PDA

View Full Version : வாழவிடுங்கள்…..



நம்பிகோபாலன்
04-06-2008, 10:53 AM
வில்லொடித்து
மணக்கவில்லை
என்பதால் விலகிதான்
போனாயோ

மாதவி வீட்டுக்கு
வழியனுப்ப
கண்ணகியாக நானிருப்பேன்
நினைத்தாயோ

எப்பொழுது உனக்கு
என்னை பிடிக்காமல்
வேறொருத்தி பிடித்ததோ
மரணிக்க முயர்ச்சித்தேன்
தோற்றுவிட்டேன்
ஆதலால் மறக்க
துணிந்துவிட்டேன்…

உன்னிடம் ஒரே
ஒரு கேள்வி
இன்று வரை என்னை
கொல்லும் கேள்வி
என்னை எங்கே உனக்கு
பிடிக்காமல் போனது?

இங்கே
தவறாக யாரேனும்
நினைக்கலாம்
அவர்களுக்கு
ஒரே வார்த்தை
என் வாழ்க்கை விரயமாகி
காயப்பட்டு போயிருக்கிறேன்
என் மனதை கொய்தவன்
முன்
வாழ விரும்புகிறேன்
வாழவிடுங்கள்…..

அறிஞர்
05-06-2008, 09:44 PM
என் மனதை கொய்தவன்
முன்
வாழ விரும்புகிறேன்
வாழவிடுங்கள்…..
நம்பிக்கை தான் வாழ்க்கை...
இந்த நம்பிக்கையே...
வெற்றியை கொண்டு வரும்.....

அருமை அன்பரே..

நம்பிகோபாலன்
06-06-2008, 05:16 AM
அறிஞர் அவர்களுக்கு என் நன்றிகள்

kavitha
06-06-2008, 06:35 AM
பெண்ணியக்கவிதைகள் எவ்வளவு தூரம் எடுபடும் என்பது ஏழையின் பேச்சு போல் தான். அம்பலத்தில் ஏறுவது சிரமம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. முன்னோர் மொழி.

இன்னொரு கண்ணகி, இன்னொரு மாதவி - அதே கோவலன்.

இந்த முக்கோணம் நாற்கோணம் ஆனால்...?

சதிலீலாவதி - புதியபடத்தில் (பழைய கமல் படம் தானுங்கோ) இத்தகைய நாற்கோண கதை காட்டப்பட்டிருக்கும். மாதவிக்காக - ஒரு இராமன் கிடைத்திருப்பான்.

கண்ணகிக்காக இன்னொரு கண்ணன் / இன்னொரு கோவலன்.....
அவை ஒத்துக்கொள்ளுமா? இலக்கியப்புனிதம் காக்கப்படுமா?

மரபுகள் மீறினால் அது புதுக்கவிதை.
கற்புக்கரசிகள் - கற்புக்கரசர்களர்களுக்கு வாழ்க்கைப்பட்டால்
புதுக்கவிதைகளும் இதிகாசமாகலாம்.

உங்கள் கவிதையைப்படித்தவுடன் இந்தக்கவிதை தோன்றியது


கடற்கரையில் ஒரு இடம் விட்டு வையுங்கள்
கற்புக்கரசர்கள் எப்போதாவது தோன்றாலாம்
கையில் சிலம்பில்லாமல்

நம்பிகோபாலன்
06-06-2008, 09:03 AM
நன்றி கவி.எங்கெ ரொம்ப நாளா உங்க பின்னூட்டம் இல்லையேனு வருத்தப்பட்டேன்...நன்றி சகோதரி.

ஆதவா
06-06-2008, 09:52 AM
நம்பி,

காதல் ஏற்காமை, சிந்தனையின்மை, முடிவு மரணத்தில்... கோழைத்தனமான முடிவை மாற்றிக் கொள்ளும் மனப்பாங்கு.. நம்பி கோபாலன் ! உங்கள் கவிதையின் ஆரம்பம் வெகு ஜோர்.. முடிவு எதிர்பார்த்த பழைய முடிவு.

வில்லொடித்தும் - என்று இருந்திருக்கலாம்.

கண்ணகியாக நானிருப்பேன் என்று - என்பது வந்திருக்கலாம்.

மனதைக் கொய்தவன் காதலனாகிறான், இங்கே காயப்படுத்தியவன் என்று சொல்லியிருக்கலாம்..




கடற்கரையில் ஒரு இடம் விட்டு வையுங்கள்[/B]
கற்புக்கரசர்கள் எப்போதாவது தோன்றாலாம்
கையில் சிலம்பில்லாமல்

கற்புக்கரசர்கள் இன்றும் இருக்கிறார்கள்.. கற்பில்லாத இந்த உலகில்..

திடீரென்று தோன்றிய இக்கவிதையின் தரம் கண்டு வியக்கிறேன்.. வாழ்த்துகள்.