PDA

View Full Version : சர்வாதிகாரினி



சுஜா
26-05-2008, 08:04 AM
சர்வாதிகாரினி

என் துயில் கெடுக்கிறது,
அவள் கணுக்காலில் தலைவைத்து
சுடிதாரை போர்த்திக்கொண்டு உறங்கும் கொலுசு;

சூரிய ஒளியில் சுழன்று நிறப்பிரிகை
அடையும் பட்டக தோடுகள்;

முக்கப்பவுடரின் வாசனையை திருடி
மணக்கும் கைக்குட்டை பூக்கள்
இன்னும் இன்னும் இத்யாதி.........

இப்போதெல்லாம் ,
சூனியகாரர்களுக்கு ஒரு படி மேலே போய்
ஒரு சூனியகாரியின் முடிகளையும் நகங்களையும் சேகரிக்கிறேன்
காத்திருக்கிறேன்,
அவள் ஒரு கன்னத்தில் முத்தம் அளித்தால்,
மறுகன்னத்தை காட்ட .

__________________________________

அன்புடன் சுஜா.

அமரன்
26-05-2008, 08:28 AM
கடிவாளமில்லாக் கற்பனை
காதல்போதை கண்டுவிட்டால்
சொல்லத் தேவையில்லை..
.
தூங்கும் கொலுசின் கொறட்டைச் சத்தம்..
தொங்கட்டானில் பட்டுத் தெறிக்கும் வெளிச்சம்.
பூச்சை சுரண்டி மணம் பெற்ற துணிப்பூ..
இன்னும் இன்னும் இத்யாதி..
எல்லாமே நன்றாக உள்ளது..

கவிதைகளிலாவது வாழட்டும்
நீங்கள் சொன்ன பெண்கள்!!!
சர்வ அதிகரிகளாக!!!

வாழ்த்துக்கள் சுஜா!

சுஜா
26-05-2008, 08:43 AM
நன்றி அமரன் அண்ணா......

நீங்கள் கடைசியாக சொன்னனது சொன்னது நிஜமாகவும் நடக்கும் .
காதலில்-சர்வாதிகளாக
சமுதாயத்தில் -சமமானவர்களாக

Narathar
27-05-2008, 05:45 PM
சரி! ஒரு கன்னத்தில் பளார் என அறைந்தால்
யேசு நாதர் கொள்கையை கடை பிடிப்பீர்களா?

இல்லை அதற்கும் ஒரு கவி வடிப்பீர்களா? :)

உன் கை பட்டதால்
என் கன்னத்துக்கு வெட்கம்
வந்ததென்று .... நாராயணா!!!! ;)

அறிஞர்
27-05-2008, 09:25 PM
இப்போதெல்லாம் ,
சூனியகாரர்களுக்கு ஒரு படி மேலே போய்
ஒரு சூனியகாரியின் முடிகளையும் நகங்களையும் சேகரிக்கிறேன்
காத்திருக்கிறேன்,
அவள் ஒரு கன்னத்தில் முத்தம் அளித்தால்,
மறுகன்னத்தை காட்ட .
-சுஜா
__________________________________

அன்புடன் சுஜாகாதல் வியாதி படுத்தும் பாடு எத்தனை...
அருமை சுஜா..

lenram80
27-05-2008, 11:41 PM
அவள் கணுக்காலில் தலைவைத்து
சுடிதாரை போர்த்திக்கொண்டு உறங்கும் கொலுசு;

வெகுவாக ரசித்தேன். பாராட்டுக்கள்!!!

பென்ஸ்
28-05-2008, 01:27 AM
உறங்கும் கொலுசு கெடுக்கும் உறக்கம்
நிறப்பிரிகையிலும் அவள் நிழல் சேர்க்கை
முக்கப்பவுடரின்(???) மணம் திருடும் கைகுட்டை பூக்கள்...
அவள் மணம் திருடும் முகப்பவுடர்..(!!!!).

கால் நகம் முதல் தலை முடிவரை பொக்கிசியம்தான், இந்தகாதலில்
அடியாய் இருந்தாலும் தீண்டல் சுகம்தான்...
இதழாயிருந்தால் சொல்லவா வேண்டும்...???

நல்ல கவிதை.... ஒவ்வொரு வரிகளும் சிறு சிறு கவியாக தெரிகிறது...
கடைசி வரிகளுக்கு துனையாக சேர்க்க முயற்சித்திருப்பதுபோல் தெரிகிறது.... இனைத்திருந்தால் இன்னும் சிறப்பு...

வாழ்த்துகள்....