PDA

View Full Version : வேட் 2007 இலிருந்து தொலை நகல் (fax) அனுப்புவது எப்படி?



தீபன்
08-06-2008, 02:56 AM
நண்பர்களே, நான் வேட் 2007 பயன்படுத்துகிறேன். இதிலிருந்து தொலை நகல் அனுப்பலாமென்று நண்பர்கள் கூறுகிறார்கள். நானும் முயன்று பார்த்தேன். முடியவில்லை. உதவுங்களேன்.

ஓவியன்
08-06-2008, 10:00 AM
இதுவரை நானும் அறிந்ததில்லை, உங்கள் திரியைப் பார்த்த பின் இணையத்தில் தேடியதில் ஃபேக்ஸ் மோடம் அல்லது அதற்கு இணையான சேவைகளில் ஏதேனும் ஒன்று உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டுமென நினைக்கின்றேன்....

மேலதிக தகவல்களுக்கு......

http://office.microsoft.com/en-us/help/HP010377981033.aspx

http://www.infopackets.com/channels/en/windows/gazette/2004/20040414_send_fax_through_ms_word.htm

Mano.G.
08-06-2008, 10:36 AM
கணனியிலிருந்து தொலைநகல் அனுப்ப தனி மென்பொருள்
கணனியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்,
அந்த மென்பொருள் இலவசமாக கிடைக்குமா?
தெரியவில்லை.

தேடிப்பார்ப்போம் இணையத்தில்.

மனோ.ஜி

அன்புரசிகன்
08-06-2008, 01:55 PM
WINDOWS XP எனில் control panel ல் உள்ள printer and fax என்பதினுள் சென்றால் இடதுபக்கத்தில் add fax என்ற ஒரு option இருக்கும். அதனூடு உங்கள் கணினியில் fax ஐ நிறுவலாம். அதற்கு windos xp CD தேவைப்படலாம். பின்னர் அந்த printer and fax என்பதில் உள்ளே உங்களுடைய பிறின்டர்களின் பட்டியலுடன் புதிதாக fax உம் சேர்ந்து காணப்படும். அதன் பின்னர் உங்கள் fax ஐ நீங்கள் configure செய்யவேண்டும். அதாவது உங்களின் பெயர் உங்கள் fax இலக்கம் போன்றவை.

பின்னர் வேட் என்ன எக்ஸல் என்ன... எங்கிருந்தும் பிறின்ட் கொமான்ட் கொடுத்து வருவதில் பிறின்டர் எனும் இடத்தி்ல் உங்கள் fax ஐ தெரிவுசெய்தால் அது அனுப்பவேண்டிய இலக்கம் கேட்கும். பிறகு உங்களுக்கே தெரியும்... ஆனால் உங்கள் கணினியில் fax modem இருப்பதை நீங்கள் உறுதி செய்யவேண்டும்.

தீபன்
09-06-2008, 01:33 AM
நன்றி ரசிகரே... நான் பயன்படுத்துவது லப்டொப் ஒன்றினை. இதில் விஸ்ரா ஓஎஸ் தான் நிறுவப்பட்டுள்ளது. இதில் எப்படி செய்வது?

மேலுமொரு சந்தேகம், நான் பயன்படுத்துவது, broad band இணைய சேவையை. இதன்மூலம் இச்சேவையய் பெற முடியாது, தொலைபேசி இணைப்புமூலமான இணைய இணைப்பை மேற்கொண்டால்தான் தொலைநகலை அனுப்பலாம் என்கிறார்கள்... உண்மையா...?

அன்புரசிகன்
09-06-2008, 02:27 AM
நன்றி ரசிகரே... நான் பயன்படுத்துவது லப்டொப் ஒன்றினை. இதில் விஸ்ரா ஓஎஸ் தான் நிறுவப்பட்டுள்ளது. இதில் எப்படி செய்வது?

மேலுமொரு சந்தேகம், நான் பயன்படுத்துவது, broad band இணைய சேவையை. இதன்மூலம் இச்சேவையய் பெற முடியாது, தொலைபேசி இணைப்புமூலமான இணைய இணைப்பை மேற்கொண்டால்தான் தொலைநகலை அனுப்பலாம் என்கிறார்கள்... உண்மையா...?

நான் சொன்ன முறையிலான நிறுவலுக்கு Business, Enterprise, Ultimate ஆகிய விஸ்டாவின் வெளியீடுகளில் மட்டும் தான் உள்ளது. எனது கணினி home வெளியீடாகியதால் என்னால் பார்க்க முடியவில்லை... இருந்தாலும் பார்த்து சொல்கிறேன்...

எப்படியாகிலும் உங்களுக்கு தெலைபேசி இணைப்பு அவசியம். இல்லையேல் சில மென்பொருட்கள் மூலம் இணையத்தினூடு அனுப்பலாம். ஆனால் அதற்கு காசு செலவுசெய்யவேண்டும் என்று நினைக்கிறேன்.

தீபன்
09-06-2008, 07:27 AM
தொலை நகல் அனுப்புவதற்கான இலவச மென்பொருள் ஏதுமிருப்பின் அதை பதிவிறக்குவதற்கான முகவரியை தாருங்களேன். (நானும் முயன்று பார்த்தேன்... எல்லாத்திற்கும் பணம் கேட்கிறது... சரியான பணப் பிசாசு...!)

நூர்
05-07-2008, 05:40 PM
எல்லாவற்ருக்கும் நன்றி...

praveen
06-07-2008, 05:28 AM
தொலை நகல் அனுப்புவதற்கான இலவச மென்பொருள் ஏதுமிருப்பின் அதை பதிவிறக்குவதற்கான முகவரியை தாருங்களேன். (நானும் முயன்று பார்த்தேன்... எல்லாத்திற்கும் பணம் கேட்கிறது... சரியான பணப் பிசாசு...!)

அன்பு ரசிகன் சொன்னது சரியான வழி, விஸ்டாவில் இந்த வசதி உள்ளது, கண்ட்ரோல் பேனல் சென்று அந்த தொலை நகல் வசதியை சேர்க்க முயன்று பாருங்கள். ஆனால் தொலைநகல் அனுப்ப நீங்கள் ஒரு மோடம்+தொலைபேசி இனைப்பு வைத்திருக்க வேண்டும்.

நண்பரே, இனையத்தில் மேலே சொன்னது இல்லாமலும் தொலைநகல் அனுப்பலாம், இனையத்தின் மூலம். ஆனால் அவர்கள் அந்த தொலைநகல் எந்திரத்தை தொடர்பு கொள்ள செய்யும் அழைப்பிற்கு பணம் கட்டாமல் அது முடியாது. தொலை நகல் அனுப்புவது என்பதில் ஒரு பகுதி உங்களுடையது, மற்றொன்று பெறுபவர் பங்கு. இதில் நீங்கள் தொலைபேசி இனைப்பு //பேக்ஸ் இயந்திரம் இவைகளுக்கானதை தவிர்க்க நினைத்து அந்த பேக்ஸை மறுமுனையில் தொலைநகல் எந்திரத்தில் பெறச்செய்வதற்கு முயற்சிக்கிறீர்கள். உலகம் முழுவதும் தொலைபேசி/தொலைநகல் உள்வரும் அழைப்புகள் இலவசம். ஆனால் அவற்றை அழைக்க ஆகும் செலவு நாம் தானே ஏற்க வேண்டும்.

வெகுசில நாடுகளில் உள்ளூர் இலவச கால் உள்ள இடங்களில் மட்டுமே இந்த இலவச சேவை அமுலில் இருக்கும். அப்படி இருந்தாலும் இவர்கள் சேவைக்காக (நமக்கு டெலிபோன் கட்டனம்+தொலைநகல் எந்திர செலவ்வு மிச்சம்) சிறிது பணம் செலுத்தினால் தான் அவர்கள் தொடர்ந்து இந்த சேவையை நடாத்த இயலும்.

வெண்தாமரை
06-07-2008, 05:43 AM
நாணும் வேர்ட் 2007 உபயோகிக்கிறேன். அதில் பேக்ஸ் அனுப்பும் வசதி உள்ளது.. ஆனால் உபயோகிக்க முடியவில்லை.

தங்கவேல்
07-07-2008, 06:19 AM
ஃபேக்ஸ் அனுப்ப கண்டிப்பாக பிஎஸ்என்எல் கம்பிவட தொலைபேசி இணப்பு அவசியம் வேண்டும். அதனுடன் ஃபேக்ஸ் மோடம் என்ற ஹார்டுவேரும் வேண்டும். அது இண்டர்னல் அல்லது எக்ஸ்டர்னல் ஆகவும் இருக்கலாம். இவை இரண்டும் இருந்தால் தான் அனுப்ப இயலும். இணையவழி ஃபேக்ஸ்சுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். அது நம் நாட்டுக்கு உதவாது.

வின் ஃபேக்ஸ் அல்லது ஃபேக்ஸ் டால்க் என்ற சாஃப்ட்வேர் பயன்படுத்தி அனுப்பலாம். கிராக் செய்யப்பட்டுள்ள சாஃப்ட்வேரை டவுன்லோடு செய்ய வேண்டுமெனில் தனியாக மெசேஜ் அனுப்பவும். இணைப்பினை அனுப்பி வைக்கிறேன்.

விண்டோஸ் மூலமும் ஃபேக்ஸ் அனுப்பலாம். இதுவரை நான் பயன்படுத்தியதில்லை. மேற்கண்டவாறு தான் இப்போதும் நான் ஃபேக்ஸ் அனுப்புகிறேன். பெறுகிறேன். மிகவும் நன்றாக இருக்கிறது. இன்கமிங் ஃபேக்ஸ் பிடிஎஃப் வடிவில் வந்து விடும். சேர்த்து வைக்கவும் மிகவும் உதவியாக இருக்கிறது. தனியாக ஒரு சிடியில் ஃபேக்ஸ் என்று பேக்கப் எடுத்து வைத்துக் கொள்கிறேன்.

அன்புரசிகன்
07-07-2008, 07:52 AM
விண்டோஸ் மூலமும் ஃபேக்ஸ் அனுப்பலாம். இதுவரை நான் பயன்படுத்தியதில்லை. மேற்கண்டவாறு தான் இப்போதும் நான் ஃபேக்ஸ் அனுப்புகிறேன். பெறுகிறேன். மிகவும் நன்றாக இருக்கிறது. இன்கமிங் ஃபேக்ஸ் பிடிஎஃப் வடிவில் வந்து விடும். சேர்த்து வைக்கவும் மிகவும் உதவியாக இருக்கிறது. தனியாக ஒரு சிடியில் ஃபேக்ஸ் என்று பேக்கப் எடுத்து வைத்துக் கொள்கிறேன்.

தங்கவேல் சொல்வது மிக்க சரி. XP pro வெளியீட்டில் OS உடனேயே அந்த வசதி வரும்...

உங்களுக்கு தேவையான format ஐ நீங்களே தெரிவுசெய்யலாம். என்னுடையதில் jpg அல்லது tiff போன்ற format ல் அந்த தொலைநகலின் மென்வடிவம் கிடைக்கும்.

sujan1234
17-12-2008, 05:01 PM
நானும் முயன்றேன் முடியலபா