PDA

View Full Version : கண்டியில் குண்டுவெடிப்பு(2008-06-06)



shibly591
06-06-2008, 10:53 AM
கண்டி பொல்ஹொல்ல என்ற இடத்தில் சற்றுமுன்னர் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

விகடன்
06-06-2008, 12:34 PM
கண்டியில் பேரூந்தில் குண்டு வெடித்துள்ளது. இதில் 2 பேர் கொல்லப்பட்டு, 20 பேர் காயமடைந்திருப்பதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வத்தேகமவில் இருந்து கண்டிக்குச்சென்ற பேரூந்து, பொல்கொல்ல பகுதியிலுள்ள இளைஞர் மன்றத்திற்கு அருகில் பயணித்தபோது குண்டு வெடித்துள்ளது.

இன்று மாலை 3,50 அளவில் இடம்பெற்ற இந்தக் குண்டு வெடித்துள்ளது. காயமடைந்தவர்கள் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜா
06-06-2008, 12:47 PM
பயங்கரவாத நிகழ்வுகளால் அப்பாவிகளின் உயிர்கள் பறிக்கப்படுவது கோழைத்தனமான செயலாகும்

எவரின் வாழ்வையும் முன்கூட்டியே தீர்க்க எவருக்கும் உரிமை இல்லை.

இதுபோன்ற சம்பவங்களில் மக்களைக் காப்பாற்ற அவதரிக்காத தெய்வங்களின் திருப்புகழை சிலர் பாடும்போது அதைவிட கேலிக்கூத்து வேறு எதுவும் இல்லையென்றே எனக்குப் படுகிறது