PDA

View Full Version : இ-பணம் அன்பளிப்பு

அறிஞர்
02-06-2008, 06:33 PM
மன்ற உறவுகளே..

மன்றத்தில் பங்களிப்புகளை ஊக்குவிக்க இபணம் அன்பளிப்பு நடைமுறையில் உள்ளது.

நல்ல பதிவுகளுக்கு தரத்தை பொறுத்து 100, 200, 500 என கொடுக்கலாம்.

சிலர் 10,000 மற்றும் 20,000 என கொடுப்பது... இபணத்தை விளையாட்டாக பயன்படுத்துவது போல் உள்ளது.

அதற்காக ஒரு சிறிய வேண்டுகோளை தங்களுக்கு வைக்க ஆசைப்படுகிறேன்.

இனி இபணம் அன்பளிப்பு அதிகபட்சம் 1000 என்று இருக்கட்டும். அதற்கு மேல் கொடுக்கவேண்டாம். இது அன்பு வேண்டுகோள்.

க.கமலக்கண்ணன்
02-06-2008, 06:36 PM
அப்படியே ஆகட்டும் திரு

அறிஞர்

அவர்களே... உங்களின்

அறிவுரையின் நடக்கிறோம்...

மலர்
02-06-2008, 07:52 PM
இனி இபணம் அன்பளிப்பு அதிகபட்சம் 1000 என்று இருக்கட்டும். அதற்கு மேல் கொடுக்கவேண்டாம். இது அன்பு வேண்டுகோள்.
அறிஞர் அண்ணாவின் யோசனையும் சரியானதே...
அப்படியே ஆகட்டும்... அண்ணா..
------------------
அப்போ இனிமே மொத்தமா அய்கேஷை கொள்ளை
அடிக்கவே முடியாதா.... :traurig001: :traurig001:

அமரன்
02-06-2008, 07:57 PM
அப்போ இனிமே மொத்தமா அய்கேஷை கொள்ளை
அடிக்கவே முடியாதா.... :traurig001: :traurig001:
ஏன் முடியாது?
கவர்ச்சியான பதிவுகளால் "கொள்ளையிட" முடியும்.

சூரியன்
03-06-2008, 04:28 AM
------------------
அப்போ இனிமே மொத்தமா அய்கேஷை கொள்ளை
அடிக்கவே முடியாதா.... :traurig001: :traurig001:

தினமும் கலக்கலான பதிவுகள் செஞ்சு வாங்கிடலாமே அக்கா.:icon_b:

மதி
03-06-2008, 05:33 AM
ஆஹா...
இ-பணக் கொள்ளையர்களுக்கு நிச்சயம் இது சவால் தான்..

aren
03-06-2008, 05:52 AM
அதிகமாக பணம் வைத்திருப்பவர்களிடமிருந்து எப்படி பணத்தை எடுப்பது.

ஏதாவது லூப் ஹோல் இருக்குதா?

Narathar
03-06-2008, 06:24 AM
இது நல்லதாத்தான் படுது...........

இந்த நேரத்தில் எனக்கு ஒரு சின்ன ஐடியா தோனுது.. ஹீ ஹீ எனக்கு இப்படி ஐடியா தான் தோணும். ( குறுக்கு புத்தின்னு சொல்வாங்களே அது இதைத்தானோ)

சரி விடயத்துக்கு வருகின்றேன்..................

இ-பணம் அன்பளிப்பு செய்யும் போது கொடுக்கவும் தோனும் ஆன நமக்கிட்ட இருக்கிறதே இம்புட்டுத்தான் அதுல நாம எப்படி கொடுக்கிறதுன்னும் தோணும்.. ஏன்னா இங்க அன்பளிப்பு கொடுக்கும் போது 10,000 20,000 என்று வாரிக்கொடுக்கும் வள்ளல்கள் தான் அதிகம்... 10, 20 ந்னு கொடுக்க கூச்சமக இருக்கும்.

ஆகவே யாராவது கட்டுப்பாட்டாளர் ஒருவர் ஒரு நல்ல பதிவைக்கண்டால் இ பணம் சிண்டிகேட் ஒன்றை தொடங்கலாம், அதில் அவ்வாக்கத்தை வாசித்து நல்லது என்று நினைப்பவர்கள் சிறு சிறு தொகைகளாக அன்பளிப்பு செய்துவிட்டு போகலாம்... பின்னர் கட்டுப்பாட்டாளர்கள் மொத்தமாக அத்தொகையை ஆக்கத்தை யாத்தவருக்கு கொடுக்கலாம்.......

இதில் தொழில் நுட்ப சிக்கல்கள் இருக்கின்றதா என்று எனக்கு தெரியாது... ஏதோ என் மனதில் பட்டதை சொன்னேன்

அறிஞர்
03-06-2008, 12:54 PM

நாரதரே.. உள்ள வேலைகளே பல..
இதையும் சேர்த்து செய்வது சற்று கடினமே...
சிறு சிறு தொகையாக ஒருவருக்கு கொடுப்பதில் தவறில்லை... கொடுங்கள்.

அக்னி
03-06-2008, 01:01 PM
இ-பணம் வைத்திருப்பதும் பெறுவதும் கௌரவம் என்ற நிலை உருவாக வேண்டுமானால், அறிஞரின் அறிவிப்பைக் கடைப்பிடித்தல் நன்று.
மன்றத்தில் விமர்சனங்கள் கருத்துக்களோடு, நட்சத்திர அந்தஸ்தும், இ-பண அன்பளிப்பும் வழங்குவது உறவுகளுக்கு நல்ல ஊக்கத்தையும், மகிழ்வையும் கொடுக்கும்.
அதிகமாகக் கொடுத்தால் பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அற்றுப் போகும்.
அளவாகக் கொடுத்துப் பெறுமதியானதாக்குவோம்.

தமிழநம்பி
01-09-2009, 03:56 PM
இ-பணம் என்றால் என்ன?

இதைக்கொண்டு என்ன செய்யவேண்டும்?

நான் மதிப்பெண் போலிருக்கிறது என்று எண்ணினேன்.
அன்புகூர்ந்து விளக்கமாகத்தெரிவிக்கவும்.

இதைப்பற்றி எங்கும் விளக்கிக் கூறியிருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை.

சிவா.ஜி
01-09-2009, 04:26 PM
அன்பு தமிழ்நம்பி. இந்தப்பணம் எண்ணிக்கையில் மட்டும் உங்களிடமிருக்கும். உங்கள் பதிவுகள் கூடக்கூட பணத்தின் இருப்பும் கூடும். உங்களுக்குப் பிடித்த பதிவுகளுக்கு அன்பளிப்பு வழங்க நினைத்தால் அவருடைய பதிவில் அவரின் iCash Credits என்பதற்கு அருகில் இருக்கும் Donate என்பதை அழுத்தினால் வேறு ஒரு பக்கம் திறக்கும். அதில் பெறுபவர் பெயராக நீங்கள் அன்பளிப்பு அளிக்க விரும்புபவரின் பெயர் இருக்கும்.

எதற்காக அளிக்க விரும்புகிறீர்கள் என்ற காரணத்தை எழுத மற்றொரு கட்டம் இருக்கும், எவ்வளவு அளிக்க விரும்புகிறீர்கள் என்பதற்கும் ஒரு கட்டம் இருக்கும். எல்லாக்கட்டங்களையும் நிரப்பி Donate என்று அழுத்தினால் நீங்கள் தர விரும்பும் பணம் அவருக்குச் சென்று சேர்ந்துவிடும்.

அதே போல உங்களுக்கும் யாராவது அன்பளிப்பு தர விரும்பினாலும் அது உங்களை வந்து அடையும். இந்தப் பணம் மன்ற உறவுகளை ஒருவருக்கொருவர், ஊக்கப்படுத்த பயண்படுவது.

தமிழநம்பி
01-09-2009, 04:46 PM
விளக்கம் தந்ததற்கு நன்றி, சிவா.

சிறுபிள்ளை
03-09-2009, 08:47 AM
விளக்கம் தந்ததற்கு நன்றி, சிவா.

தாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் எழுத நினைத்தேன்..அதற்குள் உங்களுக்கு விளக்கம் கிடைத்துவிட்டது. தாமதத்திற்கு மன்னிக்கவும் தமிழ் நம்பி.

தமிழநம்பி
04-09-2009, 03:42 AM
தாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் எழுத நினைத்தேன்..அதற்குள் உங்களுக்கு விளக்கம் கிடைத்துவிட்டது. தாமதத்திற்கு மன்னிக்கவும் தமிழ் நம்பி.

உங்கள் நல்லுள்ளத்திற்கு நன்றி நண்பரே!
___________________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீஒதுங்கி இருந்து விடாதேநீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்து விடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

நாஞ்சில் த.க.ஜெய்
18-11-2010, 01:05 PM
இ பணம் என்பது ஒரு விளையாட்டில் சேகரிக்கும் புள்ளிகள் போன்றதா? இதன் பயன்பாடு விருப்பப்பட்டவர்களுக்கு தானம் வழங்குவது போன்றா? இந்த இ பணம் முழுவதையும் நான் மற்றவர்களுக்கு தானமாக வழங்கினால் வழங்குபவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லைதானா? .அதுபோல் சேகரிக்கும் இ பணத்தின் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த உறுப்பினருக்கு என்ன பயன் ? இந்த கேள்விகள் அனைத்தும் பலநாட்களாக என்னுள் இருக்கிறது .இதன் தெளிவான பதிலும் விதிமுறைகளில் இருப்பதாக தெரியவில்லை.ஆகவே இதற்கு பதிலுரைக்குமாறு கேட்டுகொள்கிறேன் .
தங்கள் பதிலுக்காக
த.க.ஜெய்

பாலகன்
18-11-2010, 01:31 PM
இ.பணத்தை மற்றவருக்கு கொடுத்து அவர்களை உற்சாக படுத்துவது ரத்ததானம் போன்றது.

உடம்பில் உள்ள அனைத்து ரத்தத்தையும் நாம் மற்றவருக்கு கொடுத்துவிடமுடியாதே? அதுபோல இ.பணத்தையும் கொடுக்க மொத்தமாக கொடுக்க முடியாது. அதிகபட்சம் 1000 என்ற கட்டுபாடு உள்ளது. குறைந்தபட்சம் உங்கள் விருப்பம். 0வை தவிற :D

சிறந்த பதிப்பு எவையேனும் மன்றத்தில் காணும் வேளையில் ஓரிரு வரிகள் பாராட்டி பின்னூட்டமிட்டு கொஞ்சம் செலவுக்கு காசும் கொடுத்தீங்கன்னா அந்த படைப்பாளி இன்னும் உற்சாகமடைவார். :D

நீங்கள் எப்போதாவது படைப்புகளை பதியும் போது மற்றவர்களும் உங்களுக்கு இதுபோன்றே செய்வர். இது பரஸ்பரம் உற்சாகபடுத்திக்கொள்ளல் அவ்வளவே. ஆனால் ஒரே குடும்பத்தில் உள்ள மன்ற உறவுகள் இதுபோல மாறிமாறி ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக்கொள்வதால் ஏற்படும் இன்பமே இ.பணத்தால் கிடைக்கப்பெறும் பலன்

ஸொப்ப்ப்பா கண்ணை கட்டுது :D

இதோ உதாரணம் :

நண்பரே ஜெய்,
உங்கள் இந்த சிறந்த கேள்வியை பாராட்டி 100 இணைய காசுகள் (பணம்) அன்பளிப்பாக அளிக்கிறேன். (இது சும்மா உள்ளுளாகாட்டி தான் :D)

அன்புடன்
மகாபிரபு

Hega
07-12-2010, 06:50 PM
அடேங்கப்பா

இ. பணம் என்றால் என்ன என்பது இப்போது தான் புரிந்தது.

மகா பிரபு எனது கவிதை திரி ஒன்றில் அளித்திட்ட இ.பணம் ஏன் என்பது இப்போது புரிந்தது.

ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி மகா பிரபு.

பாலகன்
08-12-2010, 12:33 AM
அடேங்கப்பா

இ. பணம் என்றால் என்ன என்பது இப்போது தான் புரிந்தது.

.

ம் போங்க! நான் குடுத்த இ.பணத்தை வேணாம்னு சொன்னீங்கல்ல
உங்க பேச்சி கா :traurig001:

M.Jagadeesan
08-12-2010, 01:07 AM
இ.பணத்தை மற்றவருக்கு கொடுத்து அவர்களை உற்சாக படுத்துவது ரத்ததானம் போன்றது.

உடம்பில் உள்ள அனைத்து ரத்தத்தையும் நாம் மற்றவருக்கு கொடுத்துவிடமுடியாதே? அதுபோல இ.பணத்தையும் கொடுக்க மொத்தமாக கொடுக்க முடியாது. அதிகபட்சம் 1000 என்ற கட்டுபாடு உள்ளது. குறைந்தபட்சம் உங்கள் விருப்பம். 0வை தவிற :D

சிறந்த பதிப்பு எவையேனும் மன்றத்தில் காணும் வேளையில் ஓரிரு வரிகள் பாராட்டி பின்னூட்டமிட்டு கொஞ்சம் செலவுக்கு காசும் கொடுத்தீங்கன்னா அந்த படைப்பாளி இன்னும் உற்சாகமடைவார். :D

நீங்கள் எப்போதாவது படைப்புகளை பதியும் போது மற்றவர்களும் உங்களுக்கு இதுபோன்றே செய்வர். இது பரஸ்பரம் உற்சாகபடுத்திக்கொள்ளல் அவ்வளவே. ஆனால் ஒரே குடும்பத்தில் உள்ள மன்ற உறவுகள் இதுபோல மாறிமாறி ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக்கொள்வதால் ஏற்படும் இன்பமே இ.பணத்தால் கிடைக்கப்பெறும் பலன்

ஸொப்ப்ப்பா கண்ணை கட்டுது :D

இதோ உதாரணம் :

நண்பரே ஜெய்,
உங்கள் இந்த சிறந்த கேள்வியை பாராட்டி 100 இணைய காசுகள் (பணம்) அன்பளிப்பாக அளிக்கிறேன். (இது சும்மா உள்ளுளாகாட்டி தான் :D)

அன்புடன்
மகாபிரபு

இ_பணத்தை உ.பணமாக(உண்மையான பணம்) மாற்றினால் வசதியாக இருக்கும்.

பாலகன்
08-12-2010, 01:26 AM
இ_பணத்தை உ.பணமாக(உண்மையான பணம்) மாற்றினால் வசதியாக இருக்கும்.

உங்களிடம் உள்ள இ.பணம் அளவுக்கு நீங்க நீங்க வேண்டிய அளவுக்கு பொருள்கள் வாங்கலாம் விற்கலாம். ஆனால் இவையெல்லாம் நம் மன்றத்தில் மட்டுமே செல்லும் :D

ஆமா எதை வாங்கலாம் எதை விற்கலாம் தெரியுமா?
அன்பையும் நட்பையும் தான் :icon_rollout:

அன்புரசிகன்
08-12-2010, 01:29 AM

:icon_nono::icon_nono::icon_nono::icon_nono:

பாலகன்
08-12-2010, 02:03 AM
:icon_nono::icon_nono::icon_nono::icon_nono:

வேணாம்!! வேணாம்! வலிக்குது! வேணா! வலிக்க்க்குது! அழுதுருவேன்!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ங்! :D

இதைத்தானே சொல்லவர்றீங்க! :D

Hega
08-12-2010, 08:22 AM
ம் போங்க! நான் குடுத்த இ.பணத்தை வேணாம்னு சொன்னீங்கல்ல
உங்க பேச்சி கா :traurig001:

சரிங்க நீங்க கா சொன்னால் நான் கீ சொல்லி விடுறேன் கீயை போட்டு சமாதானமாகி விடுங்கோ..கூடவே அந்த கீயை கொண்டே லாக்கரில் இருக்கும் இ பணத்தை இன்னும் இன்னும் எனக்கு கொடுங்கோ..

இரத்தம் கொடுப்பதுபோல் என விளக்கம் வேற சொன்னீங்கல்லையா பிரபு....

பாலகன்
19-04-2011, 03:17 PM
இ.பணத்தை பற்றி தெரியாதவங்க இதை படிக்கவும்

ஷீ-நிசி
19-04-2011, 03:24 PM
இ.பணத்தை பற்றி தெரியாதவங்க இதை படிக்கவும்

எதை படிக்கனும்ங்க.... லிங்க் எதுமே இல்ல!!

selvaaa
19-04-2011, 03:31 PM
இ.பணத்தை பற்றி தெரியாதவங்க இதை படிக்கவும்

உங்களது இச்சேவைக்கு மிக்க நன்றி.

நானும் ஒர் செகண்ட் அசந்திட்டேன், எப்படிடா வீடு கட்டினார் என்று!

ஆமாங்க, நானும் படுகை.காம்/padukai.com எனும் ஒர் களத்தை நடத்தி வருகிறேன். அதில் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் ஒர் ரூபாய்(அசல் காசு) கொடுக்கலாம் என்பது திட்டம்.

ஆனால், அண்ணா சொல்லியது போல் " ஒர் ரூபாய் ஒர் படி அரிசி என்பது என் இலட்சியம், இப்பொழுது கிடைப்பது நிச்சயம்" என்பது போல் அதுவும் இலட்சியமாகவே இருக்கிறது என்னும் வெற்றி அடைய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.. அதற்காக தோல்வியில் விட மாட்டேன் உறுதி.

முக்கிய குறிப்பு : படுகை.காம்/padukai.com(புதிய சர்வர்க்கு மாற்றும் பணி நடைபெற்று வருவதால் 18/4 முதல் 21-4-2011 வரை உபயோகத்தில் இருக்காது)

ஷீ-நிசி
19-04-2011, 03:34 PM

சும்மாவே ஆயிரம் இரண்டாயிரம்னு நாங்கலாம் பதிவு போடுவோம்... அசல் காசுலாம் ஆரம்பிச்சீங்கனா.. கொடுத்து மாளாதுங்க... யோசிச்சி செய்யுங்க அப்பு!

selvaaa
19-04-2011, 03:39 PM
சும்மாவே ஆயிரம் இரண்டாயிரம்னு நாங்கலாம் பதிவு போடுவோம்... அசல் காசுலாம் ஆரம்பிச்சீங்கனா.. கொடுத்து மாளாதுங்க... யோசிச்சி செய்யுங்க அப்பு!

:lachen001::lachen001::lachen001:

நாங்க என்ன அத்தனை கேனயன்களா என்ன?

அதுக்கும் கட்டிஷன் இருக்குள்ள... ஆயிரம் என்ன ஒர் நாளைக்கு இலட்சம் கூட சம்பாதிக்கலாம்... உன்னால் முடியும் என்றால் எங்களாலும் முடியும்...

இதையும் கேட்டுப் பாருங்க >>
http://www.youtube.com/watch?v=rWh_qTl9Uw8

:icon_b::icon_b:

பாலகன்
19-04-2011, 05:56 PM
இ.பணத்தை மற்றவருக்கு கொடுத்து அவர்களை உற்சாக படுத்துவது ரத்ததானம் போன்றது.

உடம்பில் உள்ள அனைத்து ரத்தத்தையும் நாம் மற்றவருக்கு கொடுத்துவிடமுடியாதே? அதுபோல இ.பணத்தையும் கொடுக்க மொத்தமாக கொடுக்க முடியாது. அதிகபட்சம் 1000 என்ற கட்டுபாடு உள்ளது. குறைந்தபட்சம் உங்கள் விருப்பம். 0வை தவிற :D

சிறந்த பதிப்பு எவையேனும் மன்றத்தில் காணும் வேளையில் ஓரிரு வரிகள் பாராட்டி பின்னூட்டமிட்டு கொஞ்சம் செலவுக்கு காசும் கொடுத்தீங்கன்னா அந்த படைப்பாளி இன்னும் உற்சாகமடைவார். :D

நீங்கள் எப்போதாவது படைப்புகளை பதியும் போது மற்றவர்களும் உங்களுக்கு இதுபோன்றே செய்வர். இது பரஸ்பரம் உற்சாகபடுத்திக்கொள்ளல் அவ்வளவே. ஆனால் ஒரே குடும்பத்தில் உள்ள மன்ற உறவுகள் இதுபோல மாறிமாறி ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக்கொள்வதால் ஏற்படும் இன்பமே இ.பணத்தால் கிடைக்கப்பெறும் பலன்

ஸொப்ப்ப்பா கண்ணை கட்டுது :D

இதோ உதாரணம் :

நண்பரே ஜெய்,
உங்கள் இந்த சிறந்த கேள்வியை பாராட்டி 100 இணைய காசுகள் (பணம்) அன்பளிப்பாக அளிக்கிறேன். (இது சும்மா உள்ளுளாகாட்டி தான் :D)

அன்புடன்
மகாபிரபு

மனமகிழ்ச்சிகாக மன்றம் உருவாக்கிய இ.பணத்தை பற்றி புதிய நண்பர் தெரிந்துக்கொள்வார் என்று பார்த்தால் அவர் மற்ற தளத்திற்கு விளம்பரம் அல்லவா செய்கிறார். :fragend005:

selvaaa
20-04-2011, 02:33 AM
மனமகிழ்ச்சிகாக மன்றம் உருவாக்கிய இ.பணத்தை பற்றி புதிய நண்பர் தெரிந்துக்கொள்வார் என்று பார்த்தால் அவர் மற்ற தளத்திற்கு விளம்பரம் அல்லவா செய்கிறார். :fragend005:

விளம்பரமாகவும் பார்க்கலாம், அதே நேரத்தில் அதனை இணைய உண்மையாகவும் பார்க்கலாம்.

தமிழ் மன்றத்தின் இவ் இ பணத்தை நான் குறை கூறவில்லை. மகிழ்ச்சியே தெரிவித்து இருந்தேன். அதே நேரத்தில் நான் அதிர்ச்சி அடைந்ததற்கான காரணத்தை மட்டுமே சொன்னேன். அதாவது, நாம் அசல் காசு கொடுக்க முற்படும் பொழுது, நமக்கு முன்னரே இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் போல்" என்று தான்.

பின்னர், ஒருவர் அசல் பணம் என்ற ஒன்றை கொடுக்க முடியாது என்று சொல்லும் பொழுது அவர்க்கு சரியான விளக்கம் கொடுக்க வேண்டியது பதிவிட்ட எனது கடமை அல்லவா? அதனாலேயே, முன்னர் இப்படி ஒருவர் கேட்ட கேள்விக்காக பதிலிட்ட ஆடியோ கிளிப்பை இங்கு இணைத்தேன். ஆகையால், சரியாக பதிலிடும் எனது இப்பதிவை விளம்பரமாக பார்க்க முடியாது. களத்திற்கான சரியான வாதம்.

எத்தனையோ இணைய வேலை வாய்ப்புகள் பொய் என்று நிரூபிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில், சம்பாதிக்கவும் முடியும் என்பதுதான் எனது வாதம்.

எனது அவ் ஐடியாக்களைக் கொண்டு நான் மட்டும் அல்ல இம்மன்றம் கூட முயற்சித்து பார்க்கலாம். ஆனால், அறிந்தவர் தான் மேலும் மேலும் அதனை வலு சேர்த்து முன் கொண்டு செல்ல முடியும்.

ஒருவரால் முடியாமல் போனது கூட பலரால் கண்டிப்பாக முடியும்.

மனமகிழ்ச்சிக்காகத்தான் நாம் இங்கு குழுமுகிறோம்... ஆனால் அதற்குக் கூட பணம் தேவை! ஆம் இணைய பில் இல்லாமல் ஏது?

ஆனால், அப்பணத்தை நம் மனமகிழ்வின் மூலமே... போன போக்கில் நம் வீட்டிற்க்கு வரும் என்றால் யாருக்குத்தான் ஆசை வராது?

அதனை விளக்கமாக கூறுவது தான் அந்த ஆடியோ! மேலும் பல விளக்கப்பதிவுகள் என் களத்தில் இருக்கின்றன.

நான் இக்களத்திற்கு புதியவன் என்பதால், என்னுடைய சரியான பாதைகள் கூட உங்கள் கண்களுக்கு தவறாக தெரியலாம்.

ஆனால், கேள்வியை உருவாக்கியவன் பதில் கொடுக்கிறான் என்றால் அவன் மன்றத்திற்கு உறுப்படியானவன் தான்.

உங்களை சிந்திக்க சொல்லவில்லை...

பிடிக்காமல் போகுமாயின் பம்ப்/பின்னூட்டம் பண்ணாமல் விட்டு விடுங்கள் என்பது தான் இச்சிறியவனின் ஆசை.

அன்புரசிகன்
20-04-2011, 03:16 AM
பிடிக்காமல் போகுமாயின் பம்ப்/பின்னூட்டம் பண்ணாமல் விட்டு விடுங்கள் என்பது தான் இச்சிறியவனின் ஆசை.

மகாபிரபு சொன்னது உங்களுக்கு பிடிச்சிருக்கு அப்படித்தானே.. அப்புறம் ஏன் இந்த வரிகள்???

காரணம் பிடிக்கவில்லை என்றால் உங்களிடம் இருந்து இந்த வரிகள் வந்திராதே...

ஒரு சிறுவரிகள் மற்றவர்களின் மனதை பாதிக்கவைத்துவிடாதீர்கள். (மறை வழியில்) இது எனது கருத்து...

selvaaa
20-04-2011, 03:38 AM

நான் பிடித்திருக்கு என்று சொன்னது தமிழ் மன்றத்தின் "இ-பணம்" மேலும் அவர் இது பற்றிய விளக்காமன பதிவான இதனை எனக்கு சுட்டிக்காட்டியதும் எனக்கு பிடித்திருக்கிறது. அதற்கு நன்றியும் மீண்டும் ஒர் முறை தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த சிறு வரி அனைவரைது மனதையும் புண் படுத்தும் படி ஆனதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் அவர், தன்னை விளம்படுத்திக் கொள்கிறார்கள் என்று மன்றத்துடன் பகிர்ந்து கொண்டமையால் இவ்வாதம் உண்டாகிவிட்டது. அது போல், நான் பம்ப் செய்ய வேண்டாம் என்றது விளம்பரமாக கருதப்பட்ட அந்த விடியோ கிளிப் பதிவை மட்டுமே! தமிழ் மன்ற இ-பண பதிவை அல்ல!.

ஆகையால் மீண்டும் ஒர் முறை இரு வரியையும் சேர்த்து படிக்கவும்.

உங்களை சிந்திக்க சொல்லவில்லை...

பிடிக்காமல் போகுமாயின் பம்ப்/பின்னூட்டம் பண்ணாமல் விட்டு விடுங்கள் என்பது தான் இச்சிறியவனின் ஆசை.

அன்புரசிகன்
20-04-2011, 04:47 AM
ஆகையால் மீண்டும் ஒர் முறை இரு வரியையும் சேர்த்து படிக்கவும்.

இதை தாங்களும் ஒருமுறை செய்யவும்.

நான் உங்களது பதிவை பிரித்தெல்லாம் படிக்கவில்லை. உங்களது அந்த குறிப்பிட்ட பதிவை படித்தவிடத்து ஏதோ குறைகூறுவது போல் தான் எனக்கு தோன்றியது.

//பிடிக்காமல் போகுமாயின் பம்ப்/பின்னூட்டம் பண்ணாமல் விட்டு விடுங்கள் //

என்பதில் பம்ப் என்பதை விடுத்து படிக்கலாம் தானே.?? இதில் / என்ற குறியீடு அல்லது என்பதை தானே சொல்கிறது. பிடிக்காது போனால் பின்னூட்டம் இடவேண்டாம் என்பது தானே உங்களது கருத்து. ??? அதில் ஏதாவது மாற்றுக்கருத்து உண்டென்றால் மட்டும் சொல்லுங்கள். அப்படி உண்டு என்றால் அந்த வரி பிழையான அர்த்தம் தருகிறது. அல்லது நான் படித்த தமிழில் ஏதோ பிழை. சொன்னால் நானும் திருந்திக்கொள்கிறேன்.

அதுசரி பம்ப் என்றால் என்ன???

selvaaa
20-04-2011, 07:20 AM

:080402cool_prv:

சரி சரி...

பம்ப் என்றால் ஆங்கில வார்த்தை தான்.. பம்ப் பண்ணி அதையே/தவறையே மீண்டும் உயர்த்துதல்.