PDA

View Full Version : குழந்தைகள் பார்க்க கூடாத வெப்தளங்களை நம் கம்ப்யூட்டரில் தடைசெய்யமுடியுமா?



vimal100
27-05-2008, 06:45 AM
குழந்தைகள் பார்க்க கூடாத வெப்தளங்களை நம் கம்ப்யூட்டரில் தடைசெய்யமுடியுமா?இதற்கு ஏதாவது சாப்ட்வேர் உள்ளதா?

பூமகள்
27-05-2008, 07:33 AM
பல மென்பொருள் நிறுவனங்களில்.. வேலை செய்பவர்களின் இணைய பயன்பாட்டினையும் அவர்கள் செல்லும் தேவையற்ற தளங்களின் சுட்டிகளையும் தடை செய்யவென்றே பல மென்பொருட்கள் உபயோகத்தில் உள்ளன. உதாரணமாக.. அலுவலக கணினியிலிருந்து.. விளையாட்டு.. மற்றும் துறை சாராத பொழுதுபோக்கு தளங்களுக்கு செல்லாமல் தடுக்க.. அவற்றை தடை செய்துவிடுவார்கள்.

ஆயினும்.. எதுவும் இலவசமாக கிடைப்பதாக எனக்குத் தெரியவில்லை. மன்ற சொந்தங்கள் ஏதேனும் கிடைத்தால் நிச்சயம் உங்களுக்கு உதவுவார்களென நம்புகிறேன்.

ஆதி
27-05-2008, 08:01 AM
உங்கள் iexplore-ல்

tools-->Internet Options---> security ---> restricted sites

இங்கே சென்று..
எந்த தளங்களை.. இந்த மாதிரியான விடயங்களை அவர்கள் பார்க்கக் கூடாது என்று நினைக்கிறீர்களோ அவற்றின் key-word-களை எ.டுவாக..

"mail" என்றுக் கொடுத்துவிட்டால் அவர்கள் எந்த மெயில் தளங்களையும் பார்க்க இயலாது.. "game" என்றுக் கொடுத்துவிட்டால் எந்த game தளங்களையும் பார்க்க இயலாது..

எல்லா தளங்களையும் கண்டு ப்ளாக் செய்வதைவிட இந்த மாதிரி keywork-கள் கொண்டு ப்ளாக் செய்வது எளிது..

உதயசூரியன்
27-05-2008, 09:12 AM
தற்போது கீ வேர்ட் மறைக்க படும் இணைய தகவல்கள் உள்ளதா..
இல்லையா..??

ஆதி அவர்கள் சொன்னதே போதுமானதா..???

எனினும்.. எனக்கும் இது தேவை படுகிறது..நன்றி ஆதி அவர்களே..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

ஆதி
27-05-2008, 09:32 AM
Squid for windows download செய்யுங்கள் இது ஒரு proxy server software.. open source தாங்க இந்த மென்பொருள்..

உங்கள் கணினியில் install செய்தப் பிறகு சொல்லுங்க..

spam, malware and ads farm site, pop-up என இன்னப்பிற எதுவும் உங்கள் கணினியை அனுகாதப்படிக்கு செய்யலாம்..

அதேப் போல் தேவையற்ற தளங்களையும் ப்ளாக் செய்யலாம்..

install செய்தப்பிறகு கூறவும்.. என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவாக விளக்குகிறேன்..

இராஜேஷ்
27-05-2008, 09:38 AM
யம்மாடியோவ்! நம்ம மன்றத்தில் பல ஜாம்பவான்கள் இருக்கிறர்கள். பல பயனுள்ள அறிய தகவல் மிக எளிதாக கிடைக்கின்றன. நன்றி ஆதி அண்ணா.

vimal100
27-05-2008, 10:28 AM
நன்பர் ஆதி அவர்களே நான் Squid for windows download எனது கம்ப்யூட்டரில் நிறுவிவிட்டேன் பிறகு என்ன செய்யவேண்டும்?

பூமகள்
27-05-2008, 10:42 AM
அடடே... Squid-ஐ எப்படி மறந்தேன்...??!!
எங்கள் அலுவலகத்திலும் இதை பயன்படுத்தியிருக்கிறார்கள்.. எனக்கு செய்முறை அனுபவமில்லை.. வெறும் டெக்னாலஜி மட்டும் தான் தெரியும். இங்கே செய்முறையை விளக்கமாக பதித்தால்.. நானும் தெரிந்து கொள்வேனே..!!

ஆதி
27-05-2008, 11:33 AM
ஆங்கிலத்தில் பதிப்பதற்கு மன்னிக்கவும்..

squid installed path-க்கு செல்லவும்..

for example:-

c:\>cd squid\etc\squid

or

c:\>cd squid\

or

My Computer > C: Drive > Squid > etc > squid.conf

1) Open the squid configuration file..

c:\squid\etc>edit squid.conf or c:\squid> edit squid.conf

Hit ALT + S, and Hit F - key.. Do Search.. "localhost"

You will see the below lines

acl localhost src 127.0.0.1/255.255.255.255
acl Safe_ports port 80 443 210 119 70 21 1025-65535
acl CONNECT method CONNECT

What is what on acl localhost src 127.0.0.1/255.255.255.255 ?

acl - accesslist
localhost - your system
src - source address
127.0.0.1/255.255.255.255 - default ip address

2) Add This bolded line

acl localhost src 127.0.0.1/255.255.255.255
acl Safe_ports port 80 443 210 119 70 21 1025-65535
acl CONNECT method CONNECT
acl BadSites dstdomain "c:\squid\restricted-sites.squid"

3) இந்த "restricted-sites.squid" file-யை create செய்யவும்..

My Computer > C: Drive > Squid

Right-click > New > Notepad

Type the restricted Site Names or Keywords

Over the Notepad and Click save as

and with the name restricted-sites.squid


4) பிறகு உங்கள் iexplore-ல்

iexplore > tools > internet options > connections > Lan settings

Use Proxy server for you Lan என்பதை check செய்து

Address BOX-ல் : 127.0.0.2 Port BOX-ல்: 3128

என்பனவற்றை நிரப்பி OK செய்யவும்..

இதுவே தேவையற்ற வெப்தளங்களை ப்ளாக் செய்யும் வழிமுறை..

எனக்கு என்னமோ இந்த செய்முறைக் கொஞ்சம் குழப்பமாகதான் இருக்கும் போல தெரியுது.. புரியவில்லை என்றால் சொல்லவும்..

அவசரமாக பதிவதால்தான் இந்த அவலம்..

பொறுமையாய் தெளிவாய் பதிகிறேன் மீண்டும்..

செல்வா
27-05-2008, 12:39 PM
அவசரமாக பதிவதால்தான் இந்த அவலம்..

பொருமையாய் தெளிவாய் பதிகிறேன் மீண்டும்..
ஆமாம்... ஆமாம்.... அவசரமாகத்தான் பதிந்துள்ளாய் பார் பொறுமை கூட பொருமையாய் வந்துள்ளது.... :D

(கோச்சுக்காத.... சும்மா......;))

ஆதி
27-05-2008, 12:43 PM
ஆமாம்... ஆமாம்.... அவசரமாகத்தான் பதிந்துள்ளாய் பார் பொறுமை கூட பொருமையாய் வந்துள்ளது.... :D

(கோச்சுக்காத.... சும்மா......;))

திருத்திட்டன் டா..

சாம்பவி
27-05-2008, 12:56 PM
ப்ரவுஸரின் LAN settings ., localhost* க்கு மாற்ற வேண்டாமோ....... ;)

ஆதி
27-05-2008, 01:02 PM
ப்ரவுஸரின் LAN settings ., localhost* க்கு மாற்ற வேண்டாமோ....... ;)

மன்னிக்கவும் மறந்துட்டேன்..

சேர்த்துவிடுகிறேன்..

ஞாபமூட்டியமைக்கு நன்றி..

சாம்பவி
27-05-2008, 01:12 PM
மன்னிக்கவும் மறந்துட்டேன்..

சேர்த்துவிடுகிறேன்..

ஞாபமூட்டியமைக்கு நன்றி..

ஆயினும் ஆதி.,
இப்படி proxy server service ., கணினிகளில் நிறுவுதலில்.. கவனம் தேவை....
முறைப்படியாக கான்ஃபிகர் செய்யாத பட்சத்தில்...
ஆபத்தில் முடியும்... !
உதாரணமாக ... open proxy... !
squid is notoriously known for that.. .!
உங்களின் முதல் ஆலோசனையே இந்த சூழ்நிலைக்குப் போதுமானதன்றோ... !

ஆதி
27-05-2008, 01:27 PM
ஆயினும் ஆதி.,
இப்படி proxy server service ., கணினிகளில் நிறுவுதலில்.. கவனம் தேவை....
முறைப்படியாக கான்ஃபிகர் செய்யாத பட்சத்தில்...
ஆபத்தில் முடியும்... !
உதாரணமாக ... open proxy... !
squid is notoriously known for that.. .!
உங்களின் முதல் ஆலோசனையே இந்த சூழ்நிலைக்குப் போதுமானதன்றோ... !

உண்மைதான்...

ஒரு பெரிய விளக்கம் மற்றும் வகுப்பே அதற்கு எடுக்க வேண்டி இருக்குமே.. அதான் ரொம்ப சுருக்கமா கொடுத்தேன்..

localhost setting மட்டுமே பயன்படுத்துவதால் பிரச்சனைகளை பெரும்பாலும் தவிற்கலாம்..

server side setting பற்றி மட்டுமே யோசித்தேன் client side பற்றி துளியும் ஞாபகமில்லாமல் போய்விட்டது..

Narathar
27-05-2008, 01:33 PM
நம்ம மன்மதனை கேட்டால்.................
அவர்களது அலுவலகத்தில் பாவிக்கும் செயலியைச்சொல்லுவார்
( கொஞ்சம் கடுப்புடன் ஹா ஹா நாராயணா!!! )

சூரியன்
27-05-2008, 04:00 PM
நல்ல விளக்கம் நன்றி ஆதி அண்ணா.

vimal100
28-05-2008, 05:38 AM
வணக்கம் நன்பர்களே என் கேள்விக்கு பதில் சொன்ன நன்பர்களுக்கு நன்றி
ஏதோ சொன்னீர்கள் ஆனால் இந்த மரமண்டைக்கு கொஞ்சம்கூட ஏறவில்லை
அத்தனை நன்பர்களுக்கும் மீண்டும் என்னுடைய நன்றிகள்

ஆதி
28-05-2008, 09:29 AM
வணக்கம் நன்பர்களே என் கேள்விக்கு பதில் சொன்ன நன்பர்களுக்கு நன்றி
ஏதோ சொன்னீர்கள் ஆனால் இந்த மரமண்டைக்கு கொஞ்சம்கூட ஏறவில்லை
அத்தனை நன்பர்களுக்கும் மீண்டும் என்னுடைய நன்றிகள்

தவறு என்னுடையதுதான் தெளிவாக பதிக்காததற்கு மன்னிக்கவும்..

நிச்சயம் தெளிவாய் பதிக்கிறேன்

மன்மதன்
28-05-2008, 09:31 AM
நம்ம மன்மதனை கேட்டால்.................
அவர்களது அலுவலகத்தில் பாவிக்கும் செயலியைச்சொல்லுவார்
( கொஞ்சம் கடுப்புடன் ஹா ஹா நாராயணா!!! )

ஊஹூம்..:fragend005::fragend005: இந்த விஷயத்தில் நானும் உங்களை மாதிரிதான்...ஏதோ உபயோகிக்கிறார்கள்.. பொசுக் பொசுக் என்று எல்லா தளங்களையும் தடுத்து விடுகிறது. .:mad::mad:
(ஆனாலும் பாருங்க...நம்ம கேர்ள்ஃப்ரண்ட் பிராக்ஸி இருக்கும் போது கவலை எதுக்கு.. ...:D)

Keelai Naadaan
04-06-2008, 04:08 PM
தெரியாத பல விசயங்களை கற்று தந்த அனைத்து நன்பர்களுக்கும் நன்றி.