PDA

View Full Version : காதல் கடிதம்...



shibly591
02-06-2008, 09:13 AM
எழுதிக்கொண்டிருக்கிறேன்
ஒரு காதல் கடிதம்...
கிழிபடும் என்பது
நன்றாகவெ தெரிந்திருந்தும்
எழுதிக்கொண்டேயிரக்கிறேன்
ஒரு காதல் கடிதம்...!

தமிழ் மகன்
02-06-2008, 10:27 AM
வாவ் அருமையான வரிகள்.நல்ல கவிதை உங்கள் கடிதம் கிழிபடாமல் இருக்க வாழ்த்துகிறேன்.
எனக்கு ஒரு விண்ணப்பம் அப்படியே உங்கள் கடிதத்தில் காதலியை வர்ணத்ததை எங்களோடும் பகிர்ந்துகொள்ள முடியுமா?

shibly591
02-06-2008, 10:34 AM
நன்றி நண்பரே...எனது காதலி எப்படி என்பதை கவிதையாகவே விரைவில் சொல்கிறேன்....

தாமரை
02-06-2008, 10:39 AM
கிழிக்கப்படும் கவிதைகள்
புண்ணியம் செய்தவை
அவள் கைபட்டாதால்..

சொல்லின
எழுதியவனேக் கசக்கி எறிந்து
குப்பையானக் கவிதைகள்!!!

shibly591
02-06-2008, 10:45 AM
உண்மைதான் நண்பர் தாமரை...ஒரு சின்ன மாற்றம் அவள் கைகள்தான் ரொம்ப புண்ணியம் செய்தவை..எனது கவிதைகளை கிழிக்கும் உரிமை கிடைத்திருக்கிறதே...?அதற்காக

கண்மணி
02-06-2008, 10:52 AM
உண்மைதான் நண்பர் தாமரை...ஒரு சின்ன மாற்றம் அவள் கைகள்தான் ரொம்ப புண்ணியம் செய்தவை..எனது கவிதைகளை கிழிக்கும் உரிமை கிடைத்திருக்கிறதே...?அதற்காக

இந்தப் பதிலைப் படித்ததும் என்கைகள் புண்ணியம் செய்யத் துடிக்கின்றன.
:D:D:D

shibly591
02-06-2008, 10:58 AM
அதாவது எனது கவிதைகளை உங்கள் கைகளால் கிழித்தெறிய வேண்டும் என்கிறீர்கள்...எத்தனை நாட்களாய் என்னோடு கோபம்?அத்தனை மோசமாகவா எனது கவிதைகள் இருக்கின்றன????????(உட்கார்ந்து யோசிக்கிறீங்க போல)..பரவாயில்லை உங்கள் கைகள் புண்ணியம் செய்யட்டும்....எனது எல்லா கவிதகளையும் அனுப்பி வைக்கிறேன்...இஷ்டத்துக்க கிழிங்க...

கண்மணி
02-06-2008, 11:14 AM
கோபம் வேண்டாம் ஷிப்லி!

கொஞ்சம் உட்கார்ந்துதான் யோசிக்கலாம்.

கவிதைகள் மேல் உங்களுக்கு அதிக மதிப்பா, காதலியின் மேல் உங்களுக்கு அதிக மதிப்பா?

ஒருபக்கம் என்ன சொல்றீங்க, அவள் என்கவிதைகளை கிழித்துதான் எறியப் போகிறாள்னு தெரியும். இருந்தும் எழுதுகிறேன். அவள் தொட்டுக் கிழிப்பாளென்றாலும் அவளுக்காக எழுதணும் என்று காதலியை மேலே வச்சிருக்கீங்க.

இன்னொரு பக்கம் என்ன சொல்றீங்க, என் கவிதையைக் கிழிக்க காதலியின் கைகள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் எனச் சொல்றீங்க. ஆக உங்கக் கவிதையைத் தொடவே புண்ணியம் செய்திருக்கவேண்டும் எனக் கவிதையை உயர்த்திச் சொல்லி இருக்கீங்க..

கவிதையைக் கிழிக்க உரிமை புண்ணியம் செய்தால் மட்டும்தான் கிடைக்கும்னா, உங்கள் கவிதையைப் படிக்கப் பாவம் செய்திருக்க வேண்டும் என்று ஒரு மறைபொருள் வருதே கவனிக்கலையோ?

ரூம் போட்டு யோசிச்சா, என் கவிதையைத் தொடவே அவள் கைகள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் எனப் போட்டிருந்தா இந்தப் பேச்சு வந்திருக்குமா?

உறுதியா ஒரு விஷயம் சொல்லுங்க, புண்ணியம் பண்ணினது கவிதையா? காதலியா? நீங்களா? இல்லை நானா?


தாமரை அண்ணா ஒரு பழைய பதிவில சொல்லீருப்பார்.

ஒருத்தரோட பசியை தீர்க்கறது மிகப் பெரிய புண்ணியம், இன்னொருத்தருக்குப் புண்ணியத்தைக் கொடுக்கறது மிகப் பெரியப் புண்ணியம்.

கோழி என் பசியைத் தீக்குது. அது கோழிக்குப் புண்ணியம்.
கோழிக்கு அந்தப் புண்ணியத்தைத் தர்ரதாலே அது மிகப் பெரிய புண்ணியம் என்று.

அப்படி ஒரு பதிலைச் சொல்லிராதீங்க.!!! :lachen001::lachen001::lachen001: