PDA

View Full Version : முதல் கவிதை



tamilkumar
02-06-2008, 04:02 AM
இனிமையான ஒரு பொன்மாலை பொழுதில்தான்
உன்னை முதன்முதலில் பார்த்தேன்
உன்னைக் கண்டவுடனே வேறு யாரிடமும் நீ அகப்படும்முன்
உன்னை என்வசம் ஆக்கிவிட்டேன்
உறங்கும்நேரம் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் நீ என்வசமே இருந்தாய்
நீ என்னிடம் வந்தவுடன்தான் எனக்கு அதிர்ஷ்டயோகம்
உன்னைவைத்து பல காரியங்களைச் சாதித்தேன்
பேருந்திலும், ரயில்பயணங்களீலும் கூட
உன்னை எவ்வளவு பத்திரமாக பாதுகாத்தேன்
ஆனால் நீயோ இன்று என்னைவிட்டு
இன்னொருவனின் கைகளில் தஞ்சமடைந்துவிட்டாய்
எங்கே இருக்கிறாய்?
காணாமல் போன என் மணிபர்ஸே!

(நான் எழுதி எங்கள் கல்லூரி மலரில் வெளியான ஒரு கவிதை)


-தமிழ்குமார்

இராஜேஷ்
02-06-2008, 04:11 AM
வாருங்கள் நண்பரே! அருமையான கவிதை, இணியாவது வுஷாராயிருங்கள்

aren
02-06-2008, 05:03 AM
எனக்கும் மிகவும் பிடித்தது என்னுடைய மணிபர்ஸ்தான். ஆனால் என்ன செய்வது இரண்டு வருடங்களுக்கொருமுறை அதை மாற்றிவிடுகிறேன்.

உற்ற நண்பணாக இருக்கும் இவனை எப்படி நொடிப்பொழுதில் மாற்றிவிடுகிறோம். மனிதன் சுயநலம் மிக்கவன் தான்.

உங்கள் பர்ஸ் கூடியவிரைவில் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்.

செந்தமிழரசி
02-06-2008, 05:16 AM
நன்று குமார், சொற்சுருக்கத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே !!

நன்றி

அனுராகவன்
02-06-2008, 11:42 AM
முதல் கவிக்கு என் நன்றி
தொடர்ந்து எழுதுங்கள்

மன்மதன்
02-06-2008, 01:19 PM
கடைசி வரியை படித்ததும்
மறுபடியும் முழு கவிதையும்
படித்தேன்..

கலக்கல்..

பாலகன்
02-06-2008, 08:20 PM
நண்பரே குமார்,,, தாசரே அருமையான கவிதையை தந்ததற்காக உமக்கு பில்லாவின் பாராட்டுக்கள்,,,,,,,

தொடரட்டும் உமது கவிதை பணி

அன்புடன்
பில்லா

அமரன்
02-06-2008, 08:22 PM
"மணி"க்கவிதை.

தாயகத்தில் இருக்கும்போது தூக்கத்திலும் பிரிந்ததில்லை. கண்விழிக்கும் பொழுதுகளில் தலையணை தவறி இருக்கும். பர்ஸ் அணைப்பிலிருக்கும்.

இறுதிவரை ஊகிக்க இயலாதபடி எழுத இன்னும் முயன்றிருக்கலாம்.. முதல் மோசமில்லை. பாராட்டுகள்.