PDA

View Full Version : ஜிமெயில் தமிழில்

மயூ
07-06-2008, 02:02 PM
http://mayuonline.com/eblog/wp-content/uploads/2008/06/gamil-tamil.jpg

பல காலமாக காத்திருந்த தமிழ் இடைமுகம் இப்போது ஜிமெயிலுக்கு வழங்கபட்டுள்ளது.

கூகிளின் முக்கிய சேவைகளில் பெரும்பாலானவை இப்போது தமிழ் இடைமுகத்ததுடன் கிடைக்ககின்றது.

ஷீ-நிசி
07-06-2008, 02:11 PM
நல்லாருக்கே!

சூரியன்
07-06-2008, 02:11 PM
மிகவும் சந்தோசமான செய்தி தான் மயூ அண்ணா.
பார்க்கவே அருமையாக இருக்கின்றது,
அழகான இந்த தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

அன்புரசிகன்
07-06-2008, 02:44 PM
இப்போவாவது வழங்கியதே. கூகிளுக்கும் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Narathar
07-06-2008, 02:55 PM
பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கின்றது..
பாவிப்பதற்கு???

மனோஜ்
07-06-2008, 03:55 PM
சிறப்பு தகவலுக்கு நன்றி மயூ

SathyaThirunavukkarasu
07-06-2008, 04:25 PM
தகவலுக்கு நன்றி

பூமகள்
07-06-2008, 04:45 PM
தகவலுக்கு நன்றிகள் மயூ அண்ணா..!!

ஜிமெயில் கணக்கீட்டில் உள்ளே சென்ற பிறகு மேலே.. வலது மூலையில் இருக்கும் Settings -->Gmail Display Language ---> தமிழ்.. என செலக்ட் செய்து.. Save கொடுத்து வெளியில் வந்தால்.. சுந்தரத்தமிழில்.. இடைமுகம் தயார்...!!

அசத்தலாக இருக்கிறது.. பயன்படுத்தி பாருங்க மக்களே...

இன்பாக்ஸ்.. மற்றும் ஸ்பேமுக்கு தமிழில் வார்த்தை கண்டுபிடிக்காமல் அப்படியே கொடுத்திருக்காங்க... :icon_ush::rolleyes:

நாம அதற்கு தமிழில் பரிந்துரைக்கலாமே..!! :rolleyes::icon_rollout::icon_rollout:

சிவா.ஜி
07-06-2008, 05:55 PM
நானும் மாத்திட்டேம்மா பூ. அசத்தல். தமிழை எங்கே பார்த்தாலும் துள்ளுதே மனம்.

அறிஞர்
07-06-2008, 06:20 PM
வாவ்.. தமிழ் இணைய உலகில் அசைக்கமுடியாத அடைந்துள்ளதற்கு இது ஒரு அடையாளம்...

இணையத்தில் இன்னும் தமிழ் பரவட்டும்.

பென்ஸ்
07-06-2008, 06:52 PM
மயூ..

தகவலுக்கு நன்றி...

தகவலை விட உன் வரவே எனக்கு மகிழ்வை கொடுத்தது... நலமாடா???

மயூ
08-06-2008, 02:49 AM
மயூ..

தகவலுக்கு நன்றி...

தகவலை விட உன் வரவே எனக்கு மகிழ்வை கொடுத்தது... நலமாடா???
நமக்கென்ன அண்ணாச்சி கலக்கலா இருக்கம். பல்கலை முடிஞ்சிட்டுது. வெர்டுசா எனும் கம்பனியில் கணனி வல்லுனரா இப்ப வேலையில சேர்ந்திட்டன்.

அதாவது இப்ப பொறுப்பான மயூவா மாறிட்டன்.

மயூ
08-06-2008, 02:51 AM
இன்பாக்ஸ்.. மற்றும் ஸ்பேமுக்கு தமிழில் வார்த்தை கண்டுபிடிக்காமல் அப்படியே கொடுத்திருக்காங்க... :icon_ush::rolleyes:

நாம அதற்கு தமிழில் பரிந்துரைக்கலாமே..!! :rolleyes::icon_rollout::icon_rollout:

SPAM == எரிதம் என்பது உலகறிந்த மொழிபெயர்ப்பு.. ஏன்தான் கூகிள் மாத்தாமல் விட்டதோ.. சாதாரணமாக நாங்கள் சொல்லி கூகிள் மாத்திய்யதாக சரித்திரம் இல்லை. கூகிள் தமிழ் பிரிவில் யாராவது தமிழர் இருந்தால் சொல்லிப் பார்க்கலாம். மற்றும்படி நாங்க சொல்லி கூகில் கேட்காது.

பென்ஸ்
08-06-2008, 02:53 AM
நமக்கென்ன அண்ணாச்சி கலக்கலா இருக்கம். பல்கலை முடிஞ்சிட்டுது. வெர்டுசா எனும் கம்பனியில் கணனி வல்லுனரா இப்ப வேலையில சேர்ந்திட்டன்.

அதாவது இப்ப பொறுப்பான மயூவா மாறிட்டன்.

உன் அண்ணா கல்யானத்துக்கு அப்புறம் பொறுப்புள்ளவரா மாறினார்...
நீ அதற்க்கு மேல ஒரு படி போயி வேலை கிடைத்த உடனையே பொறுப்புள்ளவரா மாறி விட்டாயே...

(அலுவலகத்தில் பெட்டைகள் அதிகமோ..????:confused:)

மயூ
08-06-2008, 03:01 AM
உன் அண்ணா கல்யானத்துக்கு அப்புறம் பொறுப்புள்ளவரா மாறினார்...
நீ அதற்க்கு மேல ஒரு படி போயி வேலை கிடைத்த உடனையே பொறுப்புள்ளவரா மாறி விட்டாயே...

(அலுவலகத்தில் பெட்டைகள் அதிகமோ..????:confused:)
அண்ணா.. ஹி..ஹி... அவர் படிக்கும் போது பெரிய மன்மதனோ அவர்???? :lachen001:

சத்தியம்மா பெட்டைகள் குறைவு.. HR இலதான் அதிகமா பெட்டைகள் இருக்குது. அதனால எதிர்காலத்தில என்னுடைய இலக்கு படிப்படியா உயர்ந்து PM ஆகி பின்னால HR க்கு போறதுத்தான்.

கேட்கவே மறந்திட்டன் நீங்க நலம்தானே...

உதயசூரியன்
08-06-2008, 08:19 AM
கூகுளே.. தேடு இயந்திரத்தில்.. தற்போது தமிழில் தான் தேடி கொண்டிருக்கின்றேன்..
அந்த பக்கங்களில் தமிழ் உள்ளது..
ஆனால்..
ஜி மெயிலில் தான்... எனக்கு...????
பார்க்கிறேன்
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

ஓவியன்
08-06-2008, 09:50 AM
பாவிப்பதற்கு???

பிரச்சினைகள் பெரிதாக இல்லை, தமிழில் இருப்பதால் வார்த்தைகள் கொஞ்சம் நீளமாக இருப்பதைத் தவிர...

மயூ
08-06-2008, 01:54 PM
பிரச்சினைகள் பெரிதாக இல்லை, தமிழில் இருப்பதால் வார்த்தைகள் கொஞ்சம் நீளமாக இருப்பதைத் தவிர...
அதே அதே!!!
வார்த்தைகள் ஆரம்பத்தில் புரியாவிட்டாலும் விரைவில் பழகிவிடும். நீங்கள் முதல் தடவையாக மின்னஞ்சல் பாவித்த போது எல்லா கட்டளைகளும் புரிந்திருந்ததா? இல்லைதானே. அதுபோலத்தான் இதுவும்.

ஓவியன்
08-06-2008, 02:13 PM
சத்தியம்மா பெட்டைகள் குறைவு.. HR இலதான் அதிகமா பெட்டைகள் இருக்குது. அதனால எதிர்காலத்தில என்னுடைய இலக்கு படிப்படியா உயர்ந்து PM ஆகி பின்னால HR க்கு போறதுத்தான்....

அது என்ன மயூ பின்னால எச்.ஆருக்கு போறது....???
ஏன் முன்னால போக முடியாதோ...??
ஏன் எச்.ஆரின்ர வாசல் பின்னால தான் இருக்குதோ...?? :whistling:

மயூ
08-06-2008, 02:17 PM
அது என்ன மயூ பின்னால எச்.ஆருக்கு போறது....???
ஏன் முன்னால போக முடியாதோ...??
ஏன் எச்.ஆரின்ர வாசல் பின்னால தான் இருக்குதோ...?? :whistling:
எப்பபடி உங்களால இப்படியெல்லாம் மொக்கை போட முடியுது? :sauer028:

இளசு
08-06-2008, 02:25 PM
இனிய செய்தி மயூ!

தமிழுக்கான இடம் கிடைத்த மகிழ்ச்சி!

பகிர்ந்தமைக்கு நன்றி...

அக்னி
11-06-2008, 09:17 AM
பயன்படுத்துகையில் இன்பம்...
பயன்படுத்தினாலே பழகும்...

நன்றி மயூ...
எவ்வாறு தமிழில் அமைப்பது என்று காட்டிய பூமகளுக்க்ம் நன்றி...

கலைவேந்தன்
16-06-2008, 09:52 AM
தகவலுக்கு நன்றி நண்பரே!

இதை நான் பயன்படுத்த தொடங்கி பல மாதங்கள்ஆகிறது!

அனுராகவன்
23-06-2008, 12:18 PM
அருமை நண்பரே!!
இன்னும் இருந்தால் தாங்க..

மஸாகி
25-06-2008, 07:50 AM
நல்ல
தகவல்களை
நெஞ்சம் மறப்பதில்லை..

அதை - தந்தவரையும்தான்..

நட்புக்கு - மஸாகி
25.06.2008

poornima
28-06-2008, 08:41 AM
நானும் மாற்றிவிட்டேன்.. நம் அஞ்சல்பெட்டியை முழுக்க தமிழில்
பார்ப்பது மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது.தகவலை இங்கு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

ராஜா
03-07-2008, 07:33 AM
தமிழ்ப்படுத்தப்பட்ட ஜி மெயிலும் சரி.. ஆர்க்குட்டும் சரி..

கணிணியையும் தமிழையும் நன்கறிந்தவர்களிடம் ஆலோசிக்கப்படவில்லையோ என்ற உணர்வை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.

எனினும் இது ஒரு நல்ல துவக்கம். மேலும் சிறப்புறும் என நம்புவோம்.

அக்னி
03-07-2008, 07:35 AM
கணிணியையும் தமிழையும் நன்கறிந்தவர்களிடம் ஆலோசிக்கப்படவில்லையோ என்ற உணர்வை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.

உண்மைதான் அண்ணா...
ஆனால் இரண்டையும் நன்கறிந்தவர்கள் அரிதாகவே இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

மயூ
10-07-2008, 04:57 PM
ராஜா அவர்களே.. நீங்கள் அங்கலாய்ப்பது போல பலரும் அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் கூகிள் போன்ற வணிக மயப்படுத்தப்பட்ட அல்லது வணிக நோக்குடைய நிறுவனங்களிடம் இருந்து இதைவிட அதிகமாக எதிர்பார்க்க முடியாது.

தமிழ் இடைமுகம் அவர்கள் வழங்கியது தமிழ் மீதுள்ள அன்பினால் அல்ல.. இணையத்ததில் தமிழ் மொழியை புறக்கணிக்க முடியாது என்கிற நிலைமையே.

tamilambu
19-07-2008, 05:57 PM
ஆங்கிலம் தெரியாத தமிழர்களுக்கு இந்த மாதிரியான மொழிமாற்றம் ஒரு வரப்பிரசாதம்தான்.
ஆங்கிலம் தெரிந்த தமிழர்களும் பாவித்து மனம் மகிழலாம்.

மயூ
11-09-2008, 06:51 AM
ஆங்கிலம் தெரியாத தமிழர்களுக்கு இந்த மாதிரியான மொழிமாற்றம் ஒரு வரப்பிரசாதம்தான்.
ஆங்கிலம் தெரிந்த தமிழர்களும் பாவித்து மனம் மகிழலாம்.
இரண்டும் கெட்டானாக இடையில் இருக்கும் என்னைப்போன்றவரும் பாவிக்கலாம். :lachen001: