PDA

View Full Version : விட்டுகொடுத்துவிட்டேன்..



நம்பிகோபாலன்
27-05-2008, 05:53 AM
வாழ்க்கை வாழ்ந்து
விடும் தூரம்தான்
வாழலாம் என்றவளே
அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
அக்னி சாட்சியாக
சுபயோக சுபதினத்தில்
நடந்தேறிய திருமணம்
இன்று உனக்கு
உன்னுடன் நான்
வாழ்ந்த நாட்களில்
எதையும்
விட்டுகொடுக்கவேயில்லை
என்று
விவாகரத்தில்
பரஸ்பர ஒப்பந்தத்தில்
பிரிவை கோரி
உன்னை விட்டுகொடுக்க
செய்தவளே..
வலிக்குதடி
வாழ்க்கை வாழ்ந்து
விடும் தூரம்தான்
ஆனால் உன்னை விட்டு
வாழ்வேனா….

Narathar
27-05-2008, 05:37 PM
கவலையை விடுங்கள்....
இதிலாவது விட்டுத்தந்தாரே என்று
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
அவள் உங்களை மீண்டும் தேடி வருவாள்...

உங்கள் கவிதை கற்பணையெனில் கற்பணையில்
நிஜமெனில் நிஜத்தில்