PDA

View Full Version : அமிலமாய்...



poo
04-04-2003, 03:52 PM
அமிலமாய்...

இயற்கைக்கும்
செயற்கைக்கும் இடையே
நடந்த போராட்டத்தில் ஜெயித்தது..
ஸ்டிக்கர் பொட்டும் காகிதப் பூவும்!!..

ஓரமாய் ஒதுங்கி நின்று
வேடிக்கை பார்த்தது..
நம் கலாச்சார குங்குமமும்
மணக்கும் மல்லிகையும்!!!

பொத்திவைத்த ஆயகலைகள்
அறுபத்து நான்கும்
அங்குல அங்குலமாய்
பங்களாவில் படமெடுக்கப்பட்டு
இண்டர்நெட்டில்-பல பிரகாஷ்களின்
அபயத்தால்!!..

கால் ஆடும் கட்டிலும்
பித்தளை சொம்பும்
பக்குவமாய் பூட்டிய வீட்டுக்குள்!!..

உலக அகராதியில்
தமிழ் அமிழ்து-கூட்டமேடையில்
முழங்கிய சொல்லின் செல்வர்
"செல்"லில் அழைப்பு..
அருமை மனைவி- அவசரமாய்
வாருங்கள் மகனின் "***"ஆங்கிலப்பள்ளியில்
பெற்றோர் கூட்டமாம்!!

அமிழ்தென அன்று மகிழ்ந்த
விஷயங்கள் ..
விஷமிகளின் விதைகளால்
அமிலமென இன்று அரிக்கிறது -
அடிமனதை!!...

rambal
04-04-2003, 04:54 PM
உண்மை..உண்மை..உண்மை..
உண்மை சுடும்...
அமிலமாய் அறுக்கும்..
பாராட்டுக்கள் சிட்டு..

இளசு
04-04-2003, 04:58 PM
அருமை சிட்டு, அருமை!
ஹாக்கி ஸ்டிக்
ஒலிம்பிக் பதக்கமும் தரும்
உதயம் படமும் தரும்

அமிழ்தமா அமிலமா
நம்மவர் செயல்களில்...
இனியும் தொடருமா...
இல்லை திருந்துமா
இயற்கையின் கையினில்.....

thamarai
01-09-2004, 05:53 AM
இயற்கைக்கும்
செயற்கைக்கும் நிகழும் போராட்டத்தினை அருமையாக கவி வடித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்....

kavitha
01-09-2004, 07:08 AM
பழமையின் ஆழமும்
புதுமையின் ஆடம்பரமும்
வடித்த விதம் அருமை பூ.

samuthira
02-09-2004, 06:59 AM
பவுடருடன் பகட்டும் சேர்ந்த பின்னே
பழயது பறந்து தான் போச்சு...,

சொன்ன விதம் அருமை பூ அவர்களே...

Narathar
02-09-2004, 08:48 AM
பூ எப்போதோ பதித்த கவிதை
இப்போதுதான் நம்மவர் கண்ணிலும்
என் கண்ணிலும் பட்டுள்ளது.
வாழ்த்துக்கள் பூ இன்னும் தொடரட்டும் உங்கள்
கவிப்பயணம்!

பூமகள்
17-07-2008, 11:41 AM
உலக அகராதியில்
தமிழ் அமிழ்து-கூட்டமேடையில்
முழங்கிய சொல்லின் செல்வர்
"செல்"லில் அழைப்பு..
அருமை மனைவி- அவசரமாய்
வாருங்கள் மகனின் "***"ஆங்கிலப்பள்ளியில்
பெற்றோர் கூட்டமாம்!!

அமிழ்தென அன்று மகிழ்ந்த
விஷயங்கள் ..
விஷமிகளின் விதைகளால்
அமிலமென இன்று அரிக்கிறது -
அடிமனதை!!...[/COLOR]
'நச்' கவிதை..!!

தமிழ் தமிழென முழங்கும் பலர் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாததை பெருமிதத்தோடு சொல்வதைக் கண்டிருக்கிறோம்...

அறிவியலில் பல கண்டுபிடிப்புகளையும்.. உற்பத்தியில் உலகையே வியக்க வைக்கும் நாடுகளும் தங்கள் தாய்மொழியில் படித்ததால் தான் கற்ற அறிவியல் விளங்கி பல சாதனைகளை எட்டியுள்ளதாகக் கூறுகின்றனர்...

இன்னும் எத்தனை காலம் தான் ஆங்கில அரைவேக்காடுகளையே நம் குழந்தைகளுக்கு புகட்டிக் கொண்டிருக்க போகிறோமோ....??!! :mad::mad:

நிலை மாற வேண்டும்..

தீர்க்கமான கவிதை வடித்த பூவண்ணாவுக்கு பூந்தங்கையின் பாராட்டுகளும் வாழ்த்துகளும்..!!:):icon_b:

மன்றத்தில் பூ பூக்கும் நாள் என்றோ?? :rolleyes: :traurig001::traurig001:

shibly591
20-10-2008, 10:37 AM
தெளிவான அழகான கவிதை..

படித்தேன் ரசித்தேன் சிந்தித்தேன்.