PDA

View Full Version : நிழல் நண்பன்



சுகந்தப்ரீதன்
08-06-2008, 10:07 AM
துருப்பிடித்த இரும்பாய்
துடுப்பிழந்த படகாய்
காலத்தின் கனலில்
எங்கெங்கோ எரிக்கப்பட்டு

இழுத்துச் செல்லப்பட்டு
இழந்து நிற்கிறேன்....
என்னையே நான்
கொஞ்சம் கொஞ்சமாய்..!!

இழந்தவையோ இருக்கின்றன
இன்னும் அணையாமல்
நினைவெனும் நினைவிடத்தில்..!!

நிதர்சனத்தின் நீண்ட
பயணத்தில் நீங்காது
நீள்கின்றன........
ஆறாத ரணங்களாய்
அன்றைய நினைவுகள்..!!

காலச்சுழற்சியில் கனவுகளும்
கலைந்துப்போக ஏனோ
நினைவுகள் மட்டும்....
நிலையாய் நிற்கின்றன..!!

உணர்வுகள் உருக்குலைய
உறவுகள் உடைந்துபோக
நிர்கதியான என்னை
நித்தம் கொல்கின்றன
நியாயமான நினைவுகள்..!!

வலித்தாலும் வதைத்தாலும்
வருத்தப்பட ஏதுமில்லை....
இறுதிவரை இணைபிரியாமல்
வாழ்வில் வழித்துணையாய்
வருவது நினைவெனும்
நிழல்நண்பன் மட்டுந்தானே..?!

Mano.G.
08-06-2008, 10:31 AM
அருமை தம்பி,
கவிதை அருமை,

பல நேரங்களில் நம்மை நாமே தேற்றிகொள்ள
நமது நினைவுகள் நமக்கு வழிவகுக்கும்.
சமயங்களில் நினைவுகளுடன் கற்பனைகளும் கலந்து
நம்மை தேற்றும்.

வாழ்த்துக்கள்

மனோ.ஜி

சிவா.ஜி
08-06-2008, 10:40 AM
நினைவுகள் சில நேரம் சுகம் சில நேரம் சுமை. ஆனால் தனிமைக் கொடுமைக்கு அவைதானே உற்ற நன்பன். அழகான வரிகள் சுபி. வாழ்த்துகள்!

விகடன்
08-06-2008, 10:57 AM
சுகந்தப்ரீதா??
இதெல்லாம் எப்படீப்பா முடியுது?



ஒரு நிலைக்கு பின் எந்தக்கண்ணத்திலும் எம்முடன் ந்நின்று ஆறுதல் சொல்லும் நண்பனை பற்றிய கவிதை.

அசத்திவிட்டீர்கள்.
பாராட்டுக்கள்

செல்வா
08-06-2008, 11:23 AM
அட... எப்படி சு.பி.... இன்னிக்கி மதியம் சாப்பாட்டு வேளையில் நடந்த ஒரு உரையாடல்..... அதை முடித்துவிட்டு வந்து மன்றம் திறந்தால் உனது கவிதை... இதோ அந்த உரையாடல்....
நானும் என்னுடன் பணிபுரிபவரும் அமர்ந்து அருந்திக் கொண்டிருக்கையில் அதே மேசையில் வந்தமர்கிறார் இன்னொரு நண்பர் சற்று வயதானவர்.
ஒருவர் : வாங்கண்ணா உக்காருங்க...
வந்தவர் : எப்படிருக்கீஙக ரொம்ப நாளாச்சு பார்த்து
ஒருவர் : ஆமாங்க... இப்பல்லாம் இங்க வரதில்ல அவ்வளவா...
............... (இப்படி சில விசாரிப்புகள்)..............
ஒருவர் : சரி வாழ்க்கை எப்படி போகுது....
வந்தவர் : தனிமையில ஏதப்பா இனிமை...
ஒருவர் : அட என்னங்க இப்படிச் சொல்லுறீங்க தனிமையில தானே நிறைய பேரு இனிமை கண்டிருக்கிறாங்க...
வந்தவர் : அதெப்படி.....
ஒருவர் : சித்தர்களையும் யோகிகளையும் பாருங்க தனிமையைத்தான் பல புதிய சிந்தனைகளுக்கு உபயோகப் படுத்திக்கிட்டாங்க... ஏன் புத்தரை எடுத்துக் கொள்ளுங்கள்.... அவரும் தனிமையில் தான் ஞானம் பெற்று கவலையை விட்டாராம்.
இன்னும் நிறைய எழுத்தாளர்கள் சிறையில் இருக்கும் போது எழுதிய பல பல புகழ்பெற்ற புத்தகங்கள் நிறைய இருக்கின்றன.
வந்தவர் : அது சரி.....
ஒருவர் : தனிமைய சாதாரண களிமண் மாதிரி சொல்லலாம்...
ஒரு குயவனை கூப்பிட்டு களிமண்ண கொடுத்தா அவன் அதை பானையாக்குவான்...
ஒரு சிற்பிகிட்ட களிமண்ண குடுத்தா அவன் அதை சிலையாக்குவான்
ஒரு குழந்தைகிட்ட குடுத்தா வச்சு விளையாடிட்டுருக்கும்
அதே களிமண்ண இன்னொருத்தன் வச்சிட்டு என்னடா இது களிமண்ண குடுத்துருக்காங்கண்ணு புலம்பிட்டுருப்பான்...
இன்னொருத்தர் : ஏலேய் இப்போ அவரு சாப்பாடு எடுத்திட்டு வந்திருக்காரு சாப்பிட விடுறியா? இல்லியா?
நான்.......... எஸ்கேப்...................

சுகந்தப்ரீதன்
08-06-2008, 01:10 PM
அருமை தம்பி,
கவிதை அருமை,வாழ்த்துக்கள்
மனோ.ஜி

அழகான வரிகள் சுபி. வாழ்த்துகள்!
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி மனோ.ஜி மற்றும் சிவா.ஜி அண்ணா..!!

சுகந்தப்ரீதா??
இதெல்லாம் எப்படீப்பா முடியுது?
எப்படி என்றால் எப்படி அண்ணாச்சி..?!:sprachlos020:
அப்பப்ப தனிமையில அவனோடத்தான உறவாடிட்டிருக்கோம்..!!
அவனுக்கு நன்றிசொல்லனும்ன்னு தோனுச்சி அதான் அண்ணாச்சி..இப்படி..!!:fragend005:

அட... எப்படி சு.பி.... நான்.......... எஸ்கேப்...................
நல்ல கருத்துள்ள உரையாடல் செல்வா...!! அப்ப இனி உங்களை "சிந்தனை செல்வா" ன்னு நாங்க சொல்லலாம்தானே.?!:wuerg019:

பூமகள்
08-06-2008, 01:10 PM
நன்றி சுபி.

செல்வா
08-06-2008, 01:18 PM
நல்ல கருத்துள்ள உரையாடல் செல்வா...!! அப்ப இனி உங்களை "சிந்தனை செல்வா" ன்னு நாங்க சொல்லலாம்தானே.?!:wuerg019:
செல்வா என்றழைத்தாலே போதும் என் சிந்தை குளிருமே.... எதற்காக சிந்தனை என்ற நிந்தனை ....

உங்கள் கவி அருமை சுகந்தன்.

சுகந்தப்ரீதன்
08-06-2008, 01:23 PM
நன்றி சுபி.
நன்றி யாருக்கு எனக்கா..?? என் நண்பனுக்கா..பூ..??:fragend005:
எங்கள்ல யாருக்கா இருந்தா என்ன.. உனக்கு என்னோட நன்றி..!!:lachen001:

செல்வா என்றழைத்தாலே போதும் என் சிந்தை குளிருமே.... எதற்காக சிந்தனை என்ற நிந்தனை ....
உங்கள் கவி அருமை சுகந்தன்.
மிக்க நன்றி செல்வா..!!
அடைமொழி அழகா பொருந்தி வருதேன்னு சொன்னேன்..!!
சரி...உங்களுக்கு வேண்டாம்ன்னா இனி செல்வான்னே சொல்வோம்..!!:icon_b:

இளசு
08-06-2008, 02:07 PM
காலத்தை வெள்ளம் என, சுழல் என வாசித்ததுண்டு..

ப்ரீதன் இங்கே கனல் எனச் சொன்னதிலேயே
வெப்பம் விளங்கி விட்டது...

எரிந்தவை சேகரம்..
இன்று எரிபவை நாளைக்காகும்...

நாம் எரியும்நேரம் எல்லாக்
கணக்கும் நிலுவை தீரும்..

செல்வாவின் பொருத்தமான பின்னூட்டம் - அருமை..


பாராட்டுகள் ப்ரீதா!

பூமகள்
08-06-2008, 02:18 PM
நன்றி யாருக்கு எனக்கா..?? என் நண்பனுக்கா..பூ..??:fragend005:
சில விசயங்கள்.. நம்மை பிரதிபலிப்பதாக அமைந்துவிடுவதுண்டு.. சுகு.. அப்போது.. விமர்சிக்க வார்த்தைகள் கிடைப்பதில்லை...

அவ்வகை உணர்வை உனது இக்கவி எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது... அதனால் சிறிது நேரத்துக்கு என்னால் நன்றி தவிர எதை எழுதுவது என்றே புரியவில்லை..

அவ்வகையில்.. நன்றியும் பாராட்டுதல்களையும் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்...

அழகான வார்த்தைக் கோவை.. அருமை சுபி... மனமார்ந்த பாராட்டுகள்..:icon_rollout:
இன்னும் பல கவிதைகள் அடிக்கடி எழுத வேண்டுமென்று செல்லமான கட்டளை..!! :rolleyes:

சுகந்தப்ரீதன்
08-06-2008, 03:14 PM
எரிந்தவை சேகரம்..
இன்று எரிபவை நாளைக்காகும்...

நாம் எரியும்நேரம் எல்லாக்
கணக்கும் நிலுவை தீரும்..!
அற்புதம் இளசு அண்ணா..!! (நல்லாயிருக்கீங்களா..??)
அழகா பட்டுன்னு நெஞ்சுல பதியுறமாதிரி சொல்லிட்டீங்க..!!
இதுக்குமேல எதுக்கு விளக்கம்..?! மிக்க நன்றியண்ணா..!!

இன்னும் பல கவிதைகள் அடிக்கடி எழுத வேண்டுமென்று செல்லமான கட்டளை..!! :rolleyes:
மன்னிக்கவும்..பூ..!! அவசரப்பட்டு புரிந்துக் கொள்ளாமல் பதில் பதிவிட்டு விட்டேனோ..?? பரவாயில்லை.. மிக்க மகிழ்ச்சி..பூ..நீங்களும் தொடர்ந்து நிறைய எழுதுங்கள்..!!

யவனிகா
08-06-2008, 06:21 PM
அன்பு சுகந்தா...ஆழமான கவிதை...
நிழல் கவிதை எழுத அருமையான கரு...அள்ள அள்ள குறையாத விசயம்...கொஞ்சம் சோகம் இழையோட...கடைசியில் தனக்குத்தானே தேறுதல் சொல்லும் கவிதை...

சோகம் சொல்ல...சோகம் தீர்க்க...தனிமை தேட...தனிமை போக்க எல்லாமே கவிதை...வாழ்க்கையின் நிழல் கவிதையாய் நிலம் தொட...நிஜம் பார்த்து சிரித்து அணைத்து தேற்றி.......இன்னும் மிச்சமிருக்கிறது வாழ்க்கை...சுவாரசியங்கள் எஞ்சி இருக்கிறது என்பதாய்...
சோகம் சொல்லிப் போனாலும் சுவைக்கிறது கவிதை...வாழ்த்துக்கள்....


நிழலென, நிழல் கூட என்னைத்
பின்தொடராத் தனிமை...
தனிமையும் நானும்
உரையாடும் தருணம்
என் நிழல் பரிகாசிக்கலாம்...
என்னடி நீ பைத்தியம் என்று...?
நிழலுக்கு என்னைப் பரிகாசிப்பதே வேலை...
நீண்டும் குறுகியும்..
என்னைப் போல அவள் இருந்ததில்லை
பெரும்பாலும் நான் பார்த்த பொழுதுகளில்...
நிழல் உறங்கிப்போகும்
நிசிப்பொழுதின் இருட்டில்...
என் தனிமையுடன்
எதிர் அமர்ந்து பேச...
ஆயிரமாயிரம் கதையுண்டு....
நிழலே நீ உறங்கிப்போ
உனக்கும் சேர்த்து
நான் கண்விழிக்கிறேன்....!!!

இளசு
08-06-2008, 06:30 PM
யவனிகாவின் பின்னூட்டக் கவிதை கண்டு அசந்து நிற்கிறேன்..

இனிய பென்ஸ், நண்பன், ராம்பால் - போன்றவர்கள் மட்டுமே
இதை அதற்குரிய தரத்துடன் விமர்சிக்க இயலும் என நம்புகிறேன்..

சுகந்தப்ரீதன்
09-06-2008, 03:15 AM
அன்பு சுகந்தா...ஆழமான கவிதை...
சோகம் சொல்லிப் போனாலும் சுவைக்கிறது கவிதை...வாழ்த்துக்கள்...
அழகான விமர்சனத்துடன் ஆழமான பின்னூட்ட கவிதை தந்தமைக்கு மிக்க நன்றி அக்கா..!!

RRaja
09-06-2008, 07:17 AM
நிர்கதியான என்னை
நித்தம் கொல்கின்றன
நியாயமான நினைவுகள்..!!
சமீபத்திய உங்களது கவிதைகள் சோகத்தை மையப்படுத்தியே வந்துகொண்டிருபதாகத் தோன்றுகிறது சுகந்தப்ரீதன். ஒருவித சுயபச்சாதாபம் உங்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிறது.

நீங்கள் மிக அழகாக கவிதை எழுதுகிறீர்கள். அனைவருடனும் அன்போடு உரையாடுகிறீர்கள்... உங்களுக்கு கிடைத்திருக்கும் உறவுகள் இனிமையானவை. நீங்கள் செய்வது யாவுமே சிறப்பாக இருப்பதால், பார்ப்பதற்கு அனைத்துமே சாதாரணமாக "அவனுக்கென்னப்பா.... " என்பதாக பிறருக்குத் தோன்றுகிறது. எனக்கும்தான்....



நிழலென, நிழல் கூட என்னைத்
பின்தொடராத் தனிமை...
தனிமையும் நானும்
உரையாடும் தருணம்
என் நிழல் பரிகாசிக்கலாம்...
என்னடி நீ பைத்தியம் என்று...?
நிழலுக்கு என்னைப் பரிகாசிப்பதே வேலை...
நீண்டும் குறுகியும்..
என்னைப் போல அவள் இருந்ததில்லை
பெரும்பாலும் நான் பார்த்த பொழுதுகளில்...
நிழல் உறங்கிப்போகும்
நிசிப்பொழுதின் இருட்டில்...
என் தனிமையுடன்
எதிர் அமர்ந்து பேச...
ஆயிரமாயிரம் கதையுண்டு....
நிழலே நீ உறங்கிப்போ
உனக்கும் சேர்த்து
நான் கண்விழிக்கிறேன்....!!!
இங்கே நிழல் னு சொல்றது யாரை அக்கா... நுரை அண்ணாவையா? சிறுபிள்ளை நான். தவறெனில் மன்னித்துவிடுங்கள்.

சுகந்தப்ரீதன்
09-06-2008, 07:52 AM
சமீபத்திய உங்களது கவிதைகள் சோகத்தை மையப்படுத்தியே வந்துகொண்டிருபதாகத் தோன்றுகிறது சுகந்தப்ரீதன். ஒருவித சுயபச்சாதாபம் உங்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிறது..
கொண்டிருக்கிறது என்பதல்ல.. கொண்டிருந்தது என்பதுதான் சரியாய் இருக்கும் நண்பரே..!! எல்லோரும் இன்னல்களை கடந்துதான் இன்னமும் வாழ்வில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்..!! அப்படியொரு பயணத்தின்போது நீங்கள் சொன்ன அந்த சுயபட்ச்சாதாபத்துக்கு நான் ஆட்பட்டிருந்தது உண்மை.. அந்த கணங்களில் எனக்குள் ஏற்பட்ட வலிகளை வார்த்தைகளில் வடிப்பது எனக்கு வழக்கமாயிருந்தது..!! அப்படி வடித்தவற்றை அவ்வப்போது எடுத்து நான் இங்கே பதிவதுண்டு.. அதாவது நான் பதியும் கவிதைகள் இப்போது எழுதியவையாகவும் இருக்கலாம்.. எப்போதோ எழுதியவையாகவும் இருக்கலாம்.. ஆனால் அவை அனைத்தும் பெரும்பாலும் என்னை எடுத்தியம்புபவையாகவே இருக்கும் நண்பரே..!!:smilie_abcfra:

நீங்கள் மிக அழகாக கவிதை எழுதுகிறீர்கள். அனைவருடனும் அன்போடு உரையாடுகிறீர்கள்... உங்களுக்கு கிடைத்திருக்கும் உறவுகள் இனிமையானவை. நீங்கள் செய்வது யாவுமே சிறப்பாக இருப்பதால், பார்ப்பதற்கு அனைத்துமே சாதாரணமாக "அவனுக்கென்னப்பா.... " என்பதாக பிறருக்குத் தோன்றுகிறது. எனக்கும்தான்....
என்ன நண்பரே.. ஆனாலும் ரொம்ப புகழுறீங்க போங்க..!! நீங்கள் அப்படி எண்ண வேண்டிய அவசியமே இல்லை..!! ஏனெனில் எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே மன்றம் வந்தவர் நீங்கள்.. நீங்கள் எழுதிய "பேசும்காற்று" குறுங்கவிக்கூட மிக அழகாய் இருக்கிறது.. நீங்களும் தொடர்ந்து நல்லபதிவுகளை தரும்போது என்னிடம் பழகுவது போலவே எல்லோரும் உங்களிடமும் பழகத்தான் செய்வார்கள்.. மற்றவர்கள் நம்மை நெருங்கி வருவதும் விலகி செல்வதும் நம்கையில்தான் இருக்கிறது நண்பரே..!! ஆகையால் ஆர்வமுடம் மன்றத்தில் பங்குகொள்ளுங்கள்.. எனக்கு கிடைத்ததைவிட அதிகமாகவே உங்களுக்கு கிடைக்கும்.. அதற்கு எனது வாழ்த்துக்கள்..!!:icon_b:

அப்புறம் இங்கே நிறைய ராசாக்கள் இருப்பதால் உங்களை இனி நாங்க "திண்டுக்கல் ராசா" -ன்னு செல்லமா கூப்பிடலாமா..??!:lachen001:

RRaja
10-06-2008, 05:14 AM
அப்படி வடித்தவற்றை அவ்வப்போது எடுத்து நான் இங்கே பதிவதுண்டு.. அதாவது நான் பதியும் கவிதைகள் இப்போது எழுதியவையாகவும் இருக்கலாம்.. எப்போதோ எழுதியவையாகவும் இருக்கலாம்.. ஆனால் அவை அனைத்தும் பெரும்பாலும் என்னை எடுத்தியம்புபவையாகவே இருக்கும் நண்பரே..!!
தன்னிலைக்கவிதைகள் எழுதவும் வீரம் வேண்டும் நண்பரே... வாழ்த்துகிறேன்.


அப்புறம் இங்கே நிறைய ராசாக்கள் இருப்பதால் உங்களை இனி நாங்க "திண்டுக்கல் ராசா" -ன்னு செல்லமா கூப்பிடலாமா..??!
செல்லமாக நீங்கள் என்னை திண்டு என்று திட்டினாலும் மகிழ்ச்சிதான்.

சுகந்தப்ரீதன்
10-06-2008, 09:14 AM
செல்லமாக நீங்கள் என்னை திண்டு என்று திட்டினாலும் மகிழ்ச்சிதான்.
அப்ப..சரி..!! இனி திண்டுக்கு திண்டாட்டம்...!!:fragend005::confused:
எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்..!!:lachen001::wuerg019:

ஆதவா
19-06-2008, 11:58 AM
வாவ்.... சுகந்தப்ரீதன்... மிக அழகான கவிதை ஒன்றைப் படைத்திருக்கிறீர்கள்.

நிர்க்கதியானவர்களின் நெஞ்சினில் யாவரும் அறியாத நொடிப்பொழுதினில் வந்தமரும் நிழல் நண்பனின் பிரிகை மட்டும் நடப்பதில்லை சுபி. வடியாத இரவுகள் வேண்டுமெனத் துடிக்கும், நகராத கடிகார முற்களை முத்தமிட்டு மகிழும். கரை உடைந்து பாயும் வெள்ளம்போல நினைவுகளை அப்பாது./ வற்றிச் சுருங்கிப் போய் தனிமையின் தனிமையைத் தாராது.

நினைவுகள் நம்மின் பிரதி. நம்முள் உருவாக்கிக் கொள்ளும் சிந்தனைக் குழந்தை.

வலித்தாலும் வதைத்தாலும்
வருத்தப்பட ஏதுமில்லை....

தீரா வலிசுமக்கும் போது ஆறா மருந்திவன் தருவதில்லை. இடுக்கண் களைவது நினைவெனும் நட்பு.

வாழ்த்துகள் சுபீ!

சுகந்தப்ரீதன்
19-06-2008, 12:11 PM
தீரா வலிசுமக்கும் போது ஆறா மருந்திவன் தருவதில்லை. இடுக்கண் களைவது நினைவெனும் நட்பு.

வாழ்த்துகள் சுபீ!
பின்னூட்டம் இடுவதைக்கூட பெரும் ஈடுபாட்டுடன் நீ செய்வது உன்னிடம் எனக்கு பிடித்த விசயம் ஆதவா..!! அந்த வகையில் இங்கே உன் விமர்சனம் கண்டு மிகவும் அகமகிழ்ந்தேன்..!!

பாராட்டி ஊக்கமளித்தமைக்கு மிக்கநன்றி ஆதவா..!!