகிறது நண்பரே..:smilie_abcfra:!!

shibly591
09-06-2008, 08:35 AM
நன்றி கவிதா...?

உண்மையில் இரண்டு வருடமாக ஒரு தலையாக காதலிக்கிறேன்..

என்னால் முடிந்தது இப்படி கிறுக்கித்திரிய மட்டும்தான்...

அவளிடம் காதலைச்சொல்லியும் இன்று வரை சரியான பதில் இல்லை.

ஆக இன்னும் இதுபோன்ற கிறுக்கல்கள் தொடரும்....

shibly591
09-06-2008, 08:41 AM
எறும்புகளின் மணல் வீடாய் என் காதல். காதலை கட்டுவது சிரமம் இல்லையா?அது கலையும்போது ஏற்படும் வலி கொடுமையிலும் கொடுமை.உண்மையில் தலைப்பில் நான் தடுமாறுகிறேன்...எப்படி நிவர்த்திக்கலாம்...?

சுகந்தப்ரீதன்
09-06-2008, 09:26 AM
.உண்மையில் தலைப்பில் நான் தடுமாறுகிறேன்...எப்படி நிவர்த்திக்கலாம்...?
நீங்கள் "கவிதைக்கு தலைப்பிடுவது எப்படி" என்று ஆரம்பித்த திரியில் உள்ள விளக்கங்களே போதுமானது நண்பரே..!!

kavitha
17-06-2008, 09:59 AM
நன்றி கவிதா...?

கவிதாவில் என்ன கேள்விக்குறி.
கவிதா என்றே அழைக்கலாம். வயது பாகுபாடு எழுத்தில் தெரிவதில்லை.


உண்மையில் இரண்டு வருடமாக ஒரு தலையாக காதலிக்கிறேன்..

என்னால் முடிந்தது இப்படி கிறுக்கித்திரிய மட்டும்தான்...

அவளிடம் காதலைச்சொல்லியும் இன்று வரை சரியான பதில் இல்லை.

ஆக இன்னும் இதுபோன்ற கிறுக்கல்கள் தொடரும்....

அப்படியாயின் எங்களுக்கு உண்மையான காதல்கவிதைகள் கிடைக்கும்.
காதல் 'ஒரு'தலையாய் இருந்தாலும் பரவாயில்லை. இரு உயிராய் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

விகடன்
17-06-2008, 09:50 PM
ஒரு தலைக்காதலாய்
உறுமும் மனம்
ஷிப்லியின் மனதையே
சிப்பிலியாட்டும் பெண்யாரோ?

crisho
19-06-2008, 01:25 PM
இன்னுமொரு அனுபவ படைப்பளியா!

வருக அன்பரே... தருக இன்னும் பல அனுபவங்களை

lenram80
19-06-2008, 07:50 PM
காதல்... இன்னும் எத்தனை கவிதைகளை எழுத போகிறதோ?

உணர்ச்சிகளிலேயே அதிகமாக எழுதப்பட்டது காதலாகத்தான் இருக்க முடியும். இதற்குப் பின் தான் புறத்தினை.

இன்னொரு கவிதையை உங்கள் மூலம் எழுதிய காதலுக்கும், இதை எழுத பேனாவான உங்களுக்கும் நன்றி :)

"பொத்தனூர்"பிரபு
29-06-2008, 08:16 PM
...................................
உன்னைச் சேர்வது
கொடுமைதான்
உன்னைப் பிரிவதோ
மகா கொடுமை
....................................

இது எனக்கு மிகவும் பிடித்தவரிகள்
ஏற்கனவே என் ரசனையை ஒத்த ஒருவர் இந்த வரிகளை பாராட்டியுள்ளார்
படித்தவுடனே பிடித்ததால் அதையே குறிப்பிடுகிறேன்