PDA

View Full Version : உன்(ள்) பார்வை வேண்டும்சிவா.ஜி
04-06-2008, 08:15 AM
திட்டிப்பேசுவதும்
எட்டிப்போவதுமாய்
எப்போதுமேனிருக்கிறாய் பெண்ணே?


அகலப்பார்வை விடுத்து ஒரு
ஆழப்பார்வை என்னைப் பார்
மாயாஜாலமும் மாய்மாலமும்
இல்லாத ஒரு
சாதாரணக் காதலனின்
ஆதாரம் உனக்கு கிட்டும்!


வானத்தை வில்லாய்
வளைக்க என்னால் முடியாது
மணலைக் கயிறாய்
திரிக்கும் வித்தை தெரியாது
பாதையின் முள் குத்தாமலிருக்க
பாதம் தாங்க வரமாட்டேன்
வெறும் தாளில் காதல் சொல்ல
என் ரத்தம் தரமாட்டேன்

ஆனால்......................

உத்திரவாதமாய்
ஒன்றை சொல்வேன்
பத்திரமாய் இருப்பாய் என்னோடு
என்றும் நீ நீயாக!
எனக்கும் நம் பிள்ளைக்கும்
ஒரே தாயாக!

பூமகள்
04-06-2008, 08:26 AM
அகலப்பார்வை விடுத்து ஒரு
ஆழப்பார்வை என்னைப் பார்
மாயாஜாலமும் மாய்மாலமும்
இல்லாத ஒரு
சாதாரணக் காதலனின்
ஆதாரம் உனக்கு கிட்டும்!
இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்..!! வெறும் காகிதத்தில் தன் ரத்தத்தைக் கீறி.. அன்பு சொல்லும் ரகளைக் காதல்களுக்கு மத்தியில்.. உண்மையும் நேர்மையும் சொல்லும் காதல்.. இது... வழி காட்டியென்றும் கொள்ளலாம்..!!(:D:D)
அண்ணியின் மீதுள்ள காதல் தெளிவாக விளங்குகிறது.....;)

பாராட்டுகள் சிவா அண்ணா..!! :)

ஆதி
04-06-2008, 08:30 AM
உத்திரவாதமாய்
ஒன்றை சொல்வேன்
பத்திரமாய் இருப்பாய் என்னோடு
என்றும் நீ நீயாக!
ரொம்ப நாளைக்கு பிறகு உங்கள் கவிதையை சுவைக்க பரிமாறியதில் அளவில்லா ஆனந்தம் சிவா அண்ணா..

நீ நீயாக இருப்பாய் என்னும் வரிகள் அழகு..

பெண் சுதந்திரம் என்பதை மிக தெளிவாய் பறைசாற்றுகிறது..

ஒவ்வொரு கணவனும் மனதில் கொள்ள வேண்டியது..

பாராட்டுக்கள் அண்ணா..

சிவா.ஜி
04-06-2008, 08:46 AM
உடன் பின்னூட்டத்தைப் பார்த்து ஆச்சர்யத்துடன் ஆனந்தம் பூ. ரொம்ப நன்றிம்மா.
காதலுக்கு முன்னால் அதை செய்வேன் இதை செய்வேன் என்று சொல்லிவிட்டு, கல்யாணத்துக்குப் பிறகு எதையும் செய்யாத பொய்த்தனமில்லாக் காதல்தான் வெற்றியடைந்த காதல் என்பது என் கருத்து.

சிவா.ஜி
04-06-2008, 08:49 AM
நீ நீயாக இருப்பாய் என்னும் வரிகள் அழகு..

பெண் சுதந்திரம் என்பதை மிக தெளிவாய் பறைசாற்றுகிறது..அவளை அவளாக வைத்திருப்பதற்கான உத்திரவாதம் மிக முக்கியம்தானே ஆதி? அதைத் தரும் காதல் உயர்ந்ததல்லவா?
தனியாக அவளுக்கு சுதந்திரம் என்று எதையும் தரவேண்டியதில்லை. அவளை அவளுடைய சுதந்திரத்துடன் வாழ விட்டாலே போதும்.

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஆதி.

மதி
04-06-2008, 09:04 AM
நல்லதொரு கவிதை சிவாண்ணா..

தம் இணைக்கும் ஒரு மனமுண்டு தானாய் வாழ ஆசையுண்டு என்பது புரிந்தாலே போதும்.. வாழ்வு சிறக்கும்..

சிவா.ஜி
04-06-2008, 09:10 AM
தம் இணைக்கும் ஒரு மனமுண்டு தானாய் வாழ ஆசையுண்டு என்பது புரிந்தாலே போதும்.. வாழ்வு சிறக்கும்..

சத்தியமான வார்த்தைகள் மதி. அப்படியிருந்துவிட்டால் இல்வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

நன்றி மதி.

ஆதி
04-06-2008, 09:39 AM
அவளை அவளாக வைத்திருப்பதற்கான உத்திரவாதம் மிக முக்கியம்தானே ஆதி? அதைத் தரும் காதல் உயர்ந்ததல்லவா?


உண்மைதானுங்க அண்ணா, இதைத்தான் நான் பெண் சுதந்திரம் என்று சொல்ல முயன்றேன்..

சிவா.ஜி
04-06-2008, 03:53 PM
உண்மைதானுங்க அண்ணா, இதைத்தான் நான் பெண் சுதந்திரம் என்று சொல்ல முயன்றேன்..
நீ சொன்னதைத்தான் ஆதி நானும் வழிமொழிந்திருக்கிறேன். உண்மையிலேயே பெண்சுதந்திரமென்று எதுவுமில்லை. அவர்களை அவர்களாகவே வாழவிட்டாலே போதும். அதைத்தான் சில மிருகங்கள் செய்வதில்லை. என்ன செய்வது ஆதி...அப்படியும் சிலர்.அப்படிப்பட்டவர்களிடம் வாழும் பெண்கள்தான் துணிச்சலுடன் இருக்கவேண்டும். அதற்கு அவர்களுக்குத் தேவை நல்ல கல்வியும் குடும்பத்தாரின் அன்பான ஆதரவும்தான்.

செல்வா
04-06-2008, 03:58 PM
எனக்கும் ரொம்ப நாளாச்சே கவிதை எழுதி எழுதணும் எழுதணும்னு ஆசையா யிருந்துச்சு.. ஆனா இந்த புத்திக்கி... ஒண்ணுமே.... தோணல..
வந்து பாத்தா... அண்ணன் வந்தகையோட அமர்க்களமா ஆரம்பிச்சுருக்காரு..
பேசாம சிவ னோட தருமியா மாறிட வேண்டியது தான். தம்பிக்காக அண்ணன் இது கூட பண்ணமாட்டீங்களா?

எப்படின்னா இப்படி..... உங்க கொழுந்திகிட்ட நான் சொல்ல நெனச்ச வார்த்தையெல்லாம் நீங்க ஏற்கெனவே அண்ணி கிட்ட சொல்லிட்டீங்க போலருக்கு :)

சிவா.ஜி
04-06-2008, 04:39 PM
பேசாம சிவ னோட தருமியா மாறிட வேண்டியது தான். தம்பிக்காக அண்ணன் இது கூட பண்ணமாட்டீங்களா?

எப்படின்னா இப்படி..... உங்க கொழுந்திகிட்ட நான் சொல்ல நெனச்ச வார்த்தையெல்லாம் நீங்க ஏற்கெனவே அண்ணி கிட்ட சொல்லிட்டீங்க போலருக்கு :)
ஆஹா தம்பி தருமியானா அண்ணன் உதவி செய்யாமயா போயிடுவேன்.(செல்வா இது உங்களுக்கே அடுக்குமா? இலக்கியச் செல்வரே இம்புட்டு அடக்கம் வோணாம்)

நாமெல்லாம் செய்யமுடிஞ்சதைத்தானே சொல்லுவோம்...ஆஹா ஓஹோன்னு சொல்லி பில்டப் பண்ணிட்டு அப்புறம் மாட்டிக்கிட்டு முழிக்கிற கதைதான் நம்மக்கிட்ட கிடையாதே. ஹி...ஹி...

அமரன்
05-06-2008, 07:15 AM
ரீல் ஹீரோவாக இருக்க இயலாது.. ..
ரியல் ஹீரோவாக இருக்க இயலும் வா...
மதிப்புமிக்க அழைப்பு.. சிவாக்கு ஷொட்டு.:icon_b:

ஹீரோவாக இருப்பதில் ஏகப்பட்ட சிக்கல். ஹீரோவாக வாழ்ந்து பழகிட்டால், சடாரெனக் கீழிறங்குவது மெத்தக்கடினம். இதுவே குணசித்திர துணை நடிகனெனில், எல்லாவற்றுக்கும் ஒத்துப்போகும். சினிமாவில் கலக்கும் பிரகாஷ்ராஜ் மாதிரி.. (அப்பப்ப வில்லத்தனம் இருக்கும்ல)

நானாக நானும் நீயாக நீயும் வாழ்வதை விட நாமாக நாம் வாழ்வது இல்லறத்துக்கு சிறப்பு என்பது என்கருத்து.

ஏன்னா, காதலில் நாமாக நாம் வாழ்ந்த ஜோடிகள் கல்யாணத்தில் நானாக நானும் நீயாக நீயும் என தனி ஆவர்த்தனம் வாசிக்க முயன்ற தப்புத்தாளத்தில் வாழ்க்கை ததிங்கிணதொம் ஆடுவதை கண்டிருக்கிறேன்.

இருபக்கமும்ம் சரிவிகிதத்தில் நாமாக நாம் வாழ ஒத்துழைத்தால் நல்லது..

மதுரைக்குடும்பமும் சிதம்பரகுடும்பமும் நம்மில் இல்லையா என்ன????

கவிதையும், அதன் வழியில் வந்த கருத்துகளும் நன்று.
வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..

நினைத்ததும் எழுதும் வல்லமை மிக்க சிவாவுக்கு சிறப்புப் பாராட்டுக்களும் வாழ்த்துகளும். வெற்றி உங்கள் உடமை.

RRaja
05-06-2008, 07:29 AM
மாயாஜாலமும் மாய்மாலமும்
இல்லாத ஒரு
சாதாரணக் காதலனின்....
நீங்கள் சாதாரணக் காதலர் அல்லர் என்பதற்கு


எனக்கும் நம் பிள்ளைக்கும்
ஒரே தாயாக!
இந்த ஒன்று போதுமே...

சிறந்த எதார்த்த கவிதை.

சிவா.ஜி
05-06-2008, 07:42 AM
ரீல் ஹீரோவாக இருக்க இயலாது.. ..
ரியல் ஹீரோவாக இருக்க இயலும் வா...
மதிப்புமிக்க அழைப்பு..


நானாக நானும் நீயாக நீயும் வாழ்வதை விட நாமாக நாம் வாழ்வது இல்லறத்துக்கு சிறப்பு என்பது என்கருத்து.


இருபக்கமும்ம் சரிவிகிதத்தில் நாமாக நாம் வாழ ஒத்துழைத்தால் நல்லது..


நல்ல கருத்து அமரன். நான்+நீ என்பது நாமாக மாறுவதுதான் நல்ல இல்லறமென்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயம் தன் சுயத்தை தக்க வைத்துக்கொள்வதால் பாதிப்பு எதுவுமில்லை நன்மையே என்பது என் கருத்து.

இது, இல்லாளின் சுயம் அழித்து தன் விருப்பத்தை அவள் மீது திணிப்பவருக்காகவே.

நன்றி அமரன்.

சிவா.ஜி
05-06-2008, 07:45 AM
நீங்கள் சாதாரணக் காதலர் அல்லர் என்பதற்கு


இந்த ஒன்று போதுமே...

சிறந்த எதார்த்த கவிதை.

மிக்க நன்றி RRaja. நல்ல காதலன் நல்ல கணவனாகவும் இருக்க முடியும். பொய்யாலான அஸ்திவாரத்தில் மேலெழும்பும் இல்லறக்கட்டிடம் உறுதியாக இருக்காது.

மன்மதன்
06-06-2008, 12:45 PM
உத்திரவாதமாய்
ஒன்றை சொல்வேன்
பத்திரமாய் இருப்பாய் என்னோடு
என்றும் நீ நீயாக!
எனக்கும் நம் பிள்ளைக்கும்
ஒரே தாயாக!

வேறென்ன வேண்டும் சிவா.. அவள் கண்டிப்பாக அதிர்ஷ்டசாலிதான்..

நேசம்
06-06-2008, 01:00 PM
எதார்ததை பிரதிபலிப்பதாக உள்ளது.காதலில் உண்மை இருக்கும் போது கடைசி வரை இனிமையாக இருக்கும்.நி நியாய் இருப்பாய் என்றும் சொல்லும் போது காதலியை மேன்மை படுத்த முடியாது. நல்ல கவிதை.

சிவா.ஜி
06-06-2008, 04:41 PM
நன்றி மன்மதன். ஒரே வரியில் மிகச் சரியான கருத்தை சொல்லிவிட்டீர்கள். அருமை.

சிவா.ஜி
06-06-2008, 04:44 PM
எதார்ததை பிரதிபலிப்பதாக உள்ளது.காதலில் உண்மை இருக்கும் போது கடைசி வரை இனிமையாக இருக்கும்.நி நியாய் இருப்பாய் என்றும் சொல்லும் போது காதலியை மேன்மை படுத்த முடியாது. நல்ல கவிதை.
புரியவில்லை தம்பி. அவளை அவளாக வைத்திருப்பதில் அப்படியென்ன தவறு இருக்கிறது? ஏன் அவளை மேன்மை படுத்த முடியாது? அவளின் தனித்தன்மைக்கு பாதகம் வராமல் நல்ல இல்லறம் நடத்த முடியாதா?

நேசம்
10-06-2008, 02:28 PM
ஏன் அவளை மேன்மை படுத்த முடியாது? அவளின் தனித்தன்மைக்கு பாதகம் வராமல் நல்ல இல்லறம் நடத்த முடியாதா?

மன்னிக்கவும் அண்ணா. அவசரத்தில் மேன்மை படுத்த முடியும் என்று மனதில் தோன்றியதை டைப் செய்யும் போது முடியாது என்று கொடுத்து விட்டேன்.
நிங்கள் கூறுவது போல் தனித்தன்மைக்கு பாதகம் வராமல் இனிய இல்லறம் ந்டத்த முடியும்.அதைதான் பார்த்து கொன்டு இருக்கிறோமே அண்ணா

ஷீ-நிசி
10-06-2008, 03:57 PM
வழக்கமான ஒரு காதலனாய் நான் இருக்கமாட்டேன்
நிச்சயம் உனக்கு
பழக்கமான தோழனாய் உன் வாழ்வில் இருப்பேன்..

அந்த கடைசி வரிகள் அழகு...

எனக்கும் நம் பிள்ளைக்கும் தாயாக...

வாழ்த்துக்கள் சிவா. ஜி!

சிவா.ஜி
10-06-2008, 04:57 PM
நன்றி ஷீ-நிசி. உங்களின் அந்த இரண்டு வரி நான் சொல்ல வந்த அனைத்தையும் சொல்லிவிட்டதே. அசத்தல்.

நன்றி ஷீ.

crisho
22-06-2008, 04:00 PM
இன்றுதான் இந்த கவி படித்தேன்...

அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்!! பாராட்டுக்கள்

(பத்திரமாய் இருப்பாய் என்னோடு
என்றும் நீ நீயாக!)

சுதந்திரம் என்று கூறி புதியதாய் கொடுக்க ஒன்றும் இல்லை மண வாழ்வில்... அவளை அவளாக இருக்க விட்டாலே போதும்!

சிவா.ஜி
22-06-2008, 04:29 PM
மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். சுதந்திரம் என்று தனியாக தேவையில்லை. அவளை அவளாகவே இருக்கவிட்டால் போதும்.

நன்றி கிஷோர்.

செழியன்
22-06-2008, 09:51 PM
உத்திரவாதமாய்
ஒன்றை சொல்வேன்
பத்திரமாய் இருப்பாய் என்னோடு
என்றும் நீ நீயாக!
எனக்கும் நம் பிள்ளைக்கும்
ஒரே தாயாக!

எல்லாரும் முன்னாடியே சொல்லி விட்டார்கள் .இருந்தாலும் இந்த ஒரு பராவே போதும் ,மிகுதி ஏதும் தேவையில்லை என்பது போல் எண்ண வைத்துவிட்டீர்கள் அண்ணா. நீங்கள் உங்கள் இணைக்கு கொடுக்கும் மரியாதை, சுகந்திரம் ஆகியவற்றை சொல்லி விட்டீர்கள். "எனக்கும் நம் பிள்ளைக்கும் தாயாக" மீண்டும் மீண்டும் இரசித்த வரிகள்

இளசு
22-06-2008, 10:00 PM
விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்கள் என்னவோ சன்னல் கம்பிகளைத்தான்......

மு.மேத்தாவின் வரிகள் இவை..

ஊடகம், நிஜத்தில் சிலர் -அளிக்கும் மிகைப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புகள்..
ஆனால் நிதர்சனம்..?

தவழும் மனமே..
பறக்கும் ஆசை இருக்கட்டும்..
அதற்குமுன்...
ஊன்றி நிற்கும் செயல் நிகழட்டும்!

வாழ்த்துகள் சிவா!

சிவா.ஜி
23-06-2008, 04:11 AM
நீங்கள் உங்கள் இணைக்கு கொடுக்கும் மரியாதை, சுகந்திரம் ஆகியவற்றை சொல்லி விட்டீர்கள். "எனக்கும் நம் பிள்ளைக்கும் தாயாக" மீண்டும் மீண்டும் இரசித்த வரிகள்
வரிகளை ரசித்து உற்சாகமான பின்னூட்டமிட்ட அன்புத் தம்பி செழியனுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். ரசிக்கும் வரிகளிலேயே ரசிப்பவரின் மனம் தெரிகிறது. வாழ்த்துகள் செழியன்.

(உங்கள் கையெழுத்து வரிகள் பிரமாதம்)

சிவா.ஜி
23-06-2008, 04:19 AM
ஊடகம், நிஜத்தில் சிலர் -அளிக்கும் மிகைப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புகள்..
ஆனால் நிதர்சனம்..?


அதீத எதிர்பார்ப்புகள் ஏமாற்றமளிக்கலாம், ஆனால் நிதர்சனம் என்றைக்கும் நிலையானது. நிஜத்தில் நிஜமாக இருத்தலே நல்லது.

அழகான வரிகளின் எடுத்துக்காட்டுடன் நிஜமுரைத்த பின்னூட்டம். நன்றி இளசு.

ஆதவா
23-06-2008, 05:18 AM
அண்ணா,, வரவர ஆதவனை விட சின்னப் பையனா(ரா?) போய்ட்டீங்க...

வாழ்த்துகள்... (கவிதைக்கு கற்பனையே எல்லை. அது தெரிகிறது.)

பார்வைகள் இரண்டு என்று சொல்கிறீர்கள்.. அகலமாய் ஒன்று ஆழமாய் மற்றொன்று. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

பார்வை அகலவிரித்தால் புறம் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். அவன் அழகு, நிறம், வடிவம், பிறகு என்ன கலர் பேண்ட், சர்ட், வாட்ச் (கிரடிட்கார்ட்?), எக்ஸட்ரா எக்ஸட்ரா.. ஆனால் அதுதான் வேண்டுமா? இல்லை..

ஆழப்பார்... அகலப்பார்வை விரித்து என் மார்ப்பைப் பார்க்காதே!, அதனுள் ஒளிந்திருக்கும் உனக்கான என் காதலைப் பார். பாருங்கள்... இரண்டு வரிகளுள் இருண்ட காதலும் அடிவாங்குகிறது.

மாயாஜாலம், மாய்மாலம்... இரண்டும் ஒரே அர்த்தம். அதனால் ரீபீடட் வார்த்தை... கட்.

மாய்மாலமில்லாத சாதாரணக் காதலன்,.. ஆதாரம் கிட்டும். எப்படி?

அகலப் பார்க்கும்பொழுது அவனின் புறத்திறமைகள் தெரியலாம். ஆழப்பார்க்கும்போது அவனின் காதல் வித்தைகள் தவிர்க்கப்பட்டு, ஒரு சாதாரணக் காதலனின் இதயம் மட்டுமே தெரியும்.. முதல் வரியின் தாக்கம் இறுதி வரை உள்ளது...

அதன் தொடர்ச்சி.............
வானத்தை வில்லாய்.....
..........
.........
என் ரத்தம் தரமாட்டேன்.. வரை.

சிவா அண்ணா.. வானத்தை வில்லாய் வளைப்பது, முதல் பாதத்தைத் தாங்குவது வரையிலும் பழைய கற்பனைகளே@@

இறுதி வரிகளில் காதலின் நேர்மை காட்டப்படுகிறது.

நீ நீயாக என்ற வரிகளைக் கவனிக்கலாம்... அவள் என்றுமே கணவனுக்காக மாறவேண்டியதில்லை என்பதை அழுத்திச் சொல்லி, பிறகு ஒரு தாயாக மாறலாம் (எண்ணத்தால் அல்ல) என்று உத்திரவாதம் தருகிறார்.. ஆக, ஒரு அடிமைத்தனத்தை இங்கே சுட்டி, அது போகும் வழி தரும் உத்திரவாதத்தைத் தருகீறார்....

ஆக மொத்தம்... கவிதையின் அழகு.. அது சங்கிலியாய்ப் பிடித்திருக்கும் அதன் கருவினால்தான்..

வாழ்த்துகள் அண்ணலே!

சிவா.ஜி
17-07-2008, 04:46 AM
இத்தனை அழகான பின்னூட்டத்தை எப்படித் தவறவிட்டேன். (இளசு இதற்கும் உங்கள் சார்பில் ஒரு குட்டு எனக்காக ஒதுக்கி வையுங்கள்)

அகலப் பார்வைக்கும், ஆழப்பார்வைக்கும் மிகக் கச்சிதமான உதாரணங்களோடு நீங்கள் அளித்திருக்கும் விளக்கம் அருமை.

மாயாஜாலமும், மாய்மாலமும் ஒரே அர்த்தத்தைக் கொடுப்பதில்லை ஆதவா. நிஜத்தில் இல்லாததை இருப்பதாய்க் காட்டி அதிசயிக்க வைப்பது மாயாஜாலம். மாய்மாலம்...உள்ளொன்றை வைத்து புறமொன்று பேசி நடிப்பது மாய்மாலம்.

மேலும் வானத்தை வில்லாய் வளைப்பது...இத்தியாதி, இத்தியாதிகள் பழையவைதான்...அதனால்தான் அவற்றைச் சொன்னேன். அப்படி பழையவைகள் ஏதுமில்லாமல் நான் புதியவனாக இருப்பேன் என்று சொல்லவே அவற்றை தேர்ந்தெடுத்தேன்.

ஆதவாவின் விமர்சனம் கவிஞனைப் புடம் போடும் என்பதற்கு மீண்டுமொருமுறை ஆதாரம் காட்டியுள்ள அழகான விமர்சனத்திற்கு நன்றி.