PDA

View Full Version : துளிர்க்காத காதல்



shibly591
01-06-2008, 07:26 AM
நம் காதல் பிரிவை நீ
வலுத்துச்சொன்ன
அந்த அந்திப்பகல் பொழுதில்
பொழிந்து கொண்டிருந்தது மழை
வாடிய பூக்களை உதிர்த்தபடி செடி
அசைந்த காற்றில் முறிந்த இலை
......
இன்று அவையெல்லாமே
மீண்டும் துளிர்த்துக்கொண்டிருக்கிறது
.....
நம் காதலைத்தவிர...!

அமரன்
02-06-2008, 06:36 PM
புதிய பூக்கள் பூப்பதும்
புதிதாக இலை முளைப்பதும்
இயற்கை வரம்.
காதல்???????

shibly591
03-06-2008, 10:32 AM
காதல் கடவுள் வரம் என்று நினைக்கிறேன்...