PDA

View Full Version : இன்று மட்டும் என்ன??பூமகள்
05-06-2008, 06:04 PM
http://img26.picoodle.com/img/img26/4/6/5/poomagal/f_walkingalonm_48fc3c2.jpgபூக்கள் இன்று
அதிகமாகவே
அழகாயிருந்தன..

ஒரு வேளை
என் வருகையை
முன்பே அறிந்து
மனமடல் திறந்து
சிரித்தனவோ?

காற்றில் என்ன
சுகந்தம்..??

ஓ...!!
நான் தடவ மறக்கும்
வாசனையை பரவ
விட பார்த்திருக்கும்
மகரந்த குழல்களின்
மாட்சிமையா??

வானத்தில் மேகம்..
புத்தோவியம் வரைந்து
ஏதோ ரகசியம் என்னோடு
மட்டும் பேசும் சங்கேத
மொழி எதற்கு...??

ஓ....!!
என் ராஜகுமாரரை
வரைந்து எனை
வெட்கப் பட வைத்து
கீழ் வானத்தை இன்னும்
சிவப்பாக்க திட்டமோ??

சாலைகள் என்ன..
முன்னை விட
பளபளப்பாய்...??

என்னை
அதனில் பதிக்க
(பாத)ரசமேதும்
பூசிக் கொண்டதோ??

இன்று மட்டுமென்ன..
எல்லாமே புதுமையாய்..!!!

ஓ....!!
நான் எழுதிக் கசக்கிய
காகித கிறுக்கல்களை
காற்று காட்டிக்
கொடுத்து
விட்டனவோ..?

இல்லையில்லை..
இருக்காது..
இது...
வசந்தம் நோக்கி
காத்திருக்கும்..
இயற்கையின்
வரவேற்புக் கம்பளம்..

நானும் காத்திருக்கிறேன்..
குயில்களின் கூவலோடே..
வசந்தம் வரும் வழியில்...!!:wub::icon_give_rose:

சிவா.ஜி
05-06-2008, 06:36 PM
வாசனையூட்டும் விரல்களுடன் வசந்தத்தை வரவேற்கும் ராஜகுமாரி, ரசம்பூசிய இதயத்துடன் நாளை வருவானென எதிர் நோக்கும் ஏக்கத்தையும் இத்தனை கவிதையாய் சொல்ல முடியுமா.....? முடியுமே! பூமகள் எனும் பாமகளால் முடியும்.

வானம் வரைந்து காட்டும் வனப்பை, தன் முகமாய்த் தாங்கி வருவான் ஒரு ராஜகுமாரன். அன்று குயிலென்ன...? மயில்கூட குரலை பழுதுபார்த்து பாட்டிசைக்கும். ராஜகுமாரியின் இதயத்து ஏக்கத்தை பூர்த்தி செய்ய தேவதைகளும் இந்திரலோகம் விட்டு இந்தலோகம் வருவார்கள்.

அசத்தலான வரிகள்ம்மா. பாராட்டுக்கள் பூ.

kavitha
06-06-2008, 06:35 AM
இயற்கையைப்பாடாத கவிகள் விதிவிலக்கு. பூமகள் மட்டுமென்ன சளைத்தவளா!
பாடல் அழகு பூமா.

பூமகள்
06-06-2008, 06:38 AM
சிவா அண்ணாவின் விமர்சனமே ஒரு தனி அழகு சேர்க்கும் படைப்புகளுக்கு... இங்கே அசத்தலாக விமர்சித்திருக்கிறார்.... அடிக்கடி நான் ஆச்சர்யப்படும் விசயம்.. எப்படி இவர் விரல்களில் எழுத்துகள் தாமே மாலையாகி சூடிக்கொள்கின்றன என்று தான்...!!

அழகிய விமர்சனமெழுதும் மன்றத்து பெருந்தகைகளில் நீங்கள் உங்களுக்கென்றே முத்திரை பதித்தவர் அண்ணா...

அப்புறம்... வசந்தத்தை பற்றி எழுத கடந்து இரண்டு நாட்களாக இங்கு இருக்கும் பருவ நிலை உதவியது.. அத்தனையொரு ரம்யமான சூழலல் அண்ணா....!!

முதல் பின்னூட்டமிட்டு எப்போதும் தங்கையை உற்சாகப்படுத்தும் அண்ணனுக்கு மனமார்ந்த நன்றிகள். :)

பூமகள்
06-06-2008, 06:58 AM
இயற்கையைப்பாடாத கவிகள் விதிவிலக்கு. பூமகள் மட்டுமென்ன சளைத்தவளா!
பாடல் அழகு பூமா.
உண்மை தான்... இயற்கையைப் பாடாத கவிஞர்களுமுண்டோ??.. ரசிப்புத் திறன்.. இருக்கும் யாவரும் கவிஞர்கள் தான்.

கடந்த இரு நாட்களாக சீதோசன நிலை அமோகமாக இருக்கிறது... சிலுசிலுன்னு வரும் தென்றல் காற்று... அளவான..சுடாத வெயில் வெளிச்சம்.. சூப்பரா இருங்குங்க அக்கா..

ரொம்ப நன்றிகள் கவி அக்கா...:)

மன்மதன்
06-06-2008, 01:38 PM
அட..

கவிதை பெண் தன்னை
புகழ்ந்து கொள்வது மாதிரி இருக்கிறதே
என்று படித்துக்கொண்டிருக்கும் போதே
வெகு இயல்பாக இயற்கையாக
முடித்த பூவின் எண்ணம்
முதல் வரியில் நான் சொன்னதை
போட வைக்கிறது...

(என்ன .... படம்தான் லாங்ஷாட்டில் இருக்கிறது..க்ளோஸ் அப்பில் போட்டிருக்கலாம்..:D)

Keelai Naadaan
06-06-2008, 01:54 PM
இல்லையில்லை..
இருக்காது..
இது...[B]
வசந்தம் நோக்கி
காத்திருக்கும்..
இயற்கையின்
வரவேற்புக் கம்பளம்..


அன்பான உள்ளம் வந்தாலே, வசந்தம் வந்தது போல் தானே.
அதனால் விரித்திருக்கலாம் வரவேற்பு கம்பளம்.

பூமகள்
07-06-2008, 04:49 PM
(என்ன .... படம்தான் லாங்ஷாட்டில் இருக்கிறது..க்ளோஸ் அப்பில் போட்டிருக்கலாம்..:D)
கிளோஸ் அப்பில் போட்டால்... கவிதையை விட அந்த பொண்ணு அழகா இருக்குன்னு சொல்லுவீங்க....:icon_rollout::rolleyes::icon_ush::redface: ஹூக்கூம்... :rolleyes:

நாங்க ரொம்ப புத்திசாலி ஆயிட்டோமில்ல..:p:cool:;) அதெல்லாம் கிளோசப்பில் போட மாட்டோம்..!!:mini023::lachen001::lachen001:

கொஞ்சம் ஓவரா போயிடிச்சோன்னு ஒரு சின்ன நெருடல்.. பட்.. எழுத நினைச்சது என்னவோ வசந்தத்தைப் பற்றி தான்... மற்றபடி பூவு பெருமையெல்லாம் பேசும் எண்ணமில்லீங்கோ...!! :icon_ush::icon_ush:

ரொம்ப நன்றிகள் மதன் அண்ணா. :)

பூமகள்
07-06-2008, 04:51 PM
அன்பான உள்ளம் வந்தாலே, வசந்தம் வந்தது போல் தானே.
அதனால் விரித்திருக்கலாம் வரவேற்பு கம்பளம்.
அட...!!
இது தோணாம போச்சே.. இல்லாட்டி.. அதை வைச்சி ரெண்டு வரி கூட எழுதியிருப்பேனே... :rolleyes:(சும்மா சும்மா..!!:D)

நிஜமாவே ரொம்ப அழகா சொன்னீங்க அண்ணா..! உண்மை தான்..
பின்னூட்டத்துக்கு நன்றிகள் கீழை நாடான் அண்ணா..:)

பென்ஸ்
07-06-2008, 07:47 PM
பாத ரசம்.... அழகு

மன்மி சொல்லியது போல் கவிதையின் நாயகி தன்னை புகழ்த்து எழுட்தியது போல் தோன்றினாலும் ...
மன கேள்விகள் என்ற வார்த்தைகளை கவிதையாய் கொடுத்த பூ மகளுக்கு வாழ்த்துகள்...

பூமகள்
08-06-2008, 05:59 AM
வெகு நாட்களுக்குப் பின் உங்களின் விமர்சனம் பார்ப்பதில் மகிழ்ச்சி.
நலமாக இருக்கீங்களா அண்ணா?? அண்ணி நலமா அண்ணா? :icon_rollout:

பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள் பென்ஸ் அண்ணா. :)

இளசு
08-06-2008, 07:55 AM
புல்லாங்குழலில் நுழைந்தால்(தான்) - காற்று
புதுப்புது இசையாகும்....

இயற்கையோ.. வசந்தமோ -
இனிய இதயம் கண்டால் - இப்படி
கவிதை உருவாகும்!

பூவின் மனமடல்...அவிழ்ந்து மணந்ததால்
வாச மணமடல்..

அந்த ராஜகுமாரனுக்கான
ஒத்திகை மணமடல்..

மொத்தமும் சுகந்தம்.. இக்கவிதை!

வாழ்த்துகள் பாமகளே!

பூமகள்
08-06-2008, 03:14 PM
புல்லாங்குழலில் காற்று நுழைந்தால்
இசை பிறக்கும்...

படைத்த கவியை பெரியண்ணா படித்தால்..
களிப்பு பிறக்கும்..!!

படித்த பகுதியில்
இவர் பெயரைப் பார்த்தால்
அரும்பும் முல்லை சிரிப்பு..

இவரின் மாதுளை
பின்னூட்டம் கிடைத்த
எழுத்தாக்கமும் பகரும் பூரிப்பு...:)

வசந்தத்தை உடன் அழைத்து வந்துவிட்டீர்களா பின்னாலேயே பெரியண்ணா..??!!:icon_rollout::icon_rollout:

நீண்ட நாள் கழித்து உங்களின் பின்னூட்டம் பார்த்து பூரித்தேன்.. மிகுந்த நன்றிகள் அண்ணலே!!

சுகந்தப்ரீதன்
09-06-2008, 10:09 AM
உங்க வசந்தம் வந்ததும் கண்டிப்பா இதை அவங்களுக்கு காட்டுங்க பூ..!!
நீங்க ஓவர் பில்டப்பு கொடுக்கும்போதே தோனுச்சி.. கடைசியில ஏதோ சொல்ல போறீங்கன்னு.. இயற்கையை போல நீங்களும் காத்திருக்கீங்களா..?!
உங்களவர் வந்தால் உங்க காத்திருப்பு கடந்து போயிடும்..
ஆனா இயற்கை எப்போதுமே வசந்தத்திற்க்கு காத்திருக்கும்தானே..?!

நல்ல வார்த்தை கோர்வை.. கவிதையை அழகாக்க ஆர்வப்பட்டிருக்கீங்கன்னு தெளிவா தெரியுது.. வாழ்த்துக்கள்..பூ..!!