PDA

View Full Version : என்னைப்போல எத்தனைபேரோ.........?



shibly591
01-06-2008, 05:13 AM
:lachen001:



நண்பர்காள்..!
எனது காதலியின் பெயர்
பவித்ரா?
எனது திருமண அட்டையில்
மட்டும்
இந்தப்பெயரை எதிர்பார்க்கவேண்டாம்...??????!!!!!!!

சாம்பவி
01-06-2008, 07:29 AM
இது.... யதார்த்தமா...... !!!!!
கலப்படமில்லா
சுத்தமான துரோகத்தால்
செய்யப்பட்டிருக்கும்
படுகொலை... !!!!!

நெஞ்சில் உரமின்றி..
நேர்மைட்த் திறமின்றி
வஞ்சனை செய்வாரடி கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி....


*

shibly591
01-06-2008, 07:39 AM
நீங்கள் என்னதான் சொல்லங்கள்...இப்படித்தான் நடக்கின்றத பெரும்பான்மையாக..நானொன்றும் இதய சுத்தியில்லாமல் இப்படி எழுதவில்லை..சம்பந்தப்பட்டவர்கள் கொஞ்சம் சிந்திக்கவும்..தூய அன்பை நிராகரிக்காமல் இருக்கவுமே எழுதினேன்.சற்று நகைச்சுவையாகவம் எழுத விடுங்களேன்..எல்லாவற்றையும் ஏன் கூரிய முரட்டுக்கண்ணோட்டத்தில் பார்க்கிறிர்கள?எப்படியோ...சிரிக்கவும்...முடிந்தால் கொஞசம் சிந்திக்கவுமே இது எழுதப்பட்டது தவிர வேறு உள்நோக்கம் எதுவுமில்லை

சாம்பவி
01-06-2008, 07:52 AM
நகைச்சுவைக்காய் நல்ல*
கருத்தை தேர்ந்தெடுத்தீர்..... : :(

உங்களின் கவிதையை விமர்சிக்கவில்லை...
தலைப்பை மட்டுமே....
இது "யதார்த்த"மாகும் பக்ஷத்தில்.... உங்கள் கவிதை அதன்
நகைச்சுவைத் தன்மையை இழந்து .,
கவிதைச் செய்தியைச் நியாயப்படுத்துகிறது.... !

முரணை எழுதி
யதார்த்தம் என்றால்...
முள்ளாய் நெருடும்.... !!!!

shibly591
01-06-2008, 07:59 AM
நீங்கள் சொன்னத சரியென்றே படுகிறத...தலைப்பு இதோ மாற்றப்பட்டுள்ளது.போதுமா?இதற்கு போய் பாரதி பாடலையெல்லாம் சொல்லி பயமுறுத்தி...அய்யோ..அய்யோ