PDA

View Full Version : கணினிகளிற்கிடையே குறுந்தகவல் பரிமாற்றம் எப்படி செய்வது?



விகடன்
03-06-2008, 11:13 AM
ஒரு LAN இல் ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு குறுந்தகவல் அனுப்புவது எப்படி?
நான் படிக்கும் காலத்தில் கணினி செயன்முறைக்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் அண்ணளவாக 105 கணினிகள் இருக்கும். அதில் நாம் ஒரு கணினியில் இருந்துகொண்டு இன்னொரு கணினியில் இருக்கும் என்னுடைய சக தோழனிற்கு "Run" இல் சென்று ஏதோ சில கொமாண்டுகளுடன் அனுப்பவேண்டிய குறுந்தகவலையும் அடித்து "ஓகே" பண்ணுவோம். குறிப்பிட்ட அந்தக் கணினியில் திரையில் நான் அனுப்பிய தகவல் அனுப்பப்பட்ட கணினியினை, தகவல் வந்த இடமாக சுட்டிக்காட்டியபடி தென்படும்.

தற்பொழுது அதை மறந்துவிட்டேன். யாராவது கணினி மேதைகள் இருந்தால் அதனை சொல்லித்தரமுடியுமா?

தாமரை
03-06-2008, 11:24 AM
அது UNIX ஆபரேட்டிங் சிஸ்டம்தானே!!!

எனக்கு மறந்து போகலை!!! தெரிஞ்சிருந்தா தானே மறக்க? அந்தக் காலத்தில மக்கள் ஒருத்தருக்கொருத்தர் மெஸேஜ் கொடுத்துக்குவாங்க பார்த்திருக்கேன்.

ஆனால் DOS / Windows இது மாதிரி ஆபரேட்டிங் சிஸ்டங்களில் அந்த மாதிரி கணிணிக்கு குறுந்தகவல் அனுப்ப வசதி இருக்கா? தெரிஞ்சிக்க ஆவலாத்தான் இருக்கு.

அனிருத்துக்கு அனுப்பலாமே!!! ;)

ஆதி
03-06-2008, 11:27 AM
Windows

To a single host

உங்கள் Lan-ல் உள்ள ஒரு கணினிக்கு மட்டும் செய்தி அனுப்ப கீழ் உள்ள command-ஐ பயன்படுத்தவும்

net send <hostname> <message>

hostname - கணினியின் பெயர் அல்லது IP

To a Lan

உங்கள் Lan-ல் உள்ள அனைத்துக் கணினிக்கு அனுப்ப

net send <Lan IP> <message>


Lan IP - 192.168.0.0/24 or 192.168.1.0/24

Unix

To enable message

mesg y

To write message

write <user@hostname> <Message>

To a Lan

wall <message>

wall - write to all

SathyaThirunavukkarasu
03-06-2008, 01:00 PM
ஒன்றும் புரியலியே

மன்மதன்
03-06-2008, 01:15 PM
IP messenger for win version 2.02 உபயோகித்து பாருங்க.... நன்றாக இருக்கிறது..

ஆதி
03-06-2008, 01:19 PM
IP messenger for win version 2.02 உபயோகித்து பாருங்க.... நன்றாக இருக்கிறது..

நல்ல யோசனை என்றாலும், பல நிறுவணங்கள் இந்த மென்பொருள் பயன்பாட்டை அனுமதிப்பதில்லை.. security hole அதிகம் மற்றும் virus-ஐ சுலபமாக இதன் போர்ட் மூலம் பரப்ப இயலும்..

விகடன்
03-06-2008, 02:16 PM
என்ன ஆதி. எனக்கு வேலை செய்யவில்லை.
நான் லோகல் ஹோஸ்ட்டில்த்தான் அனுப்ப முயற்சிக்கின்றேன். எனது நண்ண்பனின் கணினிக்கோ அல்லது எனது கண்ணினிக்கேயோ அனுப்ப பல முறை முயன்றும் வெற்றியளிக்கவில்லையே

ரன்னில் நான் தட்டச்சிய கோடிங்...

net send 192.168.1.95 "Testing"

இது சரிதானே???

அன்புரசிகன்
03-06-2008, 02:23 PM
என்ன ஆதி. எனக்கு வேலை செய்யவில்லை.
நான் லோகல் ஹோஸ்ட்டில்த்தான் அனுப்ப முயற்சிக்கின்றேன். எனது நண்ண்பனின் கணினிக்கோ அல்லது எனது கண்ணினிக்கேயோ அனுப்ப பல முறை முயன்றும் வெற்றியளிக்கவில்லையே

ரன்னில் நான் தட்டச்சிய கோடிங்...

net send 192.168.1.95 "Testing"

இது சரிதானே???

அதற்கு பதிலாக கணினியின் பெயரை போட்டு முயன்றோ???

பூமகள்
03-06-2008, 02:32 PM
net send hostname1 test

நான் இப்படி command prompt-ல் கொடுத்து எனது கணினிக்கே அனுப்ப முயன்றேன்... ஆனால்..

An error occured while sending a message to hostname1.
This message alias could not be found on the network.
More help is available by typing HELPMSG 2273.

இப்படி மேற்கூறியபடி எரர் வருகிறதே??!! நமது கணினிக்கே அனுப்பி செக் செய்ய முடியாதா??

ஆதி
03-06-2008, 04:07 PM
என்ன பிழைக்குறிப்பு தெறிக்கிறது விராடன்..

An error occured while sending a message to hostname1.
This message alias could not be found on the network.
More help is available by typing HELPMSG 2273.

இதுப் போல் வந்தால் win xp sp-2 run ஆகும் கணினியாக இருக்கும்..

start ---> run ---> services.msc type செய்யவும்

services window-வில் messenger என்று ஒரு service இருக்கும், அது disable ஆகியிருக்கும்..

General -- >set Automatic ---> Apply

இதை செய்தவுடன் start என்பது highlight ஆகும் service-ஐ start செய்து பிறகு முயற்சிக்கவும்..

பூமகள்
03-06-2008, 05:23 PM
எனது கணினி.. winxp sp-2 தான்..
சொல்லிய வழி முறைப்படி.. செய்தேன்...

மெசேஜ் வெற்றிகரமாக எனக்கே அனுப்பி சோதனை செய்து வெற்றி கண்டேன்.. :)

விராடன் அண்ணா இந்த கேள்வியைக் கேட்டு நினைவூட்டியமைக்கும் பதிலளித்த ஆதிக்கும் நன்றிகள்..!!

praveen
05-06-2008, 05:08 AM
http://www.digicraft.com.au/yak/Download.php

மேலே கண்ட மென்பொருளையே நான் எனது நண்பர்கள், வாடிக்கையாளர்களுக்கு இந்த மாதிரி பயன்படுத்த தருகிறேன். இதன் முலம் குறுந்தகவல் அனுப்புவதோடு, ஒரு அலுவலக இனைப்பிற்குள் பைல்களையும் பரிமாறி கொள்ள முடியும்.

அந்த மென்பொருள் ஷேர்வேர் என்றாலும். அது தொடர்ந்து இயங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. முயன்று பாருங்கள். வித்தியாசத்தை உணர்வீர்கள்.

விகடன்
05-06-2008, 08:22 AM
services window-வில் messenger என்று ஒரு service இருக்கும், அது disable ஆகியிருக்கும்..


ஆமாம்.
தாங்கள் கூறியது சரியே.
எனக்கு மெஷன்சரினை “ஓப்” செய்து இருந்திருக்கிறது. தற்பொழுது சரிசெய்தாகிவிட்டதால் அலுவலகத்தில் எம்மவரிடையே தகவல் பரிமாற்றந்தான் :D

மிக்க நன்றி ஆதி

விகடன்
05-06-2008, 08:25 AM
http://www.digicraft.com.au/yak/Download.php

மேலே கண்ட மென்பொருளையே நான் எனது நண்பர்கள், வாடிக்கையாளர்களுக்கு இந்த மாதிரி பயன்படுத்த தருகிறேன். இதன் முலம் குறுந்தகவல் அனுப்புவதோடு, ஒரு அலுவலக இனைப்பிற்குள் பைல்களையும் பரிமாறி கொள்ள முடியும்.




எதுவித இதர மென்பொருளும் இல்லாமல் சாதாரண கணினிகளிற்கு மத்தியில் குறுந்தகவல் அனுப்பும் முறையாதலால்தான் கேட்டேன்.
இருந்தாலும் தங்களுடைய முறையினையும் கட்டாயம் பரீட்சித்து பார்க்கிறேன்.
எனது கேள்விக்கு இந்தளவு கரிசனை எடுத்து அளித்த தகவல்களிற்கு நன்றி.

praveen
05-06-2008, 08:39 AM
இந்த மெசஞ்சர் சர்வீஸ் குறிப்பாக விண்டோஸ் 2000 என்றால், இனையத்தொடர்பில் அந்த கணினி இருந்தால் சில தேவையில்லாத சிக்கல்கள் (பாப் அப் மெனுக்கள். உங்கள் கனினீ பாதுகாப்பற்று இருக்கிறது, இந்த தளம் வந்து மென்பொருள் பெறுங்கள் என்று) வருவதாக பல புகார் வருவதால், விண்டோஸ் 2000 பதிப்பில் அந்த சர்வீஸினை நான் கானும் கனினீக்களில் தடை செய்து விடுவேன்.

வேறு யாருக்கும் இந்த மாதிரி தொந்தரவு வந்திருக்கிறதா?.

விகடன்
05-06-2008, 08:53 AM
அதற்கு பதிலாக கணினியின் பெயரை போட்டு முயன்றோ???

கணினி பெயரை முதலில் போட்டுத்தான் முயன்றேன். பின்னர் ஐ.பி யினை அறிந்து அதை வைத்து போட்டேன். என்னதான் இருந்தாலும் ஐ.பி இனை மிஞ்சி ஒன்றுமில்லைத்தானே அன்பு.
இன்றுதான் மெசென்ஷர் டெசேபிலிலிருந்ததை ஓடோமட்டிக்க்கிற்கு மாற்றியமைத்து வெற்றியும் கண்டுவிட்டேன். :)

பாரதி
05-06-2008, 02:44 PM
அறியாத தகவல் தந்த ஆதிக்கும், பிரவீணுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

க.கமலக்கண்ணன்
06-06-2008, 11:38 AM
அற்புதமான தகவல் மிக்க நன்றி உங்கள் இருவருக்கும்...

ஷீ-நிசி
06-06-2008, 02:40 PM
மிக அருமையான தகவல்.. நன்றி ஆதி!

சாம்பவி
08-06-2008, 10:06 AM
நெட் மீட்டிங் இருக்கே... !!
கேம்பஸ் நெட்வொர்க்கில் தகவல் பரிமாற்றவும்
கோப்புகள் மற்றும் டெஸ்க்டாப், அப்ப்ளிகேஷன் பரிமாற்றவும்.,
ஆடியோ மற்றும் வீடியோ கான்ஃபெரென்ஸிங் செய்யவும்.,
இன்னமும் இதே... !
இதில் வொயிட் போர்டு வசதியும் இருப்பதால்
தொலைதொடர்பு வகுப்பறைகள் மற்றும் மீட்டிங் எல்லாமே ஒரே நேரத்தில்....
யாஹூவோ கூகுலோ இல்லாமலேயே.....!!!

இதற்கு நீங்க செய்ய வேண்டியதெல்லாம்..
அதிகமில்லை ஜெண்டில்மென்....
வெறும்... "conf" மட்டுமே... !!
ஹியர் யூ கோ... !!!!!

பி.கு: என்ன காரணத்தாலோ.... விஸ்டாவில் இந்த வசதியை கேட்ஸ் நீக்கிவிட்டார்...
ஸாரி அமரன்... :P !!!!!!

anna
08-11-2008, 07:55 AM
Windows

To a single host

உங்கள் Lan-ல் உள்ள ஒரு கணினிக்கு மட்டும் செய்தி அனுப்ப கீழ் உள்ள command-ஐ பயன்படுத்தவும்

net send <hostname> <message>

hostname - கணினியின் பெயர் அல்லது IP

To a Lan

உங்கள் Lan-ல் உள்ள அனைத்துக் கணினிக்கு அனுப்ப

net send <Lan IP> <message>


Lan IP - 192.168.0.0/24 or 192.168.1.0/24

Unix

To enable message

mesg y

To write message

write <user@hostname> <Message>

To a Lan

wall <message>

wall - write to all

தனி தனியாக ஒவ்வொரு கம்யூட்டருக்கு வேண்டுமானால் செல்கிறது ஆனால் அனைத்து கணிணிக்கும் செல்ல மாட்டேங்கீதே

192.168.0.0/24 or 192.168.1.0/24

மேற்கூறியதில் 24 என்பது எதை குறிக்கிறது கொஞ்சம் தெளிவாக சொன்னால் நல்லா இருக்கும். நன்றி

ஆதி
08-11-2008, 08:05 AM
192.168.0.0 - network ip

255.255.255.0 - netmask --> 32 bit இல்லை யா.. அதில் 3 octet நிறைச்சாசு.. அப்ப 24 bit

network/netmask - 192.168.0.0/24

--------------

உங்கள் network-கில் உள்ள கணினிகளின் ip என்ன என்று சொல்லுங்கள்..

anna
13-11-2008, 07:30 AM
192.168.0.0 - network ip

255.255.255.0 - netmask --> 32 bit இல்லை யா.. அதில் 3 octet நிறைச்சாசு.. அப்ப 24 bit

network/netmask - 192.168.0.0/24

--------------

உங்கள் network-கில் உள்ள கணினிகளின் ip என்ன என்று சொல்லுங்கள்..

எனது நிறுவனத்தில் மொத்தம் 19 கணினி உள்ளது அவைகளி ஐ.பி முறையே
192.168.1.1 என்பது இண்டர்நெட் ரவுட்டர் ஐ.பி அது போக 192.168.1.2 ல் இருநது 192.168.1.22 என ஐ.பி வைத்துள்ளேன்.எனது கணினியின் ஐ.பி 192.168.1.18 இதிலிருந்து மற்ற எல்லா கம்யூட்டர்களுக்கும் அனுப்பினால் செல்ல மறுக்கிறது ஒவ்வொன்றாக தட்டினால் செல்கிறது.சர்வீஸ்.எம்.எஸ்.ஸி யில் அனைத்து கணினிகளிலும் மெசெஷர் ஸ்டார்ட் மோடில் தான் உள்ளது.

ஆதி
13-11-2008, 07:32 AM
என்ன பிழைக்குறிப்பு தெறிக்கிறது என்பதையும் இங்கு பதிந்தால் நிச்சயம் தீர்வுகாண முயற்சிக்கலாம்..

anna
13-11-2008, 07:46 AM
என்ன பிழைக்குறிப்பு தெறிக்கிறது என்பதையும் இங்கு பதிந்தால் நிச்சயம் தீர்வுகாண முயற்சிக்கலாம்..

பிழைக்குறிப்பு எதுவும் வரவில்லை ஆனால் மெசெஜ் தான் மற்ற கம்யூட்டரில் தெரியமாட்டேங்கிறது. ஒவ்வொன்றாக மெசெஜ் செய்தால் தெரிகிறது

ஆதி
13-11-2008, 07:49 AM
இவ்வாறு முயற்சித்துப் பாருங்கள்..

net send * "Test Message"

சாம்பவி
13-11-2008, 12:34 PM
"நெட் மீட்டிங்" முயற்சித்தீர்களா... ??
குரூப் மெஸ்ஸேஜிங்கும் உண்டு அதில்.
டெக்ஸ்ட் மெஸ்ஸேஜ் மட்டுமல்ல*
வொயிட் போர்ட் வசதியும் உண்டு...
கான்ஃபெரன்ஸிங்கும் உண்டு.
போர்டில் எழுதுவதையோ அல்லது வரைவதையோ
அப்படியே ரியல் டைமில் மற்றவர்கள் பார்க்கவும் முடியும்.
உபயோகிக்கவும் மிகவும் சுலபமானது...
முயன்று பாருங்கள்... !

ஆமாங்க ஆமாம்... அத்தனையும் இலவசம் தான்... !!!!

anna
15-11-2008, 09:18 AM
இவ்வாறு முயற்சித்துப் பாருங்கள்..

net send * "Test Message"

சூப்பர் நண்பரே நீங்கள் சொன்னது போல் செய்தேன் அனைத்திலும் மெசெச் வந்து விட்டது