PDA

View Full Version : மின்னஞ்சலில் வந்ததுஆதி
05-06-2008, 11:17 AM
காதல் கடிதம்

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். 'அலுவலகத்தில் இருக்கிறேன், நீல்கிரிஸில் சாயங்கலாம் சந்திக்கலாம்' என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.

சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது 'எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!' என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன். சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன். வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே...

அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது ' தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா... வயசாச்சில்ல...' என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை 'ஒரு கஸாடா' என்ற வார்த்தையில் உடைத்தார். கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. 'தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா' என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

'சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்' என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். 'அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச 'ஆனந்த பவனுக்கு' வந்தது நீங்க இல்லையா தம்பி?!' என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். " தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க... நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க... அப்ப பேசிக்கலாம்" என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.

பி.கு:- வந்த மின்னஞ்சலை அப்படியே பகிர்கிறேன், பதிப்பு எவருக்கும் நெருடலாய் இருந்தால் மன்னிக்கவும்..

கண்மணி
05-06-2008, 11:53 AM
உங்களுக்கு வந்ததோ?:confused::confused::confused: கையெழுத்து ஆதின்னு போட்டிருக்கேண்ணா?:confused::confused:

ஒருவேளை மின்னஞ்சல் முகவரி தப்பா அடிச்சி அது உங்களுக்கே பௌன்ஸ் ஆயிருக்கும்னு நினைக்கிறேன்,:eek::eek::eek:

கோபம் வந்தா இப்படித்தாண்ணா, என்ன எழுதறோம்னு நமக்கே பலநேரம் மறந்து போயிடுது.:D:D:D:D

ஒண்ணு மட்டும் விளக்கிடுங்க..

மல்லு கட்டுனீங்களே!
பில்லு கட்டுனீங்களா?
இல்லைக் காசில்லைன்னு அடிவாங்கி
பல்லு கட்டுனீங்களா?

SathyaThirunavukkarasu
05-06-2008, 12:01 PM
என்னது இது நகைச்சுவையா, சம்பவமா அல்லது யாரையாவது மறைமுகமாக கலாய்க்கிறீங்களா,

minmini
05-06-2008, 12:10 PM
எனக்கும் அப்படித்தான் தோன்ட்றுகிறது
யாரையோ கலாய்ப்பது போல்.......... :aetsch013:

ஆதி
05-06-2008, 12:13 PM
கோபம் வந்தா இப்படித்தாண்ணா, என்ன எழுதறோம்னு நமக்கே பலநேரம் மறந்து போயிடுது.:D:D:D:Dஉங்க கோபம் நியாமானதுதாங்க..

இந்த பதிப்ப படிக்கையில்..

கலைஞர் வசனத்தை உல்டா பண்ணி பேசின விவேக்தான் ஞாபகம் வந்தார்..

இரண்டாவது பத்தியை நீக்கிடலாம் னு கூட நினைத்தேன்.. வந்தத அப்படியே போடலாம் னுதான் போட்டேன்..

உங்களை போபப்படுத்தியமைக்கு மன்னிக்கவும்


என்னது இது நகைச்சுவையா, சம்பவமா அல்லது யாரையாவது மறைமுகமாக கலாய்க்கிறீங்களா,

ஒரு குப்ப சம்பவத்தை ஒருத்தன் மெனக்கெட்டு உட்கார்ந்து தூயத்தமிழில் எழுதிருந்தது எனக்கு பிடிச்சிருந்துச்சு போட்டேன்..

யாரையும் காலாய்க்க இல்லம்மா..

விகடன்
05-06-2008, 12:18 PM
கடிதம் நன்றாக இருக்கிறது. அனுபவப்பட்டு எழுதினால் பரவாயில்லை. இது அடிபட்டு எழுதியிருக்கிற்றார் :D


உங்களுக்கு வந்ததோ?:confused::confused::confused: கையெழுத்து ஆதின்னு போட்டிருக்கேண்ணா?:confused::confused:


கடிதம் முற்றுப்பெற்றதும் போடும் கையெழுத்தல்ல அது. பதிவை இட்ட ஆதியின் மன்றத்திற்கான, பொதுவான கையெழுத்தது :)

செல்வா
05-06-2008, 04:24 PM
பாவண்டா ஆதி நீ..... இத்தனை வேலைப்பளுவிலும் மெனக்கட்டு உக்காந்து இந்தமாதிரி வர மின்னஞ்சல் எல்லாம் படிச்சிட்டுருக்க.... ரொம்ப நல்லவண்டா நீ....

சூரியன்
05-06-2008, 04:54 PM
யாருங்க அப்படி சாப்பிடற நல்லவரு.
எனக்கு அவர பாத்து எப்படி அப்படி சாப்பிடரதுனு கேட்டு தெரிஞ்சுக்கனும்.

Narathar
05-06-2008, 06:01 PM
யாருங்க அப்படி சாப்பிடற நல்லவரு.
எனக்கு அவர பாத்து எப்படி அப்படி சாப்பிடரதுனு கேட்டு தெரிஞ்சுக்கனும்.

சரி அப்போ அடுத்த ஈ மெயில் உங்க அட்ரசுக்குத்தான்!!!!

அன்புரசிகன்
06-06-2008, 06:41 AM
அந்த கடையில் பரிமாரிய அந்த சேவகனின் நிலை தான் பரிதாபம். முன்னால் இருந்து பார்த்தவருக்கே இப்படி என்றால்..... ஏதோ ஒரு படத்தில் கவுண்டர் 2 இட்லி சாப்பிட செந்தில் ஒரு வெட்டு வெட்டியது தான் நினைவுக்கு வந்தது...


சரி அப்போ அடுத்த ஈ மெயில் உங்க அட்ரசுக்குத்தான்!!!!

நல்ல டைமிங் & ரைமிங்...

shibly591
06-06-2008, 06:45 AM
அய்யோ அய்யோ....முடியலப்பா.........

அறிஞர்
06-06-2008, 03:48 PM
குப்பை சம்பவத்தை போட்டு... இந்த இடத்தை குப்பையாக்குகிற மாதிரி இருக்கே....

ஆதி பதிவுக்கு நன்றி... இன்னும் அனைவரும் ரசிக்க கூடிய பதிவுகளை கொடுங்கள்.

யவனிகா
09-06-2008, 04:08 AM
என்ன ஆதி இது....

அழகான, அற்புதமான கவிதைகளைத் தருகின்ற விரல்கள்...இதைத் தட்டச்ச இவ்வளவு மெனக்கெட வேண்டுமா?

குப்பைச் விசயம்ன்னு தெரிஞ்சாலும் கிளறி விடறது கோழிகளுக்கு வேண்டுமானாலும் தொழிலாய் இருக்கும்....குயில்கள் குப்பை கிளறலாமா?

தீபன்
09-06-2008, 08:37 AM
அழகான நகைச்சுவை... இதில் குப்பையாக பட என்ன இருக்கிறதென புரியவில்லை... அதிகமாக உண்பது ஆரோக்கியமானதல்லவே... அது கண்டிக்கத்தக்கதே... அதனால், அதை கிண்டலடித்து நகைச்சுவை படைப்பது குப்பையாக நோக்கப்படுவது தவறாகுமென்பது என் கருத்து. இந்த நகைச்சுவையையும் ரசிக்க முடிகிறது. இதில் யார் காயப்படுகிறார்கள்...? ஆதி, தொடருங்கள் உங்கள் பணியை.

தமிழ் தென்றல்
13-06-2008, 05:29 PM
அழகான நகைச்சுவை... இதில் குப்பையாக பட என்ன இருக்கிறதென புரியவில்லை...

ஆமாம்... இதில் குப்பையாகப்பட என்ன இருக்கிறது...

இது பல ஆண்களுக்கு எச்சரிக்கையும் அல்லவா..?? :)

அவரவர் பார்வையில்தான் எதுவும் இருக்கிறது....

arun
13-06-2008, 07:38 PM
நல்ல நகைச்சுவை உணர்வு எழுதியவருக்கு இருக்கும் போல :lachen001::lachen001::lachen001:

ஆனால் அவரின் சொந்த அனுபவத்தை சொல்லி இருந்தால் அவருக்காக வருந்த தான் முடிகிறது :frown::frown: