PDA

View Full Version : வணக்கம்



நம்பிகோபாலன்
04-06-2008, 05:53 AM
நீ முதன்முதலில்
சிரிப்போடு
உன்னை அறிமுக
படுத்திகொண்டபோதும்
காதலில் நாம்
பிரியும் பொழுது
விழியோர நீரில்
உதடுகள் உச்சரித்த
கடைசி வார்த்தை
"வணக்கம்" தான்
எனது முதல் கவிதையாகி
போனது என் காதலியே

இளசு
11-06-2008, 10:03 PM
ஒரே சொல்...
இரு வேறு காலங்களில்
இரு துருவ உணர்வு நிலை!

சூழல்களே சொற்களின், பார்வைகளின்,செயல்களின்
வீச்சை முழுமையாக்குகின்றன இல்லையா?

வாழ்த்துகள் நம்பிகோபாலன்..

சுகந்தப்ரீதன்
14-06-2008, 12:40 PM
வணக்கம் தெரிவித்து வரவேற்ப்பதும் வணக்கம் கூறி வழியனுப்புவதும் வாழ்க்கையில் அனைத்து விசயங்களுக்கும் பொருந்தத்தான் செய்கிறது..!!

வாழ்த்துக்கள்..கோபாலா..!!