PDA

View Full Version : மொபைல் போன் பயன்படுத்தும் கர்ப்பிணிகள் கதிர்வீச்சால் குழந்தைகளுக்கு கடும் பாதிப்பு



சுட்டிபையன்
29-05-2008, 01:52 PM
மொபைல் போன் பயன்படுத்தும் கர்ப்பிணிகள் கதிர்வீச்சால் குழந்தைகளுக்கு கடும் பாதிப்பு
http://www.accone.com/weblog/images/2006/10/baby-wave.jpg "கர்ப்பிணிகள் மொபைல் போன் பயன்படுத்தினால், அது கருவில் இருக்கும் குழந்தைக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்' என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம், டென்மார்க்கின் ஆருஸ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. கர்ப்பிணிகள் மொபைல் போன் பயன்படுத்தும் போது, அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு, கருவில் இருக்கும் குழந்தைகளிடம் பாதிப்பு ஏற்படுத்துகிறது.

இது குழந்தைகளின் செயல்பாடுகள், நடத்தைகள், உணர்வுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நாளுக்கு மூன்று அல்லது நான்கு முறை மொபைல் போன் பயன்படுத்தினால் கூட, இந்த தாக்கம் பெரியளவில் ஏற்படுகிறது. அதே போல, குழந்தைகளில், ஏழு வயதுக்கு குறைந்தோர், மொபைல் போன் பயன்படுத்துவதும் ஆபத்தானது. அப்படி பயன்படுத்தும் போது, பெரியவர்களை விட, அவர்கள் அதிகளவில் கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இந்த பாதிப்பு, இந்த வயது குழந்தைகள், மது குடிப்பது அல்லது புகைப்பிடிப்பது போன்ற பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பை விட, அதிமான பாதிப்பை ஏற்படுத்தும். மொபைல் போன் பயன்படுத்தும் கர்ப்பிணிகளில், 54 சதவீதம் பேருக்கு பிறக்கும் குழந்தைகள், தங்களின் செயல்பாடுகள், உணர்வுகள், உறவுமுறைகளில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. மொபைல் போன்களை அதிகளவு பயன்படுத்துவோருக்கு பிறக்கும் குழந்தைகள், பெரியளவில் பாதிப்புக்கு ஆளாகின்றன

சூரியன்
29-05-2008, 04:29 PM
இப்படியும் பாதிப்பா.
கர்ப்பிணி பெண்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.