PDA

View Full Version : சிறு முயற்சி



tamilkumar
02-06-2008, 04:14 AM
விக்கிரமாதித்தன் கதையில் விவகாரமான வேதாளம்
விரைந்தோடி மரமேறுவதை கதையென்றுதான் நினைத்திருந்தேன்
நிஜத்தில் மனமென்னும் வேதாளம் மறக்கநினைக்கிற
நினைவுகளை மீண்டும்மீண்டும் கண்முன் நிறுத்தும்வரை

சாத்தான்கள் வேதம்ஓதும் என்பது பழமொழி
சாமான்யர்கள் சிகரெட் புகைப்பர் என்பது புதுமொழி
சிகரெட்டுக்கு பல நல்ல பழக்கங்கள் உண்டாம்
சிவபக்தன்போலே அதைப் பிடிப்பவர்க்கு விசுவாசமாய்

சிறிதுசிறிதாக கொன்று சிவபதவியளிக்கும் சிறுகருவியாய்
ஆட்கொல்லி போலே ஆளைக்கொல்லும் அதை
நிறுத்துங்கள் இல்லையெனில் உங்கள் இதயதுடிப்பை
நிறுத்திவிடும் விரைவில் ஆம் வெகுவிரைவில்.

-தமிழ்குமார்

aren
02-06-2008, 05:01 AM
உங்கள் சிறு முயற்சி அழகாக அருமையாக வந்திருக்கிறது. சிகரெட் பிடிப்பவர்களை நன்றாக வாட்டியெடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

அனுராகவன்
02-06-2008, 12:08 PM
பாராட்டுக்கள் தமிழ்குமார்...
தொடர்க

இளசு
15-06-2008, 12:09 AM
பாராட்டுகள் தமிழ்க்குமார்..

அவசியமான சேதி அடக்கிய கவிதை..

(என் முதல் கவிதையும் இதே சிகரெட் சாத்தானைச் சாடித்தான்..)

ஆதவா
19-06-2008, 12:15 PM
அப்படியென்றால் சிகரெட்டை விட்டொழிப்பதுதான் உங்கள் சிறுமுயற்சியா? :D

வித்தியாசமாய் கவிதைகள் படைக்க வாழ்த்துகள்..

அமரன்
13-08-2008, 09:29 PM
முதல் கருவே ஆரோக்கியமாக உள்ளது. அதற்கு என் பாராட்டுகள்.

அடுத்த கவிதையை எதிர்பார்த்து எதிர்பார்த்து கண்கள் பூத்து விட்டன தமிழ்க்குமார்.

அறிஞர்
13-08-2008, 10:53 PM
சிகரெட் பற்றி புதிய சிந்தனை...

அருமை.. அன்பரே.. இன்னும் எழுதுங்கள்.