PDA

View Full Version : மனிதன் புரிவதில்லை



அகத்தியன்
06-06-2008, 08:37 PM
முகம் முழுதும் சிந்தனை கோடுகள்
கால்கள் நடக்க..
உலகம் உழல்கிறது.

யார் மீதும் யாருக்கும் அக்கறையில்லை.
சாலையோர மனிதர்கள்,
கையேந்தும் பிஞ்சுகள்,
புதினம் மட்டுமே...

ஆயிரம் சிந்தணைகள்
அவரவரை சூழ...
உலகம் மறந்த நிலையில்
அவர் அவர் உலகில்...

ஆனாலும்..
ஆடை இறங்கி
ஓர் நங்கை அருகில் சென்றால்..
அனைத்தும் மறக்கும்.
அடிக்கடி கண் அங்கே பறக்கும்.

மனங்களின் மாயங்கள்
மனிதன் புரிவதில்லை

ஓவியன்
10-06-2008, 07:25 AM
என்ன செய்வது அகத்தியன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள், அவற்றையெல்லாம் புரிந்து கொள்ள முடியாதுதான்...

ஆனால் நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான், அது...

நம்மாலியன்ற வரை நல்லவராக, மற்றவர்களுக்கு உறுதுணையாக நல்லபடியாக வாழ முயற்சித்தால் போதும்..!!

பாராட்டுக்கள் அகத்தியன், தொடர்ந்தும் உங்கள் கவி வெள்ளம் இங்கே பெருகட்டும்..!! :)

இளசு
11-06-2008, 06:50 AM
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...

என்பார் - நா. காமராசன்..

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக்கொண்டதடா..
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா..

- என்றவர் கண்ணதாசன்..

சொர்க்கலோகம், நரகலோகமும் மனதுக்குள் அடக்கம்...
மனிதமும் மிருகமும் தெய்வதமும் மனதுக்குள் அடக்கம்..

சில நேரம் ஒன்றை ஒன்று விஞ்சும்..

புரிந்துகொள்ள மனிதம் ஒரு சிறுகதையா என்ன?
சிக்கலும் சுவையும் சோகமும் தியாகமும் மாறி மாறி சுழலும் காவியம்!


பாராட்டுகள் அகத்தியன்...

அக்னி
11-06-2008, 08:41 AM
கிழிந்ததைப் போட்டால்,
பணமில்லாதவர்கள்...
கிழித்துப் போட்டால்,
பணம்படைத்ததவர்கள்...

பிரச்சினைகளில் உழலும் மனதை,
மறக்கடிக்கும் மாயம்..,
இந்தக் கணப்பொழுதுக்
காமம்...

தவறு யாரிடம்..?
கிழிந்ததைப் போடுபவளைப் பார்ப்பது,
பார்ப்பவரின் தவறு...
கிழித்ததைப் போடுபவளைப் பார்ப்பது,
போட்டவளின் தவறு...

கடந்த மறுகணமே,
மீண்டும் பிரச்சினைகளில் மனம்,
கூடவே பெருமூச்சோடு...

சிந்தனை செய்வீர்...

பாராட்டுக்கள் அகத்தியன்...
இளசு அண்ணாவின் பின்னூட்டம் வழக்கம் போலவே சிறப்பாக...

இளசு
11-06-2008, 04:35 PM
கிழிந்ததைப் போட்டால்,
பணமில்லாதவர்கள்...
கிழித்துப் போட்டால்,
பணம் படைத்தவர்கள்...

...

சபாஷ் அக்னி..

பாரதியின் முரண்பா பதிவில் போடவேண்டியது இது..

நானும் ஒன்றை இதுபோல் யோசித்து வைத்திருந்தேன் -

பணம் கொழுத்தவனும்
பசி மயக்கத்தில்..
''டயட்டிங்'காம்!

arun
11-06-2008, 06:34 PM
கவிதையும் அதற்கான பின்னூட்டமும் சிந்திக்க வைக்கிறது பாராட்டுக்கள்

kavitha
13-06-2008, 06:28 AM
யார் மீதும் யாருக்கும் அக்கறையில்லை.
....
,....
ஆடை இறங்கி
ஓர் நங்கை அருகில் சென்றால்..
அனைத்தும் மறக்கும்.
அடிக்கடி கண் அங்கே பறக்கும்.
...
...
மனங்களின் மாயங்கள்
மனிதன் புரிவதில்லை

கவிதையில் தெரியும் சமுதாயப்புரைகளின் கோரைப்பற்களுக்கு
கடைசி வரிகள் சமரசக் களிம்பு.

kavitha
13-06-2008, 06:29 AM
கிழிந்ததைப் போட்டால்,
பணமில்லாதவர்கள்...
கிழித்துப் போட்டால்,
பணம் படைத்தவர்கள்...

...

சபாஷ் அக்னி..

பாரதியின் முரண்பா பதிவில் போடவேண்டியது இது..

நானும் ஒன்றை இதுபோல் யோசித்து வைத்திருந்தேன் -

பணம் கொழுத்தவனும்
பசி மயக்கத்தில்..
''டயட்டிங்'காம்!
__________________
- இளசு

அக்னி, இளசு அண்ணா இருவரின் குறும்பாவும் அருமை.