PDA

View Full Version : இலங்கை மொரட்டுவ கட்டுபெத்தையில் குண்டு வெடிப்பு, 20 பேர் உயிரிழப்பு, 60க்கு மேற்பட்டோர் காயம்.



shibly591
06-06-2008, 09:19 AM
மொரட்டுவ கட்டுப்பெத்த சுவர்ண சைல பிம்பாரமைய விகாரைக்கு அருகில் இன்று காலை 7.30 அளவில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மவுண்ட்லவனியாவிலிருந்து கொட்டாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த 255 ஆம் இலக்க பாதையின் 29 ஸ்ரீ 1885 என்ற பேரூந்திலேயே இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 20 பேர் பலியாகினர். இதில் 12 ஆண்களும் 8 பெண்களும் அடங்குகின்றனர். 64 பேர் காயமடைந்துள்ளனர்.

முன்னர் 21 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்தபோதும் தற்போது உயிழந்தவர்களின் எண்ணிக்கை 20 பேர் என்றே மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காயமடைந்தவர்களில் 50 க்கு மேற்பட்டோர் களுபோவில வைத்தியசாலையிலும் மேலும் 13 பேர் மொரட்டுவ லுணாவ வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வில்பர்ட் குமாரசிறி தெரிவித்துள்ளார்.

பின்னர் லுணாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 பேரும் களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் காயமடைந்தவர்களில் 12 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக களுபோவில வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான கட்டத்தில் இருக்கும் சிலர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


பாதையின் ஒரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் மூலமே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ குண்டு வெடிப்பு தொடர்பாக இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கைது

மொரட்டுவ கட்டுபெத்த பேரூந்து குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால் குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

கிளைமோர்க் குண்டொன்றின் மூலமே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மொரட்டுவ கட்டுபெத்தையில் காவல்துறை ஊடரங்கு

மொரட்டுவைப் பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
காலை 9.00 மணி முதல் 12.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருக்கும் எனத் தெரியவருகிறது.

இந்தத் தாக்குதல் கிளைமோர் குண்டொன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதேசத்திலிருந்து மேலும் இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மொரட்டுவைப் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், இந்தப் பாதையிற் செல்வோர் வேறு பாதைகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி--தமிழ்வின்

kavitha
06-06-2008, 10:40 AM
தாக்குதலின் நோக்கம் என்ன?
அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதால் என்ன பலன்?

shibly591
06-06-2008, 10:44 AM
இதற்கு அவர்கள் தரப்பில் ஒருவர் உங்கள் வினாவுக்கு ஓரளவு தக்க பதில் தந்திருந்தார் ஒரு தமிழ் அமைச்சர்.....அது இதோ....

வன்னியில் அப்பாவித் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் மிலேச்சத்தனமான தாக்குதலுக்குப் பதிலடியாகவே தெற்கில் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்று நாம் நினைக்கிறோம்.''
இப்படித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றுக் கூறினார்.

அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்திற் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

ஆழ ஊடுருவும் அணியினர் வன்னியில் அதிக எண்ணிக்கையான தமிழ் மக்களைக் கொன்று குவிக்கின்றனர். அதற்கான பதிலடியாகத்தான் கொழும்பில் குண்டு வெடிப்புகள் நடத்தப்படுகின்றன என்று நான் நினைக்கிறேன்.

இருந்தாலும் எந்தப் பகுதியிலும் பொதுமக்கள் தாக்கப்படுவதை எம்மால் ஏற்க முடியாது.


வன்னியில் மக்கள் கொல்லப்பட்டால் அவர்கள் புலிகள் என்றும் தெற்கில் கொல்லப்பட்டால் அவர்கள் பொதுமக்கள் என்றும் அரசு சொல்கிறது.

வன்னியில் மக்கள் கொல்லப்பட்டால் அவர்களுக்கு நட்டஈடு கிடையாது.

ஆனால், தெற்கில் மக்கள் கொல்லப்பட்டால் அவர்களுக்கு உடன் நட்டஈடு வழங்கப்படுகிறது.

ஏன் இந்தப் பாகுபாடு?

மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை அரசு உடன் நிறுத்த வேண்டும். வெலிஓயாவில் இருந்து எமது பகுதிகளை நோக்கிச் ஷெல் தாக்குதல் நடத்தப்படுகிறது. அரசு இதை உடன் நிறுத்த வேண்டும்.


அரசு தொடர்ந்தும் மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் அரசு எதிர்காலத்தில் பெரும் இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றார்.



நன்றி-தமிழ்வின்



நன்றி-தமிழ்வின்

அன்புரசிகன்
06-06-2008, 12:16 PM
ஒரு காலத்தில் நாம் அடிக்கடி பயணித்த ஒரு பேரூந்து. என மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தினூடு செல்லும் ஒரே ஒரு பேரூந்து சேவை தான் இந்த 255.

இனி பல்கலைக்கழகம் செல்லும் அனைவரும் அடிவயிற்றில் புளியை கரைத்துக்கொண்டுதான் செல்லவேண்டும்.

நான் படித்த துறையில் பல்கலை படித்துறை ஆண்டில் என்னிலும் 2 ஆண்டுகள் மூத்த சகோதரி ஒருவர் இந்த கோரச்சம்பவத்தில் இறந்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் கிசோர் இந்தச்சந்தர்ப்பத்தில் தன் அரசியல் இலாபத்தை காண முயன்றிருக்கிறார்... இந்த சம்பவத்தினால் சிங்களவர்கள் மட்டுமல்ல. நாட்டில் பல்லலைக்கழகத்தில் படிக்கும் அனைத்து சமூகத்தினரும் தான் பாதிக்கப்படவிருக்கிறார்கள்.

இந்த மாதம் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா நடக்கவிருக்கிறது. அதற்கான ஆரம்பப்பணிகள் மேலங்கிகளை பெறுதல் போன்றவற்றிற்காக இங்கிருக்கும் எமது ஜூனியர் நண்பர்கள் கூட செல்லவிருக்கிறார்கள். அவர்களது முகத்தில் ஒரு விதமான பயம் கொண்டிருப்பதை காண முடிகிறது. பல்கலைக்கழகத்தில் படித்ததன் முழுமையை அந்த பட்டத்தை பல்கலைவேந்தரிடம் பெறுவதில் தான் இருக்கிறது. இந்த தருணத்தில் இந்த குண்டு வெடித்திருப்பது பலருக்கும் பாதிப்புத்தான்.

அன்புரசிகன்
06-06-2008, 12:39 PM
பல்கவைக்கழக விடுதிக்குள் நுழைந்த இராணுவத்தினர் தமிழ் மாணவர்களை துன்புறுத்தியுள்ளார்கள்...

ஆண்டவன் தான் உதவவேண்டும்.

aren
07-06-2008, 10:07 AM
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்த பிரச்சனை என்றுதான் தீருமோ தெரியவில்லை. ஆண்டவன் தான் இதற்கு ஒரு வழி காட்டவேண்டும்.

மயூ
07-06-2008, 01:51 PM
எனது தங்கையார் குண்டு வெடித்த நேரத்தில் பல்கலையில் இருந்துள்ளார். கிராமத்து மக்கள் ஒருமாதிரியாக கோவத்துடன் தமிழர்களை தேடி அலைந்துள்ளனர். அதைவிட NDT படிக்கும் மாணவர்கள் சக தமிழ் மாணவர்களை அடித்து நொருக்கியுள்ளனர்.

பின்னர் பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் வெள்ளவத்தை வரை தமிழ் மாணவர்களைப் பாதுகாப்பாக கொண்டுவந்து இறக்கியுள்ளனர்.

இலங்கைப் பிரைச்சனை இப்போ பலஸ்தீனப் பிரைச்சனைபோல ஆகிவிட்டது. அரசு வன்னியில் தமிழர்களை குண்டுவீசி, கிளைமோர் வைத்து கொல்லுகின்றது. பழிக்குப் பழி என்ற பெயரில் தெற்கில் சிங்களவர்கள் கொலைசெய்யப்படுகின்றனர்.

இது கான்சர் மாதிரி.. முடியாது... இலங்கையில் பிரைச்சனைக்குத் தீர்வு கிடையாது.

விகடன்
07-06-2008, 01:57 PM
எதற்கும் அவதானமாக இருந்துகொள்ளுங்கள் மயூ.
எங்கு எந்த ரூபத்தில் பிரச்சினைகள் உருவெடுக்கின்றது என்று தெரியாதிருக்கிற்றது.

யாரிடம் அடிவாங்கினாலும் காடயார் கையில் சிக்கிடாதீர்கள்.

மயூ
07-06-2008, 01:58 PM
வீட்டுக்குள்ள நறுக்கென்டு வாலைச்சுருட்டிக் கொண்டு இருக்கின்றேன்.

தீபன்
09-06-2008, 02:09 AM
நண்பர்களே, மேற்படி சம்பவத்தில் நேரடியாக தமிழ் மக்கள் அல்லது மாணவர்கள் எத்தனைபேர் இறந்தனர்...? காயமடைந்தனர்...? (நானும் சில ஆண்டுகளுக்குமுன் அந்த பேருந்தைத்தான் பயன்படுத்தினேன்...!)