PDA

View Full Version : முகவரியில்லாக் கடிதங்கள்rocky
05-06-2008, 12:36 PM
முன்னுறை

இந்தக் கடிதங்களுக்கு முகவரிதான் இல்லை முன்னுறையாவது இருக்கட்டுமே என்றுதான் இந்த அறிமுகம். இது என் வாழ்வில் வரப்போகும் ஒரு பெண்ணுக்கு நான் எழுதும் கடிதங்கள். அவளின் முகம்கூட இப்போது தெரியாத போது முகவரிக்கு எங்கே போவது? அவள் என் வாழ்வில் இனி காதலியாக அறிமுகமாகி மனைவியாகலாம், அல்லது மனைவியாக வந்து காதலியாகலாம், அவள் எப்படி வந்தாலும், எப்போது வந்தாலும் அதுவரை அவளுக்காக நான் என் வாழ்வின் அனைத்து சந்தோஷங்கள், துக்கங்கள், கோபங்கள், கொஞ்சல்கள், என் அளவற்ற காதல் என்று அனைத்தையும் இங்கே சேமித்து வைக்கப்போகிறேன். இந்தக் கடிதங்கள் மூலம் இன்னும் நான் பார்த்திடாத என் வாழ்க்கைத் துணையுடன் வாழப்போகிறேன்.


முகவரியில்லாக் கடிதங்கள் - 1

என் இனியவளுக்கு,

இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். எடுத்தவுடன் உன்னிடம் என்ன பேசுவது, எதைப்பற்றிப் பேசுவது என்று தெரியவில்லை. அதனால் இந்தக் கடிதத்தைப் பற்றியே சொல்லிவிடுகிறேன். இது போல் கடிதம் எழுதுவது ஒன்றும் புதிதல்ல என்றாலும் நான் உனக்கு எழுதுவதற்கு சில காரணங்கள் உண்டு.

என் வாழ்வில் நான் நேசித்த அனைத்து உறவுகளாலுமே (பெற்றோர் உட்பட) ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் போது எனக்கான ஒரு ஊன்றுகோளாய், நம்பிக்கையாய் உன்னை கற்பனை செய்து கொண்டு இந்தக் கடிதங்களை எழுதுகிறேன். என் நம்பிக்கையை நீ நிச்சயம் காப்பாற்றுவாய் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன்.

என் பெரும்பாலான நேரங்கள் தனிமையில் கழிவதால் அந்த சமயங்களில் எனக்குள் தோன்றும் உன்னைப் பற்றிய என் கனவுகளையும், ஆசைகளையும் உனக்குகாக காப்பாற்றி சேகரித்து வைப்பதற்காக இந்தக் கடிதங்களை எழுதுகிறேன்.

என் நண்பர்கள் வட்டம் மிக மிக சிறியது. என்னுடைய சுக துக்கங்களை நான் மனம் விட்டு பேசி மகிழவோ அல்லது ஆறுதல்
அடைந்து கொள்ளவோ தகுந்த நண்பர்கள் என் அருகில் இல்லை. அதனால் தற்போது நீ என்னருகில் இல்லாவிட்டாலும் உன்னையே என் தோழியாக நினைத்து இந்தக் கடிதங்களை எழுதுகிறேன். பதில்தான் என்று வருமோ தெரியவில்லை?

நான் உனக்காக முதலில் எழுதத் தொடங்கியது கவிதைகள் தான். ஆனால் எங்கே அந்தக் கவிதைகளைப் படித்துவிட்டு நீ என்னை வெறுத்துவிடுவாயோ என்ற பயத்தினாலும் நான் இந்தக் கடிதங்களை எழுத ஆரம்பித்திருக்கலாம். உனக்கு என்னைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை, அதற்காக என் கவிதைகளும் பிடிக்கும் என்று சொல்லமுடியாதல்லவா? அதற்காகவும் இந்தப் புது முயற்சி.

இவை எல்லாவற்றிர்க்கும் மேலாக ஒரு மிக முக்கியமான காரணம், இப்போது எனக்கு வேளை மிகவும் குறைவு. அழுவலகத்தில் பொழுதைப் போக்குவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. (இந்த அழுவலகத்திலோ ஒரு பெண் கூட என்னுடன் பணியில் இல்லை.) நானும் எத்தனை நேரம்தான் இந்த மின்புத்தகங்களையே படித்துக் கொண்டிருப்பது. அதனால் தான் ஏதாவது கிறுக்குவோமே என்று உனக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன்.

சரி சரி கோபப்படாதே, முதல் கடிதத்திலேயே உன்னுடன் ஊடல் கொள்ளும் ஆசையில்தான் இவ்வாறு கூறினேன். இது தவிர நீ என்மேல் கோபப்பட இன்னும் ஒரு காரணமும் உண்டு. ஒரு ஆண் தன் காதலி/மணைவி க்கு எழுதும் கடிதத்தை இப்படி பகிரங்கமாக வெளியிட்டதற்கு வேண்டுமானால் நீ என்னோடு சண்டை போடலாம். ஆனால் அதுக்கும் நாங்க காரணம் வெச்சிருக்கோம்ல, கவிதையிலேயே.

" காகிதத்தில் எழுதி வைத்தால் -
எடைக்கு போட்டுவிவேனென்று,
கல்வெட்டில் செதுக்கி வைத்தால் -
என் கைகள் வலிக்குமென்று,
என் கணிணியில் வைத்தால் -
பாட்டுக்கு இடம் பத்தாதென்று,
இணையத்தில் ஏற்றி வைக்கிறேன் -
இங்கு யாரும் கேட்கமாட்டாரென்று."

" காகிதத்தில் எழுதி வைத்தால் -
காணாமல் போய்விடுமென்று,
கல்வெட்டில் செதுக்கி வைத்தால் -
நீ படிப்பதற்கு கஷ்டமென்று,
என் கணிணியில் வைத்தால் -
கிருமிகள் அழித்துவிடுமோ என்று,
இணையத்தில் ஏற்றி வைக்கிறேன் -
என் இனியவளின் பார்வைக்கு."

எப்படி நல்லாருக்கா? இதுக்குத்தான் நான் கவிதையே எழுதரதில்லை. இதுல ஒன்னு நீ சந்தோஷமா சிரிக்க, இன்னொன்னு நான் சந்தோஷமா சிரிக்க, சரி மொத கடுதாசிலயே ரொம்ப அருத்துட்டன்னு நினைக்குறேன். இப்போதைக்கு இதோட முடிச்சுக்குறன், நெக்ஸ்ட் மீட் பன்ற. டாட்டா பாய் பாய்.

அன்பு(காதலு)டன்,

ராக்கி.

தங்கவேல்
06-06-2008, 05:03 AM
ராக்கி, முதல் கடிதம் முகம் தெரியாத பெண்ணுக்கு... நன்றாக எழுதுகிறீர்.

ஆதவா
06-06-2008, 05:33 AM
முன்னுறையை எவ்வுறையில் போடப் போகிறீர்கள் ராக்கி? தமிழ் உங்களிடம் நன்றாக விளையாடுகிறது. பாவம் அதற்குத்தான் அதிக அடி.

முகவரியில்லாத கடிதங்களில் எந்த புதுமையும் இல்லை. நீங்கள் தற்போதுள்ள உங்கள் நிலையை உங்கள் கடிதத்தில் எழுதியிருக்கிறீர்கள் அவ்வளவே! இனிவரும் உங்கள் கடிதங்களைப் பொறுத்துதான் எவ்வித புதுமையினைப் புகுத்தப் போகிறீர்கள் என்பதை கணிக்க இயலும்.


(இந்த அழுவலகத்திலோ ஒரு பெண் கூட என்னுடன் பணியில் இல்லை.)

அதற்காக ஏன் அழுகிறீர்கள்? பெண்கள் இருந்தால் உங்களுக்கு வேலை நடக்காது.

பிறகு, கடிதத்தில் கற்பனையைக் கலந்து எழுதுங்கள். அல்லது அனுபவத்தைக் கலந்து எழுதுங்கள். தற்போதைய உங்கள் சூழ்நிலையினை ஏற்பதாக இல்லை..

அடுத்தடுத்த உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

aren
06-06-2008, 05:51 AM
நன்றாக ஆரம்பித்திருக்கிறீர்கள் ராக்கி. பாராட்டுக்கள்.

இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்திந்துப்பாருங்கள். ஒரு பெண் உங்களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறாள், அதற்குத் தகுந்தவாறு உங்களை மாற்றிக்கொள்வீர்களா என்று யோசியுங்கள்.

உங்களுக்கு உங்கள் எதிர்கால மனைவியிடமிருந்து என்ன வேண்டும் என்று யோசியுங்கள். பல விஷயங்கள் தானாகவே வந்துவிழும் (அடியும்தான்)

நல்ல ஆரம்பம். தொடருங்கள்.

சூரியன்
07-06-2008, 03:04 PM
நல்ல முயற்சி ராக்கி பாராட்டுக்கள்.


வேளை
இது என்ன வேளை?

Narathar
07-06-2008, 03:19 PM
அன்புத்தம்பி ரொக்கி அவர்களுக்கு...

நீ எழுதிய ( எனக்கல்ல!!! ) கடிதம் படித்தேன். மிக்க மகிழ்ச்சி, நீ ஏதோ கடிதமும் கவிதையும் எழுதும் அளவுக்கு மகிழ்ச்சியா இருப்பதை நினைத்து. அந்த மகிழ்ச்சிக்கு ஏன் தான் முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ள ஆசைப்படுகின்றாய் உன் வாழ்க்கையில் ஒரு பெண்ணை அனுமதித்து?

இது தேவையா? யோசித்துப்பார்க்கவும்...

அடுத்த மடல் கண்டதும் தொடர்கின்றேன்

சுகந்தப்ரீதன்
08-06-2008, 03:26 PM
அந்த மகிழ்ச்சிக்கு ஏன் தான் முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ள ஆசைப்படுகின்றாய் உன் வாழ்க்கையில் ஒரு பெண்ணை அனுமதித்து?

நாராயணா.. நாராயணா..!!:lachen001:

யவனிகா
08-06-2008, 07:09 PM
அடுத்த மடல் கண்டதும் தொடர்கின்றேன்

தொடர வேற போறாராமா...ராக்கி....பாவம்...
உன் மடலை காதலியிடம் காட்டும் முக்கியமோ இல்லையோ நாரதரின் மடலை மறைப்பது முக்கியம்....

பென்ஸ்
08-06-2008, 11:53 PM
ராக்கி நல்ல முயற்சி....

இந்த கட்டுரை தொடர் தன் முதல் பதிவிலையே தன் சிறப்பை சொல்லிவிட்டது.

மன்ற நண்பர்/ வலை பதிவாளர் "விழியனின்" தோழியே உன்னை தேடுகிறேன்.. இதே ரகம்தாம், ஆனால் இது முற்றிலும் வித்தியாசமாக...

பலர்தன் வாழ்க்கையில் கற்பனை காதலி, தோழி, தோழன் வைத்திருப்பது இருந்துதான் வருகிறது.... இந்த உறவு நம் வாழ்வில் வரும் மற்ற உறவுகளை போலவே நாம் சீரியஸாக வைத்து கொள்ளுவதும், இந்த உறவுடன், உரையாடல், கடிதம் எழுதுவது, இரண்டு ஐடி உருவாக்கி நமக்கு நாமே கடிதம் எழுதிகொள்வது, இந்த உறவுடன் கடிந்து கொள்வது, அழுது கொள்வது.. இன்னும் இன்னும்....

"நிர்வாணா"வின் கர்ட் கோபின் இதே போல் ஒரு நண்பரை வைத்திருந்தார்... இன்னும் பலர், பலர்....
இது தவறா..???
இது அப்நார்மல் தான் என்றாலும், இது மனம் இருக்கும் நிலையை காப்பாற்றி கொள்ள எடுக்கும் ஒரு டிபன்ஸ்... கவிதை புனைய பல கவிஞர்கள் இப்படி காதலியை வைத்திருந்தார்கள்...
பாரதியின் கண்ணமாவை போல....

இன்னொரு பாரதியை வாழ்த்தி....

rocky
09-06-2008, 08:50 AM
ராக்கி நல்ல முயற்சி....

இந்த கட்டுரை தொடர் தன் முதல் பதிவிலையே தன் சிறப்பை சொல்லிவிட்டது.

மன்ற நண்பர்/ வலை பதிவாளர் "விழியனின்" தோழியே உன்னை தேடுகிறேன்.. இதே ரகம்தாம், ஆனால் இது முற்றிலும் வித்தியாசமாக...

பலர்தன் வாழ்க்கையில் கற்பனை காதலி, தோழி, தோழன் வைத்திருப்பது இருந்துதான் வருகிறது.... இந்த உறவு நம் வாழ்வில் வரும் மற்ற உறவுகளை போலவே நாம் சீரியஸாக வைத்து கொள்ளுவதும், இந்த உறவுடன், உரையாடல், கடிதம் எழுதுவது, இரண்டு ஐடி உருவாக்கி நமக்கு நாமே கடிதம் எழுதிகொள்வது, இந்த உறவுடன் கடிந்து கொள்வது, அழுது கொள்வது.. இன்னும் இன்னும்....

"நிர்வாணா"வின் கர்ட் கோபின் இதே போல் ஒரு நண்பரை வைத்திருந்தார்... இன்னும் பலர், பலர்....
இது தவறா..???
இது அப்நார்மல் தான் என்றாலும், இது மனம் இருக்கும் நிலையை காப்பாற்றி கொள்ள எடுக்கும் ஒரு டிபன்ஸ்... கவிதை புனைய பல கவிஞர்கள் இப்படி காதலியை வைத்திருந்தார்கள்...
பாரதியின் கண்ணமாவை போல....

இன்னொரு பாரதியை வாழ்த்தி....

மிக்க நன்றி பென்ஸ் அண்ணா. உங்களின் இந்தப் பாராட்டு என்னை மிகவும் உற்சாகப்பட வைக்கிறது.

உண்மையிலேயே நான் என்னுடைய கவலைகளை விட்டு கொஞ்சமாவது விலகி இருப்பதற்காகவே இந்த கனவுக்காதலியை உறுவாக்கினேன். முன்பு கவிதையாக கனவுக்காதலி என்று எழுதும் போதும் சரி இப்போது முகவரியில்லாக் கடிதங்களாக எழுதும் போதும் சரி இந்த கொஞ்ச நேரமாவது கற்பனையில் மகிழ்ச்சியாய் இருப்போம் என்றுதான் ஆரம்பித்தேன். உங்களின் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா.

rocky
09-06-2008, 08:59 AM
ராக்கி, முதல் கடிதம் முகம் தெரியாத பெண்ணுக்கு... நன்றாக எழுதுகிறீர்.

நல்ல முயற்சி ராக்கி பாராட்டுக்கள்.

உங்களின் பாராட்டுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா.


உங்களுக்கு உங்கள் எதிர்கால மனைவியிடமிருந்து என்ன வேண்டும் என்று யோசியுங்கள். பல விஷயங்கள் தானாகவே வந்துவிழும் (அடியும்தான்)

ஏன் அண்ணா ஒரு பச்சப் புள்ளையை இப்படி அடிக்கடி பயமுறுத்திக்கிட்டே இருக்கீங்க? பரவாயில்லை அனுபவஸ்தர் சொல்றீங்க கேட்டுக்கரேன். இருந்தாலும் அண்ணா அடிக்கிற கைதான் அனைக்கும், அதனால நாலு அடி அடிச்சாத்தான் என்ன இப்போ? ஒரு பொன்னு அடிச்சால்லாம் நமக்கு என்ன வலிக்கவா போகுது? என்ன கையில மட்டும் அடிச்சா பரவாயில்ல தாங்கிக்கலாம் கரண்டியில மட்டும் அடிக்காம பாத்துக்கனும். மிக்க நன்றி அண்ணா உங்களின் வாழ்த்துக்களுக்கு.இது தேவையா? யோசித்துப்பார்க்கவும்...

நிச்சயமா இது தேவையா இல்லையா அப்படின்னு முடிவெடுக்குற அதிகாரம் என்னிடம் இல்லை நாரதரே. நீங்கள் சொல்வதைப் படித்தவுடன் என் நண்பர் ஒருவர் கல்யாணத்தைப் பற்றி ஒன்று சொல்வார் அது நியாபகம் வருகிறது. அதாவது அவர் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை பாம்பு வந்து நம்மைக் கொத்துவதாகவும், காதல் கல்யாணத்தை பாம்பு புற்றுக்குள் நாமே கையை விட்டு கொத்து வாங்குவதாகவும் கூறுவார். நீங்கள் சொல்வது நீ ஏன் போய் புத்துக்குள் கை விடுகிறாய் என்று கேட்பது போல் இருக்கிறது. இருந்தாலும் என்ன செய்வது, திருமணமான எல்லோருமே இப்படித்தான் சொல்கிறீர்கள் ஆனால் நீங்கள் திருமணம் செய்வதற்கு முன்பும் உங்களிடம் இவ்வாறு சொல்லாமலா இருந்திருப்பார்கள்? நீங்கள் மட்டும் செய்துகொள்வீர்கள் மற்றவர்களை வேண்டாம் வேண்டாம் என்கிறீர்கள், என்ன நியாயம் இது? ( ஆமா நீங்க இப்படி சொல்றதெல்லாம் உங்க வீட்ல தெரிஞ்சா என்ன அகும் அண்ணா?)


தொடர வேற போறாராமா...ராக்கி....பாவம்...

பரவாயில்லையே, என்ன பயமுறுத்தத் தான் இங்கே நிறைய பேர் இருக்காங்கன்னு நினைச்சேன், ஆனா எனக்காகப் பாவப்படவும் ஒருத்தர் இருக்காங்கன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு. ரொம்ப நன்றிங்க அக்கா.

Narathar
10-06-2008, 08:12 PM
திருமணமான எல்லோருமே இப்படித்தான் சொல்கிறீர்கள் ஆனால் நீங்கள் திருமணம் செய்வதற்கு முன்பும் உங்களிடம் இவ்வாறு சொல்லாமலா இருந்திருப்பார்கள்? நீங்கள் மட்டும் செய்துகொள்வீர்கள் மற்றவர்களை வேண்டாம் வேண்டாம் என்கிறீர்கள், என்ன நியாயம் இது? ( ஆமா நீங்க இப்படி சொல்றதெல்லாம் உங்க வீட்ல தெரிஞ்சா என்ன அகும் அண்ணா?)


ஒன்னும் ஆகாது............
வாசித்து சிரித்துவிட்டு
சின்னதா ஒரு பின்னூட்டம் கூட கொடுப்பாங்க

இதெல்லாம் சும்ம லுலுவாயீ...........
நீங்க தொடருங்க அப்பு!


தொடர வேற போறாராமா...ராக்கி....பாவம்...
உன் மடலை காதலியிடம் காட்டும் முக்கியமோ இல்லையோ நாரதரின் மடலை மறைப்பது முக்கியம்....

நான் என்ன மன்மதனா?
அவர் காதலியை நான் தட்டிச்செல்ல நாராயணா!!!

ஆதவா
11-06-2008, 02:54 PM
ஒன்னும் ஆகாது............
வாசித்து சிரித்துவிட்டு
சின்னதா ஒரு பின்னூட்டம் கூட கொடுப்பாங்க

இதெல்லாம் சும்ம லுலுவாயீ...........
நீங்க தொடருங்க அப்பு!நான் என்ன மன்மதனா?
அவர் காதலியை நான் தட்டிச்செல்ல நாராயணா!!!

அப்படி வேறு ஒரு எண்ணம் இருக்கிறதோ? :aetsch013:

Narathar
11-06-2008, 02:57 PM
அப்படி வேறு ஒரு எண்ணம் இருக்கிறதோ? :aetsch013:


இல்லை என்றாலும் இருக்கிறது என்கிறார்களே...
நான் என்ன செய்வேன்......................... :aetsch013::aetsch013:
நான் என்ன செய்வேன்..........................:mini023:

ஷீ-நிசி
11-06-2008, 03:14 PM
நல்ல முயற்சி ராக்கி! எழுத்துப்பிழைகள் களைந்து, கற்பனைகளை கலந்து பரிமாறுங்கள் காதல் சம்பாஷணைகளை! வாழ்த்துக்கள்!

lolluvathiyar
25-06-2008, 06:27 AM
நிச்சயம் உங்களுக்கு பிடித்த வகையில் நல்ல மனைவி அமைவாள், எப்படி வந்தாளும் அவளை உங்களுக்கு பிடித்து போகும் மன நிலையை நீங்கள் உருவாக்கி விட்டீர்கள், அதனால் உங்களை அவளுக்கு மிகவும் பிடித்து போகும் என்பதில் ஐயமில்ல*

anbukala
12-01-2009, 10:37 AM
எதுவும் தோன்றாத சில வேளைகளில் வாழ்க்கையின் வெறுமை நம்மை சுடும் சில மணித்துளிகளில் நம் மனதை திசை திருப்ப வேண்டி சினிமா, புகை என்ற் ஆகாத செயல்களில் ஈடுபடுவதை விட்ட நமது வாழ்க்கை துணையை நினைத்து மனதினுள் உரையாடுவது ஆக்கப்புர்வமானது

umakarthick
16-01-2009, 09:51 AM
காகிதத்தில் எழுதி வைத்தால் -
எடைக்கு போட்டுவிவேனென்று,
கல்வெட்டில் செதுக்கி வைத்தால் -
என் கைகள் வலிக்குமென்று,
என் கணிணியில் வைத்தால் -
பாட்டுக்கு இடம் பத்தாதென்று,
இணையத்தில் ஏற்றி வைக்கிறேன் -
இங்கு யாரும் கேட்கமாட்டாரென்று."

" காகிதத்தில் எழுதி வைத்தால் -
காணாமல் போய்விடுமென்று,
கல்வெட்டில் செதுக்கி வைத்தால் -
நீ படிப்பதற்கு கஷ்டமென்று,
என் கணிணியில் வைத்தால் -
கிருமிகள் அழித்துவிடுமோ என்று,
இணையத்தில் ஏற்றி வைக்கிறேன் -
என் இனியவளின் பார்வைக்கு."

ஆஹா படித்தேன் ரசித்தேன் கடிதத்தை விட கவிதை தான் என்னை அதிகம் கவர்ந்தது

indiran
12-07-2011, 08:47 PM
தொடக்கமே அருமை ராக்கி, முகம் தெரியாத அறிமுகம் இல்லாத அந்த உறவுக்கு கடிதம் எழுதும் பாங்கு அருமை.