PDA

View Full Version : நான் கவிஞனே அல்லன்



shibly591
01-06-2008, 04:55 AM
குளிர்ந்த காற்று
பறவைகள் பனிப்பாடல்
சில்லென்ற அடைமழை
தனிமை
வானவில் தோரணம்
இழுத்துப்போர்த்தி தூங்கிக்கொண்டிருக்கிறேன்
ச்சீச்சீ..
என்ன கவிஞன் நான்?

அமரன்
01-06-2008, 06:26 PM
கலைஞரைப் பற்றிப் பாடிய
கவிஞரின் முத்துவரிகளின் நிழல்.

எமக்கெழுத தனிமை துணை
உமக்கெழுத தனிமை பகை.

பலரை எழுதவைத்த பெருமை
தனிமைக்கும் இயற்கைக்கும்.
பலரால் எழுதப்பட்ட பெருமை
தனிமைக்கும் இயற்கைக்கும்..

தூங்கினாலும் தூங்கவில்லை
உள்ளிருக்கும் கவிஞன்!
வாழ்த்துகிறேன் கவிஞரே!