PDA

View Full Version : கேளுங்க என் கதையை!!கண்மணி
26-05-2008, 10:43 AM
நினைவு தெரிந்த நாளிலிருந்தே நான் இந்த வீட்டில் தான் இருக்கிறேன். மீரா அம்மாவிற்கு என் மேல் அன்பா இல்லை அது கடமையே புரியாது. ஆனால் அம்மா கண்கள் என்னை நீண்ட நேரம் பார்க்காமல் இருந்து விட்டு பார்த்தால் ஒளிரும் பார்த்திருக்கேன்.

அப்பா ஒரு வாத்தியார். அவருடைய பள்ளியில் செல்லாத அதட்டலை எல்லாம் என்னிடம் தான் காட்டுவார். எல்லோரும் அவர் முன்னால பயப்படற மாதிரி நடிச்சுட்டு அவர் போனப்புறம் கேலி செய்வாங்க. அது அவருக்குத் தெரியுமா இல்லியா தெரியலை. ஆனால் தனியா இருக்கும் பொழுது சிந்தனையில் முழுகினார்னா பக்கத்தில பாம் போட்டா கூடத் தெரியாது..

ஆசைக்கு ஒண்ணு ஆஸ்திக்கொண்ணுன்னு சொல்லுவாங்க. அதை அவஸ்தைக்கொண்ணு, அடிப்பதுக்கொண்ணுன்னு மாத்திச் சொல்லலாம். அன்பும், மலரும் அப்படித்தான். அனபு இது வரை எதுக்கெதுக்கு அடி வாங்கியிருக்கான்னு சொன்னா நாலு நாள் ஆகும் முடிக்க. அம்மா, அப்பா, மலர், பக்கத்து வீட்டு மோகனா, வாத்தியார், என அவன் அடிவாங்கிய கதையைச் சொன்னா இது நாவலாயிடும். ஆண் பிள்ளையை அடிச்சு வளக்கணும்னு சொல்வாங்களாம்.

மலர் கொஞ்சம் உல்டா.. பலசமயம் இவள் செய்யற சின்னச் சின்னக் காரியங்கள் பெரிய அவஸ்தைல கொண்டு போய் விட்டுரும். அதனால இவள்கிட்ட எந்த வேலையயும் யாரும் குடுக்க மாட்டாங்க. ஏன்னா இவ செய்யற குழப்படியைச் சரி செய்ய, அப்புறம் அதே வேலையைச் சரி செய்ய என இரட்டைக் கஷ்டமாகிடும்.

அன்பும் மலரும் தான் எனக்குச் செல்லமும். மலருக்கு யாருமே வேலை தரமாட்டாங்க. அதனால மலர்கிட்ட நான் வசமா மாட்டிக்குவேன். எங்கயோ படிச்சது, யாரோ சொன்னதுன்னு இருக்கிற அத்தனை பரிசோதனைகளும் என்னோடதான். அன்பு தேவையில்லாம அடிவாங்கி ஏன்? ஏன்? ஏன் எனக்கு மட்டும்னு அழறப்ப அவனைத் திட்டவே திட்டாத என் மேல் பாசம் பொங்கி வழியும். அப்போ மலருக்கும் அவனுக்கும் சண்டை வந்து அதுக்குத் தனியா அடிவாங்குவான் பாவம்..

அப்படித்தான் அன்னிக்கு சாயங்காலம் 5 மணிக்கே மலர் வந்தாச்சு.. (ஸ்கூலைக் கட்பண்ணி மார்னிங் ஷோ பார்த்துட்டு, மதியம் கொஞ்சம் ஊர் சுத்திட்டு டாண்ணு 5:00 மணிக்கு வீட்ல நல்ல பிள்ளையா ஆஜர்)

7 மணியாச்சு. அன்பு ரொம்பவே டயர்டா முடியெல்லாம் கலைஞ்சு வீட்டுக்கு வந்தான்..

அம்மா மலரைக் காணோம்மா..ஸ்கூல் ஃபுல்லா தேடிட்டு வந்தேன் என்று அவன் காரணம் சொல்ல,

பளாரென விழுந்தது அடி.. அவன் மேட்னிக்கு போயிருப்பதாக அல்லவா மலர் சொல்லி இருந்தாள்,

ஆம்பளைச் சொல் அம்பலம் ஏறுமா? கட் அடிப்பதும் சினிமா போவதும் ஆம்பளைங்க சமாச்சாரம்னில்ல மக்கள் நம்பிகிட்டு இருக்காங்க,

இதுக்கு சினிமா போயிட்டு வந்து அடிவாங்கி இருக்கலாம்..

அன்னிக்கு இராத்திரி அன்பு எடுத்த முடிவும் அதன் விளைவுகளும் தான்..

என் சோகக் கதையா முடிஞ்சிருச்சி,,

கேளுங்க என் கதையை..

தொடரும்

அமரன்
26-05-2008, 10:49 AM
கதைகேளு கதைகேளு கண்மணியின் கதைகேளு.. பாட்டுச் சத்தம் கேட்டு வந்து முதல் வரிசையில உட்கார்ந்துட்டேன்... சொல்லும் விதமும், கதைமாந்தர் பெயர்களும், கதாமாந்தர் குணவியல்புகளும் இன்னும் பலவும் கதையுடன் ஒன்ற வைக்குது.

கண்மணியே கண்மணியே சீக்கிரமாச் சொல்லு..
கண்மணி வந்தாலே கிடைக்குது தமிழ்த்தேனு..

பூமகள்
26-05-2008, 10:58 AM
நிஜமாவே கதை கதாப்பத்திர பெயர்கள்.. கதையோடு ஒன்ற வைக்க உதவுகிறது..:icon_b::icon_b:

ஆயினும்.. இன்னும் கதை சொல்பவரின் கதாப்பாத்திரம் பிடிபட மறுக்கிறதே.. :icon_ush::icon_ush:

குழம்பியபடி.. அப்பாவி தங்கை,:confused:

மதி
26-05-2008, 12:41 PM
அக்கா..
ஆரம்பிச்சாச்சா...! கதைக்கு முன்னாடி ஒரு டிஸ்கிளைமர் போட்டிருக்கலாம். கதையில் வரும் கதாபாத்திரங்களும் சம்வங்களும் கற்பனையே-னு.
தொடருங்க..தொடருங்க..

ஓவியன்
26-05-2008, 03:35 PM
ஏதோ ஒரு முடிவோட தான் புறப்பட்டிருக்கீங்க என்று புரியுது - சரி, சரி கச்சேரியை அதகளப் படுத்திடுங்க...!! :)

மலர்
28-05-2008, 04:56 PM
ஆரம்பிட்டாங்கையா...... ஆரம்பிச்சிட்டாங்க........:sprachlos020: :sprachlos020:
இன்னும் எத்தனை தலை உருள போகுதோ......:fragend005: :fragend005:

எது எப்பிடியோ.... கதையில என் பேரும் வந்துட்டு....
அதனால மலரு நல்லவள் வல்லவள்..
நாலும் தெரிந்தவள்....
அப்பிடி இப்பிடின்னு கொஞ்சம் பிட்டைய்யும்
சேத்து எழுதுங்கக்கா.... :D :D :D

Narathar
28-05-2008, 05:19 PM
சரி கதையில் அமரன் பூமகள் எல்லாம் எப்போ வரபோராங்க? ....

புராணக்கதை இல்லையென்பதால் நான் மட்டும் இல்லை என்பது தெரியும்... நாராயணா!!!!

( உங்கள் கதை ஏதோ விஷால் படத்தை ஞாபகப்படுத்தியது.. படம் பெயர் ஞாபகம் வரவில்லை )

இளசு
09-06-2008, 07:27 PM
புதுமையான கதைசொல்லி கண்மணிக்குப் பாராட்டுகள்..

இலகுவான நடையில் சரளமாய் கதை மனிதர், குணங்கள் என
வளர்கிறது...

''நான்'' என்ற பாத்திரம் மட்டும் கொஞ்சம் இருளாய்..

வளர்ப்புப் பிராணியா?
அப்படி என்றால் நீண்ட நாள் கழித்து பார்க்கும் அம்மா கண்கள்?

கண்மணியே வந்து கண்திறந்தால்தான் உண்டு..

கண்மணி
13-06-2008, 03:52 PM
அன்புக்கு ராத்திரி உறக்கமே வரலை போல இருக்கு.. ரூம்ல லைட்டை அணைச்சிருந்தாலும் அவன் கண் திறந்தேதான் இருந்தது, ராத்திரி பனிரெண்டு மணி அடிச்சது,..

மெல்ல எழுந்து நல்லபையன் மாதிரி மெதுவா மலர் அறைக்குப் போனான்.. கொஞ்சம் நேரம் கழிச்சு வெளிய வந்தான் போய் நிம்மதியா படுத்துத் தூங்க ஆரம்பிச்சான்..

நான் அன்பு அப்படி என்னத்தான் செய்தான்னு தெரியலை.. எனக்கும் அவ்வளவு இண்டரெஸ்ட் இல்லை. கண்டுக்கலை...

விடியற்காலை.. அம்மா பூஸ்ட் கொடுக்கப் போகிற நேரம்.. இப்ப மலர் எழுந்திடுவா.. வேகமா மலர் ரூமுக்கு ஓடின போது தரையில் கிடந்த அது காலில் பட்டு ணணணணணண ணணணணனு உருள அம்மா பூஸ்டோட வர...


என்னை எதுக்கு விரட்டினாங்கன்னே புரியலை.. மலரும் சந்தோசமாத்தான் இருந்தா.. அன்பும் சந்தோஷமாத்தான் இருந்தான்.. அம்மா முகம் மட்டும் இறுகி நான் கையில் கிடைச்சா நாலி சாத்து சாத்துவாங்க போல இருந்தது...

மெதுவா யாருக்கும் தெரியாம மலர் ரூமுக்குப் போனேன்... அங்க மலர் கம்பீரமா படுக்கையில காமிக்ஸ் படிச்சிகிட்டு இருந்தா.. அன்பும் உள்ளதான் இருந்தான்

அன்பு என்ன பண்றான்னு பார்த்தா என்னமோ எழுதிகிட்டு இருந்தான்..

அவன் சற்று கிறுக்கலாக எழுத ஆரம்பித்த உடனே அம்மா அன்பு சரியாவே எழுதலை மலர் கத்த அன்பு மறுபடி சின்சியரா எழுத ஆரம்பிச்சான்..

என்ன குழப்பம் இது? என்ன ஆச்சு?

மலர்தான் சொன்னா, நானும் முதல்ல கண்மணிதான்னு நினைச்சேன்.. அம்மா சரியா பிடிச்சாங்க பார்த்தியா? அசைன்மெண்ட் நோட்டு மேல இங்கையாடா கொட்டறே!! எழுது எழுது எல்லா அசைன்மெண்டையும் ஒழுங்கா எழுது...

வில்லி மாதிரி மலர் சொன்னப்பதான் மெதுவா புரிய ஆரம்பிச்சது.. இராத்திரி இங்க் பாட்டிலைக் கொண்டு போய் மலர் ரூம்ல அசைன் மெண்ட் நோட்டுமேல கொட்டி இருக்கான், இங்க் பாட்டிலை நான் தான் தட்டி விட்டிருப்பேன் என்றுதான் என்னை விரட்டி இருக்கிறார்கள்..

அம்மா புத்திசாலிதான்.. மலர் பென்சிலில் தானே எழுதுவாள் இங்க் எப்படி மலர் ரூமுக்கு வந்தது என்று யோசிச்சு கிடுக்குப் பிடி போட்டு அன்பைப் பிடிச்சுட்டாங்க..

இவங்க இந்தக் கலாட்டாவில வீட்டை விட்டு ஓடிப்போய் மதியம் பசி நேரத்துக்கு வந்த என்னைக் கவனிக்க ஆளில்லை.. மெதுவா கிச்சன் பக்கம் போனேன், அம்மா கைவேலைல பரபரப்பா இருந்தாங்க..

கத்வோரமா நின்னுகிட்டு அப்பாவி மாதிரி முகத்தை வச்சுகிட்டு கதவை மெதுவா நகத்தால சுரண்டினேன்..

ஊரெல்லாம் சுத்திட்டு சாப்பாட்டு நேரத்துக்கு சரியா வந்திடு திட்டி கிட்டே அம்மா சாப்பாடு எடுத்து வச்சாங்க..

ஒரு கண்டத்தில இருந்து தப்பிச்சாச்சி.. இனி கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருக்கணும்...

நல்ல புள்ளையாட்டாம் சாப்டுட்டு என் வேலையைப் பார்க்கத் தொடங்கினேன்..

சாயங்காலம் வரை பொழுது நல்லாத்தான் போச்சு...

சாயங்காலம் அன்பு வெளிய போயிட்டான். வீட்ல மலர் மட்டும் தான்..

அம்மா மலர்கிட்ட கெஞ்சிகிட்டு இருந்தாங்க...
இன்னிக்கு மட்டும்டா செல்லம்.. என் கண்ணில்ல அப்படின்னு

அம்மாவுக்கு கண்ணில்ல தான்.. பின்ன மலர்கிட்ட வேலை செய்யச் சொல்லலாமா?


தொடரும்..

மதி
13-06-2008, 04:02 PM
ஹிஹி...

நல்ல கதை..கொஞ்சமா புரியுது....கண்மணிக்கா...

அன்புரசிகன்
13-06-2008, 04:22 PM
இது நல்லா இல்ல. எதுக்கு இத்தன கொல வெறி? இத்தன அடியா??? எத்தின நாளா காத்திருந்தீங்க????? எதுவா இருந்தாலும் பேசித்தீர்த்துக்கலாம். சரியா???

வாசிக்க வாசிக்க ஒரே ஜோரா இருக்கு... கதையில ஆவது மலருக்கு அன்பு குட்டு வைக்கிறமாதிரி ஒரு சீன் போடுங்களேன்....

இளசு
13-06-2008, 06:53 PM
கண்மணி ,
தொடர்ச்சியும் சுவையாகவே நகர்கிறது..

நான் = கண்மணி என்ற பெயர் = யார் (அ) எது?


(சிறுவர்களுக்கான தொடர்கதையாய் இருக்குமோ?????)

அன்புரசிகன்
13-06-2008, 08:06 PM
(சிறுவர்களுக்கான தொடர்கதையாய் இருக்குமோ?????)

அதெப்படி அவ்வளவு உறுதியாக கேள்வி கேட்குறீங்கண்ணோய்....

மலரின் பெயர் வந்ததினாலா???? :D

விகடன்
13-06-2008, 09:13 PM
மலரு , அன்பு....
நல்ல கொமினேஷன்...

பாச மலரைத்தான் எதற்காக துண்டித்தீர்களென்று தெரியவில்லை....

கண்மணி
14-06-2008, 02:48 AM
இது நல்லா இல்ல. எதுக்கு இத்தன கொல வெறி? இத்தன அடியா??? எத்தின நாளா காத்திருந்தீங்க????? எதுவா இருந்தாலும் பேசித்தீர்த்துக்கலாம். சரியா???

வாசிக்க வாசிக்க ஒரே ஜோரா இருக்கு... கதையில ஆவது மலருக்கு அன்பு குட்டு வைக்கிறமாதிரி ஒரு சீன் போடுங்களேன்....

அன்பு, குட்டு என்ன கும்மாங்குத்தே கொடுத்திருவோம்.. எவ்வளவு ஐ-கேஷ் தருவீங்க?

கண்மணி
14-06-2008, 02:49 AM
கண்மணி ,
தொடர்ச்சியும் சுவையாகவே நகர்கிறது..

நான் = கண்மணி என்ற பெயர் = யார் (அ) எது?


(சிறுவர்களுக்கான தொடர்கதையாய் இருக்குமோ?????)

அது நீங்க இல்லீங்கண்ணா, நாந்தான்,,,:lachen001::lachen001::lachen001:

சிவா.ஜி
14-06-2008, 04:44 AM
வீட்டில் நடக்கற களேபரத்தை மெகா சீரியல் மாதிரி பாத்து ரசிச்சுட்டு, நல்லபிள்ளையாட்டம் க(அ)தை சொல்ற கண்மணி....நல்லாவே சொல்றாங்க.

மலர் என்னைக்கு வசமா மாட்டப்போறான்னு பாக்கலாம். அன்பை நினைச்சாத்தான் பாவமா இருக்கு. சீக்கிரம் நல்ல சேதி சொல்லுங்க(மலரு குட்டு வாங்கறதைத்தான்....ஹி...ஹி...)

அன்புரசிகன்
14-06-2008, 07:04 AM
எவ்வளவு ஐ-கேஷ் தருவீங்க?

டீல் எவ்வளவு என்று நீங்களே சொல்லுங்க...:D:icon_b:

அமரன்
05-11-2008, 10:16 AM
கண்மணிப் பார்வை எப்போதிங்கே படும்?

ஆவலுடன் நான்.

சுகந்தப்ரீதன்
24-11-2008, 10:17 AM
கண்மணிப் பார்வை எப்போதிங்கே படும்?

ஆவலுடன் நான்.அதுவா அண்ணாத்தே.. கண்மணி அடுத்த பாகத்தை பதிஞ்ச பிறகு சொல்லுறேனே நான்..:wuerg019::wuerg019: