PDA

View Full Version : இதெல்லாம் சகஜமப்பா...!



shibly591
06-06-2008, 05:29 AM
இவர்கள் நல்லவர்கள்
நமது உரிமைகளை வெல்ல
தம்மையே அர்ப்பணிப்பவர்கள்...
நமக்காக உயிரையும் துறக்கத்தயாராக
இருப்பதாக அவர்கள் சொல்லும்போது..
புல்லரித்துப்போகிறது நமக்கு.....
நமக்கானதை நமக்காக
மீட்டுததரும் அற்புத தியாகிகள்...
நமது கண்ணீர் துடைக்கும் முழு நேர விரல்கள்
எப்போதம் உடனிருப்பவர்கள்
இப்படியே நீளும் எங்கள்
நம்பிக்கைச்சூரியன்
அவர்களது தேர்தல் வெற்றிக்குப்பின்
நிரந்தர அமாவாசையாகின்றன...
அவர்களுக்குள் அவர்களே இட்ட
பச்சோந்திப்"பட்டம்"
இப்போதுதான் கண்முன்னே காற்றில் பறக்கிறது.
எங்களை இனி ஏமாற்ற
எந்தக்கொம்பனாலும் முடியாது
என்று எங்களுக்குள் நாங்கள் கொண்ட சபதம்
அடுத்த தேர்தல் வருகையில்
"மறந்துதான் போகும்"
"மறந்துதான் போகும்"
...............

kavitha
06-06-2008, 09:27 AM
ஒரு வேதனையான கவிதையை ஏதோ கவுண்டமணி பகடி போல் எழுத எப்படி முடிகிறது உங்களால்??
கவிதையாய் ரசித்த வரிகள்...
அவர்களுக்கு "பறந்துதான் போகும்"
இவர்களுக்கு "மறந்துதான் போகும்"

shibly591
06-06-2008, 09:30 AM
என்ன செய்வது கவிதா...நாமெல்லாம் அரசியல் உலகில் கோமாளிகளாக சிலரால் நினைக்கப்படுகிறோம் இல்லையா???

சுகந்தப்ரீதன்
16-06-2008, 11:32 AM
அற்புதம் ஷிப்லி..!!

உலகம் முழுக்க இதே நிலைதானா..?!

கா.ரமேஷ்
05-01-2009, 05:28 AM
அவங்கல்லாம் ரொம்ம்பபப .... நல்லவுங்க.......தோழி...!
எப்பொழுது பட்டம்,பதவி வேண்டுமோ அப்பொழுது மட்டுமே பட்டணத்தை விட்டு வெளிவருபவர்கள்....!