PDA

View Full Version : என் இனிய தோழி…



நம்பிகோபாலன்
26-05-2008, 07:37 AM
உன்னை நானும்
என்னை நீயும்
அறியாத நேரங்கள்
பேசகூட தயங்கின காலங்கள்
இன்று நினைத்தாலும்
சிரிப்பாகவே இருக்கிறது..

நாம் முதலில்
பகிர்ந்த விஷயமே
நட்பாகி போனதால்
இருவருக்கும்
மணமாகி போன
பின்னும்
புரிதலின் அன்பில்
வளர்கிறது நட்பு

நான் சொல்லமறைத்த
சோகங்கள்
நீ அறிந்து
அன்பான வார்த்தைகளில்
ஆறுதலை தந்து
ஊக்கப்படுத்தி
என்னையும் வாழ்க்கையில்
முன்னேற செய்துவிட்டாய்

என் தோழில் தோள்
கொடுக்கும் தோழியே
உன்னை நான்
தலைவணங்கும்
என் தாயாகவே பார்க்கிறேன்…..

Narathar
26-05-2008, 07:48 AM
தாய்
தோழி,
காதலி,
மனைவி,
மீண்டும் தாய் (மனைவி)

இதுதான் வாழ்க்கை வட்டமோ?

நல்ல கவிதை

அமரன்
26-05-2008, 08:58 AM
குறிஞ்சிப்பூ.....
குதூகலத்தில் மனது..
பாராட்டுகள்.

நம்பிகோபாலன்
27-05-2008, 11:00 AM
நாரதர் மற்றும் அமரன் அவர்களுக்கு என் நன்றி.

ஆதவா
19-06-2008, 12:18 PM
தோழியைத் தாயாக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் :D

தோழியாகட்டும், சகோதரியாகட்டும், தாயாகட்டும், தாரமாகட்டும், நட்பு இழையோடினால் என்றுமே கவலை இல்லை... இல்லையா நம்பி?

கவிதை நன்று.. ஆனால் இதைப் போன்ற கருக்களை பல கவிஞர்களும் எழுதிவிட்டார்கள்.. சற்றேனும் வித்தியாசமாய்.........!!?

வாழ்த்துகள்.

நம்பிகோபாலன்
19-06-2008, 01:10 PM
ஆதவாவிற்க்கு என் நன்றிகள். வித்தியாசமாய் எழுத முயற்ச்சிக்கிறேன்..