PDA

View Full Version : நீ சொன்ன வாழ்க்கை இதுதானா



கனவும் மனிதன்
03-06-2008, 08:15 PM
நீ சொன்ன வாழ்க்கை இதுதானா?
ஓர் இமைப்பொழுதில் என்னுலகம் உடைந்து போனது
எங்கு சென்றாய்?
மனசு விற்கும் ஊரில் என்னை விட்டு
வரண்டு போன மனிதர்களில்
ஈரம் தேட விட்டு எங்கு சென்றாய்?

தேவதூதுக்களையாவது அனுப்புவாயா?
அண்ணாரக்கூட முடியவில்லை.
நெருப்புக்கோளங்கள் மழையாக பொழிய...
நிச்சயமாக அவை நீ அனுப்பியதில்லை
உனக்கு அழிக்க தெரியாதே..

ஆனாலும் நீ வரவில்லை..
நீ சொன்ன வழ்க்கை இதுதானா?

உன்னிடம் கதைக்க கனவுகள் கூட வருவதில்லை.
கனவு வர தூங்க வேண்டுமாம்.

என்ன வேலை உனக்கு?
குருதியில் தோய்த்த நரபலிகள்,
ஒப்பாரிகளாய், கண்ணீராய் எத்தனை அழைப்புகள்...

ஏன் வரவில்லை?
உன்னால் முடியாது போலுள்ளது.

நான் வருகின்றேன்
உன்னிடம் நான் வருகின்றேன்...
என்னை விதைத்து
என் சமூகத்திற்காய் பரிந்து பேச இதோ நான் வருகின்றேன்.

kavitha
06-06-2008, 06:18 AM
கனவும் மனிதன் - உங்கள் பெயரும் கவிதையைப்போலவே வித்தியாசமாக இருக்கிறது...பொருள்விளங்க முடியாததாய்.


நெருப்புக்கோளங்கள் மழையாக பொழிய...
.......

உன்னிடம் கதைக்க...
....

என் சமூகத்திற்காய் பரிந்து பேச இதோ நான் வருகின்றேன்

இலங்கையில் நடக்கும் துயரங்கள் குறித்த கவிதையா?

shibly591
06-06-2008, 06:22 AM
கவிதை நன்றாக இருக்கிறது..இன்னும் இதுபோன்ற நிறைய நல்ல படைப்புக்களை தொடர்ந்து தாருங்கள்.வாழ்த்துக்கள்....

சுகந்தப்ரீதன்
16-06-2008, 12:11 PM
யானைக்கு தும்பிக்கை..
மனிதனுக்கு நம்பிக்கை..!!


அண்ணாரக்கூட முடியவில்லை..
வழக்குமொழியை வார்த்தையாக்கி கவிதையில் இட்டது வியக்கவைக்கிறது நண்பரே.. எங்களூரிலும் இந்தசொல் வழக்கத்திலுள்ளது..!!