PDA

View Full Version : நாடோடிக்கு நிரந்தர இடம்



இராஜேஷ்
29-05-2008, 10:33 AM
கருவானது ஒரிடம்

பிறந்தது ஒரிடம்

வளர்ந்தது ஓரிடம்

கற்றது ஓரிடம்

பணி செய்வது ஒரிடம்

நாடோடியாய் திரிந்த எனக்கு

நிரந்தரமாய் ஒர் இடம் கொடுத்தாள் – என் மனைவி

எங்கே? அவளுடைய இதயத்தில்.

Narathar
29-05-2008, 10:52 AM
கருவானது ஒரிடம்

பிறந்தது ஒரிடம்

வளர்ந்தது ஓரிடம்

கற்றது ஓரிடம்

பணி செய்வது ஒரிடம்

நாடோடியாய் திரிந்த நமக்கு

நிரந்தரமாய் ஒர் இடம் கொடுத்தது – தமிழ் மன்றம்

நாம் எல்லாம் நண்பர்களாய் சகோதரர்களாய் சகபாடிகளாய் நம் மன்றில் .

ஹி ஹி இப்படித்தான் நமக்கு உல்டாக்கவிதைகள் தான் எழுத வரும்...

உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது - அதனால்
என் கவிதயும் நன்றாக இருக்கும்

பூமகள்
29-05-2008, 11:01 AM
எங்கோ பிறந்து எங்கோ வாழ்ந்த வாழ்க்கையில்.. ஈரிதயம் கலந்த பந்தம்.. நிரந்தரமானது தான்..!!

இன்னும் எழுதுங்கள்.. செந்தமிழும் நாப்பழக்கம்.. மட்டுமல்ல.. கைப்பழக்கமும் தான்..!!:icon_rollout::icon_rollout:

வாழ்த்துகள் இராஜேஷ் சகோதரரே..!! :icon_b:

சொல்ல வந்த விசயம் பெரிதென்பதற்காக... எழுத்தையும் பெரிதாக்கிவிட்டீரே அண்ணா??!!:D:D (சும்மா...சும்மா..;):p)

உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது - அதனால்
என் கவிதயும் நன்றாக இருக்கும்
இப்படித்தான் பேரைத் தட்டிக் கொண்டு போவதா நாராயணா??!! :lachen001::lachen001:

ஹீ ஹீ...:D:D நிஜமாவே பதில் கவிதையை ரசித்தேன்.. நல்ல டைம்மிங் நாரதர் அண்ணா.. பாராட்டுகள்..!! :icon_b::icon_b:

அமரன்
29-05-2008, 08:38 PM
மனைவி மட்டுமல்ல, பலரும் இதயத்தில் நிரந்தர இடம் தருவார்கள்.. அதில் முதன்மையானவர் அம்மா. மனைவி அம்மாவாகும்போது இடநெருக்கடி ஏற்படலாம்.. அம்மா பாட்டியானாலும் இடநெருக்கடி குறைவுதான். சில சினேகங்களும் அம்மாவை விட விரற்கிடை பதிவாக உள்ளது.

சொல்ல வந்ததை நச்சென்று சொல்லும் கலை கவிதைக்கு கவின். பாராட்டுகிறேன். தொடர்ந்து வளம்பெற வாழ்த்துகிறேன்.

aren
30-05-2008, 01:37 AM
கவிதை அழகாக அருமையாக இருக்கிறது. தொடருங்கள்.

நாரதரும் சைக்கில் கேப்பில் ஆட்டோ ஓட்டுகிறார் போலிருக்கிறது. பாராட்டுக்கள்.

ஓவியன்
30-05-2008, 04:01 AM
அலைந்து திரிந்த மனசு அருமையான புகலிடம் நாடியுள்ளது..!!

பாராட்டுக்கள் ராஜேஸ், உல்டா கவிதையால் மன்றத்தின் பெருமை பகிர்ந்த நாரதருக்கும் வாழ்த்துக்கள்..!! :)

இராஜேஷ்
30-05-2008, 08:43 AM
ஹி ஹி நாரதரே மிகவும் அருமை உங்கள் உல்டா கவிதை, தங்களுடைய பாராட்டுதளுக்கு நன்றிகள் கோடி