PDA

View Full Version : ஜீவியும் காதலும்.... பகுதி 7 (இறுதிப்பாகம்)



அன்புரசிகன்
03-06-2008, 02:15 PM
(இந்த கதையில் வரும் சம்பவங்கள் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே)

பகுதி 1

ஜீவீந்திரன் எனும் ஜிவியும் காதலும். தலைப்பே ஒரு கரையால் இடிக்கிறது. காரணம் காதல் என்பதை வார்த்தையாலும் திரைப்படத்தாலும் மட்டுமே பார்த்து அறிந்தவன். இந்த லட்சணத்தில் ஜிவியும் என் காதலும் என்ற தலைப்பு பொருந்தவே பொருதாது. ஆனாலும் இந்த காதல் அவனையும் வாட்டியிருக்கிறது. நம்புகிறீர்களா.... இதோ நிரூபிக்கிறேன். x=y=z ஆகவே x=z என்கிறீர்களல்லவா.... அவனது நண்பன் காதலால் அவன் அவஸ்த்தைப்பட்டிருக்கிறான். அவனால் ஜிவி அவஸ்த்தைப்பட்டிருக்கிறான். :D ஆகவே ஜிவியும் காதலால் அவஸ்த்தைப்பட்டிருக்கிறான். (எப்படி என் கணித முளை.... அட ச்சீ... தூ........ மூன்றாம் தரப்பாக ஜிவி இருந்திருக்கிறான். அதனால் வந்த அவஸ்த்தைக்கு தான் இத்தனை விளாவாரி... சரி இனி அந்த ஜிவி எனும் ஜீவீந்திரனின் சுயசரிதையை பார்ப்போம்.


கல்லூரிக்காலங்களில் காதல் வரும் என திரைப்படம் பார்த்து அறிந்தவன் நான். அதை கண்கூடும் கண்டிருக்கிறேன். நம் ஊரில் ஒரே வகுப்பறையில் இருந்தாலும், மாணவிகளின் பெயரை கூட ஆசிரியர் வரவுகளை பதியும் தருணத்தில், அவரவர் பெயரை அழைக்கும் போது பிரசன்ட் சேர் என்ற வார்த்தைகள் வருவதை வைத்து தான் பெண்களின் பெயர்களை அறிவோம். அத்துடன் சரி. பேச்சு வார்த்தைகளுக்கு இடமே இல்லை... அப்புறம் உயர் தரம் வந்ததும் சற்றே நெருக்கம் ஏற்படும் வழமை. ஆனால் நமக்கு பழக்கதோசமோ என்னமோ விரிசல் அதிகமாகவே இருக்கும். நமக்கு வாய்க்கும் நண்பர்களும் அப்படிப்பட்டவர்கள். (நாம் ஆறுபேர் இருக்கிறோம்.) இற்றை வரைக்கும். ஆனால் ஒருவனை தவிர.. அந்த ஒருவனும் எப்படி மாறினானோ தெரியாது....

அவனிடம் இருக்கும் கலைநயம் தான் அந்த காதலுக்கும் காரணமாகியிருக்கும் என்பது தற்போதய எனது கணிப்பீடு... முதலில் அவனும் நம்மைப்போலத்தான். போக்கிரியி்ல் விஜய் கூறியது போல் இந்த காதலென்றாலே எரிச்சல் எரிச்சலா கிடக்கு.... என்பது தான்... டேய் அவளப்பற்றி இப்பிடி போசாதடா என்று நான் சொன்னாலும் விடமாட்டான். என்னிலும் மோசமாக திட்டுவான்.... அவளுடன் சேர்ந்து பாட வேலை ஒன்று செய்யும் காலத்தில் என்னையும் அவனையும் இணைத்து அவனே பேசுவான். தன்னுடன் மற்ற வாலுகளையும் சேர்த்துவிடுவான்.... மாலைகளில் அந்த நண்பர்கள் ஒன்றாக ஓரிடத்தில் சந்திப்பது வழமை. ஒன்றாக வந்ததும் ஒருவனை வைத்து மற்றயவர்கள் அனைவரும் கிண்டல் கணைகளை செலுத்துவார்கள். அந்த ஒருவனாக ஒருதடவை நான் இருந்த போது அவளை வைத்து தான் பேசினார்கள். வந்த கணைகளில் பெரும்பாலான கணைகளில் அவனிடம் இருந்துதான்.

இப்படி இருந்தவனிடம் பின் ஒரு போக்கு மாறியதை அவதானிக்க முடிந்தது. திடீர் என்று செக் ரீ-ஷேர்ட் கள் முழுக்கை ஷேர்ட்களாக மாறின... டெனிம் முழுநீள காற்சட்டை அலுவலகத்திற்கு அணியும் ஹொட்டன் முழுநீள கால்ச்சட்டைகளாக மாறின.... இவ்வாறு பலவிடையங்கள் அவதானிக்க முடிந்தது. விரிவுரை குறிப்புகளின் மூலைகளில் காதல் கவிதைகள் தோன்றின. அத்துடன் ஒரு பெண்ணின் கண்களும் இருக்கும்.... நம்முடன் சேர்ந்துதான் இருப்பான். ஆனால் முன்பு போல் கலகலப்பு இல்லை. மிகவும் அமைதியாக மாறினான்... காரணம் காதல் என்றும் அந்த-பெண் யார் என்றும் புரிந்தது. ஆனால் ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை. இப்படியே சில மாதங்கள் கடந்தன... நண்பர்கள் அனைவரும் தற்காலிகமாக சில பயிற்சி வேலைத்திட்டம் காரணமாக சற்று தூரப்பிரதேசங்களுக்கு செல்வவேண்டிய கட்டாயம். சந்திப்பது கடினமானது. அலைபேசிகள் மட்டும் தான் உதவின... வார இறுதிகளில் சந்திப்போம். அவ்வளவு தான்.

மீண்டும் சில காலங்களுக்குப்பின்னர் அந்த ஆறுபேர் தவிர்ந்த இன்னொரு கல்லூரி நண்பன் ஏதோ ஒரு பேச்சு வரும் போது சொன்னான். டேய் அவன் அவளை லவ் பண்றானாம்டா.... என்றான். உனக்கு எப்பிடி தெரியும் என்றேன். அவன்தான் சொன்னவன் என்றான். எனக்கு தூக்கிவாரி போட்டது.... அட நாமும் ஏதோ பெரிய நட்பிற்கு இலக்கணமாக இருக்கிறோம் என்ற இறுமாப்புடன் இதுவரைக்கும் இருந்தேன். அப்படியே உடைந்தது. அட அவனுக்கும் காதல் வந்துவிட்டது என்ற உண்மை அந்தக்கணத்தில் உறைத்தது. ஏன்டா ஒன்டா திரியிறியள். இதுகூட தெரியாதா என்றான். அவன் கேள்வியில் நியாயம் தெரிந்தது. அமைதி தான் என்னிடம் இருந்த பதில். புன்முறுகலுடன் கதையை மாற்றினேன்.

என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அன்று முழுவதும் ஏதோ ஒருமாதிரி இருந்தது. அட உனக்கேன் போர்த்தேங்காய் என்று உள்மனம் சொன்னது. இருந்தாலும் ... முடியல... மாலை அந்த அறுவரில் ஒரே கம்பனியில் பயிற்றி வேலைத்திட்டம் செய்யும் மற்ற நண்பன் வந்ததும் என்ன பெரிய கப்பல் கவிந்திட்டுதோ என்றான். பதில் சொல்லவில்லை. பின் குளித்துவிட்டு சாப்பிட அமர்ந்தோம். அப்போது மீண்டும் கேட்டான். உனக்கு இப்ப என்னடா பிரச்சனை என்றான். விளாவாரியாக சொன்னேன். பின்னர் அமைதி காத்தான். நீண்டநேரத்திற்கு பின் சரி இப்ப என்ன செய்யலாம் என்றான். நானும் தெரியாது என்றவாறு முகத்தால் சைகை காட்டினேன்....

திடீரென மற்றொரு நண்பன் தூரைப்பிரதேசத்திலிருந்து வந்து சந்தித்தான். அது ஒரு மாலை நேரம்.


(தொடரும்...)

அமரன்
03-06-2008, 07:01 PM
முதலில் வாழ்த்துக்கள் ரசிகா!!

துவக்கம் ரொம்ப நல்லா இருக்கு, எஸ்.ஜே.சூர்யாவின் படம்போல.

கதை நகர்வு, என் பால்யத்திலிருந்து ஒவ்வொரு பருவமாகத் தூவுகிறது. கதை மாந்தர்களுடன் நிஜமாந்தராக நானும், இன்னும் சிலரும்..

ஜீ.சீ.ஈ சாதாரண தரம் வரை எதிரும் புதிருமாக இருந்துவிட்டு, நளமகராசன் இராச்சியம்போன்ற உயர்தரத்தில் புகும் தருணம்... அப்போது ஏற்படும் மாற்றம்.. இன்றுவரை புரியாத புதிர்..

யாரென திட்டமிடாமலே, ஒருவரை ஏகமனதாக தெரிவுசெய்து ஒற்றுமையாக சுவைக்கும் அறுசுவை விருந்துக்கு ஈடாக இதுவரை எதையும் கண்டதில்லை.

உனக்கு ஏன் போர்த்தேங்காய் என்ற வரிகளை தொட்டபோது வேரைக் கேட்காமல் பூக்கிறது பூ.

தொடக்கத்திலிருந்து கட்டிவைக்க வெகுசிலரால் மட்டும் முடிகிறது. அவர்களில் ஒருவராக உங்களை காண்கிறேன். திறமைசாலிகளை உலகம் லேட்டாக கண்டுக்குமாம்.. நீங்களும் இவ்வுலகில்தானே..

எதிர்பார்ப்புடன்,

விகடன்
03-06-2008, 07:56 PM
அடடா...
உங்களுக்கே மறைத்து காதலித்திருக்கிறானே...
ஏன் ரசிகா. உங்களுக்கு தெரிந்தால் நீங்களும் போட்டிக்கு காதிலித்துவிடுவீர்களோ? என்று நினைத்துவிட்டானோ???

பல எதிர்பார்ப்புக்களை ஒருங்கே குவித்து கதையை எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள்.
விரைவில் மிகுதியையும் தொடருங்கள்.

அன்புரசிகன்
04-06-2008, 02:08 AM
முதலில் வாழ்த்துக்கள் ரசிகா!!

துவக்கம் ரொம்ப நல்லா இருக்கு, எஸ்.ஜே.சூர்யாவின் படம்போல.

கதை நகர்வு, என் பால்யத்திலிருந்து ஒவ்வொரு பருவமாகத் தூவுகிறது. கதை மாந்தர்களுடன் நிஜமாந்தராக நானும், இன்னும் சிலரும்..

ஜீ.சீ.ஈ சாதாரண தரம் வரை எதிரும் புதிருமாக இருந்துவிட்டு, நளமகராசன் இராச்சியம்போன்ற உயர்தரத்தில் புகும் தருணம்... அப்போது ஏற்படும் மாற்றம்.. இன்றுவரை புரியாத புதிர்..

யாரென திட்டமிடாமலே, ஒருவரை ஏகமனதாக தெரிவுசெய்து ஒற்றுமையாக சுவைக்கும் அறுசுவை விருந்துக்கு ஈடாக இதுவரை எதையும் கண்டதில்லை.

உனக்கு ஏன் போர்த்தேங்காய் என்ற வரிகளை தொட்டபோது வேரைக் கேட்காமல் பூக்கிறது பூ.

தொடக்கத்திலிருந்து கட்டிவைக்க வெகுசிலரால் மட்டும் முடிகிறது. அவர்களில் ஒருவராக உங்களை காண்கிறேன். திறமைசாலிகளை உலகம் லேட்டாக கண்டுக்குமாம்.. நீங்களும் இவ்வுலகில்தானே..

எதிர்பார்ப்புடன்,

சிறுவயதுபிராயம் கண்முன் வரும் போது அதில் உள்ள ஒரு இனம் புரியாத உணர்வு... வேறெந்த வயதுபிராயத்திலும் வராது.... சிறுபிள்ளைத்தனமாக நாம் செய்யும் செயல்கள்... இப்போது நினைத்தால் இன்னொரு கொமடி டைம் நிகழ்ச்சி செய்யலாம்...

ஓவரா பில்டப் கொடுக்காதீங்க... வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

அன்புரசிகன்
04-06-2008, 02:10 AM
அடடா...
உங்களுக்கே மறைத்து காதலித்திருக்கிறானே...
ஏன் ரசிகா. உங்களுக்கு தெரிந்தால் நீங்களும் போட்டிக்கு காதிலித்துவிடுவீர்களோ? என்று நினைத்துவிட்டானோ???

பல எதிர்பார்ப்புக்களை ஒருங்கே குவித்து கதையை எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள்.
விரைவில் மிகுதியையும் தொடருங்கள்.


அடோ... இது ஒன்றும் உண்மை கதை இல்ல.... ஆள விடுங்கடா சாமி....

தொடருவது தான் எனக்கு எப்போதும் இருக்கும் பிரச்சனை... முன்பு ஒன்றை ஆரம்பித்துவிட்டு நான் பட்ட கஷ்டம். அதனால் தான்... ஓரளவு நேரம் கிடைத்திருக்கிறது. தொடர முயல்கிறேன்...

விகடன்
04-06-2008, 04:43 AM
தன்னிலை முன்னிலை படர்க்கை என்று எல்லாம் வந்ததால் உண்மையாக இருக்குமோ!!! என நினைத்துக்கொண்டேன்.
அதோடு மட்டுமின்றி பின்னூட்டத்தின்போது கதையோடும் நன்றாக ஒன்றியிருந்ததால் அப்படி எழுதிவிட்டேன். :D

மதி
04-06-2008, 07:04 AM
ரசிகரே...
ஆரம்பம் அட்டகாசம்..
சீக்கிரமே தொடருங்க.

செல்வா
04-06-2008, 07:13 AM
நல்லாவே துவங்கியிருக்கீங்க.... நேத்திக்கி வாசிக்கும் போது இருந்தத விட இப்போ பிழைதிருத்தம் செய்யப்பட்டு நேர்த்தியாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்.... இரசிகரே... தொடருங்கள் தொடர்கிறோம்...

பூமகள்
04-06-2008, 12:35 PM
அட்டகாசமான கதை நகர்வு... முதல் முயற்சியா அன்பு அண்ணா??!!

அசத்தறீங்க...!! நிஜமா வாழ்த்துகள்..!!

அப்புறம்.. மீதிக் கதையை எப்போ போடுவீங்க.. படிக்காம விடமாட்டோமில்ல..அத்தனை இண்ட்ரஸ்டா இருக்கு.. பின்னே..அடுத்த வீட்டு கதை கேட்கத்தான் நமக்கு ரொம்ப பிடிக்குமே..(சும்மா சும்மா..!! ;) நான் அப்படியில்லீங்கோ..! :D:D)

கதை நகர்வு.. சுவாரஸ்யமாகவும்.. பால்ய பருவத்தில்.. நடந்த சில நிகழ்வுகளையும் நினைவு கூர்கிறது... அசத்தல் அன்பு அண்ணா... தொடருங்கள். :)

விகடன்
04-06-2008, 02:31 PM
பால்ய பருவத்தில்.. நடந்த

என்னது?
பால்யப் பருவமா???
கேட்டாயா அன்பு இந்தக் கொடுமையை[/COLOR]

அன்புரசிகன்
04-06-2008, 02:43 PM
கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள் பல...

குறைகள் கண்டால் தயங்காது சுட்டிக்காட்டுங்கள்.




என்னது?
பால்யப் பருவமா???
கேட்டாயா அன்பு இந்தக் கொடுமையை

நான் கண்டுக்கிட்டேனா விடு விடு ... கண்டுக்கப்படாது...

அன்புரசிகன்
04-06-2008, 02:48 PM
திடீரென மற்றொரு நண்பன் தூரைப்பிரதேசத்திலிருந்து வந்து சந்தித்தான். அது ஒரு மாலை நேரம். வேலையை முடித்துவிட்டு வந்திருக்கிறான். மீண்டும் அடுத்தநாள் அதிகாலை அவன் புறப்படவிருக்கிறான். அவனது வருகைக்கும் புறப்பாடுக்கும் இடையில் 5 மணிநேரம் தான் இருக்கும். ஏன் இப்படி உடம்பை கெடுக்கிறாய் என்று கேட்டதற்கு உன்னை பார்க்க வரக்கூடாதா என்று கேட்டான். புல்லரித்துவிட்டது.... இரவு என் அறையிலேயே தங்கினான். படுத்திருக்கும் போது கேட்டான். நீ யாரையும் காதலிக்கிறாயா என்று.... எனக்கு ஒருபுறம் சிரிப்பு... இன்னொருபுறம் ஒருவகை எரிச்சலும் கூட... டேய் அப்பிடி என்றால் நான் உனக்கு சொல்லியிருக்க மாட்டேனாடா என்றேன்... இல்லடா நீயும் அவளுடன் பழகுறாய். அதுதான் என்றான். யாருடன் என்றதும் அவன் அவளை சொல்லவே எனக்கு ஒரு சந்தேகம்; ஏன்டா கேட்கிறாய் என்றேன். இல்லடா அவனுக்கும் அவள் மேல ஒரு ஐடியா இருக்குடா என்றான். நல்லவிடயம் தானேடா... ஆனால் அந்த அவனுக்கும் என்றதில் அந்த கும் தான் இடிக்கிறது.... காரணம் அவனுக்கு ஐடியா இருப்பது தவறில்லடா. அப்போ நீ என்மேல சந்தேகப்படுறியா என்றேன். இல்லடா... நண்பர்களுக்குள் சண்டை எப்போதும் வரக்கூடாது என்பதால் தான் வெளிப்படையாக கேட்டனான் என்றான் அவன்.... இப்போதுதான் எனக்கு புரிந்தது. அவதியாக ஏனிந்த மாலைநேரத்தில் வந்தான் என்று.... அப்போது எனக்கு ஓரளவு ஊர்ஜிதமானது. ஆனாலும் இன்னும் அவன் வாயால் தன் காதல் பற்றி என்னிடம் சொல்லவில்லை. அதனால் நானும் தெரிந்தமாதிரி காட்டிக்கொள்ளவில்லை. பார்ப்போம். பட்டம் எவ்வளவு தூரம் தான் பறக்கப்பாகிறது என்று பார்ப்போமே...

அந்த வார விடுமுறைக்கு மீண்டும் அந்த ஆறுபேரும் ஒன்றுசேர்ந்தோம். எனக்கு உள்ளே இருந்த மனக்கவலையை வெளியே காட்டிக்கொள்ள விரும்பவில்லை. இருந்தாலும் ஏதோ ஒரு கதை வருகையில் என்னை மீறி வார்த்தைகள் வரவே பொதுவாக கூறினேன். டேய்... க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் என்டா ஒரு வித்தியாசம் இருக்கணும். சும்மா க்ளாஸ் மேட்ஸ்க்கும் க்ளோஸ் ஃப்ரண்ட்ஸூக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கு.... நம்ம ஒருத்தனைப்பற்றி நமக்கு தெரிவதிலும் இன்னொருத்தனுக்கு அதிகமாக தெரிந்தது பரவாயில்ல. ஆனா அத நம்மள்ள ஒருத்தனே அத சொல்லி அவனுக்கு தெரிந்தால் அப்புறமா நாம் ஏன் க்ளோஸ் பிரண்ட்ஸ் என்று சொல்லித்திரியவேணும். என்றேன். நிச்சயம் அவனுக்கு உறைத்திருக்கும். அவன் மனதை சங்கடப்படுத்திய குற்ற உணர்வு என்னிடம். நிமிர்ந்து பார்க்க என்னால் இயலவில்லை. அலைபேசியில் உள்ள பாம்பு விளையாட்டு தான் உதவியது. சற்று நேரம் அமைதி நிலவி பின்னர் அந்த கூற்றை அனைவரும் ஆமோதித்தார்கள்.

அப்படியே சில நாட்க்கள் கழியவே நண்பனிடம் இருந்து அலைபேசி... இன்று இரவு மீன் வாங்கிவருகிறேன். சமைப்போமா என்றான். உனக்கு நாளைக்கு வேலையில்லையோ என்றேன். இல்ல வேலை இருக்கு சும்மா உன்னோட கொஞ்சம் கதைக்கவேணும் அதுதான் என்றான். உள்மனது புரிந்து கொண்டது. சரி வா என்றுவிட்டு எனது வேலையை தொடர்ந்தேன்.


(தொடரும்.)

விகடன்
04-06-2008, 04:46 PM
கதையினை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறீர்கள் அன்பு.
உங்களுக்குள் இப்படி ஒரு திறமை இருந்தும் ஏன் இவ்வளவு காலம் மௌனித்திருந்தீர்களோ???

விரைவில் அடுத்த பாகத்துடன் வாருங்கள். தகுந்த காலமெடுத்து குறைந்தது தினமொரு பாகம் என்று எழுதினாலும் பரவாயில்லை.

பிற்காலத்தில் சீரியல் எடுக்க உதவும் :)

அன்புரசிகன்
04-06-2008, 06:17 PM
பிற்காலத்தில் சீரியல் எடுக்க உதவும் :)

முடிவே பண்ணீட்டீங்களா விராடரே...

தொடர்வேன். தினமும் கொடுக்க முயல்கிறேன்.

மதி
05-06-2008, 02:04 AM
நல்லாவே போகுது கதை...
சீக்கிரமா தொடருங்க..

மலர்
05-06-2008, 03:48 AM
(இந்த கதையில் வரும் சம்பவங்கள் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே)
நிஜமா.......
நிஜம்மா...... கற்பனையா..... :D :D :D
நம்பவே முடியலையே..... :mini023: :mini023:

சரி சரி..
சீக்கிரம் அடுத்த பாகத்தை போடுங்க....:cool: :cool:

விகடன்
05-06-2008, 04:41 AM
நிஜமா.......
நிஜம்மா...... கற்பனையா..... :D :D :D
நம்பவே முடியலையே..... :mini023: :mini023:



கேக்கிறதைப் பார்த்தால், அந்தக்கதைக்கும் மலரிற்கும் ஏதாவது :confused::confused::confused:

மதி
05-06-2008, 05:30 AM
கேக்கிறதைப் பார்த்தால், அந்தக்கதைக்கும் மலரிற்கும் ஏதாவது :confused::confused::confused:

ஏதாயிருந்தாலும் தெளிவாக சொல்லுங்க விராடரே..
பாருங்க என்னை மாதிரி சிறுவர்களுக்குப் புரிய மாட்டேங்குது...

விகடன்
05-06-2008, 06:18 AM
ஏதாயிருந்தாலும் தெளிவாக சொல்லுங்க விராடரே..
பாருங்க என்னை மாதிரி சிறுவர்களுக்குப் புரிய மாட்டேங்குது...

தெரிஞ்சு வைச்சுக்கொண்டா வஞ்சகம் செய்கிறேன்?
அன்போ,
அது “கதை, நிஜமாக நிஜமல்ல” என்று சொல்லி எழுதுகிறார். ஆனால் மலரோ.. நிஜமாக ? இல்லை, வெறும் கதைதானா?? என்று துருவி துருவி கேற்கிறார்!!!
அன்பின் கற்பனையிற்கு ஏற்ப மலரிற்கு தெரிந்தவர்களிற்கோ அல்லது மலரிற்கோ ஏதாவது நிஜத்தில் நடந்திருக்குமோ என்னவோ?
சந்தேகம் குழப்பம். இரண்டுமிருந்ததால்த்தான் அப்படி பதிந்தேன். தெளிவிக்க மலர்தான் வரவேண்டும் :D:D:D

மதி
05-06-2008, 06:57 AM
தெரிஞ்சு வைச்சுக்கொண்டா வஞ்சகம் செய்கிறேன்?
அன்போ,
அது “கதை, நிஜமாக நிஜமல்ல” என்று சொல்லி எழுதுகிறார். ஆனால் மலரோ.. நிஜமாக ? இல்லை, வெறும் கதைதானா?? என்று துருவி துருவி கேற்கிறார்!!!
அன்பின் கற்பனையிற்கு ஏற்ப மலரிற்கு தெரிந்தவர்களிற்கோ அல்லது மலரிற்கோ ஏதாவது நிஜத்தில் நடந்திருக்குமோ என்னவோ?
சந்தேகம் குழப்பம். இரண்டுமிருந்ததால்த்தான் அப்படி பதிந்தேன். தெளிவிக்க மலர்தான் வரவேண்டும் :D:D:D

இப்போ புரியுது.. அப்போ மலர் தெளிவாக வர வேண்டும்.. அப்படித் தானே?

தாமரை
05-06-2008, 07:42 AM
பென்ஸ்.. பென்ஸ்.. இங்க பாருங்க.. இந்தக் கதையை நாம ஏற்கனவே படிச்சாச்சில்ல.. ;)

விகடன்
05-06-2008, 08:54 AM
அப்படியென்றால்....
வீட்டிற்கு வீடு வாசற்படியா? ;)

அன்புரசிகன்
05-06-2008, 01:35 PM
என்னையா... நான் ஏதோ எழுதப்போக தாமரை அண்ணா ஏற்கனவே எழுதி முடித்தாயிற்றே என்றே சொல்றாறே. இதுல மலருக்கு வேறு சந்தேகம். :D :D :D

தாமரை
05-06-2008, 01:45 PM
அதுக்காக இப்படிக் குப்புறப்படுத்துக்கவா? என்ன அன்பு நீங்க.. காதல் என்பதும் நட்பு என்பது ஆதிகாலந்தொட்டே இப்படி காந்த துருவங்களாய் இணைவதும் பிரிவதுமாய் ஆட்டங்காட்டிட்கிட்டுத்தானே இருக்கு, இதுக்காக ஆடிப்போலாமா?

எழுதுங்க எழுதுங்க..

அன்புரசிகன்
05-06-2008, 01:50 PM
வழமையாக ஊர்சுற்றிவிட்டு இரவில் வந்து படுக்கும் நான் அன்று வேலை முடிந்ததும் நேரடியாக வீட்டுக்கு வந்துவிட்டேன். பிட்டு அவிப்போம் என்று வீட்டுக்கு வந்து பானையைப்பார்த்தால் அவித்த கோதுமை மா இல்லை. உடனடியாகவே மாவை அவிக்க வைத்துவிட்டு தேங்காயையும் துருவி வைத்துவிட்டு நண்பனின் வருகைக்காக காத்திருந்தேன். வந்ததும் ஒன்றாக சமைப்போம் என்றுவிட்டு…. சற்று நேரத்தில் அவனும் வந்தான். வழமையான குசலம் விசாரிப்போடு சமையல் தொடங்கியது. நான் பிட்டு அவிப்பதில் கவனம் செலுத்த அவன் கறி வைப்பதில் கவனம் செலுத்தி இடையிடை ஊர்ப்புதினங்களையும் கதைத்தோம். வேலைத்தளங்களில் நடக்கும் விடையங்கள் புதிய அனுபவங்கள் இடையிடை நகைச்சுவைகள் என ஒரு பல்சுவை கதம்ப நிகழ்ச்சி போல் இருந்தது. சமைத்து முடிந்ததும் குளித்து சாப்பிட்டுவிட்டு வாசலில் அமர்ந்தோம். அப்போது தான் அவனும் ஆரம்பித்தான். தன் காதலின் ஆரம்பத்திலிருந்து அன்றுவரை… எந்த நுனியில் காதல் ஆரம்பித்தது என்று என்னால் உணர முடிந்தது.

முன்பு தான் அவள் மேல் வைத்திருந்த அபிப்பிராயம் தவறு என்பதை அவன் புரிந்து கொண்டதாகவும் அவளுடன் சேர்ந்து பழகிய காலங்களில் தான் அவனால் உண்மையை புரிந்து கொள்ள முடிந்ததாகவும் சொன்னான். தன்னுடைய எண்ணங்கள் நம்பிக்கைகள் அனைத்தும் அவளுடையதுடன் ஒத்திசைவதாகவும் தன்னுடைய கலைநயத்திற்கு அவள் முதல் ரசிகையாக இருக்கிறாள் என்ற உள்ளுணர்வு தன்னிடம் தோன்றியதாகவும் கூறினான்.

உடனடியாக நான் கேட்ட கேள்வி அவளிடம் சொல்லிவிட்டாயா? எப்போது சொல்லப்போகிறாய் என்றேன். இல்லடா. அவள் நல்ல நண்பியாக இருக்கிறாள். இத சொல்லப்போய் இருப்பதை கெடுப்பானேன் என்றான். டேய் அதுக்காக நடிக்கப்போகிறாயா என்றேன். இல்லை நேரம் வரும் போது சொல்வேன் என்றான். சில காலங்களின் பின்னர் பயிற்சி வேலைத்திட்டம் முடியவே அந்த ஆறுபேரும் ஒன்று சேர்ந்தோம். பின்னர் அவன் மேல் ஒரே கிண்டலும் கேலியுமாகத்தான் இருந்தது. அவன் பதில் தரமாட்டான்.


இந்த காதல் விடையம் நம் கல்லூரியிலுள்ள ஒரு எழுதுவினைஞருக்கு (அவரும் பெண்தான்) தெரியவந்தது. அவரும் சேர்ந்து கிண்டலடிப்பார். ஒருமுறை அவரே அந்த பெண்ணிடம் நேரடியாக கேட்டிருக்கிறார்.


(தொடரும்)

அன்புரசிகன்
05-06-2008, 01:54 PM
அதுக்காக இப்படிக் குப்புறப்படுத்துக்கவா? என்ன அன்பு நீங்க.. காதல் என்பதும் நட்பு என்பது ஆதிகாலந்தொட்டே இப்படி காந்த துருவங்களாய் இணைவதும் பிரிவதுமாய் ஆட்டங்காட்டிட்கிட்டுத்தானே இருக்கு, இதுக்காக ஆடிப்போலாமா?

எழுதுங்க எழுதுங்க..
அது என்னமோ உண்மை தான் அண்ணா....

மதி
05-06-2008, 02:07 PM
ரசிகரே கதைன்னு சொல்றீங்க...
சுவையான சம்பவங்கள் பகுதியில இல்ல வந்திருக்கணும்.. அந்தளவுக்கு ஒன்றிப் போய் எழுதறீங்க.... ?

அன்புரசிகன்
05-06-2008, 02:28 PM
ரசிகரே கதைன்னு சொல்றீங்க...
சுவையான சம்பவங்கள் பகுதியில இல்ல வந்திருக்கணும்.. அந்தளவுக்கு ஒன்றிப் போய் எழுதறீங்க.... ?

மிக்க நன்றி. ஆனால் இது உண்மையாவே கதை தான்.:lachen001:

பார்த்திபன்
05-06-2008, 04:23 PM
மிக்க நன்றி. ஆனால் இது உண்மையாவே கதை தான்.:lachen001:



அப்போ உண்மைக்கதை என்றீங்க...

அப்படித்தானே........................:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

சுடரவன்
05-06-2008, 05:24 PM
அடடா
காதலிற்கு ஒரு தூது !!!
அமர்க்களந்தன்

அன்புரசிகன்
06-06-2008, 05:26 AM
அப்போ உண்மைக்கதை என்றீங்க...

அப்படித்தானே........................:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:


அடடா
காதலிற்கு ஒரு தூது !!!
அமர்க்களந்தன்

நீங்கள் இருவர் சொல்வதும் ஒரு கதைபோலிருக்கே...

ஆனால் .... இந்த திரியில் வருபவை அத்தனையும் கற்பனை தான்...:icon_rollout:

பூமகள்
06-06-2008, 05:51 AM
இத்தனை முறை கற்பனை கற்பனைன்னு சொல்லும் போது தான் லைட்டா ஒரு டவுட் வருதுங்கோவ்...!! ;) :D:D

நிஜத்தை எனக்கு மட்டும் தனிமடலில் சொல்லுங்க.. அன்பு அண்ணா... இது நிஜக்கதை தானே??!! ;)

அன்புரசிகன்
06-06-2008, 02:16 PM
இப்படியே ஏறத்தாள ஒரு வருடம் கழிந்தது. அவனும் காதலை சொன்னபாடு இல்லை. நாமும் அவன் மீது எறியும் கிண்டல் கணைகளை நிறுத்தியதில்லை. நாம் கல்லூரியில் ஒன்றாக நிற்கும் போது நண்பனின் காதலி அந்த இடத்திற்கு வந்தால் போதும். அவன் பம்ம (அமைதி காப்பது) ஆரம்பித்துவிடுவான். நாம் கிண்டல் கணைகளை அதிகமாக்குவோம். அவனின் காதலி வந்தால் நம்முன் அவன் அவளுடன் கதைக்க மாட்டான். அவள் அவனுக்கு ஏதாவது சொன்னாலும் OK என்ற வார்த்தையும் பார்த்து சொல்றன் என்ற வார்த்தையும் தான் வரும். வேறு எதுவும் வெளியே வராது. அவள் வந்து உதவி கேட்டால் டேய் இது உனக்கு தெரியுமெல்லே என்றால் அவனுக்கு தெரியாவிட்டாலும் ஓம் நான் செய்து தாறன் என்பான். ஆனால் எப்படியாவது தெரிந்து செய்து கொடுத்துவிடுவான். அதுதான் காதல் அவனுக்கு கொடுத்த மகிமை என்றால் ஏது மிகை…

இந்த காதல் விடையம் நம் கல்லூரியிலுள்ள ஒரு எழுதுவினைஞருக்கு (அவரும் பெண்தான்) தெரியவந்தது. அவரும் சேர்ந்து கிண்டலடிப்பார். ஒருமுறை அவரே அந்த பெண்ணிடம் நேரடியாக கேட்டிருக்கிறார். நீ அவனை காதலிக்கிறாயா என்று. அவள் மறுத்தாளோ இல்லையோ தெரியாது. ஆனால் கோபம் கொண்டிருக்கிறாள். இதை அவர் நம்மிடம் கூற மறுத்தாலும் அந்த தருணத்தில் அந்த அறையில் அலுமாரியில் புத்தகம் ஒன்றை தேடிக்கொண்டிருந்த கல்லூரி சகதோழி கேட்டுவிட்டார். அவர் வந்து நம்மிடம் இந்த கதையை சொல்ல நமக்கு ஒரு நிம்மதி வந்தது போல் ஒரு பிரமை. காரணம் அவள் கோபம் கொண்டதல்ல. அவளுக்கு இந்தவிடையம் பற்றி ஓரளவாவது தெரியவந்ததே என்று… ஆனால் விடையம் எதிர்மறையாக அந்த நேரத்தில் கிளம்பியது. அவள் அவனுடன் கதைப்பதை நிறுத்திவிட்டாள். அதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இரண்டு நாட்க்கள் கழியவே அவளே அவனிடம் வந்து சொல்லியிருக்கிறாள். மற்றவர்களுக்காக நாம் ஏன் கதைப்பதை நிறுத்தவேண்டும் என்று. நியாயமான கோரிக்கை தான். ஆனாலும் நாம் எதிர்பார்த்த பதில் அவளிடம் இருந்து அவனுக்கு வரவில்லை. அத்துடன் அவர்கள் மீண்டும் நண்பர்கள் ஆனார்களே தவிர காதல் பற்றி அவளிடம் இருந்து ஒரு சைகையும் வந்ததாக நமக்கு தெரியவில்லை.

ஒரு இரவு கல்லூரியிலிருந்து வீட்டுக்குப்புறப்படும் தறுவாயில் அலைபேசி அலறியது.


தொடரும்...

விகடன்
06-06-2008, 06:01 PM
ஒரு இரவு கல்லூரியிலிருந்து வீட்டுக்குப்புறப்படும் தறுவாயில் அலைபேசி அலறியது.




யாருக்கு அன்பு?
கதையில் கன திருப்புமுனைகள் இருக்கும் போல:lachen001::lachen001:

அன்புரசிகன்
06-06-2008, 08:05 PM
யாருக்கு அன்பு?
கதையில் கன திருப்புமுனைகள் இருக்கும் போல:lachen001::lachen001:

இல்லை என்று சொல்லவும்முடியாது. ஆனால் இல்லை தான்.

அன்புரசிகன்
08-06-2008, 02:04 PM
இப்படியே காலங்களும் நம் படிப்புகளுடன் உருண்டோடத்தொடங்கின. கல்லூரியின் இறுதியாண்டும் வந்த்து. நண்பர்கள் வேறு வேறு இடங்களில் இருக்க வேண்டிய கட்டாயம். படிப்பதிலும் பாடவிதான வேலைகளை செய்து முடிப்பதே போதும் போதும் என்றாகிவிடும். ஒரு இரவு கல்லூரியிலிருந்து வீட்டுக்குப்புறப்படும் தறுவாயில் அலைபேசி அலறியது. காதலால் காய்ந்து போயிருக்கும் அதே நண்பன் தான். இன்றிரவு முக்கியமாக கதைக்க வேண்டும் வா என்றான். இதற்கு முன் நான் ஒன்றை சொல்ல வேண்டும். முதல் நாள் இரவு எம் நண்பர் குளாமில் இருவருக்கு சிவராத்திரியாக இருந்த்தாம். அதில் ஒருவன் தன் காதலுக்காக இருந்திருக்கிறான். மற்றவர் இவருடன் கலந்தாலோசிப்பதற்காக தன் உறக்கத்தை தியாகம் செய்திருக்கிறார். பெரும் மந்திராலோசனை தான். இருவரும் நடந்த்து பற்றி எதுவும் வெளியிடவில்லை. ஆனால் மிகுதி நான்குபேரில் ஒருவருக்கு இன்றிரவு சிவராத்திரி தான் என நகைச்சுவையாக சொல்லிவைத்தான். அவன் சொல்லும் போது தெரியவில்லை. அது நான் தான் என்று....

எனக்கு அழைப்பு வந்த்தும் மற்ற மூவருக்கும் நல்ல சந்தோசம். அத்துடன் ஒரு நண்பன் என் கதை தடவி விட்டான். இந்த காது நாளை எப்படி இருக்குமோ தெரியாது என்ற நக்கலுடன் அவர்கள் மூவரும் விடைபெற்றார்கள். அருகிலிருந்த கடையில் கொத்துரொட்டி சாப்பிட்டுவிட்டு அவனது இருப்பிடம் நோக்கி விரைந்தேன். அவனது இருப்பிடம் கல்லூரிக்கு மிக அருகிலேயே இருந்த்து. வேளைக்கு சென்றால் விரைவாக வீடு திரும்பலாம் என்ற நப்பாசை தான். காலம் யாரை விட்டது.

கல்லூரி வளாகத்திலுள்ள சிற்றூண்டிச்சாலையின் தேநீர் வாங்கி அந்த மேசைகளில் இருக்காது சற்றே தள்ளியுள்ள குந்து (குட்டிச்சுவர் எனலாம்) ஒன்றில் இருவரும் உட்காந்தோம். நான் இப்ப என்ன செய்யலாம். இது அவனிடம் இருந்து வந்த கேள்வி.... என்ன பதில் சொல்ல்லாம். என்னிடம் புன்முறுவல் தான் உடனடியாக வந்த பதில். சற்று நேரத்தில் சுதாகரித்து நக்கலாவகே நீ என்னத்தையாலும் பண்ணு.... உனக்கு தானே வசதி இருக்கு. ஃபெஸ்ட் க்ளாஸ் அடிச்சா எம் எஸ் சீ முடிக்காம டிரக்ட்டா பி எச் டி க்கே போகலாம் என்றேன். முறாய்ப்புப்பார்வை ஒன்று என்மேல் வீழ்ந்த்து. விளாடாமல் சீரியஸா கதையடா என்றான். உண்மையில் எனக்கு என்ன சொல்வதென்று புரியவே இல்லை. காரணம் இது அவனது தனிப்பட்ட வாழ்க்கை விடையம். நாம் உறுதுணையாக இருக்கலாமே தவிர முடிவு எடுப்பதற்கு ஊன்றுகோலாக இருப்பது ஏதுவான காரியமல்ல. டேய் முதல்ல உன்ட அப்பா அம்மாவுக்கு சொல்லீட்டியோ என்றேன். இல்ல என்றான். அப்போ முதல்ல அதை செய். அட்லீஸ்ட் உன்ட அம்மாவுக்கு அல்லது அப்பாவுக்கு... யாருக்கு உன்னால சொல்ல முடியுமோ அவங்களுக்கு முதல்ல சொல்லு... அப்புறமா உனக்கே ஒரு பாதை தெரியும். தெளிவாகவும் இருக்கும். உன் அம்மா அப்பாவ உன் மேல பல கனவுகள வைச்சிருப்பினம். அது பெரிசா வரமுன் சொல்லு. அப்புறம் நீ அவளிடம் சொல்லு... என்றேன். அவனோ இல்ல அம்மா அப்பாவ வைச்சு கதைச்சு பார்ப்பம் என்றான். இது வேலைக்கு ஆகிற காரியமல்ல. இது என் மனதில் உடனடியாக தோன்றியது. ஆனால் அவனிடம் சொல்ல ஏனோ மறுத்துவிட்டது. அந்த நேரத்தில் அந்த சிற்றூண்டிச்சாலை விளக்கு அணைக்கப்பட்டு கதவுகளும் அடைக்கப்பட்டன. வீதியோர மின்குமிழ் வெளிச்சத்தை பரப்பிக்கொண்டிருந்த்து. மதியும் உச்சியை கடந்து மேல் பகுதிக்கு சென்று கொண்டிருந்த்து.

டேய் உன்னால ஏன் அவளிட்ட நேரடியா சொல்ல முடியாது?


(தொடரும்...)

விகடன்
08-06-2008, 04:33 PM
அடடா...
நீங்கள் இரண்டவதா?
உங்களுக்கு பின்னர் இன்னும் நால்வரின் நித்திரைக்கு வேட்டு இருக்கிறது! அப்படித்தானே....

எனக்க்கு ஒன்று மட்டும் குழப்பமாக இருக்கிறது அன்பு.
நீங்களும் குறிப்பிட்ட அந்த ரதியை காதல் செய்வதாக நினைத்து ஹன்பர்களில் ஒருவர் தூர இடத்திலிருந்து வந்து உங்களுடன் கதைத்ததாக சொல்லியிருந்தீர்கள்.

அவன் தன்னிச்சையாகத்தான் வந்து கதைத்தாரா?
அல்லது,
'காதலால் காய்ந்து போயிருக்கும் அதே நண்பனின்" தூண்டுதலின் பேரில் அருகை தந்திருந்தாரா?

தன்னிச்சையாக எனினும்,
உங்களுடன் கதைத்த விடயத்தை அந்த 'காதலால் காய்ந்து போயிருக்கும் அதே நண்பனிடத்தில் " சொல்லியிருக்க மாட்டாரா??

என்னதான் இருந்தாலும் உங்களிடமே காதல் பற்றிய கலந்துரையாடலை ஏற்படுத்திஆலோசனை கேற்கும் அந்த 'காதலால் காய்ந்து போயிருக்கும் அதே நண்பனின்" நட்பு மேலானதுதான்..
----------------------------------------------------
எனக்கென்னவோ பார்க்கையில் இது ஒரு பல்கோணக் காதல் கதையாயாகத்தான் தெரிகிறட்து :D

அடுத்தடுத்த கதைப்பாகப் பதிவுகளை எதிர்பார்த்த வண்ணம்

விராடன்

சிவா.ஜி
08-06-2008, 04:54 PM
ஐந்து பாகத்தையும் படித்துவிட்டேன். அருமையா ”கதையை” கொண்டு போறீங்க அன்பு. இடையில் மாட்டிக்கொண்டு காதுகளை காயப்படுத்திக்கொள்ளும் அவரை நினைத்துதான் வருத்தமாக இருக்கிறது. தொடர்ந்து ஜமாய்ங்க. கூடவே வறோம்.

விகடன்
08-06-2008, 05:25 PM
இடையில் மாட்டிக்கொண்டு காதுகளை காயப்படுத்திக்கொள்ளும் அவரை நினைத்துதான் வருத்தமாக இருக்கிறது. .

இடையில் மாட்டி காதுகளை காயபடுத்துவது தான் என்றுதானே அன்பு சொல்லியிருக்கிறார் :confused:

சிவா.ஜி
08-06-2008, 05:45 PM
அவரே ஒத்துக்கிட்ட பிறகு வேறென்ன? பரிதாபப் படலாம்.

SivaS
09-06-2008, 09:22 AM
ஏதோ உண்மை கதை போல இருக்கு அருமை

விகடன்
09-06-2008, 10:01 AM
ஏதோ உண்மை கதை போல இருக்கு அருமை

இதுதாங்க அன்போட வெற்றி..

அன்புரசிகன்
09-06-2008, 02:24 PM
அவரே ஒத்துக்கிட்ட பிறகு வேறென்ன? பரிதாபப் படலாம்.
கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.... :icon_rollout:


ஏதோ உண்மை கதை போல இருக்கு அருமை

ஒரு கூட்டமாத்தான் கிளம்பியிருக்காங்க போல....




இதுதாங்க அன்போட வெற்றி..


அட. நீங்க அப்டி வாறீங்களா???

கருத்து தெரிவித்த அத்துணை உள்ளங்களுக்கும் நன்றிகள்.

அன்புரசிகன்
09-06-2008, 02:28 PM
டேய் உன்னால ஏன் அவளிட்ட நேரடியா சொல்ல முடியாது? என்ற நான் கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன பதில், டேய் அவள் இப்ப நல்ல பெஸ்ட் பிரண்ட் மாதிரி பழகுறாளடா....இத நான் சொல்லி அவள் மறுத்துட்டா இருந்த்தும் இல்லாம போயிடுமே என்றான். சரி எப்படி பாத்தாலும் நீ அவள ஏமாத்துறமாதிரி தானேடா இருக்கு. இதோ பார் நீ ஒன்டில் நல்ல ஃபிரண்டா இருக்கோணும். இல்லாட்டி நல்ல லவ்வரா இருக்க வேணும். நீ இப்ப செய்யுறது எது என்டு எனக்கு தெரியல. காரணம் நீ இரண்டாவும் இல்ல. இன்னும் ஸ்பெஸிஃபிக்கா சொன்னா அவளிடம் நீ உண்மையாக கூட இல்லாம நடிச்சுக்கொண்டிருக்காயேடா..... இது மட்டும் சரியோ என்றேன். நிச்சயம் அவனுக்கு அது சுட்டிருக்கும். பிழ தான்டா. ஆனா என்று இழுத்தான். எனக்கு தெரிந்த்து. இவனுக்கு சொல்வது மிகக்கடினமாக இருக்கிறது என்று. ஆனால் நாமளும் இந்த விடையத்தில் உதவமுடியாதே...

இப்படியே பல்வேறு வாக்கு வாதங்கள் போயின. இறுதியாக நான் சொன்ன விடையம் இதுதான். டேய். இதப்பார். நீ சொல்லி மறுத்தால் வலி இருக்கும். மறுக்கவில்லை. ஆனா நீ இப்ப சொல்லாம விட உன்னிலும் பார்க்க நெருக்கமில்லாத யாரும் அவளிடம் லவ்வை சொல்லி அவள் அதுக்கு சம்மதிச்சாளென்டா உன் மனம் அந்த நேரம் கஷ்டப்படும். அட நாமும் கேட்டிருக்கலாமே என்ற கேள்விக்கு இடம் தராத. இதுக்கு மேல நீ தான் டிஸைட் பண்ண்ணும் காரணம் இது உன்னோடதும் அவளோடதும் வாழ்க்கையடா. பார்த்து செய். யாருக்கும் பாதிப்பு வராம பாத்துக்கோ.... காரணம் உன்ட வீட்டுக்காரருக்கு என்று ஒரு மதிப்பு மரியாத ஊர்ல இருக்கு. நீ அதையும் பாக்கணும். எடுத்தோம் கவிட்டோம் என்ற முடிவு பின்னால பெரும் பிரச்சனையா வரும். நல்லா வீட்டுக்காரருடன் கதைச்சு முடிவெடு. என்று கூறினேன். அவனிடம் இருந்து பதில் ஏதும் வரல. சிறிது நேரம் அமைதி நிலவியது. நானும் பேச்சு எதுவும் கொடுக்கவில்லை. காரணம் அவனுக்கு இனி தேவைப்படுவது அமைதியும் தனிமையுமே தவிர வேறேதுமன்று.


(தொடரும்...)

விகடன்
09-06-2008, 05:58 PM
என்ன அன்பு.?
இந்த காதல் கொஞ்சமல்ல... கடுமையாகத்தான் வித்தியாசமாக இருக்கிறதே....

தன் காதலை தெரிவிக்க வேண்டியவரை விட்டு விட்டு உங்களிடமும் இன்னுமோர் நண்பரிடமும் அல்லவா சொல்லிக் கொண்டிருக்கிறார்?

பெற்றாரிடமும் சொல்லி விட்டால் எப்படி இந்த காதல் கதையிம் தலைப்பை சொல்லலாம்...

"ஊருக்கே சொல்லிய காதல், உனக்கு மட்டும்... :D " அப்படி?
---------------------------------------------------------

விரைவாக அடுத்த பாகத்தையும் பதியுங்கள்.
கதையில், நண்பன் காதலியுடன் இருக்கிறாரா?
அல்லது காதலுடன் மட்டுந்தான் இருக்கிறா என்று தெரிய ஆவலாக உள்ளோம்...

அன்புரசிகன்
09-06-2008, 06:46 PM
"ஊருக்கே சொல்லிய காதல், உனக்கு மட்டும்... :D " அப்படி?


அப்படி கூறிட முடியாது விராடரே... காரணம் காதல் என்று வந்துவிட்டால் எந்த வீரனும் கோழையாகிவிடுவான். அதுதான் காதலின் மகிமை... இதை நான் அனுபவிக்கவில்லை. ஆனால் அனுபவித்தவர்களை கண்டிருக்கிறேன். அந்த அனுபவம் உண்டு...

விகடன்
10-06-2008, 02:37 PM
ரசிகா.....
எங்கே இன்றைய நாளிற்கான பாகம்?
படிக்காமலேயே வீடு செல்ல வைத்துவீடீர்கள்ளே

மலர்
10-06-2008, 04:08 PM
கதையின் நிஜத்தையே மிஞ்சி விடும் போல....
பின்ன கதை எழுதுறது யாரு.... நம்ம ரசிகனாச்சே...:icon_b: :icon_b:

கொஞ்சம் வேகமாக எழுதுங்கோ... அன்பு.
கதையை படிக்க வெயிட்டிங்.....:frown: :frown:

அன்புரசிகன்
11-06-2008, 02:11 AM
காலங்கள் உருண்டோடின. பட்டமும் கிட்டியது. தூர பிரதேசங்களுக்கு பிரிந்தோம். வேலைகள் படிப்பிலும் மோசமாக பின்னியது... இது வாழ்க்கையின் இன்னொரு பாகம் என மீண்டும் புரியவைத்த்து. ஆனால் இந்த தடவை அலைபேசிகளுடன் msn yahoo Google தூதுவன்களும் இணைந்தன. அவன் காதலில் வெற்றி பெற்றானோ தோல்வியடைந்தானோ என்பது எனக்கு இற்றைக்கு வரைக்கும் தெரியாது. காரணம் காதல் திருமணத்தில் தான் வெற்றி பெறுகிறது என்ற முடிவு எங்கும் எழுதப்படவில்லை. ஆண்டவன் தான் காதலைப்படைத்திருக்கிறான் என்ற உண்மை இங்கு புலனாகிறது. காரணம் விஞ்ஞானம் காதலை கண்டறிந்திருந்தால் அதற்கென்று ஒரு வரவிலக்கணத்தை கொடுத்திருக்கும். குறைந்த பட்சம் கொடுக்க முயன்றாவது இருந்திருக்கும். ஆனால்..... காதலுக்கோ இது எதுவுமில்லையே. இருந்திருந்தால் இந்த இந்த விதிகளின் படி நான் இப்படி காதலிக்கிறேன். ஆகவே நீயும் இப்படி இப்படி காதலிக்க வேண்டும் என்று காதலனிடமோ காதலியிடமோ சொல்லி காதலை அதட்டியாவது சாதித்திடலாம். காதலை நிரூபிக்க முறையான வழியேதும் இல்லையே...

நான் இதுவரை பார்த்த திரைப்படங்களிலிருந்து அவனது காதல் பற்றி எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆண்டவனின் விந்தையான படைப்பில் இந்த காதலும் ஒன்று என்ற முடிவுதான் என்னால் எடுக்க முடிந்த்து.


வீட்டுக்காரரும் அவனுக்கு பெண்பார்த்தார்கள். ஆனால் இந்த தடவை அவனுக்கு வீட்டார்கள் அனுப்பிய படத்தை எனக்கு முதலாவதாக காட்டினான். (கூகிள் தூதுவனூடு) அப்போதும் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான் பாருங்க.... பொண்ணு எப்படி என்றான்... டேய் நீ திருந்தவே மாட்டியா என்றுவிட்டு உடனடியாகவே தூதுவனை நிறுத்தினேன். என்ன சொன்னாலும் அவனை கோபமாப அவன் முன்னால் திட்ட முடிவதில்லை. கோபித்து அதட்டமுடிந்த்தும் இல்லை.

நம்ம சிங்கத்துக்கு தொலைக்கும் பழக்கம் அதிகமாகவே இருக்கிறது. அலைபேசி தொப்பி குடை வீட்டு திறப்பு என பல. அந்த லிஸ்டில் அந்த காதலையும் சேர்த்திடு என்று என் கடவுளிடம் என் சார்பிலான கோரிக்கை.

அவன் வாழ்க்கையில் வென்றிருக்கிறான். அது எனக்குத்தெரிந்த்து. அவனுடைய காதலின் நிலவரம் எனக்கு தெரியாது. காரணம் நமக்கு தான் இந்த காதல் என்றாலே எரிச்சல் எரிசலா வரூதே.....


முற்றும்.

பின் குறிப்பு - இந்த கதையின் கரு பற்றியவிளக்கம் இன்று மாலை வேலை முடித்து வந்து பதிகிறேன். ஊகங்கள் தெரிவித்தவர்களுக்காக...

SivaS
11-06-2008, 04:30 AM
"அட நாமும் கேட்டிருக்கலாமே என்ற கேள்விக்கு இடம் தராத".
அருமையான வசனம் மிகப்பெரும் அர்த்தம் உள்ளதும் கூட.

எந்த ஒரு செயலின் முடிவிலும் இவ்வாறு யோசிப்பதை விட காரியத்தின் ஆரம்பம் முதற்கொன்டு அனைத்து வழிகளிலும் முயற்சி செய்து பார்க்கலாம்

கதையின் முடிவு என்பதை விட முடிவில் நீங்கள் சொல்லியிருக்கும் உரை(உரை என்பது சரியோ தவறோ தெரியாது :confused: தவறு என்றால் தமிழ் என்னை மன்னிக்கும்;))100% யதார்த்தம்:D.
கலக்கிவிட்டீங்க அன்பு அண்ணே:icon_b:

சிவா.ஜி
11-06-2008, 04:31 AM
"நம்ம சிங்கத்துக்கு தொலைக்கும் பழக்கம் அதிகமாகவே இருக்கிறது. அலைபேசி தொப்பி குடை வீட்டு திறப்பு என பல. அந்த லிஸ்டில் அந்த காதலையும் சேர்த்திடு என்று என் கடவுளிடம் என் சார்பிலான கோரிக்கை." அருமையான வரிகள். அசத்துறீங்க அன்பு. முடிவுதெரியாத இந்த காதல் இப்போது முடிந்து போயிருக்குமோ...?

பாரதி
11-06-2008, 04:41 AM
அட...! முடிக்கப்போறீங்கன்னு சொல்லவேயில்லையே அன்பு..??
ஆனா முடிக்கணும்கிற உங்க குறிக்கோள் பிடிச்சிருக்கு.

நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்க.

விகடன்
11-06-2008, 05:54 AM
இந்தக் கதையில் நான் ஒரு வித்தியாசத்தை கவனித்தேன் அன்பு.
வழமையாக ஒரு கதை எழுதும்போது அது படர்க்கையிலேயே அமையப்பெற்றிருப்பது அவதானிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் இங்கோ தன்னிலை, முன்னிலையினை வைத்து எழுதப்பட்டிருப்பதால் கதையில் ஓர் உயிரோட்டமிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
அதிலும் நவீனத்துவமடைந்திருக்கின்றது!!!
எப்படியென்றா கேற்கிறீர்கள்.
அதுதாங்க, எம்.எஸ்.என், ஜாகூ, ஜி-டோக் போன்ற மஷன்சர்களை வரிசைப்படுத்தியிருக்கிறீர்களே...

இருந்தாலும் ஒரு கவலை. காதலின் முடிவு என்ன ஆனது என்றுதான் சொல்லவில்லை.

உங்களுக்குள் இப்படியொரு அபரிமிதமான திறமை உறங்கிக்கிடந்திருப்பதை இந்தக் கதையினூடாகவும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
இதே போல இன்னும் பல கதைகள், கட்டுரைகள் கவிதைகள் (திறமை இருக்கு. எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது :D ) போன்ற பல ஆக்கங்கள் பதித்திட வாழ்த்துக்கள் :)

அன்புரசிகன்
11-06-2008, 05:39 PM
கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. நல்லதொரு ஊக்கம் தந்துள்ளீர்கள். தொடர முயல்கிறேன்....

இந்த கதையின் கரு பற்றிய விளக்கம்...

நான் கத்தாரில் இருந்த போது எனது சிறுவயது (ஒரே ஊர். பக்கத்து வீடு தான்) நண்பன் ஒருவன் இருந்தான். அனேகமாக வெள்ளிக்கிழமை சனிக்கிழமைகளில் அவனுடன் தங்குவது எனது வழமை. அந்த நேரங்களில் திரைப்படங்கள் பார்க்கும் போது ஏதாவது காட்சிகள் கண்டால் தனது நண்பர்களில் சிலரும் அப்படித்தான் என்று கூறிவிட்டு சிரிப்பான். அது பரவாயில்லை. அவன் அந்த படத்தை நிறுத்திவிட்டு அவர்களது கதையை சொல்ல ஆரம்பித்துவிடுவான். அந்த கதைகளை சிலவற்றை கோர்த்து அதனுடன் எனது நண்பர்களுடன் ஏற்பட்ட சில சம்பாசனைகளையும் சேர்த்து வந்தது தான் இந்த திரியின் உள்ளடக்கம்.... கதையில் உண்மை உண்டு. ஆனால் அவை ஓரிடத்தில் இல்லை.... அது தான் உண்மை...

செல்வா
11-06-2008, 09:29 PM
முதல் இரண்டு பாகங்கள் மற்றும் இறுதிப்பாகம் என்னை மிகவும் கவர்ந்தது....
வாழ்த்துக்கள் இரசிகரே மேலும் பல படைக்க...


இங்கே ஒரு சந்தேகம் மன்ற அண்ணாக்களிடம். பொதுவாக புத்தகத்தில் அத்தியாயம் என்பது chapter என்பதிற்கு இணையானது
பாகம் என்பது part என்பதிற்கு இணையானது அல்லவா அங்ஙனமிருக்க நாம் ஏன் பாகம் என்று அத்தியாயத்திற்கு பெயரிடுகிறோம்.. தவறு தானே...? தெளிவியுங்களேன்.

அன்புரசிகன்
12-06-2008, 02:14 AM
நன்றி செல்வா..

உங்கள் சந்தேகத்திற்கு மன்ற ஜாம்பவான்கள் வரவேண்டும். காத்திருப்போம்.

சுகந்தப்ரீதன்
12-06-2008, 02:53 AM
முடிக்கட்டும்..உள்ளாற போயி படிக்கலாம்ன்னு காத்திருந்தேன்..!!
ஆனா கடைசிவரை முடிக்காமலே போயிட்டீங்களே அன்பு அண்ணா..!!

பின்ன உங்களுக்கு காதலை பிடிக்கலைங்கறதுக்காக.. முடிவை இப்படியா கொடுக்கறது..?? ஆனாலும் பாருங்க..அப்படி கொடுத்ததுதான் இந்த கதைக்கே பெருமைக்குரியதா இருக்கு.. ஏன் தெரியுமா.. சேர்த்துவச்சு சுபம் போட்டிருந்தா ஏதோ ஒரு தமிழ்படம் பார்த்த ஞாபகம் வந்திருக்கும் எங்களுக்கு.. இப்ப பாருங்க.. யதார்த்தமான ஒரு உயிரோட்டமுள்ள நிகழ்வை கண்முன்னால் கண்டது போலிருக்கிறது..!!

இதுதான் உங்கள் முதல் முயற்சியா..நம்புவதற்க்கு சிரமமாகத்தான் இருக்கிறது..!! வாழ்த்துக்கள்..அண்ணா.. தொடருங்கள்...!!:icon_b:

விகடன்
12-06-2008, 01:28 PM
இல்லை சுகந்தா.
அன்பு வாயால் பல கதைகள் விடுவார்.

ஆனால், எழுத்து வடிவில் இதுதான் முதற்தடவை :D

அன்புரசிகன்
12-06-2008, 04:35 PM
இன்னா வில்லத்தனம் விராடா.... ஏனிந்த கொல வெறி???

இளசு
13-06-2008, 07:37 PM
காதல் திருமணத்தில் தான் வெற்றி பெறுகிறது என்ற முடிவு எங்கும் எழுதப்படவில்லை.
ஆண்டவன் தான் காதலைப்படைத்திருக்கிறான் என்ற உண்மை இங்கு புலனாகிறது.
காரணம் விஞ்ஞானம் காதலை கண்டறிந்திருந்தால் அதற்கென்று ஒரு வரவிலக்கணத்தைக் கொடுத்திருக்கும். குறைந்த பட்சம் கொடுக்க முயன்றாவது இருந்திருக்கும்.
ஆனால்..... காதலுக்கோ இது எதுவுமில்லையே.
இருந்திருந்தால் இந்த இந்த விதிகளின் படி நான் இப்படி காதலிக்கிறேன். ஆகவே நீயும் இப்படி இப்படி காதலிக்க வேண்டும் என்று காதலனிடமோ காதலியிடமோ சொல்லி காதலை அதட்டியாவது சாதித்திடலாம். காதலை நிரூபிக்க முறையான வழியேதும் இல்லையே...

ஆண்டவனின் விந்தையான படைப்பில் இந்த காதலும் ஒன்று என்ற முடிவுதான் என்னால் எடுக்க முடிந்த்து.




நட்பில்லாத இளமை இல்லை..
காதல் அரிக்காத நட்பு வளையம் இல்லை..

எல்லாருக்கும் சுய- படர்க்கை நிலையில் நிச்சயம் இவ்வகை அனுபவங்கள்...

ஆனால் எல்லாராலும் அன்பு போல் இப்படி எழுத முடியுமா???

வாய் ஊமையாகும் ''காதலன்''
கற்றுக் காரியமாற்றித்தரும் சக்தியை அளிக்கும் காதல்..
''அவனை முகம்பார்த்து கோபிக்க முடியல''
''இதையும் அவன் தொலைக்கட்டுமே இறைவா''


எங்கும் மனம் சுண்டும் வரிகள்...

இறுதியில் காதல் பற்றி அப்பார்வை - எழுந்து நின்று கைதட்ட வைக்கிறது!


உனக்கு எட்டும் அளவுக்கு சத்தமாய் என் கரகோஷம்..!


அசத்திவிட்டாய் அன்பு!

ஆயிரம் இ-பணம் அன்பளிப்பு!!

இளசு
13-06-2008, 07:40 PM
. பொதுவாக புத்தகத்தில் அத்தியாயம் என்பது chapter என்பதிற்கு இணையானது
பாகம் என்பது part என்பதிற்கு இணையானது அல்லவா அங்ஙனமிருக்க நாம் ஏன் பாகம் என்று அத்தியாயத்திற்கு பெயரிடுகிறோம்.. தவறு தானே...? தெளிவியுங்களேன்.

அன்பு செல்வா..

காதை, காண்டம், படலம் என பலச் சொற்கள் உண்டு..

தொலைத்துவிட்டு, அல்லாடுகிறோம்..

மேல் விளக்கம் தர தாமரை , கவீ , சாம்பவி, கண்மணி - வரவேணும்..

அன்புரசிகன்
13-06-2008, 07:58 PM
இறுதியில் காதல் பற்றி அப்பார்வை - எழுந்து நின்று கைதட்ட வைக்கிறது!


உனக்கு எட்டும் அளவுக்கு சத்தமாய் என் கரகோஷம்..!


அசத்திவிட்டாய் அன்பு!

ஆயிரம் இ-பணம் அன்பளிப்பு!!

உங்களின் இந்த கைதட்டிற்கு நீங்கள் தந்த இ-பணம் மிக மிக குறைவே... எனக்கு அந்த கைதட்டலே போதும். ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி என் மனதில்.

நன்றி கூறுவது தான் என்னால் இப்போது இயன்றது. தொடர முயல்கிறேன் அண்ணலே...

விகடன்
13-06-2008, 09:05 PM
காதை, காண்டம், படலம் என பலச் சொற்கள் உண்டு..



அண்ணாவின் தகவலுடன் மேலும்,
அத்தியாயம், படிமுறை, பாகம் என்பவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.
சரிதானே அண்ணா?