PDA

View Full Version : பயங்கர போதையில் சீரழியும் பருவப் பெண்கள்!



ராஜா
27-05-2008, 08:46 AM
http://www.alaikal.com/news/wp-content/pen-pothai.jpg
பயங்கர போதையில் பருவப் பெண்களின் வாழ்க்கை சீரழிகிறது.
சமீபத்தில் ஒரு நாள் சென்னை புறநகரில் உள்ள ஒரு பார்ம் ஹவுஸில் பார்ட்டி ஒன்று நடந்திருக்கிறது. அந்தப் பார்ட்டிக்கு பீச் ஹவுஸ் பார்ட்டி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இதில் 25க்கும் மேற்பட்ட பெரும்புள்ளிகள் பலரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். டீன் ஏஜ் பெண்களும் கலந்து கொண்டார்களாம். பெரும்புள்ளிகளுடன் பெண்களும் வந்திருந்தார்கள்.
அந்தப் பார்ட்டி சிறிது நேரத்தில் திசை மாறியது. மியூஸிக், குடி என்று அந்த ஃபார்ம் ஹவுúஸ போதையில் மிதந்தது. இந்தப் பார்ட்டி ஏறக்குறைய அதிகாலை 2.30 மணி வரை நடைபெற்றதாம்.
எல்லாம் முடிந்த பிறகு அங்கே துவண்டு போய் கிடந்திருக்கிறார்கள் இரு இளம் பெண்கள். அந்த ஃபார்ம் ஹவுஸின் சொந்தக்காரர்கள் அந்தப் பெண்களைத் தெளிய வைத்து விசாரித்துப் பார்த்தால், இருவருமே பிரபல கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவிகள் என்பது தெரிய வந்துள்ளது.
ஷாக் ஆகிப் போன அந்த ஃபார்ம் ஹவுஸ்காரர்கள், பத்திரமாக அவர்கள் வாடகைக்கு ரூம் எடுத்துத் தங்கியிருந்த இடத்தில் கொண்டு போய் விட்டு வந்திருக்கிறார்கள்.
இன்னொரு இடம் சென்னைக்கு உள்ளேயே இருக்கிறது. அங்கு சென்னை போலீஸ் அதிகாரியின் மகன் ஒருவரே அடிக்கடி போய், கண்டபடி சாப்பிடுகிறார்.
அங்கே ரெஸ்டாரண்ட்டில் இருந்துகொண்டே, சம்பந்தப்பட்ட ஏரியா இன்ஸ்பெக்டருக்கு ஃபோன் போடுவாராம் அவர். இன்ஸ்பெக்டர் லைனில் வந்ததும், “பில்லை செட்டில் பண்ணுங்கள்’ என்று கூறிவிட்டுக் கிளம்புவாராம் அந்தப் பிள்ளை! ஏரியா போலீஸ் அதிகாரியின் பிள்ளையாயிற்றே என்று அந்த இன்ஸ்பெக்டரும் பில்லை செட்டில் பண்ணுவார்.
இப்படியொரு முறை அந்த இன்ஸ்பெக்டர், மயங்கிய நிலையில் தூக்கிச் செல்லப்படும் பெண் ஒருவரைப் பார்த்திருக்கிறார். உடனே அங்கே ஓடி விசாரித்தால், “”உங்க அதிகாரிங்களோட புள்ளைங்க எல்லாம் இங்கதான் சாப்பிடுதுங்க. பேசாம போயிடுங்க” என்று “மிரட்டல்’ பாணியில் சொல்லி அனுப்பிவிட்டார்களாம்.
இப்படி தினமும் சில ஹோட்டல்கள் அல்லது “பீச் ஹவுஸ் பார்ட்டிகளில்’ பருவப் பெண்கள் சிக்கிச் சீரழிகிறார்கள்.
அடிக்கடி ஹோட்டல் போகும் ஒருவர் நம்மிடம், “”முன்பெல்லாம் கஞ்சா, பிராந்தி, விஸ்கி என்று இருந்த நிலை இப்போது ஸ்லோவாக மாறத் தொடங்கியுள்ளது. “கோக்’ (ஸ்ரீர்ஸ்ரீ) என்று இளைஞர்கள், பெண்கள் வட்டாரத்தில் பேசப்படும்.
நாம் ஏதோ கூல்டிரிங்க்ஸ் என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் கூல்டிரிங்க்ஸ் அல்ல! போதைப் பொருளான “கொக்கேன்’தான் “கோக்’ என்று இளைஞர்கள் மத்தியில் மிகப் பிரபலமாகி வருகிறது.
ஒரு கிராம் 4000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை கொடுத்து வாங்கி உறிஞ்சும் பழக்கம், இளம்பெண்கள் மத்தியிலேயேகூட ஏற்பட்டுவிட்டது அதிர்ச்சிகரமான தகவல்.
இதில் கல்லூரியில் படிக்கும் பெண்களும் சிக்கிக் கொள்கிறார்கள். மாணவ, மாணவிகள் விஷயத்தில் பெற்றோர்கள்தான் உஷாராக இருக்க வேண்டும்” என்கிறார்.
அடுத்து நாம் பேசியது போதைத் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவரிடம்! அவர் நம்மிடம், “”நாங்கள் அடிக்கடி ரெய்டு செய்கிறோம். கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள போதைப் பொருள்களைப் பிடிக்கிறோம். ஆனால் ஆப்கானிஸ்தான் மூலமாக வெகு எளிதாக போதைப் பொருள்களை கடத்தி வந்துவிடுகிறார்கள்.
வெளிநாடுகளில் “ஸ்நேக் பைட்டிங்’ என்ற முறை இருக்கிறது. அதாவது போதையை விரும்பும் நபரின் நாக்கில் பாம்பைக் கொத்த விடுவார்கள்! அதற்கு மட்டும் தனியாக 4000 ரூபாய் ஃபீஸ் வாங்கிக் கொள்வார்கள்.
அதுபோல் இப்போது “கோக்’ கலாசாரம், சென்னை போன்ற மெட்ரோபாலிட்டன் நகர்களில் பிரபலமாகி வருகிறது” என்ற பகீர் தகவலைக் கொட்டினார்.
நாம் போலீஸ் தரப்பிலும் பேசினோம். அவர்களோ, “”எங்களைப் பொறுத்தமட்டில் எங்கள் கவனத்திற்கு வரும் “பீச் ஹவுஸ் பார்ட்டிகளில்’ மிகவும் ஜாக்கிரதையாக இருக்கிறோம். 11 மணிக்கு மேல் பார்ட்டி நடத்தக் கூடாது என்றெல்லாம் தடை விதிக்கிறோம்.
பழைய அல்லது புதிய மகாபலிபுரம் சாலைகளில் அரைகுறை ஆடையுடன் ஜோடியாக பைக்கில் போகும் பெண்களை நிறுத்தி, “முறையாக ஆடை அணிந்து கொள்ளுங்கள். இந்த ராத்திரியில் இப்படிப் போகலாமா?’ என்றெல்லாம் அட்வைஸ் பண்ணுகிறோம்.
ஆனால் சில நேரங்களில் அந்தப் பெண்களின் பெற்றோரே, “எங்கள் பெண்ணின் சுதந்திரத்தில் போலீஸ் ஏன் குறுக்கிட வேண்டும்?’ என்று கேள்வி கேட்டுவிடுகிறார்கள்.
இளம்பெண்கள் பார்ட்டிகளில் போதை தலைக்கேறி ஆட்டம் போடுகிறார்கள். ஆனால் நீங்கள் சொல்வது போன்ற “கோக்’ கலாசாரம் இதுவரை எங்கள் கவனத்திற்கு வரவில்லை” என்கிறார்கள்.
மாநில போதைத் தடுப்புத் துறையில் ஐ.ஜி.யாக இருந்த சேகர், தற்போது சென்னை போலீஸ் கமிஷனராகவும் பதவியேற்கப் போகிறார். அவருக்கு சென்னையை போதைப் பொருள்கள் படுத்தும்பாடு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது அவர் உறுதியான நடவடிக்கை எடுத்து இளம்பெண்களைக் காப்பாற்றுவார் என்று எதிர்பார்ப்போம்

ஆதி
27-05-2008, 09:52 AM
உண்மையிலையே வருத்தப்பட வேண்டிய வெட்கப்பட வேண்டிய விடயம்.. ஒவ்வொருத்தரின் சுட்டுவிரலும் மற்றவர்களை நோக்கி நீள்கிற வரை இதற்கு ஒரு தீர்வு கிடைக்காது..

சென்னை.. கல்லூரி சாலையில் உள்ள ஒரு பேர்போன பெண்கள் கல்லூரி.. போதை வஸ்து பயண்பாட்டாலும் பெயர்போனது.. எனக்கு தெரிந்து அந்தக் கல்லூரியில் இந்தப்பழக்கம் எட்டு வருடத்திற்கு முன்பே இருந்துச்சு..

இராஜேஷ்
27-05-2008, 09:56 AM
மிகவும் அதிர்சிகரமான தகவல், நாகரீகம் என்ற பெயரில் நகரங்கள் நரகங்களாகிக் கொண்டிருக்கிண்றன.

நம்பிகோபாலன்
27-05-2008, 09:56 AM
வருத்தபடுகிறேன். கலாச்சாரம் ஏன் இவ்வ்ளவு சீர்கெட்டு போனதை எண்ணி, ஆதி கூறியது போல வெட்கபட வேண்டிய விஷயமாக எண்ண தோன்றுகிறது.

aren
27-05-2008, 10:13 AM
கையில் அளவிற்கு அதிகமாக பணம் புழங்கினால் இந்த மாதிரியாக பல விஷயங்கள் நடக்கும், நடந்துகொண்டேயிருக்கும். இதை தடுப்பது கொஞ்சம் கடினம்தான்.

புதியவன்
30-05-2008, 07:56 AM
இது போன்ற கல்லாச்சார சீரழிவுகளை கண்டு வேதனைப்படுகிறேன். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பதை இது போன்ற நிகழ்வுகள் தலைகுனிய வைத்துவிடும். இவ்வாறான சம்பவங்களைத்தடுக்க ஊடகங்களினூடாக மக்களிடையே விழிப்புணர்வை, குறிப்பாக இளஞ்சமுதாயத்தினரிடம் தமிழ்க்கலாச்சாரங்களை பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். :smilie_flags_kl:

Keelai Naadaan
30-05-2008, 08:08 AM
கையில் அளவிற்கு அதிகமாக பணம் புழங்கினால் இந்த மாதிரியாக பல விஷயங்கள் நடக்கும், நடந்துகொண்டேயிருக்கும். இதை தடுப்பது கொஞ்சம் கடினம்தான்.

ஆரென் அவர்கள் கூறியதைப்போல் இதை தடுப்பது கடினம் தான். பல மாநிலத்தவர்கள், பலநாட்டினர்கள் கூட வந்து போகின்ற இடம் சென்னை.
இன்றைய இளைஞர்களிடம் பணமும் தாராளமாக புழங்குகிறது. ஆதலால் முற்றிலுமாக தடுப்பது கடினம் தான். தடுக்க வேண்டியது அவசியம்.

lolluvathiyar
30-05-2008, 08:26 AM
இது போன்ற சிறிய விசயங்களை கன்டு நாம் யாரும் பயபட தேவை இல்லை. இன்றைய இழைஞர்கள் நல்ல விழிப்புனர்வுடன் இருக்கிறார்கள். இது போன்ற போதை பொருட்களுக்கு அடிமை ஆகுபவர்கள் மிக மிக குரைந்த சதவீதமாக தான் இருக்கும். .001 சதவீதம் கூட வராது. கெட்டவை நிரைந்திருக்கும் நகரங்களில் இருந்து பார்த்தால் ஏதோ உலகமே கெட்டு போய் விட்டதாக தான் தெரியும். உன்மையில் பெரும்பான்மை மக்கள் நல்லவர்களாகவே வாழ்கிறார்கள்.

shibly591
30-05-2008, 08:27 AM
ச்சீ...என்று முகம் சுளிக்க வைக்கிறது.திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒளிக்க முடியாது