PDA

View Full Version : லப் டொப்பில் ஓஎஸ் மாற்றலாமா...?



தீபன்
30-05-2008, 10:41 AM
லப் டொப்பில் ஓஎஸ் மாற்றலாமா...?

எனது சிங்கப்பூர் நண்பரொருவர் ஏசர் அஸ்பயர் 5585WXMi லப்டொப் ஒறிஜினல் விஸ்ராவுடன் பயன் படுத்திகொண்டிருக்கிறார். ஆனால் அதனை பயன்படுத்துவது வேகம் குறைவானதாகவும் பரிச்சயமற்றதாகவும் உள்ளதாம். எனவே விண்டோஸ் எக்ஸ்பிக்கு மாற விறும்புகிறார்.

fபோமற் செய்துவிட்டு சாதாரண எக்ஸ்பிஐ நிறுவ முடியுமா...? சட்டப் பிரச்சினைகள் அல்லது இயங்குவதில் ஏதும் தடங்கல்கள் வருமா...? (என் நண்பனொருவன் மேற்படி லப்டொப்பானது விஸ்ராவுக்கென்றே இசைவானதக வடிவமைக்கப்பட்டதென சொன்னான். அதனால்தான் இந்த சந்தேகம்.
விரைவில் உதவுங்கள் நண்பர்கலே...

தாமரை
30-05-2008, 10:57 AM
எக்ஸ் பி உங்களிடம் ஒரிஜினில் இருந்தால் நீங்கள் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். சட்டப் பிரச்சனைகள் தடங்கல்கள் இல்லை. உங்கள் எக்ஸ்.பி ஒரு கணினியில் இயக்குவதற்கு மட்டுமே உரிமம் உள்ளதாய் இருக்கும். அதாவது இதற்கு முன் இன்னொரு கணிணியில் நிறுவி இருந்தால் அதை நீக்கி விட்டு இதில் இன்ஸ்டால் செய்யலாம்.

praveen
30-05-2008, 02:01 PM
உங்கள் மடிக்கனினி Windows vista விற்காக Bios Upgrade செய்யப்பட்டிருந்தால் Windows XP install செய்து முதல் முறை அணைந்து ஆரம்பிக்கும் போது boot ஆகாமல் போகும்.

நீங்கள் வாங்கிய கணினியின் இனையதளம் சென்று உங்கள் மாடல் FAQ பார்த்தால் இந்த கேள்விக்கு என்ன பதில் என்று தெரியவரும்.

மற்றொன்று உங்கள் லேப்டாபுடன் வரும் ஓ.எஸ் windows Vista Home ற்கு தான் லைசென்ஸ் தரப்பட்டிருக்கும். நீங்கள் அதனை நீக்கும் பட்சத்தில் windows XP க்கு தனியாக வாங்க வேண்டும். இப்போது வரும் புது கணினிகளின் சில வண்பொருட்களுக்கு XP யில் டிரைவர் இல்லை.

எல்லாம் நன்கு விசாரித்து பின் இறங்கவும்.. அப்படி அழிக்கும் முன் விஸ்டாவை திரும்ப கொண்டு வர அந்த hardisk ஐ அப்படியே ghost போட்டு DVD யில் backup எடுத்து கொண்டால், ஒருவேளை திரும்ப வருவது மிக எளிது. இம்மாதிரி செய்யா விட்டாலும். விஸ்டா டிரைவர் மற்றும் இன்ஸ்டால் பைல்கள் ஏதாவது போல்டரில் இருந்தால் குறைந்த பட்சம் அதனையாவது பேக்கப் எடுத்து வைத்து கொள்ளவும்.

கீழே உள்ள தளம் சென்று சற்று தேடி தகவல் பாருங்கள்
http://global.acer.com/support/index.htm

அன்புரசிகன்
30-05-2008, 06:18 PM
இப்போ வரும் சில மடிக்கணினிகளுக்கு ட்ரைவர் பிரச்சனை உண்டு. அனேகமானவை விஸ்டா ட்ரைவரை மட்டுமே கொண்டுள்ளது....

சாம்பவி
30-05-2008, 06:47 PM
உங்கள் மடிக்கனினி Windows vista விற்காக Bios Upgrade செய்யப்பட்டிருந்தால் Windows XP install செய்து முதல் முறை அனைத்து ஆரம்பிக்கும் போது boot ஆகாமல் போகும்.



அணைத்து... ????

தீபன்
31-05-2008, 02:15 AM
நன்றி நண்பர்களே... என்னிடமுள்ள எக்ஸ்பி ஒறிஜினலில்லை. இலங்கையில் இதை நாம் எந்தவித பிரச்சினையுமின்றி பயன்படுத்துகிறோம். அதனால்தன் கேட்டேன். ஆனால் நான் எதிர்பார்க்காத பல சிக்கல்களை பற்றி கூறி ரொம்பவே பயமுறித்தி விட்டீர்கள்... முயன்று பார்க்கிறேன்.

praveen
31-05-2008, 04:01 AM
அணைத்து... ????

ரீஸ்டார்ட் என்பதை தமிழில் குறிக்க மின் இனைப்பை அணைத்து பின் மறு இயக்கம் செய்ய என்று சொல்ல அந்த வார்த்தையை பயன்படுத்தினேன்.. அனைத்து என்றால் அத்துனை பொருள்களும் என்ற அர்த்தம் வரும் என்பதால் அணைத்து என்று குறிப்பிட்டேன், நீங்கள் அநியாயத்திற்கு சந்தேகம் கேட்டு என்னை OFF செய்து விட்டீர்கள் போங்கள் :).

சாம்பவி
31-05-2008, 04:35 AM
உங்கள் மடிக்கனினி Windows vista விற்காக Bios Upgrade செய்யப்பட்டிருந்தால் Windows XP install செய்து முதல் முறை அனைத்து ஆரம்பிக்கும் போது boot ஆகாமல் போகும்.



இப்பவும் அனைத்துமாகி ;)
அனர்த்தமாகி நிற்கிறதே...
எப்போது அணைப்பீரோ... !!!!!!!


ரீஸ்டார்ட் என்பதை தமிழில் குறிக்க மின் இனைப்பை அணைத்து பின் மறு இயக்கம் செய்ய என்று சொல்ல அந்த வார்த்தையை பயன்படுத்தினேன்.. அனைத்து என்றால் அத்துனை பொருள்களும் என்ற அர்த்தம் வரும் என்பதால் அணைத்து என்று குறிப்பிட்டேன், நீங்கள் அநியாயத்திற்கு சந்தேகம் கேட்டு என்னை OFF செய்து விட்டீர்கள் போங்கள் :).

ஐயா... சாமி... குரு...
இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலீங்களா........ !!!!!!!

praveen
31-05-2008, 05:36 AM
நன்றி சாம்பவி சுட்டி காட்டியதற்கு. நான் உங்கள் முதல் கேள்வியை மட்டும் பார்த்தேன். அந்த கேள்வியில் சரியாக இருக்கவும், நான் எனது பதிவை தான் சுட்டுகிறீர்கள் என்று நினைத்து அவசரத்தில் எனது பதிவை பார்க்கவில்லை. தக்க நேரத்தில் சுட்டி காட்டன்னீர்கள்.

நகைச்சுவைக்காக எழுதியது.
பாட்டு எழுதி பேர் வாங்கும் புலவர்கள் மத்தியில் போட்டுகுடுத்து பெயர் வாங்குவது ஒரு ரகம். சிரிக்காதீர்கள் நீவிர் எந்த ரகம் என்று உங்களுக்கே புரிந்திருக்கும். இந்த மாதிரி புலவர்கள் இருக்கும் வரை மன்றத்தில் யோசிக்காமல், பதிந்து பிழை பார்க்காமல் ஒருவரும் திரியை விட்டு அகல முடியாது. நீங்கள் ஒருவராவது இப்படி இருந்தால் போதும், அப்போது தான் மன்றம் உருப்படும்.

எனக்கு அறிஞரிடத்தில் பரிசு வேண்டாம், நான் இந்த திரியை விட்டு போய் வருகிறேன்.

உதயசூரியன்
31-05-2008, 09:10 AM
முதலில் ஓஎஸ் என்றால் என்ன என்று என்னை போன்ற விவரம் தெரியாதவர்களுக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்..

தீபன்
31-05-2008, 10:03 AM
கணினிப் பகுதிக்குள்ளும் தமிழ் யுத்தமா... நடக்கட்டும். ஓஎஸ் என்றால் தமிழில் இயங்கு தளம் நண்பரே. இதுவும் புரியவில்லையானால் கணினிப்பகுதியிலுள்ள ஆரம்ப கால கட்டுரைகளை படியுங்கள்.