PDA

View Full Version : சராசரி கனவுகள்



ஆதி
28-05-2008, 12:14 PM
பால் மளிகை
மருந்து என
துண்டுவிழாத பட்ஜட்

அடிக்கடி அலைந்தும்
கால்கடுக்க நில்லாமலும்
கிடைக்கும்
ரேஷன் சமையல்வாயு

மேமாத இரவிலும்
மெகாத்தொடர் நடுவிலும்
தடைபடாத மின்சாரம்

நேரத்திற்கு வரும் பேருந்து
நிற்காமல் வரும் குழாய்நீர்

ரயிலிலோ பேருந்திலோ
பயணிக்கையில்
ஜன்னலோர இருக்கை

இவைதான்
இந்த சராசரிகளின் கனவுகள்..

சாம்பவி
28-05-2008, 12:18 PM
சராசரிகளின் கனவுகளாவது
பிழைத்துப் போகட்டும்...
பிழைகளைக் களையுங்களேன்....
புண்ணியமுண்டு......!!!!!

ஆதி
28-05-2008, 12:25 PM
சராசரிகளின் கனவுகளாவது
பிழைத்துப் போகட்டும்...
பிழைகளைக் களையுங்களேன்....
புண்ணியமுண்டு......!!!!!

திருத்திவிட்டேன் சாம்பவி..

அமரன்
30-05-2008, 12:49 PM
சமகாலத்தை அடியொற்றிய கவிதை. சராசரி மக்கள் சிந்தனை தரமாகத்தான் உள்ளது. சன்னலோரப் பயண இருக்கையை விட மற்றயவையில் பொதுநலம் ஓடுகிறது. அவை தீர்க்கப் படக்கூடியவை.

எதார்த்தம் என்றாலே எளிமை ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும்போலும். பாராட்டுகள் ஆதி.

அனுராகவன்
02-06-2008, 12:11 PM
அருமை ஆதி..
இன்னும் வளர வாழ்த்துக்கள்

ஆதவா
19-06-2008, 11:22 AM
ஒருபக்கம் பொருளாதாரத்திற்காக கால் தேயும் வர்க்கம்
மறுபக்கம் பொருளாகாரத்திற்காக உழைக்கும் வர்க்கம்.

ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் உலகம் இல்லை. சராசரி என்பது இரண்டுக்கும் அல்லாதது.. நடுத்தரத்தினர். கனவுகளும் அப்படித்தான்... எதற்கும் சாயாமல் வந்து போவது.

நல்லதொரு கவிதை ஆதி.