PDA

View Full Version : என் உலகில்



ஆதி
01-06-2008, 06:55 AM
செடிகள் என்னைக்
கவனிப்பதில்லை

பனித்துளிகள் என்னைக்
கவனிப்பதில்லை

தேவதைகள் எனக்கு
அருள்வதில்லை..

...... ........... ............. ....
..... ......... ..... ......... ......
.. ............. ..... ....... .......... ........


நான்

குயிலின் இசைக் கேட்கிறேன்
மேகங்களின் மென்மை துய்கிறேன்
மின்மினிகளை ரசிக்கிறேன்
இவை யாவையும்
கவிதை எழுதுகிறேன்

என் உலகில்
எனக்கு இருக்க பிடித்திருக்கிறது

அமரன்
01-06-2008, 06:16 PM
எனக்காக....

பூத்துக் காத்திருக்கும் செடிகள்.
குற்றுயிருடன் இருக்கும் பனித்துளி.
காத்திருப்பதைக் கவனிக்காமல்
போகுமெனைத் தொடரும் தேவதைகள்..
............................................................
............................................................
உலகத்தில் எல்லாம் எனக்காக.
உலகத்தை எனக்குப் பிடித்திருக்கிறது!

தற்கொலையாளிகளுக்கும்
விரக்தியின் அடிமைகளுக்கும்
சரியான சிகிச்சைக் கவிதை!
பாராட்டுகிறேன் ஆதி.

அறிஞர்
10-06-2008, 03:31 PM
கவனிக்காதவரைப் பற்றி கவலையில்லை...
ரசிக்கக்கூடியதில் திருப்தி....

அருமை ஆதி

ஷீ-நிசி
10-06-2008, 03:51 PM
சில மின்மினிகளும், குயில்களும், அலைந்து செல்லும் மேகங்களும் கவிதைக்கு காரணமாகின்றன....

கவனிக்காது போன செடிகளும், பனித்துளிகளும், தேவதைகளும் கவனிக்காது போனாலும் அவைகளும் கவிதையில் சங்கமித்துவிட்டன...

மென்மையான கவிதை... வாழ்த்துக்கள் ஆதி!

இளசு
10-06-2008, 09:11 PM
தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்..

(பாசம் படத்தில் - உலகம் பிறந்தது எனக்காக -
எனத்தொடங்கும் ஒளிப்பார்வைப் பாடல் இது..)

இவ்வகை சுய ஊக்கக்கவிதைகளின் விசிறி நான்..

பாராட்டுகள் ஆதி!