View Full Version : இ-பணம் அன்பளிப்பு
அறிஞர்
02-06-2008, 07:33 PM
மன்ற உறவுகளே..
மன்றத்தில் பங்களிப்புகளை ஊக்குவிக்க இபணம் அன்பளிப்பு நடைமுறையில் உள்ளது.
நல்ல பதிவுகளுக்கு தரத்தை பொறுத்து 100, 200, 500 என கொடுக்கலாம்.
சிலர் 10,000 மற்றும் 20,000 என கொடுப்பது... இபணத்தை விளையாட்டாக பயன்படுத்துவது போல் உள்ளது.
அதற்காக ஒரு சிறிய வேண்டுகோளை தங்களுக்கு வைக்க ஆசைப்படுகிறேன்.
இனி இபணம் அன்பளிப்பு அதிகபட்சம் 1000 என்று இருக்கட்டும். அதற்கு மேல் கொடுக்கவேண்டாம். இது அன்பு வேண்டுகோள்.
கமலகண்ணன்
02-06-2008, 07:36 PM
அப்படியே ஆகட்டும் திரு
அறிஞர்
அவர்களே... உங்களின்
அறிவுரையின் நடக்கிறோம்...
இனி இபணம் அன்பளிப்பு அதிகபட்சம் 1000 என்று இருக்கட்டும். அதற்கு மேல் கொடுக்கவேண்டாம். இது அன்பு வேண்டுகோள்.
அறிஞர் அண்ணாவின் யோசனையும் சரியானதே...
அப்படியே ஆகட்டும்... அண்ணா..
------------------
அப்போ இனிமே மொத்தமா அய்கேஷை கொள்ளை
அடிக்கவே முடியாதா.... :traurig001: :traurig001:
அமரன்
02-06-2008, 08:57 PM
அப்போ இனிமே மொத்தமா அய்கேஷை கொள்ளை
அடிக்கவே முடியாதா.... :traurig001: :traurig001:
ஏன் முடியாது?
கவர்ச்சியான பதிவுகளால் "கொள்ளையிட" முடியும்.
சூரியன்
03-06-2008, 05:28 AM
------------------
அப்போ இனிமே மொத்தமா அய்கேஷை கொள்ளை
அடிக்கவே முடியாதா.... :traurig001: :traurig001:
தினமும் கலக்கலான பதிவுகள் செஞ்சு வாங்கிடலாமே அக்கா.:icon_b:
ஆஹா...
இ-பணக் கொள்ளையர்களுக்கு நிச்சயம் இது சவால் தான்..
அதிகமாக பணம் வைத்திருப்பவர்களிடமிருந்து எப்படி பணத்தை எடுப்பது.
ஏதாவது லூப் ஹோல் இருக்குதா?
Narathar
03-06-2008, 07:24 AM
இது நல்லதாத்தான் படுது...........
இந்த நேரத்தில் எனக்கு ஒரு சின்ன ஐடியா தோனுது.. ஹீ ஹீ எனக்கு இப்படி ஐடியா தான் தோணும். ( குறுக்கு புத்தின்னு சொல்வாங்களே அது இதைத்தானோ)
சரி விடயத்துக்கு வருகின்றேன்..................
இ-பணம் அன்பளிப்பு செய்யும் போது கொடுக்கவும் தோனும் ஆன நமக்கிட்ட இருக்கிறதே இம்புட்டுத்தான் அதுல நாம எப்படி கொடுக்கிறதுன்னும் தோணும்.. ஏன்னா இங்க அன்பளிப்பு கொடுக்கும் போது 10,000 20,000 என்று வாரிக்கொடுக்கும் வள்ளல்கள் தான் அதிகம்... 10, 20 ந்னு கொடுக்க கூச்சமக இருக்கும்.
ஆகவே யாராவது கட்டுப்பாட்டாளர் ஒருவர் ஒரு நல்ல பதிவைக்கண்டால் இ பணம் சிண்டிகேட் ஒன்றை தொடங்கலாம், அதில் அவ்வாக்கத்தை வாசித்து நல்லது என்று நினைப்பவர்கள் சிறு சிறு தொகைகளாக அன்பளிப்பு செய்துவிட்டு போகலாம்... பின்னர் கட்டுப்பாட்டாளர்கள் மொத்தமாக அத்தொகையை ஆக்கத்தை யாத்தவருக்கு கொடுக்கலாம்.......
இதில் தொழில் நுட்ப சிக்கல்கள் இருக்கின்றதா என்று எனக்கு தெரியாது... ஏதோ என் மனதில் பட்டதை சொன்னேன்
அறிஞர்
03-06-2008, 01:54 PM

நாரதரே.. உள்ள வேலைகளே பல..
இதையும் சேர்த்து செய்வது சற்று கடினமே...
சிறு சிறு தொகையாக ஒருவருக்கு கொடுப்பதில் தவறில்லை... கொடுங்கள்.
அக்னி
03-06-2008, 02:01 PM
இ-பணம் வைத்திருப்பதும் பெறுவதும் கௌரவம் என்ற நிலை உருவாக வேண்டுமானால், அறிஞரின் அறிவிப்பைக் கடைப்பிடித்தல் நன்று.
மன்றத்தில் விமர்சனங்கள் கருத்துக்களோடு, நட்சத்திர அந்தஸ்தும், இ-பண அன்பளிப்பும் வழங்குவது உறவுகளுக்கு நல்ல ஊக்கத்தையும், மகிழ்வையும் கொடுக்கும்.
அதிகமாகக் கொடுத்தால் பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அற்றுப் போகும்.
அளவாகக் கொடுத்துப் பெறுமதியானதாக்குவோம்.
vBulletin® v3.7.2, Copyright ©2000-2009, Jelsoft Enterprises Ltd.