PDA

View Full Version : துவக்க முடிவு..!பூமகள்
01-06-2008, 06:38 AM
http://img32.picoodle.com/img/img32/4/5/31/poomagal/f_directionbom_99b2708.jpg

தூரத் தெரியும்
ஒற்றை மரம் நோக்கி
வடக்கிருக்கிறது..
உடைந்த திசையிலி
கைகாட்டி..!

shibly591
01-06-2008, 07:05 AM
மன்னிக்கவம் நண்பி..கவிதையின் இருண்மை சற்று மயக்ககிறத.கவிதை எனக்குப்புரியவில்லை

அமரன்
02-06-2008, 03:58 PM
வடக்கிருந்தால் திக்குகள் தெரியும்..

பூமகள்
02-06-2008, 04:10 PM
வடக்கிருந்தால் திக்குகள் தெரியும்..
சொர்க்கமா நரகமா...??:confused::confused:

சிவா.ஜி
02-06-2008, 04:14 PM
வடக்கிருப்பது என்றால் மரணத்தை எதிர்நோக்கி இருப்பது என்று பொருளல்லவா...உடைந்த திசைக்காட்டி, துவக்கத்தைக் காட்ட இயலாமல் தன் முடிவை நெருங்குகிறதா....

யோசிக்கவைக்கும் வரிகள். என் யூகம் தவறென்றால் விளக்குவாயா பூ?

பூமகள்
02-06-2008, 04:22 PM
சூப்பர் சிவா அண்ணா...!! பாராட்டுகிறேன்..! நான் அடிக்கடி சொன்னது போல.. இருவரும் பல சமயங்களில் ஒரே போல் சிந்திக்கிறோம்..!!

உங்க கவிக்கரு கண்டுபிடிப்பு என்றைக்கு சோடம் போயிருக்கிறது..??!!
கவி விளக்கம் இதோ...
உடைந்த திசைகாட்டி....
அந்த சாலையில் தனது பயணத்தைத் துவங்கும் மக்களின் பயணத்தின் துவக்க திசையைக் காட்ட இயலாமல்... இறுதி நாட்களை நெருங்குகிறதண்ணா...!!

அப்பாடா.. ஒருவருக்குமே புரியாதோ என்று பயந்தேன்..!! சிவா அண்ணா இருக்க பயமெதற்கு...??!! ;) :)

அமரன்
02-06-2008, 06:04 PM
வடக்கிருத்தல் எனில் வடக்கு நோக்கியிருந்து உண்ணா நோன்பிருத்தல்.
இப்ப சொல்லுங்க பூ...
வடக்கிருந்தால் திக்குத் தெரியுமா இல்லையா?

பூமகள்
02-06-2008, 06:16 PM
வடக்கிருத்தல் பண்டைய சங்க இலக்கியங்களில்.. மன்னர் எல்லா பற்றுகளையும் துறந்து வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணாவிரதமிருந்து உயிர் துறக்கும் ஒரு நிகழ்வு என்று கருதி வடக்கிருந்தல் எனும் சொல்லாடலைப் பயன்படுத்தினேன்..

இங்கே... திசைகாட்டும் பணி முடிவடைந்த நிலையில்.. வயதாகி... பாழ்பட்ட.. திசைகாட்டியால்.. காற்றில் சுழன்று கொண்டு இருக்கும் அமைப்பில்.....

மரணப் படுக்கையில்.. வடக்கிருக்கிறது என்று சொல்லாடினேன்...
இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது...

திசைகாட்டி சுட்டும் திசை சரியானதென்று கொள்ள முடியாது என்பதே...!!

1. ஏற்கனவே மரணப்படுக்கையில் இருப்பதால் தான் வடக்கிருத்தல் வந்தது.. இனி எப்படி மாறும்?? புனர்ஜென்மம் கொடுக்க மண்ணின் மைந்தர்கள் வந்தால் சாத்தியம்..!

2. ஏற்கனவே பதிலிட்டது தான்.. சுட்டும் திசை.. சரியான திசையென்று கொள்ள முடியாத அளவு பழுதான திசைகாட்டி..! எங்ஙனம் உண்மையறிவீர்??

ஆழ்ந்த கேள்விகள்..சிந்திக்க வைக்கும் பின்னூட்டங்கள்.. அகம் மகிழ்ந்தேன்.. நன்றிகள் அமரன் அண்ணா. :)

தாமரை
03-06-2008, 06:06 AM
வழிகாட்ட வேண்டியவர் வடக்கிருக்கிறார். இனி வாழ்ந்து பிரயோசனமில்லை என்று..

கைகாட்டி மரத்துணையோடு பயணம் போனவர் சிறிது குழம்பலாம். ஆனால் வழிகாட்ட நிலவும், கதிரும், நட்சத்திரங்களும் கைகாட்டிகளாய் இருப்பதை அறிந்து கொண்டால் வடக்கிருக்கும் கைகாட்டியும் அம்புப்படுக்கையின் பிதாமகன்.

வடக்கிருத்தல் என்பதுத் தற்கொலைக்குச் சமானம் பூ.. இங்கு வழிகாட்டிகள் வடக்கிருப்பதில்லை. புறமுதுகில் புண்பட்டாலும்... ;)

பூமகள்
08-06-2008, 01:12 PM
நன்றி தாமரை அண்ணா.

இளசு
08-06-2008, 02:12 PM
சொல்லாடல் கச்சிதம்..
திசைகாட்டியின் இறுதி சொல்ல வந்ததிலேயே
திசைச்சொல் வந்ததால் சின்ன சுவைச்சிக்கல்..

அதனால் விளைந்த தமிழாடல்..
அமரனும் தாமரையும் அளித்த மேலூட்டல்..

அதிலும் வழிகாட்டிகளின் அழிச்சாட்டியம் பற்றிய தாமரையின் நக்கல்..

மொழியாள்கையின் அடுத்த படி
இவ்வகைக் கவிதைகள்...

பலே பாமகள்!:icon_b:

பூமகள்
08-06-2008, 02:22 PM
எங்கே தமிழின் சொல்லாடலில் தவறிவிட்டேனோ என்று பதைபதைத்துவிட்டேன் பெரியண்ணா... :icon_ush::confused:

தங்களின் தெளிவுரை தெளிவாக்கியது...:icon_rollout: மனதைக் களிப்பாக்கியது..!!

மிகுந்த நன்றிகள் பெரியண்ணா..! :)

அறிஞர்
10-06-2008, 04:03 AM
பூமகளின் வளர்ச்சி.. இக்கவிதையில் அழகாக தெரிகிறது..
அருமை தோழியே..

பூமகள்
13-06-2008, 06:41 AM
மிக்க நன்றிகள் அறிஞர் அண்ணா. :)

kavitha
13-06-2008, 08:39 AM
படமும், கவிதையும் நன்றாக இருக்கிறது பூமகள். ஒரு காட்சியை கவிதையாக்கி அதில் ஆழமான கருவையும் முன் வைத்து எழுதியிருக்கிறாய் வாழ்த்துகள். இன்னும் இது போல் நிறைய எழுதவேண்டும். அந்த திறமை உன்னிடம் நிறைய இருக்கிறது.

"துவக்க முடிவு" - இந்தத் தலைப்பின் அர்த்தம் என்னம்மா? இடையில் உள்ள உருபு மறைவு நிறைவைத்தரவில்லையே.. கவனிப்பாயா?

பூமகள்
13-06-2008, 09:21 AM
"துவக்க முடிவு" - இந்தத் தலைப்பின் அர்த்தம் என்னம்மா?எந்த ஒரு பயணத்துக்கும் வழி காட்டியாக.. பயணத்தின் ஆரம்பமாக அமைவது.. திசைகாட்டும் கைகாட்டி தானென்பது என் தோற்பாடு.. அதன் 'முடிவு' பற்றி சொல்லும் கவிதையென்பதால்.. துவக்க முடிவு.. என்று பெயரிட்டேன் கவி அக்கா.:icon_ush:


இடையில் உள்ள உருபு மறைவு நிறைவைத்தரவில்லையே.. கவனிப்பாயா?அந்த அளவுக்கெல்லாம் பூவு பெரிய தமிழ் கவிதாயினி இல்லையக்கா.. ஏதோ கிறுக்குகிறேன்..:icon_rollout: உங்களைப் போன்ற தமிழ் புலவர்கள் தான் வழிகாட்ட வேண்டும் இந்த மழலைப்பூவுக்கு....!!:icon_ush::icon_ush:

உங்களின் விமர்சனத்துக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றிகள் கவி அக்கா. :)

kavitha
13-06-2008, 09:39 AM
அன்பு பூ,
நானும் அதே கிறுக்கல் பேர்வழி தான். (we are in the same sail). புலமை என்பதெல்லாம் மிகவும் மிகையான சொல்.


எந்த ஒரு பயணத்துக்கும் வழி காட்டியாக.. பயணத்தின் ஆரம்பமாக அமைவது.. திசைகாட்டும் கைகாட்டி தானென்பது என் தோற்பாடு.. அதனன் முடிவு' பற்றி சொல்லும் கவிதையென்பதால்.. துவக்க முடிவு.. என்று பெயரிட்டேன் கவி அக்கா
கவிதையைப்படித்ததும் அது புரிந்தது பூமகள்.

'துவக்க' 'முடிவு' என்ற இரு வார்த்தைகளுக்கிடையில் ஏ, இல், இன் என்ற உருபுகள் மறைந்து நின்று ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் நிற்கிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுப்பது கவிதை எழுதிய உனது விருப்பம். கவிதையில் குறையொன்றும் இல்லை. இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கணிப்பு அவ்வளவே.