PDA

View Full Version : ஆலமரம்



ஆதி
28-05-2008, 04:38 AM
ஊரெங்கும் உலவியக் காற்று
நிரப்பிச் செல்கிறது
இந்த ஆலமரத்தில்
தன் இசையை..

வெறுமையூடிய கிளைகள்
இலையுதடுகளால் முணுமுணுத்தன
பிரிந்தப் பறவைகளின் பாடல்களை..

அந்தப் பாடல்களில்
தனிமையின் தவிப்புகள்
பறவைகளின் ஸ்பரிசங்கள்
சிறகுகளின் சடசடப்புகள்
இறகுகளின் உதிர்வுகள் என
எல்லாம் நிறைந்திருந்தன..

ஏக்கமும்
வேதனையும் வடியும்
என் நெஞ்சை
மேலும் கீறிய
அப்பாடல்களுக்கு தெரியாது
சதையோடு பேர்ந்த நகம் போன்ற
வலிகளாலான சில நினைவுகளை..

நம்பிகோபாலன்
28-05-2008, 05:08 AM
வார்த்தைகளில் வலி அழகான கோர்வையில் எழுதி, அருமையான கவிதை ஆதி...

இராஜேஷ்
28-05-2008, 05:49 AM
ஆதி ஜீ! வரிகள் மிகவும் அருமை, இதையே நாம், முதியோர் இல்லத்தில் இருக்கும் நாகரிக தியாகிகளுக்கு ஒப்பிடலாம்

சுஜா
28-05-2008, 08:04 AM
//ஊரெங்கும் உலவியக் காற்று
நிரப்பிச் செல்கிறது
இந்த ஆலமரத்தில்
தன் இசையை..

வெறுமையூடிய கிளைகள்
இலையுதடுகளால் முணுமுணுத்தன
பிரிந்தப் பறவைகளின் பாடல்களை..//

தனிமை ஒருவனை என்னென்ன பாடுபடுத்தும்
என்பதை நான் அனுபவித்திருக்கிறேன் .
இந்த வரிகள் என் வலிகளின் மேல் எதையோ நீவிச்செல்கிறது.
அருமையான வரிகள்;வாழ்த்துகள் .

shibly591
28-05-2008, 08:34 AM
நல்லது ஆதி...நல்லதொரு கவிதை...வாழ்த்துக்கள்

ஆதி
01-06-2008, 07:18 AM
வார்த்தைகளில் வலி அழகான கோர்வையில் எழுதி, அருமையான கவிதை ஆதி...


ஆதி ஜீ! வரிகள் மிகவும் அருமை, இதையே நாம், முதியோர் இல்லத்தில் இருக்கும் நாகரிக தியாகிகளுக்கு ஒப்பிடலாம்


நல்லது ஆதி...நல்லதொரு கவிதை...வாழ்த்துக்கள்

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

ஆதி
01-06-2008, 07:23 AM
தனிமை ஒருவனை என்னென்ன பாடுபடுத்தும்
என்பதை நான் அனுபவித்திருக்கிறேன் .
இந்த வரிகள் என் வலிகளின் மேல் எதையோ நீவிச்செல்கிறது.
அருமையான வரிகள்;வாழ்த்துகள் .

உங்கள் இந்தப் பின்னூட்டமும் என் கவிதை மேல் படிந்திருந்த வலிகளை சுகமாக தடவிச் செல்கிறது

பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல சுஜா..

செந்தமிழரசி
02-06-2008, 05:43 AM
ஏக்கமும்
வேதனையும் வடியும்
என் நெஞ்சை
மேலும் கீறிய
அப்பாடல்களுக்கு தெரியாது
சதையோடு பேர்ந்த நகம் போன்ற
வலிகளாலான சில நினைவுகளை..

வலியின் உயிரால் உடலாலான
வரிகள்

உங்கள் கவிதைகள் வேறு பாதை நோக்கி பயணிப்பதாய் உணர்கிறேன், நவீனவ இலக்கியம் வேண்டாம் என்பது என் வேண்டுகோள்.

அனுராகவன்
02-06-2008, 12:07 PM
அருமை ஆதி..
தொடர்க

சுகந்தப்ரீதன்
16-06-2008, 12:28 PM
அந்தப் பாடல்களில்
தனிமையின் தவிப்புகள்
பறவைகளின் ஸ்பரிசங்கள்
சிறகுகளின் சடசடப்புகள்
இறகுகளின் உதிர்வுகள் என
எல்லாம் நிறைந்திருந்தன....
இவ்வரிகள் அனைத்தும் மனித வாழ்வை சித்தரிப்பதாய் என் சிந்தைக்கு தோன்றுகிறது நண்பரே..!! ஆனால் அதையடுத்து வரும் பத்தியில் கடைசி இருவரிகளில் எதையோ மறைமுகமாக சொல்ல முயன்றிருக்கிறீர்கள்..!! அதன் உள்ளார்ந்த அர்த்தம் என்னவென்றுதான் எனக்கு புலப்படவில்லை..!!

உங்கள் கவிமரம் மேலும் பலபல விழுதுகள்விட எனது வாழ்த்துக்கள் நண்பரே..!!

ஆதவா
24-06-2008, 01:24 PM
ஒவ்வொருவருக்கும் ஒருவித வலி இருக்கும் ஆதி.

அவ்வலிகள் நினைவுகளைக் கிளறும் போது ஏற்படும் வலிகள் குருதியில்லா காயம் போன்றது. அதன் ரணத்தை ரசிக்க முடியாது..

திரு.இராஜேஷ் சொல்வதைப் போல பிரிகளின் நினைவுகளோடு வாழும் முதியவர்கள் பற்றியதாக இக்கவிதை கனக்கச்சிதமாக பொருந்தும்... அவரவர் பார்வைக்குப் பாத்திர நீர் கவிதை..

வாழ்த்துகள் ஆதி