PDA

View Full Version : புன்(ண்)னகை..!!



பூமகள்
28-05-2008, 12:54 PM
புன்(ண்)னகை...!!



அன்றைய பொழுது விரைவாகவே விடிந்தது…. மயில்களின் அகவலோடும்.. இடையிடையே அதற்கு சுருதி சேர்த்த குயில்களின் கூவலோடும்.. மெல்லிய தென்றல் காற்றின் ஒத்தடத்தோடு… உற்சாகமாக பரபரப்பானது மனது..

கிளிகளின் கீச் ஒலியோடு… ஒன்றிப் போன.. பெரிய கதவு திறந்து வாசல் வந்து செவ்வானம் பார்க்கிறேன்.. மனம் இன்றைக்கு எதிர்கொள்ளப் போகும் சங்கதிகள் பற்றி ஒரு புறம்.. படம் பார்த்துக் கொண்டிருந்தது..


குயிலினை இசைக்குருவாக்கி… கூவக் கற்று.. உள்ளே வந்து மடமடவென கிளம்புகிறேன்..

ஊர் நினைவு வந்தாலே.. மனம் சில்லிடும்.. பசும் புற்களின் வாசத்தில் கலந்து வரும் அந்த வரப்புக் காற்றும்.. தென்னந்தோப்பு தெளுவும்.. ஆங்காங்கே ஓடும் சிலு சிலு வாய்க்கால்களும்.. அதில் எட்டிப் பார்த்து கண் சிமிட்டும்.. கூழாங்கற்களும்..!!

மடி நிறைய கூழாங்கல் சேர்த்து.. ஐஞ்சாங்கல்லாட்டம் , ஏழாங்கல்லாட்டம்.. ஒட்டி கல்லாட்டம்… இப்படி வகை வகையாக ஒன்றாக விளையாடிய நட்புகளைப் பார்க்க போகிறேனே.. பின்னே இருக்காதா இந்த துள்ளல்..!!

நகரத்தின் வாசல் தாண்டி.. அடிக்கடி மனம் பயணப்பட்டாலும்… இப்போது தான்.. மனம்.. மனிதம்.. எல்லாம் பயணப்பட காலம் கை கொடுத்தது..

சித்திரை மாத கோயில் திருவிழாவினை முன்னிட்டு… அழைப்பு வர விடுப்பும் கிடைக்க.. குடும்பத்தோடு இதோ கிளம்பிவிட்டேன்.. கார் மாஸ்ட்ரோவின் எண்பதுகளுக்கான மாஸ்டர் பீஸ்களை ஒவ்வொன்றாக பாடி.. மனத்தில் அந்த கால நினைவுகளை அதன் சார்பாக அள்ளித் தெறித்துக் கொண்டிருந்தது..

காலையில் உண்ட உப்புமா…செரிமானமாகாமல்.... நெஞ்சில் வந்து மனம் செரிக்காத நினைவுகளை.. நினைவூட்டியது…

நெற்றி நிறைய விபூதி... இதழோரம் வீற்றிருக்கும் அந்த ஒற்றை மச்சம்.. தாவணி பாவாடை சரசரக்க… வாய் நிறைய சிரிப்போடு எப்போதும் பூத்திருக்கும் அந்த பால் முகம்.. கண் முன் வந்து மனம் அசையாமல் செய்தது..

சில மணி நேர பயணத்துக்குப் பிறகு… கார் ஊர் எல்லையை அடைந்தது.. எப்போதுமே ஊர்க்காவலைத் தன்காவலாக்கி வைத்துக் கொண்ட மதுரை வீரச் சாமிகள் இருவர்.. அவர்களை தாண்டி பால் சொசைட்டி… அருகில்…. ஒரு பெரிய தண்ணி டேங்க்… அதில்.. பஞ்சாயத்து பொது தொலைக்காட்சி… அதற்குமிக அருகில்.. ஊர் பொதுக் கிணறு…. எதுவுமே மாறவில்லை.. சற்று கடந்து பயணப்பட… ஊரின் முக்கிய கோயிலான.. காமாட்சியம்மன் கோயில்.. நோம்பி சாட்டியதில் மக்களின் நடமாட்டத்தில்.. பக்திப் பாடல்களை லவுட் ஸ்பீக்கரில் போட்டபடி.. கோலாகலமாக காட்சியளித்தது..

பந்தல், மின்விளக்குகள் அலங்காரமும்.. நோம்பி சாட்டுதலின் மழையில் முளைத்த காளான்களாக அங்கே வரிசையாக அணிவகுத்திருக்கும் பலூன் கடை.. பொம்மைக் கடைகளும்.. பல வண்ணங்களில் அமைந்த குச்சி முட்டாயும்.. பஞ்சு மிட்டாயும்.. அதைச் சுற்றி.. தேனீக்கள் போல பறந்து நிற்கும்.. குழந்தைகளின் வெள்ளந்தி சிரிப்பும்.. ரகசிய சம்பாஷனைகளும்.. அக்காவிடம் அடம்பிடித்து நகர மறுக்கும் தம்பிப் பையன்களும்.. பிடித்து இழுத்து நகர வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் அக்காமார்களும்… மெல்ல மனம் அசைபோட்டு ரசித்துச் செல்லலாயிற்று…

இதோ இல்லம் வந்தாகிவிட்டது… உள்ளிருந்து ஓடி வரும்.. செல்ல நாய்க்குட்டியின் தாவலைத் தடவிக் கொடுத்தபடி உள்ளே நுழைகிறேன்..


மனம் மெல்ல ஊர்க்காற்றை உள்ளிழுத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டது.. பரஸ்பர வரவேற்புகளும்.. மதிய உணவும் முடித்த பின்… அடுத்த கட்டமாக.. மனம் தேடியது பழைய நட்பின் புதிய முகமன்.

அடுத்த கட்ட பயணத்துக்கு ஆயுத்தமாகி.. பெரியோரிடத்தில் விடைபெற்று.. நான் மட்டும் மாமா வீடு தேடி நடைபயின்றேன்..

யாருமற்ற தார் சாலையில்.. என்னோடு பழைய நினைவுகள் பூட்டவிழ்த்து உடன் வந்தன..

முச்சந்தியில் ஆலமரம் விழுதுகளோடு வரவேற்க தயாராக நின்றது.. மெல்ல கையசைத்து அருகில் வரப் பணித்தது..

அருகில் சென்று விழுது கை பற்றி.. சுற்றும் முற்றும் பார்த்து ஒரு குட்டி ஊஞ்சலாட்டம் போட்டு.. குறுநகையோடே இறக்கத்தில் இருக்கும் ஒற்றையடிப் பாதை வழியே.. இறங்கி நடக்கிறேன்..

சுற்றியிருக்கும் சூரியகாந்தி மலர்களின் மேற்குத் திசை நோக்கிய ஒற்றைக் கால் தவம்.. சூரியனின் திசையைப் புரிய வைத்தது.. ஏதோ என்னை வரவேற்ப்பது போல ஒன்றாக திரும்பி… சிறுப் பூப்புன்னகையோடு.. காட்சியளிப்பதாக தோன்றியது..

வழியில் இருக்கும் மஞ்சளரளிப் பூக்களும்.. மே மாத மரத்தின் சிவப்பு வண்ண மலர்களும்.. காற்றில் எழுதிய தனது பிரியா விடைக் கடிதத்தோடு.. என் கைப்பையில் வந்தமர்ந்தன..

இதோ இந்த தென்னந்தோப்பு கடந்து.. வாய்க்கால் தாண்டினால்.. மாமாவின் இல்லம்.. அருகில் செல்லும் முன்னே.. வெளியில் விளையாடியபடி இருந்த திவ்யா.. காவ்யா.. ஓடி வந்து சிரித்து கால் கட்டிக் கொண்டார்கள்..!

காவ்யாவைத் தூக்கி மெல்ல நடைபயின்று செல்வதற்குள்.. திவ்யா ஓடிச் சென்று உள்ளே நான் வருவதை சொல்லிவிட்டிருந்தாள்..

அதே ஒற்றை இதழோர மச்சத்தோடு… இன்னும் அதே புன்னகை மாறாத அஞ்சலி..!! என் பிரிய அஞ்சலி..! ஒரே வயதுடைய இருவரும்.. ஒவ்வொரு வருட சந்திப்புகளையும் ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கும் பால்ய நட்பு..

இரண்டாம் தாரமாகி.. காவ்யாவைப் பெற்று.. வருடம் 3 கடந்திருந்தது.. சித்தி கொடுமைகளின் விஷப்பேச்சுகள்.. நெடுந்தொடர்களின் ஆட்டுவிப்புகள்.. மூத்த தாரத்து பிஞ்சுகளின் நெஞ்சுடைத்திருந்த புகுந்த வீட்டின் நிலை சொல்லி விம்பி அழுத அஞ்சலியின் அம்மாவைத் தேற்ற வழி தெரியாது கலங்கி நின்றேன்..!

முதல் கோணல்.. முற்றும் கோணல் கதையாக.. சாஸ்திரங்களையும் ஜாதகங்களையும் நம்பி.. பிஞ்சு மகளை இரண்டாம் தாரமாக்கிய கொடும் பாதகம்.. தடுக்க முடியாமல் போன என் நிலை குறித்து.. நினைக்கும் போதெல்லாம்.. நெஞ்சு சுடுகிறது..

காவ்யாவின் பிறப்புக்கு பின் தாய்வீட்டில் வசிக்கும்.. அஞ்சலியின் துயர் நிலை, என் மனம் தின்றது.. ஒன்றாக்கும் வழி பெரியோரிடம் ஒப்படைத்து.. அவர்கள் மனம் சாந்தமடைய குறுஞ்சிரிப்பு வெடிகளை பற்ற வைத்தேன்..

அதே புன்னகையோடு.. ஓடி ஓடி தோட்டத்திலிருந்து எனக்குப் பிடித்த பூக்களும்.. கொய்யாப் பழங்களும் பறித்து வரும் அவளைப் பார்த்து.. கண்கள் கலங்கியே விட்டிருந்தது.. தெரியாமல் கண் துடைத்து சிரித்து நின்றேன்..

அஞ்சலியின் அக்காவும் தங்கையும் தத்தம் கணவர்களோடு ஒன்றாக அருகிருக்க.. அஞ்சலி மட்டும்.. எனக்கு சமைக்க.. அதே புன்னகை மாறாமல் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தாள்..

அடுப்படி சென்று.. அமைதியாக நின்று.. அவளையே உற்றுப் பார்த்திருக்கும் என் கை பற்றி… சத்தமின்றி இதழோரப் புன்னகையோடே அழுதது அவள் விழிகள்..!!

தோள் தட்டி.. காவ்யாவினை நினைவூட்டி… அற்புத வாழ்க்கை இன்னும் பாக்கியிருப்பதை உணர்த்தி.. அவசர வேலையாக பிரியா விடை பெற்று வெளிவந்தேன்.. அதற்கு மேல் அழாமல் நடிக்கும் பலமின்றி…

சற்று தூரம் சென்று திரும்பிப் பார்த்து கையசைக்க… என் கையில் சிக்கின… டிசம்பர் மலர்கள்.. இப்போது.. அஞ்சலி… புன்னகையூடே உள்வலியை மெல்லமாக தவற விட்டிருந்தாள்..!!





(முற்றும்)

மன்மதன்
28-05-2008, 01:14 PM
கிராமியக்கதை என்றாலே
மனசு அப்படியே லயித்து விடுகிறது...

மன்றத்தில் நிறைய கதையாசிரியர்
இருப்பது பெருமையாக இருக்கிறது..

praveen
28-05-2008, 01:16 PM
ஒரு கவிதை போல கதை எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.

சரி அது என்ன உக்மா, உப்புமா தானே (பத்து படி உப்பு போட்டு ஒரு படி மாவு போட்டு செய்வது தானே அது. :) )

பூமகள்
28-05-2008, 01:50 PM
கிராமியக்கதை என்றாலே
மனசு அப்படியே லயித்து விடுகிறது...
ரசித்து படிச்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன்..
நன்றிகள் மதன் அண்ணா. :)

பூமகள்
28-05-2008, 01:51 PM
ஒரு கவிதை போல கதை எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.
ரொம்ப நன்றி அண்ணா. :)

சரி அது என்ன உக்மா, உப்புமா தானே (பத்து படி உப்பு போட்டு ஒரு படி மாவு போட்டு செய்வது தானே அது. :) )
ஓஹோ.. பேச்சு வழக்கில் உக்மான்னு சொல்லி சொல்லி அப்படியே எழுதிட்டேன் ப்ரவீன் அண்ணா.. இப்போ மாத்திட்டேன் பாருங்க..!! :icon_b::icon_b:

சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் அண்ணா. :)

அறிஞர்
28-05-2008, 02:32 PM
அமரனின் கதை படித்த தாக்கத்தில்
மற்றொரு கதை எழுதி கொடுத்துவிட்டீர்கள்...

சினிமா இயக்குநர்களுக்கு... இங்குள்ள கதாசிரியர்கள் பலரை காட்டலாம் போல..

அருமை பூ.. இன்னும் தொடருங்கள்..

பூமகள்
28-05-2008, 04:15 PM
மிக்க நன்றிகள் அறிஞர் அண்ணா. :)

Narathar
28-05-2008, 04:26 PM
மண் வாசணை தூக்கலாக இருப்பதுபோலவே....
சமூகத்தில் சாத்திரம் சம்பிரதாயங்களாலாகும் விபரீதங்களை கோடிட்டுக்காட்டியபோது..
சோகமும் தூக்கலாகவே கனக்கிறது!

வாழ்த்துக்கள்

பூமகள்
28-05-2008, 04:32 PM
அதைக் கோடிட்டுக் காட்டத்தான்... இத்தனை பெரிய விவரிப்புகள்.. நாராயணா..!!

புரிந்து பதிலிட்டமைக்கு மிகுந்த நன்றிகள் நாரதர் அண்ணா. :)

Narathar
28-05-2008, 04:48 PM
புரிந்து பதிலிட்டமைக்கு மிகுந்த நன்றிகள் நாரதர் அண்ணா. :)



அப்போ இவ்வளவு நாளும் புரியாமத்தான் பின்னூட்டமிட்டமா??? நாராயணா!!!! :p

(ம்ஹூம்................. :confused: பலர் அப்படித்தான் நினைக்கிறாங்க... :) நான் என்னத்தை சொல்ல? நாராயணா!!!! )

பூமகள்
29-05-2008, 04:57 AM
அப்போ இவ்வளவு நாளும் புரியாமத்தான் பின்னூட்டமிட்டமா??? நாராயணா!!!! :p
அச்சச்சோ...என்னங்க நாரதர் அண்ணா...:icon_ush::icon_ush:

நான் கதையின் உள் அர்த்தம் பற்றி கண்டறிந்து தாங்கள் தான் முதலாவதாய் வெளியே சொன்னீங்கள் என்ற அர்த்தத்தில் சொன்னேன்...!!:icon_b::icon_b:

:icon_rollout::icon_rollout:

ஓவியன்
29-05-2008, 05:28 AM
பட்டும் படாமலும்
சொல்லியும் சொல்லாமலும்
பல விடயங்களை
நம் ஊகத்துக்கே விட்டு விடும் திறனில்
வரையப் பட்ட கதை...!!

பாராட்டுக்கள் பூமகள், கதைகளிலும் கவிதைகளிலும் தப்பென உறைக்கும் பல விடயங்கள் நிஜத்தில் தப்பென உடனடியாக உறைக்கத் தவறுவதே இவ்வாறான பல பிரச்சினைகளின் ஆணி வேர்....

அமரன்
29-05-2008, 07:56 AM
ஆடும் மயில்.. பாடும் குயில்.. தென்னைப் பசுந்தோகைக் கிளி.. சங்கீத சாகர சங்கம அலை..என்னுள் துள்ளி விழுந்த துளி ஆலாபனையை மூட்டியது. தவழும் தென்றல் ஊதியது. நகரத்தில் எனை நட்டதும் தூரமான கிராமத்துக் காற்று தூறச்செய்கிறது புண்ணகையுடன்..

சித்தியின் கொடுங்கோல் ஆட்சி. சிறுதீ இல்லாத புகை... நெடுந்தூர யதார்த்தம் சொல்லும் நெடுந்தொடர்களின் உபயம். பஞ்சாயத்து தொலைக்காட்சி.. வீட்டில் தொ(ல்)லைக்காட்சி!! பஞ்சாயத்துக்கு நீரூற்றவா??? தளிர்களுக்கு சுடுநீர் விடுவதற்கா?

மார்கழிப்பூக்கள் என்றாலே பனியும் நினைவுக்கு வரும்..

கிராமத்து வாசனை பிடித்துவிட்டால் நகர மனமொப்பாது. இங்கேயும் அப்படித்தான்.. பாராட்டுகள் பூமகள்.

பூமகள்
29-05-2008, 08:07 AM
கதைகளிலும் கவிதைகளிலும் தப்பென உறைக்கும் பல விடயங்கள் நிஜத்தில் தப்பென உடனடியாக உறைக்கத் தவறுவதே இவ்வாறான பல பிரச்சினைகளின் ஆணி வேர்....
பெரியவரே.. சில சமயம், தவறான கதைக் கட்டுதலில் ஈடுபட்டு.. நஞ்சு விதைப்பது தான் இன்னும் வேதனையிலும் வேதனையண்ணா..!!

தொலைக்காட்சிகளும் திரைப்படங்களும் பல சமயம் செய்வதும் இதைத் தானே...!!

மிக்க நன்றிகள் அண்ணா. :)

பூமகள்
29-05-2008, 08:15 AM
கிராமத்து வாசனை பிடித்துவிட்டால் நகர மனமொப்பாது. இங்கேயும் அப்படித்தான்.. பாராட்டுகள் பூமகள்.
மிக்க நன்றி அமரன் அண்ணா..!! :)
உங்களின் படைப்பு தான் என்னை இக்கதை எழுத வைத்தது..! அதற்கு சிறப்பான பாராட்டுகளும் நன்றிகளும் அண்ணா. :icon_b: :icon_rollout::icon_rollout:

சுகந்தப்ரீதன்
31-05-2008, 10:32 AM
அழகியலுடன் கலந்த ஆழமான எழுத்துநடை..!!

கிராமத்தில் பெண்களுக்கு இதுபோன்ற நிறைய சோக நிகழ்வுகள் நாளும் நிகழ்ந்துக் கொண்டுதானிருக்கின்றன..!!

இப்போதுகூட எங்களூரில் முப்பது வயதான ஒருத்தன் பத்தாம்வகுப்பு படிக்கும் தன் அக்காள் மகளை மணந்தான்.. நான் நீ செய்வது உனக்கே சரியா என்றதற்க்கு "பொம்பளைங்க ரெண்டே வருசத்துல பெரிய ஆளாயிடுவாங்க" ன்னு அற்பதனமா பேசுறான்..!! அந்த சின்னபெண்ணிடம் யாரும் அவளுக்கு கல்யாணத்தில் விருப்பமா என்றுக்கூட கேட்கவில்லை..!!

சொந்தம் விட்டுப்போகக் கூடாதுன்னு முட்டாள்தனமா பெரியவர்கள் பேசிமுடிச்சா.. அவங்களும் பலியாடாட்டம் போய் மணவறையில உட்காந்துடுறாங்க..!! அதன்பிறகு முந்தானையில முகத்த தொடச்சிக்கிட்டு மூலையில முனகறதோட அவங்களோட வழ்க்கை முடிஞ்சுபோகுது..!!

என்று மாறுமோ இந்த அவலமெல்லாம் என்று ஏக்கமாய் இருக்கிறது எனக்கு..!!

இரண்டாம் தாரமாகி.. காவ்யாவைப் பெற்று.. வருடம் 3 கடந்திருந்தது.. சித்தி கொடுமைகளின் விஷப்பேச்சுகள்.. நெடுந்தொடர்களின் ஆட்டுவிப்புகள்.. மூத்த தாரத்து பிஞ்சுகளின் நெஞ்சுடைத்திருந்த புகுந்த வீட்டின் நிலை சொல்லி விம்பி அழுத அஞ்சலியின் அம்மாவைத் தேற்ற வழி தெரியாது கலங்கி நின்றேன்..!
பூமகள்.. எனக்கு இதற்கு அர்த்தம் விளங்கவில்லை.. கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்..!!

பூமகள்
31-05-2008, 10:49 AM
நன்றிகள் சுகு..!! :)
நீ சொன்ன அதே நிகழ்வை நானும் எங்களூரில் கண்டேன்...கொடுமையிலும் கொடுமை .. சரி இதை விரிவாக அடுத்து விவாதிக்கிறேன்.. :mad::mad:

இரண்டாம் தாரமாகி.. காவ்யாவைப் பெற்று.. வருடம் 3 கடந்திருந்தது.. சித்தி கொடுமைகளின் விஷப்பேச்சுகள்.. நெடுந்தொடர்களின் ஆட்டுவிப்புகள்.. மூத்த தாரத்து பிஞ்சுகளின் நெஞ்சுடைத்திருந்த புகுந்த வீட்டின் நிலை சொல்லி விம்பி அழுத அஞ்சலியின் அம்மாவைத் தேற்ற வழி தெரியாது கலங்கி நின்றேன்..!அதாவது... ஏற்கனவே திருமணமாகி.. இரு குழந்தைகளைப் பெற்ற..மனைவியை இழந்த ஒருவருக்கு இரண்டாம் தாரமாக அஞ்சலியை மணமுடிக்கின்றனர்.. அங்கே.. மாமியார் போன்ற வயதில் மூத்தோரும்.. இன்றைய தொலைக்காட்சி நெடுந்தொடர்களும் சித்தி என்றாலே.. கொடுமை என்ற பிரிவினை விதையை விஷமாக விதைத்த காரணத்தால்.. குழந்தைகள் ஒட்ட மறுத்து பிரச்சனை பூதமாகி.. பிறந்த வீட்டிலே வசிக்கும் நிலைக்கு அஞ்சலியை உருவாக்கியிருக்கிறது.

இப்போ புரியுதா சுகு??!! :confused::confused:

முடிஞ்சளவு வார்த்தை சுருக்கனும்னு சுத்தமா சுருக்கிட்டேன் போல.. மன்னிக்கவும் சுகு..!!:icon_ush::icon_rollout:

சுகந்தப்ரீதன்
31-05-2008, 10:55 AM
இப்போ புரியுதா சுகு??!! :confused::confused:

முடிஞ்சளவு வார்த்தை சுருக்கனும்னு சுத்தமா சுருக்கிட்டேன் போல.. மன்னிக்கவும் சுகு..!!:icon_ush::icon_rollout:
ம்ம்ம்...ரொம்ப நன்றி.. இப்போதான் தெளிவா புரியுது எனக்கு..!!

உண்மைதான் யாரோ சிலசித்திகள் செய்யும் சுத்திகளால் மொத்த சித்திக்கும் வலிகள்தான் பூ..!!

இளசு
13-06-2008, 08:32 PM
புன்(ண்)னகை.. தலைப்பு சொல்லிவிட்டது இறுதி வரியை..

ஓவியன் சொல்வதுபோல் -
''நியாயப்பார்வை'' - நம்மில் அவ்வப்போது மாறுவது
எனக்கும் ஒரு புதிர்.

இக்கதையில் நிகழ்ந்த பல மனிதத்தவறுகள் சட்டென உறுத்துகின்றன..
நிஜவாழ்வில் நாம் இவற்றை - கணிக்க, தடுக்க, குறைக்க முடிகிறதா?

சுகந்தன் சொன்ன சம்பவம் - ஓர் எடுத்துக்காட்டு.

கதைக்கரு ஆழமானது..

விலாவாரியான பயண ஏற்பாடு, ஒலி-ஒளி-வாச ரசனைகள்,
உப்புமா ஏப்பம், திருவிழாக்கடைகள்,மக்கள்
எனக் கதாசிரியை மிகவும் லயித்து எழுதியிருக்கிறார்..

படிப்பவரின் ரசனைகளப் பட்டை தீட்டினாலும் --------
ஏனோ நாயகிக்குப் அளிக்க வேண்டிய கவனம் எனக்குச் சிதறியபடியே இருந்தது போல் ஓர் உணர்வு..

பாராட்டுகள் பூமகள்..

இன்னும் இன்னும் பல படைப்புகள் அளிக்க அண்ணனின் ஆசிகள்..வாழ்த்துகள்!

பூமகள்
14-06-2008, 05:36 AM
பெரியண்ணாவின் பார்வை பட்டுவிட்டதா இக்கதை... அப்படியெனில் மோட்சம் நிச்சயம்..! :)

ஏனோ நாயகிக்குப் அளிக்க வேண்டிய கவனம் எனக்குச் சிதறியபடியே இருந்தது போல் ஓர் உணர்வு..
எனக்குள்ளும் அதே உணர்வு பதித்தபின் தோன்றவே செய்தது அண்ணா.. அடுத்த முறை குறையின்றி எழுத முயல்கிறேன்...

சரியாக சொன்னீர்கள்.. கண் முன்னே பார்த்தாலும் தடுக்கவோ.. தவிர்க்கவோ செய்ய முடிவதில்லை.... மனங்கள் மாறினால் தான் மாற்றம் நிச்சயம் வரும்.

மிகுந்த நன்றிகள் அண்ணலே..! :)

mukilan
01-07-2008, 03:53 AM
கிராமத்தை வர்ணித்து கண்முன் கொண்டு வந்து விட்டாய் தங்கையே! வைரமாய் ஒளிரும் கூழாங்கற்கள், பசும்புல் வாசனை சேர்த்து வரும் வரப்புக்காற்று, எதிர்கொண்டழைக்கும் எல்லைச் சாமிகள், கிராமத்திற்கேயுரிய ஆலம் விழுதுகள், அரளிப்பூக்கள் என மனக்கண் முன் படிப்பவர்கள் உடன் பயணம்செய்யும் உணர்வு. எத்துனை மாற்றாந்தாய்கள் மூத்த தாரத்தின் குழந்தைகளை ஆதுரமாய்க் கவனித்துக்கொள்கிறார்கள்? குழந்தைகள் புரிய மறுப்பதும் இயல்புதானே! அதற்காக அந்த மூடத்தகப்பன் அஞ்சலியைத் தள்ளி வைத்து விடுவானா?
என்றைக்கு அடுத்தவர் வாழ்க்கையை மற்றொருவர்(பெற்றோரேயாயினும்) தீர்மானிக்கின்றனரோ அன்றைக்கே அந்த வாழ்வு அஸ்தமனமாகிவிடுகிறதல்லவா? இனிமேல் அஞ்சலிகளை இரண்டாம் தாரமாக்குபவர்கள் அக்குழந்தைகள் மனமறிந்தோ அல்லது மாற்றுத் திட்டம் கண்டோ மணம் முடிக்கட்டும். பாராட்டுக்கள் பாமகள்! கவிதை, கதை, கட்டுரை என அனைத்தையும் ஒரு கைபார்ப்பதாய் உத்தேசமோ? எண்ணிய ஈடேற வாழ்த்துகள்.

பூமகள்
01-07-2008, 05:43 AM
என்றைக்கு அடுத்தவர் வாழ்க்கையை மற்றொருவர்(பெற்றோரேயாயினும்) தீர்மானிக்கின்றனரோ அன்றைக்கே அந்த வாழ்வு அஸ்தமனமாகிவிடுகிறதல்லவா?
மிகச் சரியான வாக்கு முகில்ஸ் அண்ணா..!!

இந்த நிலை என்னிக்கி மாறுமோ தெரியவில்லை..!! :mad::mad:

உங்கள் ஆசியோடு எல்லா இடத்திலும் என் முயற்சியை தொடர்ந்து வருகிறேன் முகில்ஸ் அண்ணா..!!:icon_rollout:

வெற்றி பெறுகிறேனோ இல்லையோ.. ஆனால்.. முயல்வதே எனக்கு வெற்றி தானே??!! :icon_ush:

உங்களின் அன்பான பின்னூட்டத்துக்கும் தொடர்ந்து என் பல பதிவுகளில் ஊக்குவிக்கும் உங்க நல்ல மனத்துக்கும் நன்றிகள் பலப் பல..!!

கண்மணி
01-07-2008, 06:15 AM
என்றைக்கு அடுத்தவர் வாழ்க்கையை மற்றொருவர்(பெற்றோரேயாயினும்) தீர்மானிக்கின்றனரோ அன்றைக்கே அந்த வாழ்வு அஸ்தமனமாகிவிடுகிறதல்லவா? .


மிகச் சரியான வாக்கு முகில்ஸ் அண்ணா..!!

இந்த நிலை என்னிக்கி மாறுமோ தெரியவில்லை..!! :mad::mad:

உங்கள் ஆசியோடு எல்லா இடத்திலும் என் முயற்சியை தொடர்ந்து வருகிறேன் முகில்ஸ் அண்ணா..!!:icon_rollout:

வெற்றி பெறுகிறேனோ இல்லையோ.. ஆனால்.. முயல்வதே எனக்கு வெற்றி தானே??!! :icon_ush:



அசட்டுத் தங்கச்சி, இதையெல்லாமா சொல்லிட்டுச் செய்வாங்க?:lachen001::lachen001::lachen001:

பூமகள்
01-07-2008, 06:28 AM
அசட்டுத் தங்கச்சி, இதையெல்லாமா சொல்லிட்டுச் செய்வாங்க?:lachen001::lachen001::lachen001:
கண்மணி அக்கா...
நான் சொல்ல வந்தது உங்களுக்குப் புரியலைன்னு நினைக்கிறேன்..!!:icon_ush:

என்றைக்கு அடுத்தவர் வாழ்க்கையை மற்றொருவர்(பெற்றோரேயாயினும்) தீர்மானிக்கின்றனரோ அன்றைக்கே அந்த வாழ்வு அஸ்தமனமாகிவிடுகிறதல்லவா? .
இதில் முகில்ஸ் அண்ணா சொல்ல வருவது என்னவெனில்...

பெற்றோர்களே தீர்மானித்து.. இப்படி தவறான முடிவுகள் சில சமயம் எடுக்கையில் பெண்களின் விருப்பத்தினைக் கேட்டு நிறுத்தத் தவறிவிடுகிறார்களே... முதலில் பெண்ணின் விருப்பமே கேட்பதில்லையே.. திணிக்கப்பட்டு.. ஒருவாறு... அனுசரித்து ஒப்புக்கொள்ள வைத்துவிடுவதே நடக்கிறது..

அவ்வகை முடிவுகள் தடுக்கப்பட்டிருந்தால். இவ்வகை அஞ்சலிகள் இருந்திருக்க மாட்டார்களே...???!!

அந்த கோணத்தில் மட்டுமே அவர் கருத்தை நான் ஆமோதித்தேன்..

பொதுவாக.. பெற்றோர் பார்க்கும் வரன் சிறந்த குணாளனா என்று பார்ப்பதை விடுத்து பணக்காரரா என்று பார்த்து சென்று விட்டிலாக விழுந்ததால் தான்.. இவ்வகை சோகங்கள் வெடிக்கின்றன..

கண் முன்னே சாட்சிகள் நிறைய என்னிடம் அக்கா..

ஆகவே.. முழுக்க முழுக்க எந்த நல்ல பெற்றோரையும் நான் சாடவில்லை..:icon_ush: இரண்டாந்தாரமாக கொடுக்க விரும்பும் இவ்வகை முட்டாள்த்தனமான முடிவெடுக்கும் பெற்றோரைத்தான் வன்மையாக சாடுகிறேன்.:mad:

கண்மணி
01-07-2008, 07:27 AM
நான் சொல்ல வந்தது தான் உனக்குப் புரியலைத் தங்கச்சி!

கவிதை, கதை, கட்டுரை என அனைத்தையும் ஒரு கைபார்ப்பதாய் உத்தேசமோ? எண்ணிய ஈடேற வாழ்த்துகள்.


உங்கள் ஆசியோடு எல்லா இடத்திலும் என் முயற்சியை தொடர்ந்து வருகிறேன் முகில்ஸ் அண்ணா..!!

வெற்றி பெறுகிறேனோ இல்லையோ.. ஆனால்.. முயல்வதே எனக்கு வெற்றி தானே??!!

இதுக்குத்தான் அந்தப் பதில் என்று எனக்குப் புரியுது. ஆனா க்வோட் பண்ணாம விட்டதால, அர்த்தம் மாறுதேன்னு சொன்னேன்,

பூமகள்
01-07-2008, 07:58 AM
ஹையோ.. கண்மணி அக்கா...!!
எல்லாத்தையும் கோட் பண்ணாம.. முக்கியமான கருத்தை மேற்கோள் செய்துட்டு.. மீதி பதிலுக்கு பதில் எழுதுவது என் பழக்கம்..

அநாவசியமாக பதிவில் மொத்ததையும் மேற்கோள் செய்வது சரியான வழிமுறை அல்ல என்று ஏற்கனவே பச்சைச் சட்டைகள் வழிநடுத்துவதால் அப்படி செய்வதில்லை.. அதிகம்..

இப்போ புரிஞ்சுடுச்சுக்கா..

ஆனா பூவைப் பத்தி தான் எல்லாருக்கும் தெரியுமே.. இதுல தப்பா யாரும் எடுத்துக்க மாட்டாங்கன்னு ஒரு பெரும் நம்பிக்கை தான்.

இருந்தாலும் சரியா பாயிண்டைப் பிடிச்சி கேள்வி கேட்டு என்னை சரியா பதில் சொல்ல வைச்சதுக்கு நன்றிகள் அக்கா...!!