View Full Version : கடந்த கால நிழற்படம்.
Mano.G.
05-06-2008, 08:30 AM
கடந்த காலங்களில் நமது மன்றத்தில்
மாதம் ஒரு முறை நிழற்பட தொகுப்புக்கள்
என நமது மன்ற உறவுகள் கற்பனையில் சந்திப்பது
போன்று கட்டுரைகள் நமது சகோதர சகோதரிகளால்
படைக்கப்படும், அந்த படைப்புகளில் நமது சகோதர சகோதரிகள்
ஒருவரை ஒருவர் கலாய்க்கரதும் சீண்டுவதும் ரசிக்கத்தக்கவையாகவும்
அடுத்து நிழற்படம் தொகுப்பை யார் எழுத போவது என எதிர்பார்ப்புடனும் காத்திருப்பதும் ஒரு அலாதி சந்தோசம்.
இன்று நமது திஸ்க்கி காலத்து படைப்புகளிருந்து எடுத்து மறுபதிப்பு
செய்ய எண்ணி தேடிய பொழுது கிடைக்கவில்லை.
நமது சகோதர சகோதரிகளிடம் இருந்தால் மறுபதிப்பு செய்யலாமே.
மனோ.ஜி
அமரன்
05-06-2008, 12:33 PM
அன்பான அண்ணா..
மன்றத்தின் நேற்றைய காற்று ரகப்பதிவுகளான "நிழற்படப்பதிவுகள்" மனதைக் கொள்ளை கொள்வன. சில யுனிக்கோட்டுக்கு மாற்றப்பட்டுள்ளன. விரைவில் சுட்டிகள் தருகிறேன். தொடரும் யுனிக்கோட்டாக்கத்தின்போது மற்றவைகளையும் படிக்கும் வாய்ப்புக் கிட்டும்.
நீங்கள் சொல்லும் விடயங்களை தொடர்வதுக்கு என் பூரணவு ஆதரவு.
முன்னோடி மனோஜி சொன்னதுபோல்
எனக்கும் நிழற்பட ஆவல் மீண்டும் அதிகரித்து வருகிறது..
தினமும் மன்றம் வந்து, எங்கும் சுழன்று படிக்கும் உறுப்பினர் ஒருவரே
நிழற்படம் தர முதல் தகுதி உள்ளவர்..
எங்கே ... உங்களில் யார் தயார் என முன்வந்து சொல்லுங்களேன்.. சொந்தங்களே!
shibly591
20-10-2008, 09:57 AM
நாங்களும் காத்திருக்கிறோம்..
Mano.G.
20-10-2008, 12:26 PM
ஆம்
அந்த நிழற்பட பதிவுகளில் நம் பெயரை
கண்டவுடன் மனதில் ஏற்படும்
உற்சாகத்துக்கு அளவே இல்லை,
அந்த பதிவுகளை காண
ஆவளுடன் இருக்கிறேன்.
மனோ.ஜி
இளந்தமிழ்ச்செல்வன்
20-10-2008, 10:43 PM
மனோ.ஜி அவர்களே,
எனக்கும் அந்த வாய்ப்பு ஒரு முறை கிட்டியது நினைத்து பெருமைப்படுகின்றேன். இரண்டு முறை கணிணி மாற்றிவிட்டேன். அநேகமாக இருக்க வாய்ப்பு இருக்காது.
நண்பர்களே யாரிடமாவது இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்.
அமரன்
21-10-2008, 07:49 AM
இ.த.செ அவர்களே!
உங்கள் அவசர கோலம் எத்தனை அழகு.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5191
Mano.G.
21-10-2008, 08:14 AM
தம்பி அமரனுக்கு பெரிய நன்றி சொல்லவேண்டும்,
எங்கிருந்து ஐயா இந்த பதிவை கண்டுபிடித்து
கொண்டுவந்தீர்கள்,
அருமை அருமை அருமையோ அருமை
வாழ்த்துக்கள் அமரன்.
இப்பொழுது நமது சகோதர சகோதரிகளின்
புதிய நிழற்பட தொகுப்புகளை காண ஆவலுடன்
இருக்கிரேன்.
மனோ.ஜி
பிச்சி
21-10-2008, 08:46 AM
நிழற்படம் என்பது Picturesஆ? ஒரு பதிவில் விமர்சனங்கள் ம்ட்டும் இருந்தன. கொஞ்சம் விளக்கமாக யாராச்வது சொல்லுங்கள்.
மன்மதன்
21-10-2008, 12:17 PM
நிழற்படம் என்பது Picturesஆ? ஒரு பதிவில் விமர்சனங்கள் ம்ட்டும் இருந்தன. கொஞ்சம் விளக்கமாக யாராச்வது சொல்லுங்கள்.
கடந்த ஒரு மாதத்தில் நண்பர்கள் பதித்த பதிவுகளை அசை போடுவது / விமர்சனம் செய்வது .. மேலே அமரன் கொடுத்த சுட்டியை தட்டி பாருங்க.. உங்களுக்கும் ஒரு நிழற்படம் கொடுக்கணும்னு ஆவல் வரும்..