PDA

View Full Version : சுடு சோற்று வரம்.



அமரன்
31-05-2008, 06:33 PM
ஓடிமுடித்த வாரம்
ஓய்வெடுக்கும் நேரம்.
நான் வேலை முடித்த
நாளின் மத்தி வேளை!

தடத்தில் புகையிரதம்
புறப்படத் தயார்நிலையில்.
அடுத்தது
ஐந்து நிமிடங்கழித்து..

ஐந்து நிமிடந்தந்த வேகத்தில்
நொடியில் பிடிபட்டது ரயில்.

வழக்கமான பாதை..
அழகுகளின் சோலை..
ரசனைக்கு இடைவேளை..

மிதவேக ரயில் விட்டிறங்கி
பறக்கும் ரயிலாக வீடு நோக்கி..

தெரிந்தவர்களை தெரியவில்லை.
தெரிந்தவர்களுக்கு தெரியவில்லை.
எனக்காகக் காத்திருக்கிறது
சுடு சோற்று வரம்.!!!!

பூமகள்
01-06-2008, 05:23 AM
வேலை நேர மதியம்..
அவசர பயணம் நித்தமும்..

துரித பச்சையாடை ரசிப்புகள்..
தெரியாதான தெரிந்தவர்..
தெரிந்தவர் தெரியாத
காத்திருப்பு..
மல்லிகைப்பூ சுடுசோறு...!!

பசி வந்தால் பத்தும் பறக்குமாம்
இங்கே துரித புகையிரதத்தில்..
பறக்கிறது ஓர் பசிவயிறு...

கடைசி நான்கு வரிகள்.. மிகப் பொருத்தம்..
படித்து ரசித்தேன்..

சூடான சாதத்துக்கு நிகரில்லையே..!! ;)
பாராட்டுகள் அமரன் அண்ணா.. :)

அனுராகவன்
02-06-2008, 12:09 PM
பாராட்டுகள் அமரன் ...
நல்ல கவி...தொடர்க..

இளசு
11-06-2008, 10:40 PM
ரசனைக்கு இடைவேளை..விட்ட
அதே மனம்..

பசி தீர்ந்தபின்
விட்ட ரசனைகளைச் சேகரித்து
கவிதையும் தந்தது..

இந்த நுட்பம் எண்ணி எண்ணி வியக்கத்தக்கதல்லவா?


பாராட்டுகள் அமரா...

சிவா.ஜி
12-06-2008, 04:30 AM
சுடுசோறு ஒரு வரமாய் வாய்த்தவர்களுக்கு இந்த வரிகளின் வீரியம் விளங்கும். காலையில் செய்த கேப்பைக் களியை மதியத்தில் புளிச்சட்னியோடு தொண்டை வலிக்க விழுங்கும் சமயத்தில் இந்த வரம் கிடைத்தபோது உங்களைப் போன்றே கண்ணில் நீர்வர உண்டிருக்கிறேன்.

எதார்த்தமான வரிகள். சுவையான சுடுசோறுக்கவிதை. வாழ்த்துகள் அமரன்.

இதயம்
12-06-2008, 05:00 AM
சுடு சோற்று வரத்தை வாழ்க்கை முழுதும் பெற்றதாலோ என்னவோ, எனக்கு அதன் வலி இன்று வரை தெரியாமலேயே போய் விட்டது. அதன் வலி பெற்றவர்களின் வளமான வாழ்க்கைக்காக மனம் மன்றாடுகிறது. அடித்து வார்க்காத ஆயுதம் பயன்பாட்டிற்கு ஏதுவாகுமா..? வலிகள் தான் வாழ்க்கையை சீராக்குகிறது. அந்த வகையில் வலி எனக்கு பிடிக்கும். சுடுசோறு வரமாகாத என் வாழ்க்கையை நினைத்து வருந்த வைக்கிறது உங்கள் கவிதை அமரன்.!

kavitha
13-06-2008, 05:54 AM
தெரிந்தவர்களை தெரியவில்லை.
தெரிந்தவர்களுக்கு தெரியவில்லை.
எனக்காகக் காத்திருக்கிறது
சுடு சோற்று வரம்.!!!!

இந்த வரிகளை மிக ரசித்தேன் அமரன்.
பசி வயிற்றுக்கு தெரிந்தவர்களைத் தெரியவில்லை.
பசிகொண்டவயிற்றோடு வருகிறார்கள் என்பது அந்த தெரிந்தவர்களுக்குத் தெரியவில்லை. ஊரிலிருந்து வருபவர்களிடம் முறை சொல்லி குசலம் விசாரித்தே நேரத்தைப்போக்கிவிடுவர்.

அதனால் தான் விருந்தோம்பல் நம் தமிழரின் தலையாய பண்பாக இருக்கிறது. ஆயுசுக்கும் பாடுபடுறது அரைசாண் வயிற்றுக்குத்தானே.
அழகான கவிதை. பாராட்டுகள்.

சுகந்தப்ரீதன்
16-06-2008, 11:28 AM
அடித்து வார்க்காத ஆயுதம் பயன்பாட்டிற்கு ஏதுவாகுமா..? வலிகள் தான் வாழ்க்கையை சீராக்குகிறது. அந்த வகையில் வலி எனக்கு பிடிக்கும்..!
இதயம் அண்ணா.. சற்று ஆழமாகவே இறங்கிவிட்டது உங்களின் இந்த பதிவு என் இதயத்தில்.. மிக்க நன்றி..!!

ஆதவா
19-06-2008, 12:21 PM
ஓடிமுடித்த வாரம்
ஓய்வெடுக்கும் நேரம்.
நான் வேலை முடித்த
நாளின் மத்தி வேளை!

ஓடிமுடித்த வாரம் என்றால் weekend தானே? அங்கே ஓய்வெடுக்கும் நேரம்..

வேலை முடித்த நாளின் மத்தி வேளை - ஏதோ மிஸ் ஆகுது அமரன்.... இந்த பத்தியை மட்டும் சற்று விளக்கவும்......

அர்த்தம் பொதிய எழுதிய கவிதை........... பெரும்பான்மையான மத்திய வேளைகள் எனக்கு ஆறிய சாதம் தான்.. :(