PDA

View Full Version : மூளையின் வித்தியாச விளையாட்டு...



மன்மதன்
04-06-2008, 01:22 PM
இதோ இன்னொரு புது illusion.

முதலில் சுற்றிக் கொண்டிருக்கும் பிங்க் நிற வட்டத்தில் அதன் சுழற்சியிலேயே பார்த்துக்கொண்டிருங்கள்..

பிங்க் நிறம் மாறாது...

அப்புறம்.....கொஞ்ச நேரம் நடுவில் இருக்கும் + குறியை பார்த்துக் கொண்டிருங்கள்..

இப்பொழுது சுழலும் பிங்க் கலர் பந்து பச்சை நிறமாக மாறும்..


http://img.photobucket.com/albums/v372/manmathan/color.gif


இப்பொழுது நீண்ட நேரம் நடுவில் இருக்கும் + குறியை பார்த்துக் கொண்டிருந்தால், எல்லா பிங்க் நிற பந்தும் மறைந்து , பச்சை நிறத்தில் ஒரு பந்து சுழன்று கொண்டிருக்கும்..

மூளையை புரிஞ்சுக்கவே முடியலேப்பா...:rolleyes::rolleyes:

அறிஞர்
04-06-2008, 01:28 PM
நம்ம மூளையை நம்மாலே புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டமா இருக்கு........

அருமை மன்மதா..

SathyaThirunavukkarasu
04-06-2008, 03:24 PM
ஆமா என்ன இது கிராபிக்*ஸ் போல இருக்குதே

பூமகள்
04-06-2008, 03:46 PM
என்னமா.. மறையுது... கண்ணைக் கட்டாமலே வித்தையா தெரியுதே...:1:
பகிர்ந்தமைக்கு நன்றிகள் மதன் அண்ணா. :4_1_8::4_1_8:

கொஞ்சம் எப்படி இது நிகழுதுன்னு யாராவது சொல்லுங்களேன்...!!:confused::confused:

பெரியண்ணா வந்தா தான் சொல்ல முடியுமா?? :icon_ush::icon_ush:

இளசு அண்ணா...:icon_08: :icon_clap:எங்கிருந்தாலும் வந்து பூவுக்கு பதிலைக் கண்டுபிடிச்சி சொல்லுங்கோ... :music-smiley-009::music-smiley-009: :smilie_flags_kl::icon_rollout:


அறிவாளி ஆகும் முனைப்பில்,:sport-smiley-018::wub::icon_give_rose:

Narathar
04-06-2008, 04:17 PM
நம்ம மன்மதனுக்கு எங்கிருந்துதான் இதெல்லாம் கிடைக்கிறதோ?

வீட்டிலுள்ளோர் அனைவரையும் கூப்பிட்டு வித்தகாட்டியாச்சு!!!

பகிர்தலுக்கு நன்றி

சிவா.ஜி
04-06-2008, 04:44 PM
சூப்பர் மன்மதன். அருமையா இருக்கு. பச்சைப் பந்து சுத்திக்கிட்டிருக்கும்போதே டக்குன்னு பழையபடி பார்வையை மாத்தினா இரண்டு வரிசையில் பச்சைப்பந்துகளும், பிங்க் பந்துகளும் தெரியுது. ஆஹா...பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி மன்மதன்.

lolluvathiyar
05-06-2008, 04:57 AM
இது நம்ம மன்றத்தில் முன்னமே வந்ததாக நினைவு. எப்ப என்று சரியாக தெரியவில்லை. (வயசான காலத்துல எதை முழுசா நினைவு வச்சுக்க முடியுது)

தாமரை
05-06-2008, 05:24 AM
இதற்குக் காரணம் வெவ்வேறு வண்ணங்களின் அலைநீளம் வெவ்வேறாக இருத்தலால் இருக்கலாம். நம் கண்கள் வேறு ஒரு புள்ளியில் நிலைத்திருக்கும் பொழுது சிவப்பு அலைகள் நம் பார்வைக்குள் நுழைவதில்லை..

நான் என்ன செய்தேன் தெரியுமா?.. + குறியில் கான்ஸண்ட்ரேட் பண்ணாமல் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே நகர்த்தி ஸ்கிரீனை விட்டு வெளியே ஃபோக்கஸ் செய்ய, வெறும் பச்சைப் புள்ளி மட்டும் ஓடிகிட்டு இருக்கு. இளஞ்சிவப்பு புள்ளிகளைக் காணோம்..

அதாவது சிவப்பு அலைகள் நேராக் வருகின்றன. பச்சை நீலம் போன்றவை காற்று போல ஊடகம் மூலமாய் வரும்பொழுது ஒளிவிலகல் காரணமாக அதிக கோணப்பரப்பளவிற்கு வருகின்றன.

அப்படியானால் எல்லாப் புள்ளிகளும் பச்சையாய் தெரிய வேண்டுமே..
இன்னும் கொஞ்சம் யோசித்தால் பச்சை நிறம் அந்த ஓடுகின்ற புள்ளியில் வினாடியில் 8ல் ஒருபங்கு நேரத்துக்குக் குறைவாய்த் தோன்றுமாறு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகிற்து. சாதரணமாய் நம் கண்களில் நாம் காணும் தோற்றம் 8ல் ஒரு பங்கு வினாடி அப்படியே இருக்குமாம். அதனால் பிங் மட்டுமே நேரடியாய் பார்க்கும் பொழுது தெரிகிறது. பச்சை நிறம் நாம் உணர்வதற்குள் மறைந்து விடுகிறது.

ஆனால் பார்வைக் கோணம் வேறுபடும்பொழுது பிங்க் நம் கண்ணில் ஏற்படுத்தும் இந்த மாயை குறைய பச்சை வெளிப்படுகிறது.

தேடாத பொருள் எதிர்பார்க்காத இடத்தில் கிடைப்பதற்கும் இதற்கும் எதாவது சம்பந்தம் இருக்குமோ?:icon_ush:

அமரன்
05-06-2008, 07:32 AM
மூலவர்ணங்கள் சிவப்பு, நீலம், பச்சை.. பிங் கலரும் அவற்றின் கலப்பு. நீலம் அதிக தூரத்தின் நிறம் (வானம்,நீளமான கடல்) நீலத்தை விட குறைந்த தூரத்தில் இருப்பது பச்சை(நடுத்தரளவுக் கடல்கள்). சிவப்பு பற்றி தெரியவில்லை..:D.

தாமரை
05-06-2008, 09:11 AM
சூப்பர் மன்மதன். அருமையா இருக்கு. பச்சைப் பந்து சுத்திக்கிட்டிருக்கும்போதே டக்குன்னு பழையபடி பார்வையை மாத்தினா இரண்டு வரிசையில் பச்சைப்பந்துகளும், பிங்க் பந்துகளும் தெரியுது. ஆஹா...பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி மன்மதன்.

ரெண்டு ரெண்டாத் தெரியுதா.. கன்ஃபார்ம், சிவாஜி ஸ்டெடியாத்தான் இருக்காரு.

பூமகள்
05-06-2008, 11:28 AM
மூலவர்ணங்கள் சிவப்பு, நீலம், பச்சை.. பிங் கலரும் அவற்றின் கலப்பு. நீலம் அதிக தூரத்தின் நிறம் (வானம்,நீளமான கடல்) நீலத்தை விட குறைந்த தூரத்தில் இருப்பது பச்சை(நடுத்தரளவுக் கடல்கள்). சிவப்பு பற்றி தெரியவில்லை..:D.
ரொம்ப சிம்பிள் அமரன் அண்ணா.:icon_rollout:(விளையாட்டுக்கு சொன்னீங்களா தெரியலை.. :confused:பட்.. நான் விளக்கம் கொடுத்துடறேன்..:rolleyes::icon_ush:)
சிவப்பு நிறம் அதிகமான அலைநீளம் கொண்டது..(650 நானோ மீட்டர்)
ஆகவே தான்.. சூரியன்.. பூமிக்கு தொலைவில் செல்லும் சமயங்களான.. சூரியன் உதயம்.. மற்றும் மறையும் நேரங்களில் வானம்.. சிவப்பு வண்ணத்தில் காட்சியளிக்கிறது.. அதாவது.. அதிக அலைநீளமுள்ள சிவப்பு மட்டுமே நம் கண்களை எட்டுகிறது.. நீல நிறம் குறைவான அலைநீளம்(475 நானோ மீட்டர்) கொண்டதால் சிதறடிக்கப்படுகிறது..ஆகவே தான் நீல நிறமாக அந்த சமயத்தில் வானம் தெரியலீங்கோ...!! :icon_ush:

RGB - சிவப்பு+பச்சை+நீலம் இந்த மூன்று நிறங்களைக் கொண்டு அனைத்து நிறங்களையும் கொண்டு வர முடியும்.

கண்மணி
05-06-2008, 11:40 AM
அதுசரிம்மா, சூரியன் வேற எந்த எந்தக் கலர்ல தெரியும்?

பூமகள்
05-06-2008, 12:18 PM
கண்மணியக்கா.... ஏதோ பதிலை வைச்சிட்டு கேள்வி கேக்குறீங்கன்னு தெரியுது.. :confused::confused::icon_rollout:
நான் சொன்னது வானம் ஏன் சிவப்பா தோணுதுன்னு... :icon_ush::icon_ush:

சூரியனும் கலர்கலரா தெரியுமுங்களா?? :eek::eek:

நீங்களே சொல்லுங்களேன் கண்மணி அக்கா...!!:icon_ush::icon_ush: